17 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) க்கு வீடு கொடுத்த கொடைவள்ளல்"

சுவனத்து பேரரசி பாத்திமா(ரலி) அவர்களின் வீடு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வீட்டுக்கு சற்று தொலைவில் இருந்தது வீடும் மிக சிறியதாக இருந்தது. அதனால் தம்பதிகளுக்கு கஷ்டமாக இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் அருமை மகளை பார்க்க அடிக்கடி செல்ல வேண்டியதாக இருந்தது. ஒரு சமயம் பாத்திமா(ரலி) அவர்களைப் பாத்து மகளே! இன்ஷா அல்லாஹ் உம்மை என் வீட்டின் அருகில் வசிக்க ஏற்பாடு செய்ய என் மனம் விரும்புகிரது. என்று கூறினார்கள். இச்செய்தி மதினாவாசியான. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தூரத்து உறவினரான கஸ்ரஜின் ஹாரிதா பின் நுஃமான்(ரலி) அவர்களுக்கு தெரிய வந்தது இவர்களுக்கு மதினாவில் பல வீடுகள் சொந்தமாக இருந்தது. அவ்வீடுகளில் சிலதை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்ய வந்த முஹாஜிரீன்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் அன்பளிப்பாக கொடுத்திருந்தார்கள் இவர்களின் ஒரே ஒரு வீடு மட்டும் மஸ்ஜித் நபவியின் அருகில் இருந்தது. இதற்கு முன் பாத்திமா(ரலி) அவர்கள் தமது அருமை தந்தையாரிடம் வந்து தந்தையே! ஹாரிதா(ரலி) அவர்களிடம் கேட்டு எங்களுக்கும் ஒரு வீடு வாங்கி கொடுங்கள் என்று முறையிட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். என தருமை மகளே! ஹாரிதா (ரலி) அவர்காளிடமிருந்து எந்தனை வீடுகள் வாங்குவது? இனிமேல் அவரிடம் வீடு கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று ஆறுதல் சொன்னார்கள். இவ்விஷயங்கள் அனைத்தும் தெரியவந்ததும் ஹாரிதா(ரலி) அவர்கள் மனம் சந்தோஷத்தில் பொங்கி வழிந்தது......ஓடோடி வந்தார்கள், கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முன்னிலையின் வந்து நின்று அல்லாஹிவின் தூதரே! தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வீடுகளில் ஒன்றில் தங்களின் இதய துண்டான அருமை மகள் பாத்திமா(ரலி) அவர்களை வசிக்க வைக்க விரும்புவதாக நான் கேள்விப் பட்டேன் நஜ்ஜார் மக்களது வீடுகள் அனைத்திலும் எனது வீடே உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கிறது. அவ்வீடு உங்களுடைய வீடுதான் உடனே உங்கள் அருமை மகளாரை அழைத்து அந்த வீட்டில் வசிக்க ஏற்பாடுகள் செய்யுங்கள். என்னுடைய பொருட்கள் அனைத்தும் அல்லாஹ்வின் மீது ஆனையாக சொல்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! என் வீடுகளை தாங்கள் எடுத்து கொள்ளும் போதெல்லாம் அவை என்னிடம் இருக்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியை கொடுப்பதை விட அவற்றை தாங்களுக்கு கொடுத்தவுடன் தான் எனக்கு அதிகம் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று உருகி நின்றார்கள். ஹாரிதா(ரலி) அவர்களின்கொடைத் தன்மையை பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நெகிழிந்துப் போனார்கள். அவர்களுக்காக துஆ செய்தார்கள். பின்பு ஹாரிதா(ரலி) அவர்கள் அவ் வீட்டை காலி செய்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அதை மிக்க மகிழ்ச்சியுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொண்டு தங்களின் மகளார் குடும்பத்தை அவ் வீட்டுக்கு அழைத்து குடியமர்த்தினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீட்டுக்கும் பாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கும் ஒரு சுவர் தான் குறுக்கே இருந்தது வீட்டு சுவரில் இருந்து ஜன்னல் வழியாக சின்னம்மா ஆய்ஷா(ரலி) அவர்களிடம் பேசிக் கொள்வார்கள். கொடுக்கல் வாங்கள் செய்து கொள்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக