31 டிசம்பர், 2009

மார்க்க அறிஞ்ர்களான இமாம்கள் இஸ்லாமியக் கடமைகளை நான்கு வகையானப் பிரித்தரிவித்துள்ளனர்.
1. "இபாதாத்" வணக்கவியல்
2. " நடைமுறையியல்
3. "முனாக்கஹாத்" வாழ்வியல்
4. "ஜினாயாத்" குற்றவியல்.
மனிதன் உலகப் படைப்புகளில் மிகச் சிறந்தவனாகவும் பகுத்தறிவு உடையவனாகவும் இருந்ததலாலும் அவனை இறைவன் படைத்திருப்பது அற்ப விந்தணுவிலுருந்துதான். இதனை உணர்ந்து தன் ஆற்றலைப் புரிந்து தன்னால் ஏவப்படும் கடமைகளைச் செய்கிறானா என்பதைச் சோதிப்பதற்க்காகவே கடமைகளை இறைவன் விதித்திருக்கிறான்.
"மனிதர்களில் நற்செயல் உடையவர் யார் என்று சோதிப்பதற்க்காக நிச்சயமாக பூமியிலுல்லவற்றை அதற்கு அலங்காரமாக ஆக்கினோம்".(அத்:18 வச:7)
மனிதனல்லாத மற்ற படைப்புகளுக்கு எந்த கடமையையும் இறைவன் விதிக்கவில்லை எனவே அவைகளை நிறைவேற்றுவதின் மூலம் மற்ற படைப்புகளைவிட மனிதன் உண்னையில் மிகச் சிறந்தவனாக ஆக்கிவிடுகிறான். மேலும் மனிதன் இயல்பாகவே மறதி உடையவன் என்பதால் அவனை மறதியிலிருந்து காத்து நினைவூட்டுவதற்காவும் எந்தெந்தக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதைப் போதிப்பதற்காகவும் நபிமார்களை அனுப்பி வைத்திருக்கிறான்.
இதன் பின்னரும் தன் கடமையை மறந்து செயல்பட்டால் அவனுடைய இரு உலக வாழ்வும் நஷ்டத்திற்குரியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஏனென்றால் இக்காலத்தில் மனிதன் செய்யக்கூடிய பல்வேறு வேலைகளையும் இயந்திரங்களின் மூலம் செய்யும் அள்விற்கு அறிவியல் உலகம் முன்னேறி இருக்கிறது. எனவே மனிதனுக்குக் கடமைகளை செய்வதைத் தவிர வேறு வேலையே இல்லை. ஏனவே தான் இறைவன்
"மனிதன், ஜின் ஆகிய இரு இனத்தவரையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி (வேரு எதற்காகவும்) படைக்கவில்லை" என்று கூறுகிறான் (அத்:52 வச:56)

1 கருத்து: