முஸ்லிம்கள் துன்புறுத்தப்படல்.
பெருமைக்குரிய பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். அவர்கள் இறைவனின் கட்டளைப்படி மக்களிடத்தில் இஸ்லாத்தைப்பற்றி அமைதியாக எடுத்துரைத்து வந்தார்கள். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பேர்தான் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும், அல்லாஹ்வின் உதவியாலும் பெருமானாரின் பெருமுயற்சியாலும் மக்கள் இஸ்லாத்தில் இணையலானார்கள். இதைக் கண்ட குறைஷியர் ஆத்திரம் அடைந்து, எந்த விதத்திலும் பெருமானாரின் இஸ்லாமிய பிரசாரத்தைத் தடை செய்துவிட வேண்டும். அவர்களைப் பின்பற்றி எந்த மக்களும் செயல்படக் கூடாது எனத் தீர்மானித்து அவர்களுக்கு பல இன்னல்கள் தந்ததோடல்லாமல் கொலை செய்யவும் திட்டமிட்டனர்.
பெருமானார் அவர்கள் குனிந்த் தலை நிமிரா வண்ணம் வீதி வழியாக நடந்து செல்வார்கள். மக்கள் கூட்டம் நெருக்கமாக இருக்கும் நாற்சந்தியில் மாநபியின் போதனையை ஏற்றுக் கொள்ளாத குறைஷி வாலிபர்கள் நின்று கொண்டு, நாயகத்தை தகாத வார்த்தைகளைக் கூறி இழிவாகப் பேசுவார்கள். இவற்றைக் கேட்டும் பொறுமையே உருவான பூமான் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள், அமைதியாகச் செல்வார்கள். அப்போது அங்கு கூடி நிற்கும் வாலிபர்களில் ஒருவன், "இதோ பைத்தியக்காரன் போகிறான்" எனக் கேலி செய்வான். 'சூனியக்காரன்' என்று இன்னொறுவன் சொல்வான். மாயக்காரன் என மற்றொருவன் சொல்வான். சூனியக்காரருமல்ல, பைத்தியக்காரருமல்ல, இவருக்கு பிசாசு பிடித்திருக்கிறது எனப் பிறிதொருவன் சொல்வான். பிசாசு பிடித்திருக்கின்ற காரணத்தினால் மூளையில் கோளாறு ஏற்பட்டு, வாய்க்கு வந்தவாறெல்லாம் உளறித்திரிகிறார் எனச்சொல்வான். இப்பேச்சுக்கள் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்டே செல்வார்களே தவிர தன் வாயால் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட பேச மாட்டார்கள்.
இவ்வாறு பெருமானார் எங்கெங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் வடைமாரி பொழிந்து கொண்டே அந்த இளைஞ்ர்கள் பிந்தொடர்ந்து செல்வார்கள். இவர்களோடல்லாமல் அம்ருப்னுல் ஆஸ் என்பார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது வசைக் கவிகளை எழுதி, அவர்கள் எங்கெங்கு செல்கிறார்களோ, அங்கெல்லாம் பாடிக் கொண்டே பின் தொடர்ந்து செல்வார். மக்கள் நிறைந்த சபைகளில் பெருமானார் அவர்கள், மக்களுக்கு நற்போதனை செய்யத் தம் பேச்சை ஆரம்பிக்கும் போது அவர்களுடைய பேச்சு மக்களின் செவிகளில் விழுந்துவிடாதவாரு 'ஒ' வென்று கூச்சல் போட்டுத் தடுத்து விடிவார்கள். இத்துடன் நிற்க்காமல் அவர்கள் நடந்து சொல்லும் போது குப்பைக்கூளங்களை அள்ளி அவர்களது தலையில் போடுவார்கள்.எதிர்ப்புறத்தில் நின்று கூழாங்கற்களையும் மனலையும் வாரி வாரி கண்களை நோக்கிவீசி உடலெல்லாம் புழுதியடையச் செய்வார்கள். இதைவிடப் பெரும் கொடுமை என்னவென்றால், சிறுவர்களைத்தூண்டி விட்டுப் பெருமானார் மீது கலலெரியச் சொல்வார்கள் கல்லடிபட்டு முகத்திலும் இரத்தம் கசிந்தவன்னமாக இருக்கும். அதைக் துடைத்தாவாறு பொறுமைக் கடலாம் பூமான் நபி போய்க் கொண்டேயிருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக