31 டிசம்பர், 2009

கடமை

கடமை என்ற் பதத்திற்கு அரபியில் "தக்லீஃப்" என்று சொல்லப்படும். முதலில் அதன் பொருள் என்ன?
"தக்லீஃப்" என்றால் செய்வதற்குச் சிரமமானதைச் செய்யும் படியும் விடுவதற்குச் சிரமமானதை விடும் படியும் ஏவுவதாகும். சிரமமானது என்றால் செய்யவே முடியாத காரியம் என்ற பொருள் அல்ல. மாறாக மனதைக் கட்டுப்படுத்திச் செய்ய வேண்டிய காரியங்களாகும் என்பதைப் பின்வரும் இறைவசனம் உணர்த்தும்.
"அல்லாஹ் எந்த ஒர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ளமுடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை"(அத்: 2வச:286)
இஸ்லாத்தின் கடமைகள் 5.
1. கலிமா(ஈமான்)
2. தொழுகை
3. ஜகாத்
4. நோன்பு
5. ஹஜ்
இவைகளில் ஒவ்வொன்றும் முழுமை பெற தனித்தனி விதிகள் உள்ளன.அந்த விதிகளில் ஒன்று விடுபட்டாலும் அக்கடமைகள் முழுமை அடைவதில்லை எனவே அந்த விதிகளை பேனுவது ஃபர்ளு கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக