10 டிசம்பர், 2012


பாவத்திற்கு பரிகாரம் புண்ணியமே 

நாட்டுப் புறத்தார் ஒருவர் நாயகம் சல்லல்லாஹு அலைகிவசல்லாம் அவர்களிடம் வந்து பெருபாவங்கள் செய்யாதவர்களுக்கு ஒரு ஜும்ஆத் தொழுகை மற்றும் மற்றொரு ஜும்ஆத் தொழுகை வரையிலும் ஒரு நேரத்துத் தொழுகை மற்றொரு நேரத்தொழுகை வரையிலும் தண்ட குற்றமாக இருந்து அவர்கள் செய்யும் சிபாவங்க்களை அழித்துவிடும் எனத் தாங்கள் கூறியதாக எனக்கு செய்தி கிடைத்திருக்கிறதே என்றார். அதற்கு அன்னார் ஆம் அது மட்டுமல்ல, வெள்ளிக்கிழமை அன்று குளிப்பதும் ஒரு தண்ட குற்றம். ஜும்ஆத் தொழுகைக்காக பள்ளிக்கு நடந்து செல்வதும் ஒரு தண்ட குற்றம். அதற்காக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு காலடியும் இருபது ஆண்டு வணக்கத்திற்கு சமமாகும். தொழுகை முடிந்து விட்டதாயின் தொழுதவர் ஒவ்வொருவருக்கும் இருநூறாண்டு வணக்கத்தின் பலன் அளிக்கப்படுகிறது என்று கூறினர்.

சையுதினா அபூபக்கர் கண்ட கனவு 

இந்த நபிமொழியை அறிவித்தவர் சையுதினா அபூபக்கர் (ரலி) ஆவர். அன்னார் இஸ்லாத்திற்கு முந்திய மௌட்டிய காலத்தில் ஒரு வர்த்தகராக இருந்தனர். அன்னார் வியாபாரத்திற்காக சிரியா சென்றிந்தபோது ஓரிரவு நித்திரையில் சந்திரனும் சூரியனும் தம் மடியில் அமர்ந்திருப்பது போலவும் அவை இரண்டையும் அன்னார் தமது கரத்தால் எடுத்து தமது மார்போடு அணைத்துக்கொண்டு அவைகளின் மீது தமது அங்கவஸ்த்திரத்தை போர்த்தியது போலவும் கனவு கண்டனர். காலையில் கண்விழித்து அதன் பொருளை தெரிந்து கொள்வதற்காக கிறிஸ்த்தவ மேதை ஒருவரை அணுகித் தாம் கண்ட சொப்பனத்தை அவரிடம் கூறி அதற்குப் பொருள் கூறுமாறு வேண்டிக்கொண்டனர். அப்பொழுது அந்த மேதை நீர் எந்த ஊர்வாசி என வினவ நான் மக்காவாசி என அன்னார் பதில்கூரினார். நீர் எந்தக் கிளையார சேர்ந்தவர் என அவர் கேட்க நான் பனீ த்தய்மு  கிளையாரை சேர்ந்தவர் என அன்னார் பதிலளித்தார். உமது தொழிலென்ன? என அவர் வினவினார். அன்னார் வர்த்தகம் என்று கூறினார்.

இத்தனை கேள்விபதில்களுக்கு பிறகு அந்த மேதை அன்னாரை நோக்கி விரைவில் உமது காலத்திலேயே ஹாசிமிக் கிளையை சேர்ந்த ஒருவர் தோன்றுவார். அவர் திருநாமம் முஹம்மது அமீன் சல்லல்லாஹு அலைகிவசல்லாம். அவரே இந்தக் கடைசிகால நபி அவரை அல்லாஹ் தஆலா படைக்க நாடி இருக்கவில்லையாயின் வானம் பூமிகளையும் அவர்களிர்கானப்படுபவைகளையும் ஆதம் நபி (அலை) முதல் இதர நபிமார்களையும் அவன் படத்திருக்கமாட்டான் அவர் நபிமார்கள் அனைவருக்கும் நாயகமாகவும் கடைசி கால நபியாகவும் விளங்குவார். நீர் அவர் காட்டித்தரும் இஸ்லாம் மத்தத்தை தழுவி அவருக்கு மதிமந்திரியாக இருந்து அவருக்குப்பின் அவருடைய பிரதிநிதியாக விளங்குவீர். இதுவே நீ கண்ட கனவுன் பொருள் என்று கூறிவிட்டு நான் அவருடைய மகிமையையும் கீர்த்தியையும் தவ்ராத்திலும் இன்ஜீலிலும் சபூரிலும் கண்டு அவர் மீது விசுவாசம் கொண்டு இஸ்லாத்தை தழுவிக் கொண்டேன். எனினும் எனது இனத்தவரான கிரஸ்தவர்களை அஞ்சி எனது இஸ்லாத்தை மறைத்து வைத்திருக்கிறேன் என்றார்.

சையுதினா அபூபக்கர் (ரலி) அவர்கள் அம்மேதையின் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் அன்னாருடைய மனம் ஒருவித உணர்ச்சியால் நெகிழ்ந்தது. நாயகம்  சல்லல்லாஹு அலைகிவசல்லாம் அவர்களை தரிசிக்கவேண்டும் என்ற அவர் அன்னாரின் உள்ளத்தை வாட்டியது. உடனே பயணப்பட்டு மக்கா வந்து அன்னாரை தேடித் தரிசித்துக் தம் ஆவலைத் தீர்த்துக் கொண்டனர்.அன்று முதல் அன்னாரின் திருவதனத்தைத் தரிசிக்காது ஒரு மணி நேரம் இருக்க அன்னாரால் முடியாது.

8 டிசம்பர், 2012

மனித பதர் யார்?


மனித பதர் யார்?

செயுதினா மூஸா நபி (அலை) அவர்கள் ஒரு நாள் அல்லாஹ் தஆலாவிடத்தில் ஆண்டவனே! நீ மானிடரைப் படைத்து அவர்களுக்குத் தேவையானவற்றை யெல்லாம் கொடுத்து வளர்க்கிறாய் அப்பால் அவர்களை நரகில் தள்ளி விடுகிறாயே!என்று கேட்டனர். உடனே இறைவன் அவரை நோக்கி மூஸா நபியே! எழுந்து போய் ஒரு நிலத்தை உழுது பயிரிடுக என்றான். அன்னார் அவ்வாறே ஒரு நிலத்தில் பயிரிட்டு நீர்பாய்ச்சி விளைந்த பின் அறுத்து சூடடித்துக் களஞ்சியத்தில் கொண்டு வந்து சேர்த்தனர் அதன் பின் ஆண்டவன் அவரை நோக்கி மூஸாவே வேளாண்மை என்ன்வாய்ற்று?என வினவினான். அதற்க்கு செயுதினா மூஸா நபி அவர்கல் ஆண்டவனே அத அறுத்துக் களஞ்சியம் சேர்த்துள்ளேன் என்றார். அதிலிருந்து எதனையும் விட்டு விட்டுவிட்டீரோ எள்ளது அனைத்தையும் கொண்டு வந்து விட்டீரோ என வினவ அன்னார் ஆண்டவனே! பதரை மட்டும் விட்டு விட்டு மற்ற வகைகளை கொண்டு வந்த விட்டேன் என்றனர். உடனே இறைவன் மூசாநபியே! நானும் மனித பதர்களையே நரகில் தள்ளுகிறேனேன் என்றான். மனித பதர் யார் ? என அன்னார் வினவினர்/ அதற்கு அவன் லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமாவை சொல்ல வேட்க்கப்படுகிறானே அவன் தான் மனித பதர் என்று பதில் அளித்தான் 

சொர்க்கம் சேர்க்கும் செயல் 
அபூதர்ருல் கிபாரீ (ரலி) நாயகம் சல்லல்லாஹு அலைகிவசல்லாம் அவர்களை நோக்கி எங்கள் நாயகமே! என்னை சொர்க்கத்தை நெருங்க செய்வது நரகத்தை விட்டு தூரப்படுத்துவதுமான ஒரு புண்ணியத்தை எனக்கு தெரிவிக்கவேண்டும். அதற்கு அன்னார் ஒரு பாவத்தை நீ செய்வீராயின் அதற்கு பின்னாலேயே ஒரு புண்ணியத்தை செய்துவிடுவீராக என்று அன்னார் கூறினார்.லாயிலாஹா இல்லல்லாஹு என்று சொல்வது புண்ணியத்தை சேர்ந்ததா என்று வினவினார். ஆம் அது புண்ணியங்களில் நேர்த்தியானது என்று அன்னார் பதில் கூறினார்.

கலிமா கறை சேர்க்கும் 

ஒருவர் ஹஜ்ஜுடைய காலத்தில் அரபாத் மைதானத்தில் தங்கினார். அவர் கையில் ஏழு கற்கள் இருந்தன. அவைகளை நோக்கி அவர் நான் லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று உறுதிமொழி கூறியதற்கு நீங்கள் என் இறைவனிடம் சாட்சியாக இருங்கள் என கூறினார். அன்றிரவு அவர் துன்கிகொண்டிருக்கும் போது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் நியாய தீர்ப்புநாள் வந்து விட்டது.அவர் விசாரிக்கப்பட்டார்.அவர் மீது நரக தண்டனை விதிக்கப்பட்டது. அவரை மலக்குகள் இழுத்துக் கொண்டு நரக வாயிலை அடைந்தனர்.அப்பொழுது அந்த ஏழு கற்களில் ஒன்று வந்து நரகத்தின் வாயிலை அடைத்துக் கொண்டது. மலக்குகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை அகற்ற முயன்றும் அது அசையக்கூட இல்லை. அதனை விட்டு விட்டு வேறொரு நரகத்திற்கு அவரை கொண்டு போனார்கள். அதன் வாயிலையும் அக்கற்களில் ஒன்று அடைத்து நிற்கக் கண்டு அதை அகற்ற முயன்றார்கள்.அவர்களால். அதை அசைக்கக்கூட முடியவில்லை இவ்வாறே அவர்கள் ஏழு நரங்ககளுக்கும் அவரை இழுத்து செல்ல அவை அனைத்தையும் அந்த ஏழு கற்களும் அடைத்து நிற்க கண்டார்.பின்னர் அவரை அர்ஷின் அடியிற் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு ஆண்டவனே உனது இந்த அடிமையின் கருமத்தை நீயே நன்கறிவாய். இவரை நரகம் கொண்டு போய் சேர்க்க எங்களால் இயலவில்லை என்று விண்ணப்பித்தனர்.
அப்பொழுது ஆண்டவன் அந்த அடியரை நோக்கி எனது அடிமையே நீ சில கலிமாவை சொன்னதற்கு சில கற்களை சாட்சி வைத்தாய் அவர் உனக்குள்ள உரிமைக்குப் பங்கம் செய்யவில்லை.எனில் நான் எவ்வாறு உன் உரிமைக்குப் பங்கம் செய்வேன். நீ கலிமாவை சொன்னதற்கு நானே சாட்சி என்று கூறிவிட்டு மலக்குகளே.இந்த அடியானை சுவனபதி சேர்த்து வையுங்கள் எனக் கட்டளையிட்டார். அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு சுவனபதி நோக்கி நடந்தனர் அங்கு போய் பார்க்கும் போது அதன் வாயில்கள் அனைத்தும் அடைக்கப்படிருந்தன  அப்பொழுது அந்த ஷஹாதத்துக் கலிமா வந்து அந்த வாயில்கள் அனைத்தையும் திறந்து விட அவர் உள்ளே நுழைந்தார். இவ்வாறு கண்டு கண் விழித்த அவர் தன ஆயுள் முழுதும் அக்கலிமாவை விடாது ஓதி வந்தார்.

7 டிசம்பர், 2012


கல்வியின் பெருமை 
இம்மையிலும் மறுமையிலும் மாலன் தரத்தக்க கல்வியில் ஒரு அத்தியாயத்தை ஒருவர் கற்றுக் கொண்டால் இவ்வுலக ஆண்டுகளில் எழுபதாயிரம் ஆண்டுக் காலம் பகலில் நோன்பிருந்து இரவில் விழித்திருந்து தவன்ஜ்செய்த பலனை விட சிறந்த பலனை அல்லாஹு தஆலா அவருக்கு அளிக்கிறான் என்று நாயகம் சல்லல்லாஹு அலைகிவசல்லம் கூறினார். 
குர்ரான் ஊதல் கொஞ்சத்தைக் கொண்டு திருப்தியடைபவர் செயல். தொழுதல் இயலாதார் செயல் நோன்பிருத்தல் எளியோர் செயல்.தஸ்பீகு ஓதல் மாதர் செயல்.தர்மம் செய்தல் கொடையாளியின் செயல்.சிந்தித்தல் சக்தியற்றோர் செயல்.வீரர்களின் செயல் யாது? என்பதை உங்களுக்கு தெரிவிக்கட்டுமா என நாயகம் சல்லல்லாஹு அளைஹிவசல்லம் அவர்கள் சகாபக்களிடம் வினவ எங்கள் நாயகமே அது யாது? என அவர்கள் கேட்கலானார்கள் அதற்கு அன்னார் கல்வி பயல்வது அது முஹ்மீனான பக்தர்களுக்கு ஈருலகிலும் ஒளியளிக்கும் என்றனர் இந்த இரு நபி  போதனகளையும் இப்ராஹீம் (ரலி)அறிவித்துள்ளார் 
நான் கல்வி நகர் அலி, அதன் தலைவாயில் என்று நாயகம் சல்லல்லாஹு அலைகிவசல்லாம் கூறியிருக்கின்றனர்.
செயுதுனா அழியும் காரிஜாக்களும் 
இதைக் கேள்விப்பட்ட இஸ்லாமியப் பெருங்குடி மக்களின் எதிர்கட்சியை சேர்ந்த "கவாரிஜு '' எனப்படுவோர் அலி (ரலி) அவர்கள் மீது பொறுமை கொண்டு அவர்களின் அறிஞர்கலாயுள்ளவர்களின் பத்து பேர்கள் கூடி நாம் அனைவரும் ஒரே கேள்வியை ஒவ்வொருவராக சென்று கூறி விடை விடைகேட்போம் அவர் என்ன சொல்கிறார் என பார்ப்போம் நம்மில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விடை அளிப்பராயின் அவர் நாயகம் சல்லல்லாஹு அலைகிவசல்லாம் கூறிய படி கல்வியின் தலைவாயிலே எனக் கூடி பெரி அவர்களின் ஒருவரை அன்னாரிடம் அனுப்பி வைத்தனர்.அவர் வந்து அலியே கல்வி மேலானதா? செல்வம் மேலானதா? என வினவினார். அன்னார் செல்வத்தை விட கல்வியே மேலானது என்றார்.அதற்க்கு ஆதாரமென்ன? எனக்கேட்டார். அதற்க்கு அன்னார் கல்வி நபிமார்கள் விட்டு சென்ற சொத்து. செல்வமோ காரூன் ஷத்தாது ப்ரவுன் முதலியோர் விட்டு சென்றது. இந்த மறுமொழியை கேட்டவுடன் அவர் ஒன்றும் பேசாமல் போய்விட்டார்.
இரண்டாமவர் வந்து அதே வினாவை கேட்டார். அதற்க்கு அன்னார் பொருளைவிடக் கல்வியே மேலானது என்றார்.அதற்க்கு ஆதாரமென்ன என்று அவரும் கேட்டார். கல்வி உன்னை காப்பாற்றும் பொருளை நீ காப்பாற்றவேண்டும் என்றார்.அவர் சென்று விட்டார்.
மூன்றாமவர் வந்தார் அவரும் அதே கேள்வியை கேட்க அன்னார் பொருளை விட கல்வியே மேலானது என்றார். அதற்க்கு ஆதாரமென்ன? என அவர் கேட்க,போருளுடையாருக்கு விரோதிகள் அதிகம். கல்வியுடையாருக்கு தன்பர்கள் அதிகம் என்றார்.அவர் சென்று விட்டார்.
நான்காமவர் வந்து அதே வினாவை கேட்க அன்னார் கல்வியே மேலானதுன்றார். அதற்கு ஆதாரமென்ன?என அவர் கேட்க அன்னார் பொருளை  அது குறையும்.கல்வியை செலவிட்டால் து பெருகும் என்றார்.அந்த விடையை கேட்ட அவர் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார்.அதன் பின் ஐந்தாமவர் வந்து அதே கேள்வியை கேட்க கல்வியே மேலானது என அன்னார் பதிலளிக்க. அதற்க்கு ஆதாரமென்ன? என அவர் வினவ. அன்னார் பொருளுள்ளவன் உலுத்தன்.உலோபி என்று அழைக்கப்படுவான் என்றனர்.மறுமொழி கேட்க அவர் வாயடைத்து ஒன்றும் பேசாது போய் விட்டார்.
அவருக்கு பின் ஆராமர் வந்து அதே கேள்வியைக் கேட்க அன்னார் கல்வியே மேலானது என்றனர். அதற்கு ஆதாரமென்ன? என அவர் வினவ அன்னார் பொருளுக்கு திருடன் பயமுண்டு.கல்விக்கு திருடன் பயமில்லை என்றனர்.அவர் எழுந்து போய்விடவே ஏழாமவர் வந்து அதே கேள்வியை கேட்க அன்னார் கல்வியே மேலானது என்று பதில் கூறினார்.அதற்க்கு ஆதாரமென்ன? என வினவ. அன்னார் பொருளின் வரவு செலவுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் உத்தரவாதியாக வேண்டிய திருக்கும் கல்வி அதனை கற்றவருக்கு சிபாரிசு செய்யும் என்றனர்.அவரும் பேசாது போய்விட்டார்.
எட்டாமவர் வந்து அதே கேள்வியைக் கேட்க அனார் கல்வியே மேலானது என்றார்.அதற்கு ஆதாரமென்ன? அன்னார் காலஞ் செல்ல செல்ல பொருள் அழியும்.கல்வியோ எத்தனை காலமாயினும் அழிந்து போகாது என்றனர்.அவர் எழுந்து போய்விட்டார்.
ஒன்பதாமவர் வந்த அதே வினாவை விடுத்தார் அனார் அதே விடையை கூறினார். அதற்கு அவர் ஆதாரம் கேட்டார்.அன்னார் கூறினார் பொருள் மனதை இறுக்கி இருளடைய செய்யும் கல்வியோ அதற்கு ஒளி அளிக்கும் என்றார்.அவரும் எழுந்து போய்விட்டார்.
பத்தாமவர் வந்து அதே வினாவை விடுத்தார்.அன்னார் கல்வியே மேலானது என்றனர்.அவர் அதற்கு ஆதாரம் கேட்டனர் அன்னார் பணக்காரர் தன பணத்தின் காரணத்தால் திமிர் கொள்வர் கல்விமான் தன கல்வியுன் காரணத்தால் பணிவை மேற்கொள்வான் என்று கூறிவிட்டு என் ஆயுட்காலம் வரை மக்கள் இதே கேள்வியை கேட்டுக்கொண்டு இருந்தாலும் நான் விதவிதமான பதில் கொடுத்துகொண்டே இருப்பேன் என்றனர். இந்த விடைகளை கேட்ட அவர்கள் அன்னாரின் கல்வித்திறமையை பாராட்டி அவர்களின் தப்பான போக்கைக் கைவிட்டுத் திருந்தி இஸ்லாமியப் பெருங்குடி மக்களுடன் சேர்ந்து கொண்டனர்.

6 டிசம்பர், 2012

 ஹாழிரூ யா ஹாழிரூ
அண்ணலே ஹாஜா ஹாழிரூ
ஹாழிரூ யா ஹாழிரூ
அஜ்மீர் நாதா ஹாழிரூ

வாருங்கள் ஹாஜா வாருங்களேன் 
வந்துங்கள் அருளைத் தாருங்களேன் 
வாழ்வில் அருளும் பொருளும் தந்து 
வாழ்வினை வளம் பெற செய்யுங்களேன் 

அஜ்மீர் வாழும் பேரரசே 
அள்ளி வழங்கிடும் வல்லரசே 
அகமிய முள்ள இறைமுரசே 
அடிமைக் கருள்வீர் என்சிரசே 

உங்கள் புகழைத் தினம்பாடி 
உயர்வுற நாடிடுவோர் கோடி 
உதவிடுவீர் ஒரு நொடிநாடி 
உண்மையில் நீங்களென் உயிர்நாடி 

கண்ணீர் கொண்டுங்கள் மலர்ப்பாதம் 
கழுவிக் குடித்துயர் மெய்ஞஞானம் 
கண்டு துறந்திடப் பொய்ஞஞானம்
கனிவுடன் அருள்வீர் இறைஞானம் 

கண்ணிமை கொண்டுங்கள் வாசலனான் 
கண்ணியமாகக் கூட்டிடுவேன் 
காஜா முயீனுத்  தீனரசே 
காட்டுங்களர்புதம் தீன் முரசே 

வாசற் படிமீதில் விழுந்து 
வறுமை நீங்கிட வேண்டிடுவேன் 
வாடி வரும் உங்கள் அடிமையினை 
வாழ்த்தி யனுப்பிடும் வீர்வலியே 

திருமுகம் ஒரு தரம் சுமந்திடுவேன் 
பாவங்கள் போக்கிட கேட்டிடுவேன் 
பாக்களை பூக்களாய் சொரிந்திடுவேன் 
பாசத்தால் பனிபொல் கரைத்திடுவேன் 

நபிகுலம் வழிவகுத்த நாயகமே 
நற்குணத் திந்திருத் தாயகமே 
நல்வழி காட்டிய தாரகையே 
நபிமணி தந்த எம்னாயக்கமே 

அஜ்மீர் நகருக்கு நான் வருவேன் 
அல்லல்கள் போக்கிட கேட்டிடுவேன் 
அள்ளிவழங்கிட நீர்மருத்தால் 
அண்ணலிடம் நான் முறையிடுவேன் 

தாமதம் ஏனோ தருவதற்கு 
தடைகளும் உண்டோ வருவதற்கு 
தாண்டிடுவீர் தடை அருள்வதற்கு 
தயவுடன் கேட்டோம் பெறுவதற்கு 

நாட்டிலும் காட்டிலும் வாழுகின்ற 
நல்லோர் தீயோர் நாடுகின்ற 
நாட்டங்கள் தீர்ஹ்து மூளுகின்ற 
நாட்டின் போர்த்தீ அனைத்திடுவீர் 

மூவின மக்களும் இந்நாட்டில் 
முழுவளம் போற்றுயர் திருநாட்டில் 
முடிவுற்ற இறைவனின் வழிபாட்டில் 
மூழ்கிட செய்திடு வீர்வலியே 

பலதாய் தோன்றுவ தொன்றேதான் 
பலதாய் காண்பது இணையேதான் 
பலதில் ஒன்றை காண்பதற்கு 
படிபல எற்றிடு வீர்ஹாஜா 

முழுமதி முகமது நபிமுகமாம் 
முச்சுடர் வீசிடும் முகமதுவாம் 
முடிவற்ற இறைவனின் முகமதுவாம் 
முடிவினில் இறைவன் அஹ்மமதுவாம் 

மூலப் பொருளின் கோலங்களே 
முழுஉலகாய் நாம் காண்பதுவே 
மூலப் பொருளன்றி வேறிலையே 
முடிவில் அவனே நானில்லையே 

ஹாழிரூ யா ஹாழிரூ
அண்ணலே ஹாஜா ஹாழிரூ
ஹாழிரூ யா ஹாழிரூ
அஜ்மீர் நாதா ஹாழிரூ

5 டிசம்பர், 2012

வயதிர்க்குத்தக்க வரிசை 

அபூமன்சூர் மாதுரீதி(ரஹ்) உடைய ஆசிரியருக்கு அவருடைய எண்பதாவது வயதில் மரணம் நெருங்கிவிட்டது அவர் நோய்வாய்பட்டு கிடக்கும் போது அவருடைய வயதை யொத்த அடிமையோருவனை விலைக்கு வாங்கி உரிமை விட்டு வரும்படி  மாதுரீதி(ரஹ்) இடம் கூறினார். அவர் கடைத்தெரு வெங்கும் தேடியும் அந்தப் பிராயமுள்ள ஓர் அடிமை கிடைக்கவில்லை. அவர் யார் யாரிடம் விசரித்தாரோ அவர்களெல்லாம் எண்பது வயது வரை உரிமை பெறாமலிருக்கும் அடிமை எங்கு கிடைக்க போகிறான் என்றனர்.அவர் விருதே திரும்பித் தம் ஆசிரியரிடம் வந்து அவர்கள் சொன்னதை அவரிடம் கூறினார்.அதைக் கேட்ட அந்த ஆசிரியப் பெரியார் தமது சிரசை நிலத்தில் வைத்து சஜ்தா செய்தவண்ணம் ஒருவன் எண்பது ஆண்டுக் காலம் அடிமைபட்டிருப்பதை மக்கள் சகிக்காமல் அவனுக்கு விடுதலை அளித்து விடுகிறார்கள். நான் எண்பது வயது அடைந்திருக்கும் இத்தருணத்தில் நீ எவ்வாறு என்னை நரக வாதையிலிருந்து விடுதளையளிக்காது விட்டு விடுவாய்! நீயோ வள்ளல் பெருங்கொடையாளன் அடியவர் நன்றியை உணர்பவன் என்று இறைஞ்சினார். அந்த அழகிய வேண்டுகொளிற்காக அல்லாஹு தஆலா  அவருக்கு விடுதலை யளித்து விட்டான்.

முதியோரை மதி 

அல்லாஹ் தாஆலா நாள் தோறும் காலையிலும் மாலையிலும் வயோதிகர்கள் முகத்தை நோக்கி என் அடிமையே! உனது வயது முதிர்ந்து விட்டது. உனது மெல்லினம் பட்டுவ்ட்டது. உனது எலும்பு தளர்ந்து விட்டது. உனது தவணை காலம் நெருங்கிவிட்டது. என்னிடம் நீ வந்து சேரும் நேரம் வந்து விட்டது. நீ என்னை நினைத்து வெட்கப்படு. நான் உனது நரையைப் பார்த்து உன்னை நரகில் தள்ள வெட்கப்படுகிறேன் என்று கூறுகிறார்.என்று நாயகம் சல்லல்லாஹு அளைஹிவசல்லம் அவர்கள் கூறியதாக ஆனசு இப்னு மாலிக்கு (ரலி) கூறினார்கள்.

கிருஸ்த்துவ கிழவனும் ஹஜ்ரத் அலியும் 

ஒரு நாள் சையுதுனா அலி (ரலி) அவர்கள் காலைத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிவாயிலே நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தனர் இடைவழியில் அன்னாருக்கு முன்னே முதியவர் ஒருவர் மேதுவார் நடந்து போய்க் கொண்டுரிந்தார். அவருக்கு மரியாதையை செய்யும் நோக்கத்தோடு சையுதுனா அலி (ரலி) அவர்கள் நமது நடையை தாழ்த்தி அவர் பின்னே செல்லலாயினர் பள்ளிவாயிலை அடைந்த பொழுது அம்முதியவர் பள்ளிவாசலில் நுழையாது தன வழியே போகலானார் அப்பொழுதான் அவர் முஸ்லிமல்ல ஒரு கிறிஸ்த்துவர் என அன்னாருக்கு தெரியவந்தது .
உடனே அன்னார் பள்ளிக்குள் சென்று பார்க்கும் போது நாயகம் சல்லல்லாஹு அளைஹிவசல்லம் அவர்கள் இரண்டு ரூகூவின்  நேரம் அளவு நீண்ட ரூகூவின் இருக்கக் கண்டு அன்னாருடன் தொழுகையில் சேர்ந்து கொண்டனர்.தொழுகை முடிந்த பின்னர் எங்கள் நாயகமே இந்தத் தொழுகையில் மட்டும் வழக்கத்திற்கு விரோதமாக ரூகூவை ஏன் நீத்திக்கொந்டிரிந்தீர்கல் என சையுதினா அலி(ரலி) அவர்கள் வினவியதற்கு என்பெருமானார் அவர்கள் நான் வழக்கம்போல இந்த தொழுகையின் ருகூவில்  இருக்கும் போது ஜிப்ரீல் (அலை) என்னும் வானவர் வந்திறங்கி நான் எழுந்திருக்க விடாது எனது முதுகில் அவருடைய இறக்கையை வைத்து கொண்டார்.அவர் தனது இறக்கையை எடுத்த பின்னர் நான் தலையை உயர்த்தி எழுந்தேன் என்று கூறினார்.
அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்று சஹாபாக்கள் கேட்க்க அது பற்றி நான் அவர்தம் விசாரிக்கவில்லை என்று அன்னார் பதிலளித்தார். அதற்குள்ளாக ஜிப்ரீல் (அலை) வந்திறங்கி முஹம்மதே! அலி ஜமாத்தை பின்பற்ற வீட்டிலிருந்து விரைவாக வந்து கொண்டிருந்தார். வழியில் கிறிஸ்த்துவர் ஒருவர் குறுக்கிட்டார்.அவர் கிறிஸ்த்துவர் என்பது அவருக்குத் தெரியாது அவருடைய நரைக்கு மரியாதையை செய்யும் முறையில் அவரைத் தாண்டி முன்னே நடவாது அலி பின்வாங்கிகொண்டார்.ஆதலால் அவர் பள்ளிவாயிலில் வந்து தொழுகையில் உம்முடன் சேரும்வரை உம்மைத் தடுத்து வைக்கும்படி அல்லாகுத் தஆலா எனக்கு கட்டளையிட்டான்.இது ஒரு ஆச்சரியமல்ல அலி வந்து தொலுகையிர்  சேர்ந்து கொள்ளும் வரை சூரியனை உதயமாகாது தடுத்து வைக்கும்படி அல்லாகுத் தஆலா மீக்காயில்(அலை) என்னும் வானவருக்கு கட்டளையிட்டான் அது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் என்று கூறினார்.

3 அக்டோபர், 2012


அண்ணலாகிய அழகிய முஹியத்தீன், ஆராகும் அன்புடன் சுல்தான் முஹியத்தீன், புண்ணிய மாகியே பீரே முஹியத்தீன், பிரிசமாகிய வெற்றி முஹியத்தீன், மன்னராம் அப்துல்காதிரே முஹியத்தீன், வரிசை பெற்றிடும் பாவா முஹியத்தீன், முன்னாலே! என்பவே! ஆதி இறைவனே துணை செய்வாயே! அனைத்தையும் படைத்து ஆதி ஹக்கனே! அழிவே இல்லா மெய்பொருளே! எந்தன் மனத்திரு கருமம் எல்லாம் அதியவா! கிருபை தந்து நாம் நினைத்திடும் காரியம் எல்லாம் ஆதியே கிருபை செய்வாய், உள்ளத்தில் அடியார் போற்ற உதவி தந்தருள்வாய். அலை கடல் புவி வானம் மண்டபம் ஒளியுள்ளவனே! நிலை திசை அறியும் கோமான் நெடியவா உமை நான் போற்ற பலவிதமான துன்பம் மிடுமை துயரம் எல்லாம் தொலை வழி தூரம் ஆக்கி முஹியத்தீனின் அடிமை நான் உகந்து கேட்கும் அனைத்தையும் தந்தருள்வாய் ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.

22 செப்டம்பர், 2012

பிள்ளைகளை வளர்ப்பது எப்படி ?

இனி பிள்ளைகளை எம்முறையில் வளர்ப்பது நல்லது என்பதை ஆயாய்வோம். 
1. இல்மு
2. அமல்
3. தர்பியத்

அமல் இல்லா இல்மு பழம் தரா மரம் போன்றது. பலன் தராத மரத்தை யாரும் விரும்புவதில்லை.இல்மிலும் அமலிலும் ஒரே விதமான எழுத்துக்களை பார்க்க முடியும். பிள்ளைகளுக்கு வெறும் இளமை மட்டும் கற்றுக் கொளுப்பதில் பயனில்லை கற்ற இல்மின் பிரகாரம் அமல் செய்வதற்கு தர்பியத் அவசியம். சுமார் ஆறு வயதிலிருந்தே பிள்ளைகளை தர்பியத் செய்ய ஆரம்பிக்க வேண்டும் இளமை விட தர்பியத் அதிகம் தேவை வயது ஆக ஆக தர்பியத் செய்யும் முறையும் மாற வேண்டும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மீது பயமிருக்க வேண்டும். அதே சமயத்தில் பிரியமும் இருக்க வேண்டும் அந்தளவு அவர்களை பழக்க வேண்டும். பெற்றோர்கள் அடிப்பார்கள் என்ற பயத்தில் பிள்ளைகள் பொய் கூறும் அளவிற்கு அவர்களை பழக்க கூடாது ஒரு முறை ஒரு சிறு விசயத்திற்காக பொய் கூற பழகிவிட்டால் போதும். அது படிப்படியாக வளர்ந்து பெரும் திருட்டுக்கே காரணமாகிவிடும். பிள்ளைகளை அடிக்கடி கண்டிக்க கூடாது கண்டிப்பதர்கென்று ஒரு நேரத்தை முடிவு செய்து வைக்க வேண்டும். பலருக்கு மத்தியுள் வைத்து அவர்களை கண்டிக்கக் கூடாது தவறு செய்வதை பார்த்த உடனே சொல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ளபடி குறித்த நேரத்தில்தான் எதையும் கண்டிக்க வேண்டும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கை போகும் வரையுள்ள எல்லா விஷயங்களுக்கும் கால அட்டவணை முடிவு செய்து அதன் பிரகாரம் அன்று நடைபெற்றதா? என்பதை பரிசீலனை செய்ய வேண்டும் கால அட்டவணைப்படி செய்யலாற்றுவதில் ஏதேனும் விடுபடிருந்தால் ரொம்பவும் கண்டிக்காமல் அதை செய்யும்படி ஆவர்மூட்ட வேண்டும் சிறுவயதில் விளையாடல் ஆவர்களுக்கு பிரியமிருப்படால் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு நேரத்தை குறிப்பிட்டு வைக்க வேண்டும் வாலிப வயது நெருங்க நெருங்க நண்பர்களோடு செல்வதில் அதிக ஆசையும் ஆர்வமும் உண்டாகும் இதுதான் மிகவும் ஆபத்தான கட்டம் கெட்ட நண்பர்களுடன் பழக விடாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும் நல்ல நண்பர்களுடன் பழக விடுவதில் தவறில்லை. பிள்ளைகள் ஓரளவு பொறுப்பை உணரும் வரை மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாத்து வர வேண்டும் .

பெற்றோரின் கடமைகள் என்ன?
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பதை பற்றி சில ஹதீதுகளின் குறிப்புகள் இங்கே எழுதபடுகின்றன. நாம் அவற்ற்றை நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். உங்கள் பிள்ளைகள் ஏழு வயது அடைந்தும் தொழும்படி ஏவுங்கள் பத்து வயது தொழுகையை நிறைவேற்றாவிட்டால் அடித்து தோலும் படி ஏவுங்கள்.மற்றொரு ஹதீதில் தந்தை தான் பிள்ளைக்கு கல்வியை கற்றுக் கொடுப்பதானது தான தருமம் செய்வதை விட சிறந்ததாகும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக செருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது அல்லாஹ்வின் கட்டளை உங்கள் குழந்தைகளை அமாநிதங்களாக அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளான் எனவே அமானிதமாக அளித்த அக்குழந்தைகளை முறையோடு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது இறை நேச செல்வர் இமாம் கஸ்ஸாலி ரஹ்மாத்துலல்லாஹ் அவர்களின் மணி மொழிகளின் ஒன்று 
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்றும் தந்தையின் பிரியத்தில் அல்லாஹ்வின் பிரியமிருக்கிறது என்றும் தலை சிறந்த நுழைவாயில் வழியாக சுவர்க்கம் புக விரும்புவோர் தம் தந்தையையும் தாயையும் மகில்விப்பாராக என்றும் ஹதீது நூற்களில் காண முடியும்.