13 மார்ச், 2010

கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சுவர்க்கவாதிகள் என்று அறிவித்து பத்துப் பேர்களில் ஒருவரான ஹலரத் அப்துர் ரஹ்மானிப்னு அவ்ஃப் (ரலி) அவர்களின் அருமைத் தாயார்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறப்பதற்கு ஆமினா நாச்சியாருக்கு உதவி செய்தார்கள்.
கேள்வி : பெருமானார் தாய் வயிற்றிலிருந்து வரும்பொழுது (பிறக்கும் பொழுது) எந்தக் கோலத்தில் வந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தாய் வயிற்றிலிருந்து இப்புவிக்கு வந்த பொழுது விண்னை நோக்கியவர்களாக தரையில் தங்களது கையை வைத்துப் பிறந்தார்கள். மேலும் அவர்கள் தாயார் கர்ப்பவதியாக இருக்கும் பொழுது ஏனைய கர்ப்பினிகள் பிரசவ சமயத்தில் அடையும் வேதனைகளையோ சிரமங்களையோ தாம் அடைந்ததில்லை என்று ஆமினா அம்மாள் அவர்கள் கூறுகிறார்கள்.
கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்த செய்தியை உறவினர்களுக்கும் மக்கத்து மக்களுக்கும் தெரிவித்தது யார்?
பதில் : பெருமானாரின் சிறிய தந்தையான அபூலஹபின் அடிமைப் பென்னான துவைபா என்பவரால் முதன் முதலாக இச்செய்தி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலுபுக்குத் தெரிவிக்கப்பட்டது.
கேள்வி : அப்பொழுது அப்துல் முத்தலிபு அவர்கள் எங்கிருந்தார்கள்?
பதில் : அப்துல் முத்தலிபு கஃபாவை தவாபு செய்து கொண்டிருந்தார்கள்.
3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சிர்ரப்பு
கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எப்பொழுது எந்த நாட்டில் எங்கு பிறந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அரபு நாட்டில் மக்காவில் யானைச் சண்டை நடந்த வருடம் ரபீஉல் அவ்வல் மாதம் 12ஆம் தேதி அதாவது கி.பி.570 வருடம் ஆகஸ்ட் மாதம் திங்கட்கிழமை (20 ஆம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள்.
கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மக்காவிலே எந்த இடத்தில் பிறந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மக்காவிலே எந்த இடத்தில் பிறந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஸூகுல்லைல் (மாலைக் கடைவீதி) என்ற கடைத் தெருவில் (பிற்காலத்தில் ஹஜ்ஜாஜுப்னு யூசுபின் சகோதரர்)முஹம்மதிப்னு யூசுப் வீடு என்ற யாவராலும் அழைக்கப்பட்டு வந்த வீட்டில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்தார்கள் இந்த வீடு நபிகள் பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிபுக்கு உரிமையான வீடாக இருந்தது. அப்புறம் அபூதாலிப் அவர்களும் அவர்களுக்குப் பின்னர் அவருடைய மகன் அகீலும்(உகைலும்) சொந்தமாக்கிக் கொண்டார்கள். இந்த வீட்டை அப்பாஸிய கலீபாக்களான ஹாதி, ஹாரூன் ரஷீத் ஆகியோரின் தாயாரான கைஜுரான் என்பவர் அதிகப் பணம் கொடுத்து வாங்கி மஸ்ஜிதாக மாற்றினார்.

11 மார்ச், 2010

கேள்வி : அப்ரஹாவின் நிலை என்ன ஆயிற்று?
பதில் : திருமக்காவினுள் நுழைவதற்கு அப்ரஹா தயாராகி முதன் முதலில் தன்னுடைய படைகளில் இருந்த யானைகளை முன்னே செல்லக் கட்டளையிட்டான். இந்த யானைகளில் தலைமையானதும் பல சண்டைகளுக்குச் சென்று வந்ததுமான யானையின் பெயர் மஹ்மூது என்பதாகும்.
இந்த யானையை மக்காவின் திசையை நோக்கி ஓட்டும் போதெல்லாம் அது வேறு திசையிலே செல்லும் மீண்டும் இதை மக்காவை நோக்கிக் திருப்பிவிட்டால் அது ஹரம் எல்லையில் படுத்துக் கொள்ளும் அப்படியே செய்தன. இந் நிலையில் இறைவனால் அனுப்பப்பட்ட அந்தப் இரண்டிலும் வைத்திருந்த கற்களை அப்படை வீரர்களின் மீது வீசின.
இந்தக் கற்கள் இரும்புக் கவசங்களையும் துளைத்துக் கொண்டு உடம்பில் பாயும் சக்தியை பெற்றவையாக இருந்தன. பறவைகளின் பாயும் சக்தியை பெற்றவையாக இருந்தன. பறவைகளின் கல்லடி தாங்க முடியாமல் படைகள் நாலாபக்கமும் சிதறி ஓடின. பெரும்பாலான படை வீரர்கள் அடிதாங்க முடியாமல் மடிந்தனர் உயிர் தப்பியவர்களும் அப்ரஹாவும் எமன் நாட்டின் திசை நோக்கிச் சென்றனர்.
ஆனால் பறவைகள் அப்ரஹாவிஅயும் விட்டு வைக்க வில்லை. அவனுக்கு பலத்த அடி கொடுத்ததில் அவனது உடம்பெல்லாம் இனங் காணமுடியாத கடுமையான நோய் ஏற்பட்டு விரல்களெல்லாம் துண்டு துண்டாக விழுந்து விட்டன சிறகு ஒடிந்த பறவையைப் போல் தன்னுடைய நாட்டிற்குச் சென்று சில நாட்களில் மரணமடைந்தான்.
மலைமீது இருந்து கொண்டு படைபவரும் திசையை எதிர்பார்த்த வண்ணமிருந்த அப்துல் முத்தலிபு படைகள் ஏன் வரவில்லை என்று அறிவதற்காகத் தாமே அப்ரஹாவின் படைவீரர்கள் இருந்த இடத்திற்குப் போனார். அங்கு முஸ்தலிபாவிற்குப் பக்கத்தில் ஹரம் ஷரிபின் எல்லை யோரத்தில் அவர்கள் பெரும்பாலோர் இறந்து கிடப்பதைப் பார்த்தார்.
பின்னர் அந்த ஆப்ரவிடம் படைவீரர்கள் விட்டுச் சென்ற முக்கிய தளவடங்களையும் தங்கம் வெள்ளி சாமான்களையும் எடுத்துக் கொண்டு மறைந்திருந்த மக்கத்து மக்களுக்குச் செய்தியைச் சொல்லி அவர்களை ஊருக்குள் அழைத்து வந்தார்,
அன்புள்ள வாசகர் பெருமக்களே! கஃபாவை இடிக்க வேண்டும் என்ற நோக்கோடு பெரும் படைகளைதிரட்டிக் கொண்டு வந்தான் அப்ரஹா அவனுடைய எண்ணம் மட்டும் நிறைவேறி இருந்தால் அன்றே மக்காவில் அபிசீனிய ஆட்சி நுழைந்திருக்கும் அரபு நாட்டு மக்கள் அபிசீனிய அடிமையாக வாழ்ந்து தம் அரசியல் சுதந்திரத்தையும் இழந்திருப்பார்கள். எனவே தாங்கள் காப்பாற்றப்பட்ட இந்த நிகழ்ச்சியை அரபு மக்கள் பெரிதென மதித்து அரபி வருடத்தை கணித்தார்கள். இந்த சம்பவம் பற்றி அருள் மறையாம் திருமறையில் ஸூரத்துல்பீல் என்ற அத்தியாயத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
கேள்வி : அப்துல் முத்தலிபின் பிரார்த்தனை யாது?
பதில் : தன் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு மக்காவிற்கு வந்த அப்துல் முத்தலிபு அப்ரஹாவிடம் நடந்த உரையாடலைப் பற்றிச் சொல்லி விட்டு உங்களுடைய பொருளையும் குடும்பத்தார்களையும் அப்புறப்படுத்தி மக்காவிற்கு வெளியில் சென்று மலைகளிலும் கண வாய்களிலும் மறைந்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார்.
பின்பு நேராக கஃபாவிற்கு வந்து அதன் வளையத்தைப் பிடித்துப் கொண்டு இறைவனிடம் பிரார்த்திதார் அப்பொழுது நூதனமான பல பறவைகள் வானில் பறந்தன. இதற்கு முன்பு இவர் அது மாதிரிப் பறவைகளைப் பார்த்ததே இல்லை.
இந்தப் பறவைகள் நஜ்தையோ திஹாமானவயோ சேர்ந்தவையாகச் தெரியவில்லை இறைவனின் மீது ஆனையாகச் சொல்கிறேன் இந்தப் பறவைகளுக்கு ஏதோ வேலை இருக்கின்றது என்று மலைமீது ஏறி இருந்து கொண்டு அப்ரஹாவின் படை வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்துல் முத்தலிபின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட இறைவன் சிறிது நேரத்திற்குள்ளாக கரியமேனியும் மஞ்சள் நிற மூக்கும் உள்ள பறவைக் கூட்டங்களை அனுப்பினான். இவற்றின் கழுத்துக்கள் பச்சை நிறத்தில் இருந்தன. இவை ஒவ்வொன்றின் வாயில் ஒரு கல்லும் இரு கால்களிலும் இரண்டு கற்களுக் இருந்தன இந்தக் கற்கள் கடலையைவிடச் சிறியவைகளாகவும் பருப்பபைவிடச் சற்றுப் பெரியவையாகவும் இருந்தன.

4 மார்ச், 2010

ஆப்ரஹாவின் ஏமாற்றம்

கஃபாவை இடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதற்காகத் தான் அப்துல் முத்தலிபும் அவருடைய ஆட்களும் வந்திருக்கின்றார்கள் என்று என்னி பெருமகிழ்ச்சி அடைந்து அப்துல் முத்தலிபையும் அவரோடு வந்திருப்பவர்களையும் அப்ரஹா மரியாதையாக வரவேற்றுத் தன் அரியசனத்தை விட்டு இறங்கித் தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அப்துல் முத்தலிப்புக்கு அருகில் அமர்ந்து சிரித்த முகத்தோடு, "அப்துல் முத்தலிபு அவர்களே! தாங்கள் இங்கு வந்த நோக்கம் என்ன? என்று கேட்டான்.

அதற்கு அப்துல் முத்தலிபு: அரசே! என்னுடைய ஒட்டகங்கள் காட்டில் மேய்ந்து கொண்டிருந்தன அவற்றைத் தங்களுடைய ஆட்கள் ஓட்டிக் கொண்டு வந்து விட்டனர் அவற்றை எங்களிடத்தில் ஒப்படைந்து விட வேண்டும் என்று சொல்லித்தாங்கள் அவர்களுக்குக் கட்டளை இடவேண்டும் என்ரு சொல்லத்தான் நான் தங்களைப் பார்க்க வந்தேன் என்றார்.

இதைக் கேட்ட அப்ரஹா ஆச்சரியத்துடன் தாங்கள் கஃபவைப் பற்றி எந்தப் பேச்சுமே பேசவில்லையே ஏன்? அதனை இடிப்பதற்குத் தானே நான் வந்திருக்கின்றேன். பூரிவீக காலமாகவே இதில் தானே உங்களது பெருமையும் சிறப்பும் அடங்கியுள்ளது இதன் காரணமாகத்தானே உங்களுக்குப் பாதுகாவல் இருந்து வருகின்றது அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாலம் கேட்கின்றீர்களே? என்றான்.

அதற்கு அப்துல் முத்தலிபு அவர்கள் ஒட்டகைக்கு நான் சொந்தக்காரன் கஃபாவிற்கு நான் சொந்தக்காரன் அல்லன் அதற்குரியவன் வேறு இதற்கு முன்பு ஸைபுன்னு தீயத்னைன். இஸ்ரா போன்றாரை விட்டும் அவன் தான் காப்பாற்றினான்! இப்போதும் அவனே அதைக் காப்பபற்றிக் கொள்வான்! என்றார்கள்.

அப்ரஹா இதைக் கேட்டு கடுங்கோபங் கொண்டு அதிகாரிகளைப் பார்த்து அப்துல் முத்தலிபின் ஒட்டகங்களைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்னைத் தவிர இந்த கஃபாவை யார் காப்பாற்றுவார்? என்பதை அவர் பார்க்கட்டும் என்றான்.

அப்துல் முத்தலிப் தம் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு மக்காவிற்கு வந்துவிட்டார்.

கேள்வி : மக்காவிற்குப் படைகளை கூட்டிச் செல்ல வழிகாட்டியாக இருந்தது யார்?
பதில் : தகீபு கோத்திரத்தின் தலைவன் அபுரிகால் என்பவனைப் படைக்கு வழிகாட்டுவதற்காக நியமித்தான். இவன் வழியிலேயே இறந்து போனான்.இறந்த இடத்திலேயே அடக்கம் செய்தார்கள் எமன் தேசத்திலிருந்து வரும் ஹாஜிகள் இவன் சமாதியைப் பார்த்தவுடன் கல்லால் அடித்து விட்டுத்தான் வருவார்கள்,


கேள்வி : அப்ரயாவின் படையெடுப்பைப் பார்த்த அரபு கோத்திரத்தார் என்ன செய்தார்கள்?
பதில் : புனித கஃபாவை இடிப்பதற்காக அப்ரஹா படையெடுத்து வருவதை அறிந்த அரபு கோத்திரத்தார் பலர் அப்ரஹாவின் படைகளை வழிமறித்து எதிர்த்தனர் முறைப்படி சண்டைப் பயிற்சி பெறாத அரபு கோத்திரத்தார் தோல்வியடைந்து சிதறடிக்கப்பட்டார்கள். ஆனால் தாயிப் நகரமக்கள்.அப்ரஹாவுடன் ஒத்துழைத்து அவனுக்கு வழி காட்டுதற்காக ஒரு நபரையும் அனுப்பி வைத்தார்கள்.


கேள்வி : மக்கத்து மக்களின் மனநிலையை அறிய யாரை வேவு பார்க்க அனுப்பி வைத்தான்?
பதில் : மக்கத்து மக்களின் மனநிலையை அறிய அல் அஸ்வதுப்னு மக்ஸுத் என்ற அபிசீனியரின் தலைமையில் சிலரை வேவு பார்க்க அனுப்பி வைத்தான்.


கேள்வி : வேவு பார்க்கச் சென்றவர்கள் என்ன செய்தார்கள்.?
பதில் : மக்காவிற்கு அருகாமையில் மேய்ந்து கொண்டிருந்த அப்துல் முத்தலிபின் ஒட்டகங்களையும் மற்றவர்களின் கால்நடைகளையும் ஒட்டிக் கொண்டு சென்று விட்டனர்.


கேள்வி : அப்ரஹாவின் கஃபாவைப் பற்றி இடையில் தோன்றிய நல்லென்னம் யாது?
பதில் : மக்கத்து மக்கள் யாராவது வந்து தன்னிடத்தில் மிகத் தயவோடு கேட்டுக் கொண்டால் மக்காவை நாசப் படுத்தாமல் சென்று விடலாம் என்று என்னிய அப்ரஹா ஹுனாதத்துல் ஹிம்யரீ என்பவரைத் திருமக்கா விற்கு தூது அனுப்பினான்.
தூதின் விபரம் : 1 அரசப் பிரதிநிதியான அப்ரஹா தங்களோடு சண்டைக்கு வரவில்லை கஃபாவை இடிப்பதற்காகத்தான் வந்திருப்பதாகவும் அவர்களின் தலைவர் எவரையேனும் பேச்சு வார்த்தைகளுக்காகத் தன்னிடம் அனுப்பும் படியும் தூதனுப்பினான். இந்தச் செய்தியானது அப்போது கஃபாவின் முத்தவல்லியாக இருந்த அப்துல் முத்தலிபுக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் தெரிவிக்கப்பட்டது.


கேள்வி : செய்தி அறிந்த அப்துல் முத்தலிபு எடுத்த நடவடிக்கை என்ன?
பதில் : அப்துல் முத்தலிபு ஹாஷிம் குடும்பத்தார் சிலரை தம்மோடு அழைத்துக் கொண்டு அப்ரஹாவைப் பார்க்கச் சென்றார்.

3 மார்ச், 2010

கேள்வி : ஜுஹைர்ருப்னு பத்ர் என்பவர் செய்த சூழ்ச்சி என்ன?
பதில் : அரபு நாட்டு மக்கள் செய்தியறிந்து மன வேதனையுடன் இருக்கும் நேரத்தில் ஹுஹைருப்னு பத்ர் என்பார் அப்ரஹா கட்டிய தேவாலயத்தை அசிங்கப் படுத்துவேன் என்று சபதம் செய்து கொண்டு நேரடியாக ஸன் ஆவுக்கு வந்து அவ்வாலயத்தில் பயபக்தியுடன் வணங்குவது போல நடித்தார் இவருடைய நடிப்பை உணராத் தேவாலயத்தை சார்ந்தோர் அங்குள்ள ஊழியர்களில் ஒருவராக அவரைத் தேர்ந்தோர் அங்குள்ள ஊழியர்களில் ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இதன் பின்னர் ஜுஹைர் தக்க தருணத்தில் தம் சபதத்தை நிறைவேற்றி அந்த ஆலயத்தை அசுத்தப்படுத்தி விட்டு மறைந்துவிட்டார்.
கேள்வி : இச்செய்தி அறிந்த அப்ரஹா என்ன செய்தான்?
பதில் : தாங்க முடியாத அளவுக்கு ஆவேசமும், ஆத்திரமும் அடைந்து திருமக்காவிலுள்ள கஃபாவை இடித்தெறிந்தால் தான் இவ்வவமதிப்புக்குத் தக்க பரிகாரம் ஆகும் என முடிவு கட்டினான். மேலும் கஃபா இருக்கும் வரையில் தன் தேவாலயத்திற்கு எந்த மதிப்பும் இராது என்பதை உண்ர்ந்து, அபிஸீனிய மன்னனுக்குச் செய்தி தெரிவித்து மாபெரும் படையோடு மக்காவை நோக்கிப் புறப்பட்டான்