8 டிசம்பர், 2012

மனித பதர் யார்?


மனித பதர் யார்?

செயுதினா மூஸா நபி (அலை) அவர்கள் ஒரு நாள் அல்லாஹ் தஆலாவிடத்தில் ஆண்டவனே! நீ மானிடரைப் படைத்து அவர்களுக்குத் தேவையானவற்றை யெல்லாம் கொடுத்து வளர்க்கிறாய் அப்பால் அவர்களை நரகில் தள்ளி விடுகிறாயே!என்று கேட்டனர். உடனே இறைவன் அவரை நோக்கி மூஸா நபியே! எழுந்து போய் ஒரு நிலத்தை உழுது பயிரிடுக என்றான். அன்னார் அவ்வாறே ஒரு நிலத்தில் பயிரிட்டு நீர்பாய்ச்சி விளைந்த பின் அறுத்து சூடடித்துக் களஞ்சியத்தில் கொண்டு வந்து சேர்த்தனர் அதன் பின் ஆண்டவன் அவரை நோக்கி மூஸாவே வேளாண்மை என்ன்வாய்ற்று?என வினவினான். அதற்க்கு செயுதினா மூஸா நபி அவர்கல் ஆண்டவனே அத அறுத்துக் களஞ்சியம் சேர்த்துள்ளேன் என்றார். அதிலிருந்து எதனையும் விட்டு விட்டுவிட்டீரோ எள்ளது அனைத்தையும் கொண்டு வந்து விட்டீரோ என வினவ அன்னார் ஆண்டவனே! பதரை மட்டும் விட்டு விட்டு மற்ற வகைகளை கொண்டு வந்த விட்டேன் என்றனர். உடனே இறைவன் மூசாநபியே! நானும் மனித பதர்களையே நரகில் தள்ளுகிறேனேன் என்றான். மனித பதர் யார் ? என அன்னார் வினவினர்/ அதற்கு அவன் லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமாவை சொல்ல வேட்க்கப்படுகிறானே அவன் தான் மனித பதர் என்று பதில் அளித்தான் 

1 கருத்து:

  1. இப்படியும்முட்டாள்தனங்கள் இருக்க முடியுமா? முஹம்மது நபி யாகும் முன் இந்த வார்த்தை கிடையாது.இயேசுவோ மோசஸ் போன்றவா்கள் இந்த வார்த்தையைச் சொன்னதில்லை.ஆக இயயேசு பதரா ? என்னமுட்டாள்தனம்.

    பதிலளிநீக்கு