அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் மலக்குமார்களையும், வேதங்களையும், இறுதி நாளையும், நன்மை, தீமை, அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன. என்றும், மரணித்த பின்பும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும், என்றும் நம்பிக்கை கொள்வது ஈமானின் பிரதான அம்சங்களாகும்.
இறை நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொரு முஃமீனும் விசுவாசத்தில் உறுதியாக இருந்து மனத்தூய்மையுடன் கடமைகளை நிறைவேற்றினால் வெற்றி பெற்றவனாக ஆகிவிடுவான் என்பதை பின்வரும் இறைவசனம் நமக்கு உணர்த்தும்.
"ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்.
(அத்:23 வச:1)
நாம் கொண்டிருக்கும் விசுவாசமும் நிறைவேற்றும் கடமைகளும் (இக்லாஷ்) மனத்தூய்மையுடையதாக அமையும் போது நம்முடைய அமல்கள் உடனே கொள்ளப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக