31 டிசம்பர், 2009

அல்லாஹ் எவ்வளவு அழகாக தன் மார்க்கத்தை உன்னை படுத்தி இருக்கிரான்

மேகங்கள் கூட எவ்வளவு அழகாக அல்லாஹ் என்ற வடிவில் இருக்கிரது...
மரங்கள் கூட எவ்வளவு அழ்காக ருகூஹ் செய்கிரது.....

நாம் உண்ணும் உண்வில் கூட அல்லாஹ் என்ற நாமம்.....


கறி துண்டுகளில் அல்லாஹ் என்ற NAME



பாறை கூட எவ்வளவு அழகாக அல்லாஹ்வை சுஜூது (சிரம் பணிதல்) செய்கின்றன...





இருதயத்திலும் கூட அல்லாஹ்வின் name











பிரந்த குழந்தையின் காதுகளில் கூட அல்லாஹ் வின் திருநாமம்....
அன்பானவர்கலே இதன் மூலம் தெரிந்து கொள்வீர்கள் உலகிலே சிரந்த மார்க்கம் இஸ்லாம் தான் என்று.....













ஈமான்

ஈமான் என்பத்ற்கு நம்பிக்கை கொள்ளல் என்பது பொருளாகும். ஷரீஅத்தின் பார்வையில் (அல்லாஹ் ஒருவன் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவனின் தூதர் என்ரும்) உள்ளத்தால் உறுதி கொண்டு நாவினால் மொழிந்து ஏனைய உறுப்புகளினால் இறைவனால் ஏவப்பட்ட கடமைகளை நிறை வேற்றுவதாகும்.
அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் மலக்குமார்களையும், வேதங்களையும், இறுதி நாளையும், நன்மை, தீமை, அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகின்றன. என்றும், மரணித்த பின்பும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும், என்றும் நம்பிக்கை கொள்வது ஈமானின் பிரதான அம்சங்களாகும்.
இறை நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொரு முஃமீனும் விசுவாசத்தில் உறுதியாக இருந்து மனத்தூய்மையுடன் கடமைகளை நிறைவேற்றினால் வெற்றி பெற்றவனாக ஆகிவிடுவான் என்பதை பின்வரும் இறைவசனம் நமக்கு உணர்த்தும்.

"ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்.
(அத்:23 வச:1)
நாம் கொண்டிருக்கும் விசுவாசமும் நிறைவேற்றும் கடமைகளும் (இக்லாஷ்) மனத்தூய்மையுடையதாக அமையும் போது நம்முடைய அமல்கள் உடனே கொள்ளப்படும்.
மார்க்க அறிஞ்ர்களான இமாம்கள் இஸ்லாமியக் கடமைகளை நான்கு வகையானப் பிரித்தரிவித்துள்ளனர்.
1. "இபாதாத்" வணக்கவியல்
2. " நடைமுறையியல்
3. "முனாக்கஹாத்" வாழ்வியல்
4. "ஜினாயாத்" குற்றவியல்.
மனிதன் உலகப் படைப்புகளில் மிகச் சிறந்தவனாகவும் பகுத்தறிவு உடையவனாகவும் இருந்ததலாலும் அவனை இறைவன் படைத்திருப்பது அற்ப விந்தணுவிலுருந்துதான். இதனை உணர்ந்து தன் ஆற்றலைப் புரிந்து தன்னால் ஏவப்படும் கடமைகளைச் செய்கிறானா என்பதைச் சோதிப்பதற்க்காகவே கடமைகளை இறைவன் விதித்திருக்கிறான்.
"மனிதர்களில் நற்செயல் உடையவர் யார் என்று சோதிப்பதற்க்காக நிச்சயமாக பூமியிலுல்லவற்றை அதற்கு அலங்காரமாக ஆக்கினோம்".(அத்:18 வச:7)
மனிதனல்லாத மற்ற படைப்புகளுக்கு எந்த கடமையையும் இறைவன் விதிக்கவில்லை எனவே அவைகளை நிறைவேற்றுவதின் மூலம் மற்ற படைப்புகளைவிட மனிதன் உண்னையில் மிகச் சிறந்தவனாக ஆக்கிவிடுகிறான். மேலும் மனிதன் இயல்பாகவே மறதி உடையவன் என்பதால் அவனை மறதியிலிருந்து காத்து நினைவூட்டுவதற்காவும் எந்தெந்தக் கடமைகளைச் செய்ய வேண்டும் என்பதைப் போதிப்பதற்காகவும் நபிமார்களை அனுப்பி வைத்திருக்கிறான்.
இதன் பின்னரும் தன் கடமையை மறந்து செயல்பட்டால் அவனுடைய இரு உலக வாழ்வும் நஷ்டத்திற்குரியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஏனென்றால் இக்காலத்தில் மனிதன் செய்யக்கூடிய பல்வேறு வேலைகளையும் இயந்திரங்களின் மூலம் செய்யும் அள்விற்கு அறிவியல் உலகம் முன்னேறி இருக்கிறது. எனவே மனிதனுக்குக் கடமைகளை செய்வதைத் தவிர வேறு வேலையே இல்லை. ஏனவே தான் இறைவன்
"மனிதன், ஜின் ஆகிய இரு இனத்தவரையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி (வேரு எதற்காகவும்) படைக்கவில்லை" என்று கூறுகிறான் (அத்:52 வச:56)

கடமை

கடமை என்ற் பதத்திற்கு அரபியில் "தக்லீஃப்" என்று சொல்லப்படும். முதலில் அதன் பொருள் என்ன?
"தக்லீஃப்" என்றால் செய்வதற்குச் சிரமமானதைச் செய்யும் படியும் விடுவதற்குச் சிரமமானதை விடும் படியும் ஏவுவதாகும். சிரமமானது என்றால் செய்யவே முடியாத காரியம் என்ற பொருள் அல்ல. மாறாக மனதைக் கட்டுப்படுத்திச் செய்ய வேண்டிய காரியங்களாகும் என்பதைப் பின்வரும் இறைவசனம் உணர்த்தும்.
"அல்லாஹ் எந்த ஒர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ளமுடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை"(அத்: 2வச:286)
இஸ்லாத்தின் கடமைகள் 5.
1. கலிமா(ஈமான்)
2. தொழுகை
3. ஜகாத்
4. நோன்பு
5. ஹஜ்
இவைகளில் ஒவ்வொன்றும் முழுமை பெற தனித்தனி விதிகள் உள்ளன.அந்த விதிகளில் ஒன்று விடுபட்டாலும் அக்கடமைகள் முழுமை அடைவதில்லை எனவே அந்த விதிகளை பேனுவது ஃபர்ளு கடமையாகும்.

ஆண்டு துவக்கம்


மாதங்களின் தலைமாதம்!

மாதவத்தின் கலை மாதம்!

முஹர்ரம் என்னும் மாமாதம்!

அழகாய் அமைந்த புகழ்மாதம்!