"பாத்திமாவின் கண்ணீர் துடைத்த கருணைநபி"
நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் பத்ர் போருக்காக தங்களின் தோழர்களோடு சென்றிருக்கும் போது....பாத்திமா (ரலி) அவர்களின் அருமை சகோதரி ருகைய்யா(ரலி) அவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் சகோதரி ருகைய்யா(ரலி) அவர்காளுக்கு பணிவிடைகள் செய்து வந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பத்ரு போரிலிருந்து திரும்பி வருவதற்குள் ருகைய்ய(ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள் இதனால் பாத்திமா(ரலி) அவர்கள் கடுமையான துக்கத்தால் துவண்டும் போனார்கள். தனது அருமை தாயார் கதிஜா(ரலி) அவர்களின் இறப்புக்குப் பிறகு அவர்களின் குடும்பத்தில் இரண்டாவது பெரும் இழ்ப்பு சகோதரி ருகைய்யா(ரலி)யின் இறப்பாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூட பாத்திமா(ரலி) அவர்களும் தங்களின் சகோதரியை ஜியாரத் செய்ய கப்ர்ஸ்தானுக்கு சென்றார்கள். வீங்கிய முகத்துடன் அழுது கண்களுடன் தந்தைக்கு பக்கத்தில் கப்ர்ஸ்தானின் ஒரு மூலையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள். ஜியாரத் செய்து முடித்த கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அருமை மகள் பாத்திமாவின் நிலை கண்டு கண் கலங்கினார்கள். கடுமையாக அழுது கொண்டே இருந்தார்கள். உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் மேல் துண்டில் ஒரு முனையால் பாத்திமா(ரலி) அவர்களின் கண்ணீரைத் துடைத்தார்கள். ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அப்போது ருகைய்யா(ரலி) அவர்களின் இறப்பால் வீட்டுப் பென்கள் கடுமையாக அழுதார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பென்களின் அழுகையை பார்த்து கண் கலங்கினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக