27 பிப்ரவரி, 2010

2. யானைப்படை
கேள்வி : யானைச் சண்டை என்பதென்ன? இது எங்கே எப்பொழுது நடந்தது?
பதில் : அபிசீனிய நாட்டரசனின் பிரதிநிதியாக விள்ங்கிய (எமன் தேசத்தில்) அப்ரஹாவின் யானைப் படைக்கு, கஃபாவின் தலைவராக விளங்கிய ஹலரத் அப்துல் முத்தலிபின் குடுகக்களுக்கும் இடையே நடந்த போர் தான் யானைச் சண்டை என்ப்படும். இது நடந்த வருடத்தை யானை வருடம் என்று சொல்லப்படுகின்றது. இது கி.பீ 570 ஆண்டு மக்காவின் எல்லையில் நடந்தது.
இந்தப் சண்டை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பாக நடந்தது. எமன் மாகாணம் அபிஸீனியா தேசத்து அரசன் ஆட்சியின் கூழ் கொஞ்ச காலம் இருந்தது. அப்போது அந்த அரசனின் பிரதிநிதியாக அப்ரஹா என்பான் இருந்தான். அவன் பதவிக்கு வருவதற்கு முன் அரியாத் என்பவர் எமன் தேசத்தை ஆண்டு வந்தார். அப்ரஹாவின் சூழ்ச்சியால் அரியாத் கொல்லப்பட்டார். இதன் பின்னர் தான் அப்ரஹா அரசர் பிரிதிநிதியானான். இது அபிஸீனியா நாட்டு மன்னனுக்குத் தெரிந்துவிட்டது., மன்னனுடைய வருத்தத்தைப் போக்கி, மன்னனைத் திருப்தி செய்வதற்காகத் தன் தலைநகரில் ஒரு தேவாலயத்தைக் கட்டி அனைவரும் அந்த ஆலயத்தில் வந்துதான் வழிபட வேண்டும் என்று தன் குடிமக்களுக்கு கட்டளையிட்டான். அன்றியும் ஹஜ்ஜு செய்ய வருவோரும் இந்த தேவாலயத்திற்கு வந்து போக வேண்டுமென்று அறிவித்தான்.
இந்தக் கோவிலை பல விதத்திலும் அழகுபடுத்தி வைத்தான். ஹஜ்ஜு செய்ய வருவோர் அனைவரும் இந்த தேவாலயத்திற்கு வந்தால் அரபு நாட்டு மக்களின் செல்வங்களின் கணிசமான ஒரு பகுதி இவ்வாலயத்திற்கு வருமானமாகக் கிடைக்கும் என்பது அவன் எண்ணம். இந்தச் செய்தி அரபு நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரிய வந்தது.
பூமான் நபியின் புனித வாழ்க்கை.
  1. மூதாதையர்

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தந்தை பெயர் என்ன?

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தந்தை பெயர் அப்துல்லாஹ் என்பதாகும்.

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தந்தை வழிப் பாட்டனார் யார்?பாட்டியார் யார்?

பதில் : தந்தையைப் பெற்ற பாட்டனார் பெயர் அப்துல் முத்தலிபு, பாட்டியின் பெயர் பர்ரா.

கேள்வி : தந்தை உடன் பிறந்த ஆண்கள் எத்தனைப் பேர்; அவர்களுடைய பெயர் என்ன?

பதில் :

  1. ஹாரிது,
  2. ஜுபைர்,
  3. அபூதாலிப்,
  4. அப்துல் கஃபா,
  5. அப்துல்லாஹ்,
  6. அபூலஹப் (அப்துல் உஸ்ஸா),
  7. முகவ்விம்,
  8. ஹஜல்,
  9. முங்ய்ரா,
  10. ஹம்ஜா,
  11. ளர்ரார்,
  12. குதம்,
  13. அப்பாஸ்,
  14. ங்தாக்,
  15. முஸ் அப்

இந்த பதினைந்து பேர்களும் தந்தை உடன் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் னீதாக் என்பவருக்கு ஹஜன் என்றும் அப்துல் கஃபா என்பவர்தான் முகவ்விம் என்றும் கூறுகின்றார்கள். குதம் என்று யாருக்குமே பெயர் இல்லை என்பதாகச் சரித்திர ஆசிரியர் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் கூறிய கூற்றுப்படிப் பார்க்கப் போனால் அப்துல் முத்தலிபு அவர்களுக்கு பன்னிரண்டு ஆன் மக்களாவார்கள்.

கேள்வி : தந்தை உடன் பிறந்த பெண்மக்கள் எத்தனை பேர் அவர்கள் பெயர் என்ன?

பதில் : உம்முஹகீம், பைளாஉ, உமைமா. அர்வா, பர்ரா, ஆத்திகா,ஸபிய்யா ஆகிய ஏழு பேர்களும் தந்தையுடன் பிறந்த பெண்மக்கள் ஆவர்.

தாய் வழி உறவினர்கள்

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தாயார் பெயர் என்ன?

பதில் : ஆமினா

கேள்வி : பெருமானாரின் தாய்வழிப் பாட்டனார், பாட்டி பெயர் என்ன?

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தாய்வழிப்பாட்டனார் பெயர் வஹ்பு, தாயாரைப் பெற்ற பாட்டியின் பெயர் பாத்திமா.

கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு சிறிய தாயார், பெரிய தாயார் உண்டா? எத்தனன பேர்கள்?

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சிறிய தாயார் பெயர் பாரீஷா, பெரிய தாயார் பெயர் பாக்கிதா,

கேள்வி : ஆமினா நாச்சியாரின் சகோதரர்கள் யாவர்?

பதில் :

  1. அஸ்வத்
  2. உமைர்
  3. அப்துயஹூது ஆகிய மூவர்

குறைஷி வம்சம் யாரிலிருந்து ஆரம்பம்

கேள்வி : குறைஷி வம்சம் யாரிலிருந்து ஆரம்பம்?

பதில் : பெருமானாரின் மூதாதை பிஹ்ருவிலிருந்து ஆரம்பம்.

கேள்வி : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பன்னிரண்டு தலைமுறைகளின் விவரமென்ன?

பதில் : குறைஷி வம்ச ஆரம்பம் பிஹ்ருவிலிருந்து

  1. பிஹ்ரு
  2. காலிப்
  3. லுவய்யு
  4. கஃபு
  5. முர்ரா
  6. கிலாப்
  7. குஸையீ
  8. அப்துல்மனாப்
  9. ஹாஷிம்
  10. அப்துல்முத்தலிப்
  11. அப்துல்லாஹ்
  12. அப்துல்லாஹ் வினுடைய அருமைப் புதல்வர் தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்

25 பிப்ரவரி, 2010

"உங்களுக்கு என் சலாம் உண்டாவதாக!"
அகிலத்துப் பெண்களின் தலைவியும் சுவனத்து பேரரசியும் அன்பு மனைவியுமான பாத்திமா(ரலி) அவர்களின் பிரிவு அன்பு கணவர் அலி(ரலி) அவர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்று வெயிலில் வாடிய புழுபோல் துடுத்துக் கொண்டிருந்தார்கள். ஈடு செய்ய முடியாத இழப்பு அவர்க்ளின் உள்ளத்தின் கடுமையான ரணத்தை உண்டாக்கியது ஆருயிர் மனைவியை நினைத்து நினைத்து துயரத்தில் மூழ்கி சோகமே உருவாய் இருந்தார்கள்.
அன்பு மனைவியின் பிரிவை நினைத்து பல கவிதைகளை பாடி பாடி மகிழ்ந்தார்கள்.
ஒரு நாள் அவர்களின் கால்கள் அன்பு மனைவி பாத்திமா(ரலி) அவர்களின் கபர்ஸ்தானுக்கு இழுத்துச் சென்றன. புகைக்குழியை கண்டதும் புன்னாகிய புனித உள்ளம் பாத்திம(ரலி) அவர்களுடன் கழித்த நாட்களை நினைத்து நினைத்து கண்களில் தாரை தாரையாக கண்ணீரை வடித்தார்கள்.
தங்களின் அவலக் குரலில் கவிதையொன்றினை பாடினார்கள் இதே அந்த கவிதைத்துளிகள்......"நான் முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்தில் "ஸலாம்" சொன்னவனாக நடந்துச் செல்கிறேன்.
"முதலில் மன்னர் நபியை இழ்ந்தேன் நான் அவர்களின் ஈரக்குலை துண்டை இனி எங்கு கான்பேன் என் அன்பு மனைவியின் பரிசுத்த கப்ரிலிருந்து என் துயர் போக்கும் ஆறுதல் வார்த்தை..
ஒன்றாவது வராமலிருக்கிறதே" என் அருமை மனைவியின் கப்ரே! உன்னை அழைப்பவனுக்கு நீ விடை அளிக்காதிருக்கிறாய்! அவ்வாறுசெய்ய உனக்கு என்ன துன்பம் பிடித்திருக்கிறது. பாத்திமாவே! என்னை விட்டு பிரிந்து விட்டதால் என் மீதிருந்த நட்பில் உங்களுக்கு விரக்தி ஏற்பட்டு விட்டதோ அந்தோ என் வெந்துப்போன உள்ளத்தின் புண்ணைஆற்றுவதற்கு யார் இங்கிருக்கிறார்கள்?
இப்படி உள்ளம் உருகி உருகி கவிதைகளைப் பாடி..பாடி கண்ணீர் துளிகளை கொட்டி கொட்டி கொண்டிருந்தார்கள்.
திடீரென பாத்திமா(ரலி) அவர்களின் இனிப்பாருங்கள்.....உங்கள் ஆருயிர் தோழி பாத்திமா சொல்கிறாள் நான் செய்த அமல்களுக்கு நானே பொறுப்பாளி என்ற நிலையில் எனக்கு என்ன நடக்கப் போகிறாதோ என்று அறியாது கல்லுக்கும் மண்ணுக்கும்மிடையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கையில் என்னால் உங்களுக்கு என்ன பதில் தான் சொல்ல முடியும்!.
தோழ்ரே என் அழகை எல்லாம் மண் திண்று விட்டது அதனால் தான் நான் உங்களை மறந்து விட்டேன்..."கப்ரு" என்னும் இப் புதை குழியானது என் உற்றார். உறவினர்களுடன் உரையாடுவதை விட்டும் என்னை தடை செய்து விட்டது.
உங்களுக்கு என் சலாம் உண்டாவதாக! இன்று முதல் நம்மிருவருக்குமிடையில் இருந்து வந்த நட்புறவு அறுந்து போய்விட்டது....போய் வாருங்கள்.

படிப்பினை:
மேற்கண்ட சோக நிகழ்ச்சி நமக்கொல்லாம் பெரும் உச்சக்கட்ட படிப்பினையாக அமைந்திருக்கிறது.. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்ப் போலவே பாத்திமா(ரலி) அவர்களின் இழப்பும் ஈடு செய்ய முடியாதவைதான் இறந்தவர்களை நினைத்து நினைத்து அழுது அழுது என்ன பயன்? இனி அவர்களுக்காக துஆ செய்தும் அவர்கள் வாழ்ந்த பரிசுத்தமான வாழ்க்கையையும் வாழ்ந்து காட்ட நாம்முன் வர வேண்டும் உற்றார் உறவினர்களை மனைவி மக்களை கணவன் சான்றோர்களை பிரிந்து விடும் மரணத்தை அனுதினமும் நினைத்து வாழ்வேண்டும்.
இஸ்லாம் மரணத்தை கண்டு பயப்பட சொல்லவில்லை மெளத்தை நினையுங்காள் என்று தான் நமக்கு சொல்லித் தருகிறது.
நல்ல அமல்களை மட்டுமே பார்க்க கூடிய கப்ருக்கு நாம் என்ன முன்னேற்பாடுகள் செய்து வைத்துள்ளோம் எந்தருமை இஸ்லாமிய தாய்மார்களே! சகோதரிகளே! சற்று சிந்தித்தும் பாருங்கள் அழியும் அற்ப உலகில் கிடைக்கும் கொஞ்ட சொத்து சுகங்களுக்காக சுவனத்துப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் கூட சுவனத்து சுகங்களை அனுபவிக்க வேண்டுமானால் இவ்வுலகில் பாத்திமா(ரலி) அவர்களின் பரிசுத்த வாழ்க்கையை வாழ் முன்வாருங்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் இற்ந்த பின் பலகாலங்களுக்கு பிறகு அல்லாமாஷைகு அப்துல் அஜீஸ் நப்பாக (ரஹ்) "ரூஃபியா" என்னும் காட்சியில் இப்படி கண்டார்கள்.
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் அவர்களின் புனித தோழ்ர்களான சஹாபா பெருமக்களும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார்கள் அமர்ந்து கீழ் கானும் சலவாத்தை ஓதிக் கொண்டிருந்தார்கள்.
"அல்லாஹும்ம ஸல்லி அலா மன்ரூஹூஹூ
மிஹ்ராபுல் அர்வாஹி வல் மலாயிக்கத்தீவல் கவ்ன்
அல்லாஹும்ம ஸல்லி அலா மன்ஹூவ இமாமுல் அன்பியாயி வல் முர்ஸலீன்
அல்லாஹும்ம ஸல்லி அலா மன்ஹுவ இமாமு அஹ்லில் ஜன்னத்தி இபாதில்லாஹில் முஃமினீன்

இந்த ஸலவாத்துக்கு "ஸலவாத்து பாத்திமா" என்ற புகழுடன் உலக மக்களிடம் சிறப்பாக உச்சரிக்கப்படுகிறன இஸ்லாமிய பென்மனிகளே! நீங்களும் தஸ்பீஹ் பாத்திமா ஸலவாத்துப் பாத்திமா போன்றவற்றை ஓதி. பாத்திமா(ரலி) அவர்களின் பரிசுத்தமான புனித வாழ்க்கையை வாழ்ந்து அல்லாஹ்ரசூலின் பொருத்தத்தை பெற்று சுவனத்தில் பாத்திமா(ரலி) அவர்களோடு ஊழி ஊழிகாலமாய் சேர்ந்து வாழுங்கள்...அல்லாஹ் எல்லாருடைய ஹாஜத்தை நிறைவேற்றுவானாக ஆமீன்........
"மண்ணறையில் மாநபியின் மகளார்"
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தினருக்கு அது துயரமான இரவு சுவன தலைவி பாத்திமா(ரலி) அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து மறு உலகப் பயணத்திற்காக தயாராக இருந்தார்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் வஸியத் சொன்னது போல கனவர் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களும் அஸ்மா பிந்து உமைஸ்(ரலி) அவர்களும் பாத்திமா(ரலி) அவர்களை குளிப்பாட்டினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பனிவிடைப் பென்னான முன்னால் அடிமையான ஸல்மா(ரலி) அவர்களும் இவர்கள் கதிஜா(ரலி)பாத்திமா(ரலி) அவர்களை பெற்றெடுக்கும் போது பிரசவம் பாத்த பென்மனி ஆவார்கள்.
குளிப்பாடுவதில் உதவிக்கு சேர்த்து கொண்டார் பிறகு அப்பாஸ்(ரலி) அவர்கள் அலீ(ரலி) ஹஸன்(ரலி) ஹுஸைன்(ரலி) போன்ற குறிப்பிட்ட குடும்பத்தினர்கள் அபூதர் கிபாரி(ரலி) போன்ற ஒரு சில சஹாபா பெருமக்கள் அங்கு இருந்தனர் அதிகமான சஹாபாக்களுக்கு பாத்திமா(ரலி) அவர்களின் மரனச் செய்தியை அறிவிக்கவில்லை வழியும் கண்ணீரோடு பாத்திமா(ரலி) அவர்களின் மதினாவின் ஜன்னத்துல் பக்கீ என்ற பொது கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதற்கு முன் பாத்திமா(ரலி) அவர்களின் ஜனாஸா தொழுகையை ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் நடத்தினார்கள் ஈடு செய்ய முடியாத இழப்பை நினைத்து பிள்ளைகள் இரண்டு பேரும் பதறி கதறி அழுதனர் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
அப்போது ஹஜ்ரத் அபூபதர் கிபாரி(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களின் கப்ரைப் பார்த்து உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள் ஏ....கப்ரே! இப்பொழுது உன்னிடம் ஒப்படைப்பதற்காக நாம் யாருடைய உடலை கொண்டு வந்து உள்ளோம் தெரியுமா? அகிலத்தின் அருக் கொடை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உதிரத்திலிருந்து உதித்த உத்தம பத்தினி பாத்திமா(ரலி)
வீரத்தின் விளை நிலம் அஞ்சாநெஞ்சர் பார்போற்றும் ஹைதர் அலி(ரலி) அவர்களின் அருமை மனைவி பாத்திமா(ரலி) சுவனத்தின் தூண்களான ஹஸன்(ரலி) அவர்களின் உன்னத தாய் பாத்திமா(ரலி)
இவ் உலகத்துப் பெண்களுக்கெல்லாம் உன்னத தலைவி என்பதை நீ அறிவாய் எனவே இப்புனித உடலை நீ கண்ணியமாக பெரும் பக்தியுடன் ஏற்று கொண்டு பக்குவமாய் வைத்துக் கொள்வாயாக என்று கூறினார்கள். அப்போது கப்ரில் இருந்து ஓர் அசரீரி சத்தம் வந்தது....அபூதரே! இது பெருமை பாராட்டும் இடமன்று என்பது உமக்குத் தெரியாதா? இது ஆளைப் பார்க்க கூடிய இடமன்று" அமலைப் பார்க்க கூடிய இடம்.
அல்லாஹ்வை பய்ந்து உண்மையான தக்வாவோடு நல்ல அமல்கள் புரிந்து மனச்சாந்தியோடு இங்கு வந்தவர்கள் மட்டுமே வெற்றியடைவார்கள். என்று முழ்ங்கியது.
பின்பு சஹாபாக்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் குடும்பத்தினரும் அமைதியாக வீடு திரும்பினார்கள். புதன் காலை பொழுது சோகமாகவே விடிந்தது பல சஹாபாக்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களிடம் வந்து பாத்திமா(ரலி) அவர்களின் மரணச் செய்தியை ஏன் எங்களுக்கு அறிவிக்கவில்லை? என்று கேட்டார்கள் அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் இரவிலே நல்லடக்கம் உடனே செய்து விடுங்கள் யாருடைய பார்வையும் என்மீது பட்டு விடக்கூடாது என்று சொல்லி சென்ற வஸீயத்தைச் சொல்லி அமைதிப் படுத்தினார்கள்.
பிறகு தங்களின் அருமை மனைவி பாத்திமா(ரலி) அவர்கள் கூறிச் சென்ற வஸீயத்தின் பிரகாரம்.
பாத்திமா(ரலி) அவர்களின் மூத்த சகோதரி ஜய்னபு(ரலி) அவர்களின் அருமை மகள் உமாமா(ரலி) அவர்களை பாத்திமா(ரலி) அவர்கள் இறந்து சரியாக ஏழாவது நாளில் திங்கள் கிழ்மை ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் திருமனம் செய்து கொண்டார்கள்.
அப்போது ஒரு சஹாபி வந்து ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களிடம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அற்புத மகளார் எப்படி பட்டவராக நடந்து கொண்டார்கள் என்று கேட்டார்.அதற்கு அலி(ரலி) அவர்கள் வாடிய பின்னரும் மணம் வீசும் ஒரு மலராக அவர்கள் இருந்தார்கள் என்று புகழ்ந்து கூறினார்கள்.
"சுவனத்துப் பேரரசியின் இறப்பும் ஈடு செய்ய முடியாத இழப்பும்"
ஹிஜ்ரி11-ம் (கி.பி.633) வருடம் ரமலான் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலைபொழுது...பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் அருமை புதல்வர்களான ஹஸன் ஹுஸைன்(ரலி) இருவரையும் அழைத்துக் கொண்டு தங்களின் அருமை தகப்பனார் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கப்ருக்குச் சென்றார்கள் கால்கள் தள்ளாடிய நிலையில் கனத்த இதயத்துடன் அங்கு போய் நின்றார்கள் கண்கள் குளமாகும் அளவுக்கு தேம்பி தேம்பி அழுதார்கள். நீண்ட நேரம் துஆ செய்தார்கள். பின்பு குழந்தை களோடு வீட்டிற்கு வந்தார்கள் பிள்ளைகளை அன்பு கணவர் அலி(ரலி) அவர்களிடன் சென்று இருங்கள் என்று கூறினார்கள்.
இதற்கு முன்பு தங்களின் அருமை கனவரிடம் அமைதியாக அமர்ந்து நான் இறந்த பிறகு நீங்கள் எனது மூத்த சகோதரி ஜெய்னபு(ரலி) அவர்களின் அருமை அனாதை மகள் உமாமாவை மறுமணம் புரிந்து கொள்ள வேண்டும் நான் மெளத்தானபின் என்னை இரவிலே நல்லடக்கம் செய்யுங்கள் என்னுடைய ஜனாஸாவின் மீது எந்த எஹூதியின் பார்வையும் பட்டுவிடக் கூடாது என்று வஸீயத் சொன்னார்கள்.
பிள்ளைகளை கனவரிடம் அனுப்பி விட்டு நன்கு குளித்தார்கள் பின்பு வந்து தூய்மையான உடைகளை அணிந்து கொண்டார்கள். அப்போது அஸ்மா(ரலி) அவர்கள் அங்கு இருந்தார்கள்.அவர்களை நோக்கி நான் இறந்து விட்டால் நீங்களும் அலியும் தான் என்னை குளிப்பாட்ட வேண்டும் வேறு யாரையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளகூடாது என்று வஸீயத் சொன்னார்கள் இப்பொழுது இரவு நேரம் அஸ்மா(ரலி) அவர்களை நோக்கி இங்கிருந்து நீங்கள் சென்று விட வேண்டாம் என்று சொன்னார்கள். உடனே படுப்பதற்காக தங்களின் படுக்கையறைக்கு சென்று படுத்துக் கொண்டார்கள். அஸ்மா(ரலி) அவர்கள் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்தார்கள்.
சிறிது நேரம் சென்றபின் வெளியில் இருந்து கொண்டே.அறைக்குள் சென்ற பாத்திமா(ரலி) அவர்களை அழைதார்கள்.
"சந்தூக்பெட்டி வந்த வரலாறும் பாத்திமா(ரலி) அவர்களும்"
கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களின் காதில் சொன்ன இரகசியம் முடியும் தருவாயில் வந்து நின்றது சுவனப் பேரரசி கண்மணி பாத்திமா(ரலி) அவர்கள் உடல் நிலை சரி இல்லாமல் இருந்தார்கள் அவர்களைப் பார்க்க மதினத்து மக்கள் வந்து போனார்கள்.
பாத்திமா(ரலி) அவர்களின் நோயை பற்றி விசாரிக்க கலீபா அபூபக்கர்(ரலி) அவர்கள் வீட்டிற்கு வந்து நோய்பற்றியும் உடல்நிலைப் பற்றியும் விசாரித்து சென்றார்கள்.
ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். பாத்திமா(ரலி) அவர்களைப் பார்த்து "அல்லாஹ்வின் தூதரின் அன்பு மகளார் அவர்களே! உங்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நேசித்தது போல வேறு எவரையும் நேசித்ததை நான் பார்க்கவில்லை? என்று பாராட்டிக் கூறி சென்றார்கள்.
இப்பொழுது பாத்திமா(ரலி)அவர்களுக்கு 29வயது பூர்த்தியாகியது அவர்களின் அருகில் இருந்து பணிவிடை செய்ய அவர்களின் மனைவி அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் உடன் இருந்தார்கள். (அலி(ரலி) அவர்களின் சகோதரர் ஜாபர் ரலி அவர்கள்) ஜாபர்(ரலி) அவர்கள் மூத்தாப் போரில் ஷஹிதானார்கள். பிறகு அவர்களை அபூபக்கர்(ரலி) அவர்கள் மறுமணம் புரிந்தார்கள். இருவரும் மிகவும் நேசமாக பாசமாக இருப்பார்கள், மூத்தாப் போரில் ஜாபர்(ரலி) அவர்கள் ஷஹிதானார்கள். என்ற செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மதினாவில் இருந்து எடுத்துச் சொன்ன போது பாத்திமா(ரலி) அவர்கள் சற்று கதறி அழுதார்கள். அப்போது அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) கண்ணீரும் கம்பளையுமாக கதறி கொண்டிருக்கும் போது அருகில் இருந்து ஆறுதல் சொன்னவ்ர்கள் பாத்திமா(ரலி) அவர்கள் தான் அப்போது பாத்திமா(ரலி) அவர்களின் அழுகையைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களுக்கும் ஆறுதல் சொன்னார்கள்.
இப்போது பாத்திமா(ரலி) அவர்களின் அருகில் இருக்கும் அவர்களை நோக்கி அஸ்மாவே! இப்பொழுது நான் இருக்கும் நிலைமையை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கவலையோடு சொன்னார்கள். அதாவது நான் இறந்தும் போகும் நிலையில் இருக்கிறேன் என்று சூசகமாக சொன்னார்கள். பிறகு பெண்களுக்கு (சந்தூக்) ஜனாஸாபெட்டி எப்படி இருக்க வேண்டும்? என்பது பற்றி இருவரும் பேசி கொண்டார்கள்.
பாத்திமா(ரலி) அஸ்மா இப்பொழுது இறந்தவர்களை எடுத்துச் செல்லும் முறை எனக்கு திருப்தியாக தோன்றவில்லை மைய்யத்தை கட்டிலில் வைத்து மேலே ஒரு துணியைப் போர்த்தி விடுகின்றனர் பெண்களும் கோஷா இல்லாத நிலை அதிலிருந்து மையத்தின் உடல் அமைப்பு தெளிவாக தெரிகிறது என்றார்கள் அதற்கு அஸ்மா(ரலி) அவர்கள் ஆம் என கூறி விட்டுஅருமை நபிகளின் புதல்வியே! நான் அபீஸீனியா நாட்டில் இருக்கும் போது ஜனாஸாவைப் பார்த்திருக்கிறேன் உங்களுக்கு விருப்பமானால் அது போலவே இப்பொழுது செய்து காட்டுகிறேன் என்றார்கள். இவர்கள் அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்து அதன்பின் மதினாவுக்கு இரண்டாவது முறையாக ஹிஜ்ரத் செய்தவர்கள் அஸ்மா பிந்த் உமைஸ்(ரலி) அவர்கள் தமது முதலாம் கணவர் ஜஃபர் தய்யார்(ரலி) அவர்களுடன் அபீஸீனியாவில் சில காலம் இருந்தார்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் செய்து காட்ட சொன்னார்கள். உடனே ஒரு கட்டிலைக் கொண்டு வர சொன்னார்கள் அதன் இரு பக்கத்திலும் கட்டுவதற்காக பேரிச்ச மரத்து பச்சை மட்டைகளை வெட்டி வரும்படி ஏவினார்கள். பிறகு அதை அமைத்து ஒவ்வொரு கிளை மட்டையின் இரண்டு நுனிகளையும் வளைத்து பாதி வட்ட வளைவைப் போலச் செய்தார்கள். இந்த இரண்டு நுனிகளையும் கட்டிலில் இரண்டு ஓரங்களோடு சேர்த்துக் கட்டினார்கள். பிறகு மேல் ஒரு துணியைப் போட்டு மூடிக் காட்டினார்கள். இந்த முறை நல்ல கோஷா முறையாக இருக்கும் மைய்யத்தை யாரும் பார்க்க முடியாது என்று கூறினார்கள். இந்த ஜனாஸா பெட்டியை பார்த்த பாத்திமா(ரலி) அவர்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை இது நன்றாக இருக்கிறது இந்த முறை அமைப்பு மிக மிக நல்லது இதனால் இறந்தவர் ஆணா?பெண்ணா? என்று யாரும் பார்க்க முடியாது என்று பூரித்துப் போனார்கள். இவ்வாறு தான் எனது ஜனாஸாவையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தங்களின் இறுதி ஆசையை அவர்களிடம் சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வபாத்தாகி ஆறு மாதங்களுக்குள் இன்றுதான் அதுவும் புதுமாதுரியான கோஷா முறையுடன் அமைந்த இந்த ஜனாஸா பெட்டியைப் பார்த்து சந்தோஷமாக இருந்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
"பாத்திமா ரலிக்கு ஓர் படிப்பினை!
கண்மணி நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் மறைவுக்கு பின் அவர்களில் சொத்து சம்பந்தமாக அவர்கள் குடும்பங்களில் பதட்டம் ஏற்பட்டது. இதை அறிந்த பாத்திமா(ரலி) அவர்காள் தந்தையின் சொத்தில் நமக்கும் பங்கு இருக்கிறது. அதை ஏன் விட வேண்டும் வாங்கி நமது பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்ற கருத்திலும் தங்களின் அருமை கணவர் அலி(ரலி அவர்களின் ஆலோசனையை ஏற்றவர்களாக அப்போது ஆட்சியில் இருந்த கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் சென்ரு மதினா ஃபிதக் கைபரைச் செர்ந்த கிராமங்களில் உள்ள தங்கள் தந்தையரின் சொத்துகள் எனக்கும் கொடுக்கப்படவேண்டும் என்ரு விண்ணப்பம் செய்தார்கள். இதை அறிந்த அபூபக்கர்(ரலி) அவர்கள். பாத்திமா(ரலி) அவர்களை நோக்கி நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தை என் குடும்பத்தாரைவிடவும் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் குழந்தைகளை என் குழந்தைகளை விடவும் நேசிக்கிறேன் ஆனால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கு வாரிசு கிடையாது என்ரு கூறியுள்ளார்கள். மேலும் நபிமார்களாகிய எங்களிடமிருந்து எவருக்கும் வாரிசு சொத்துரிமை கிடையாது நாம் விட்டுச் செல்வதெல்லாம் சதக்காவாகும் என்று சொன்னார்கள். அதனால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் காலத்திலேயே நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் குடுமப்த்தினருக்கு இந்த சொத்துகளின் வருமானத்திலிருந்து எவ்வளவு கொடுக்கப்பட்டதோ அது இப்பொழுதும் கொடுக்கப்படும் என்று கூறினார்கள். பிறகு நபி பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை மகளே! நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் செய்த ஒவ்வொரு செயல்களையும் நான் பின்பற்றி நடப்பேன் அவ்வாறு நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியைப் பின்பற்றாமல் புறகணித்து நடந்தால் அது பெரும் பாவமாகும்.தவறான வழியுமாகும். எனவே நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் சொத்திலிருந்து பங்கு தர முடியதவனாக உள்ளேன் என்று பணிவாக கூறினார்கள்.
இது சுவன பேரரசி பாத்திமா(ரலி) அவர்களுக்கு சற்று மணவருத்தம் ஏற்பட்டது. இருந்தும் ஷரிஅத் வாழவேண்டும் அதுதான் இப்போது தேவையே தவிர அழியும் சொத்துகள் அல்ல என்று நினைத்தவர்களாக அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வாக்குவாதமோ வேறு எதுவுமோ பேசாமல் திரும்பிவிட்டார்கள்.

24 பிப்ரவரி, 2010

"துயரத்தின் விளிப்பிலே பாத்திமா(ரலி)"
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்த நேரத்தில் விண்ணும் அழுதத் மண்ணும் அழுதது அதைவிட சுவனமங்கை பாத்திமா(ரலி) அவர்களும் அழுதார்கள்.
அருமை தந்தையாரின் பிரிவு தாங்காமல் பாத்திமா(ரலி) அவர்கள் கதறி கதறி அழுதார்கள். என் மீது இன்று முஸீபத்துகள் கொட்டப்பட்டுள்ளது. இவைகளை பகள் மீது கொடினாலும் பகல் அழிந்து விடும் என்ரு கூறி அழுதார்கள்.
கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு அருமை சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அன்பு மகளான பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஆறுதல் கூறவந்தார்கள்.சஹாபாக்களைப் பாத்து பாத்திமா(ரலி) அவர்கள். எனது அருமை தந்தையான அல்லாஹ்வின் தூதரின் புனித உடலை மண்ணில் கீழ் வைக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று கேட்டு கேட்டு அழுதார்கள்.
அங்கு வந்த அனஸ்(ரலி) அவர்களை நோக்கி அனஸே என் அருமை தந்தையார் மீது மண்ணை தள்ள எவ்வாறு உமக்கு துணிச்சல் ஏற்பட்டது என்று கேட்டார்கள். அனஸ்(ரலி) அவர்கள் நடு நடுங்கி போனார்கள். அல்லாஹ்வின் விருப்பத்தை யாரால் தடுக்க முடியும்? என்ரு இதமாக பதிலளித்து விட்டு ஆறுதல் கூறினார்கள்.
ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தங்களின் அன்பு ஆருயிர் மனைவிக்கு எவ்வளவோ ஆறுதல்களை அள்ளி கொட்டிக் கொண்டே இருந்தார்கள். அருமை மகள்களான ஹஸன் ஹுஸைன்(ரலி) இருவரும் அம்மாவைப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார்கள். பாத்திமா(ரலி) அவர்களின் சோகத்தை யாராலும் போக்க முடியவில்லை நடைப் பிணம் போல இருந்தார்கள். ஊண் குடிப்பு உறக்கம் இவைகளைத் துறந்தார்கள். இறப்புக்கு முன் இறந்தவர்கள் போலவே ஆகிவிட்டார்கள். மதினாவின் எந்த ஒரு மனிதராலும் அவர்களை ஆறுதல் படுத்த முடியாத அளவுக்கு உள்ளம் வேதனையில் மூழ்கி இருந்தது. அவர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறந்து பாத்திமா(ரலி) அவர்கள் இறப்பு வரை தொடந்து ஆறுமாத காலம் சோகமாகவே இருந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறந்த பின் பாத்திமா(ரலி) அவர்கள் சிரித்ததை யாரும் பார்க்கவே இல்லை. தந்தையின் நினைப்பிலேயே நாட்களை நகர்த்தினார்கள் பாத்திமா(ரலி) அவர்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களால் தனது அன்பு மனைவியை தேற்ற முடியவில்லை.அடிக்கடி கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்க ஸ்தலத்திற்குச் செல்வார்கள் கண்ணீர் வடித்து தேம்பி தேம்பி அழுவார்கள். பிறகு அடக்கஸ்தலத்தில் மீது இருக்கும் புனித மண்ணை அள்ளி முகருவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அடக்கஸ்தலத்தின் மண்ணை அள்ளி அள்ளி முகர்ந்து விட்டு செல்வார்கள் கருமை நபியின் கப்ர் மண்ணை முகர்ந்தவ்ர்கள் தங்களின் வாழ்நாளில் வேறு வாசனையை முகர்ந்து பார்பார்களா? என்று கூறிக் கொள்வார்கள்.
சில சமயம் அழுது கொண்டே. எனக்கு ஏற்பட்டிருக்கும் துனபம் பகலுக்கு வந்தால் அது உடனே இரவாகி விடுமே என்பார்கள்.
சிலபொழுது மழைநீர் காணாமல் பூமி அழுவது போல என் அருமை தந்தையே உங்களை காணாமல் நாங்கள் அழுகின்றோமே என்பார்கள்.
வானம் இருண்டு சூரியன் சுருட்டப்பட்டு காலம் கருகி விட்டதே தந்தையே உங்களுக்கு பின் இந்த உலகம் வரண்டு விட்டது தந்தையே என்பார்கள்.
இப்படியும் புலம்புவார்கள் என் தந்தையை நினைத்து கிழக்கு வாசிகளும் அழுகிறார்கள் மேற்குவாசிகளும் அழுகின்றார்கள் மலைகளும் அழுகின்றது அரன்மனைகளும் அழுகின்றது தந்தையே! என் துயரத்தின் சுமையை தாங்க முடியவில்லையே என்று அழுவார்கள்.
சிலபொழுது என் உயிருக்கு உயிரான அன்பு தந்தையே நீங்கள் மறைந்தவுடன் வஹியின் பரக்கத் நின்று போய்விட்டதே, நீங்கள் இவ்வுலக வாழ்விலிருந்து பிரிந்து மண்ணில் இளைபாரும் காலத்திற்கு முன்பாகவே எனக்கு மரணம் வந்திருக்கக் கூடாதா? என்று கதறுவார்கள். அல்லாஹ் உங்கள் மீது அளப்பிரிய கிருமை செய்வானாக என்ரும் அடிக்கடி கூறிக் கொண்டே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நினைத்துஏ ஐஸ் போல உருகிக் கொண்டிருப்பார்கள்.
பாத்திமா(ரலி) அவர்களின் இடைவிடாத அழுகையை கண்ட சஹாபாக்களில் ஆண்களும் பென்களும் பாத்திமா(ரலி) அவர்களிடம் வந்து இவ்வாறு இரவு பகலாக அழுது கொண்டிருந்தால் என்னாவது? ஒன்று பகலில் மட்டும் அழுங்கள் அல்லது இரவில் அழுங்கள் என்று அபிப்பிராயம் சொன்னார்கள்.
அக்கால மதினாவில் பாத்திமா(ரலி) என்றாலே சோகம் அழுகை துயரம் என்றுதான் பொருள் என் நினைக்கும் அளவுக்கு பாத்திமா(ரலி) அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்தது.
"விளக்கம் கேட்ட விண்ணுலக நாயகி"
சுவனத்துப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் உலகில் அவர்கள் தந்தையை தவிர வேறு யாரின் மீது அதிகம் அன்பு செலுத்தவில்லை. இரவும் பகலும் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் வாயிலிருந்து எது சொன்னாலும் அதை அப்படியே பின்பற்றுவார்கள். ஒரு நாள் கன்மணி நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் அன்பு மகளார் வீட்டுற்கு வந்தார்கள். அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் கறி சமைத்து இருந்தார்கள். மகளார் வீட்டில் சாப்பிட்டார்கள். அப்போது பாங்கு சொல்லப்பட்டது. உடனே நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு உலூசெய்யாமல் உடனே தொழுகைக்கு தயாரானார்கள். இதை பாத்து கொண்டிருந்த பாத்திமா(ரலி) அவர்கள். எனதருமை தந்தையே! நீங்கள் ஒரு நாள் என்னிடம் நெருப்பில் சமைக்கப்பட்ட பொருளைச் சாப்பிடால் உளு முறிந்து விடும் என்று சொன்னீர்களே! இப்போது சமைத்ட உணவைத்தானே சாப்பிட்டீர்கள். உளு முறிந்து இருக்குமே, உளு இல்லாமல் தொழ செல்ல ஆயத்தமாகிறீர்களே! உளு செய்து செல்லுங்கள் என்று சொன்னார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! இனி சமைத்த உணவுகளை சாப்பிட்டால் ஒழு முறியாது மீண்டும் ஒழு செய்ய அவசியமில்லை எல்லா உணவுகளும் நெருப்பில் தான் சமைக்கப்படுகின்றன என்ரு அன்பு மகளுக்கு விளக்கம் சொன்னார்கள்.
"பாத்திமாவே! என் உம்மத்திற்காக"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அந்திம நேரம் இறப்பின் பிடியில் கருனையே உருவான காத்தமுன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பீடிக்கப்பட்டிருந்தார்கள், பாத்திமா(ரலி) அவர்காள் தங்களின் பிரிய தந்தையைப் பார்க்க வந்தார்கள். கண்களில் கண்ணீர் கொட்டிய வண்ணம் அருமை தந்தை முன் வந்து நின்றார்கள். அப்போது ஆசையாய் வளர்த்த அருமை மகளைப் பார்க்காமல் வேறு பக்கம் தங்களின் முபாரக்கான முகத்தை திருப்பிக் கொண்டார்கள். மீண்டும் பாத்திமா(ரலி) அவர்கள் அந்த பக்கம் சென்று கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை பார்த்து பேச அழுது கொண்டு சென்றார்கள். இதையறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் முகத்தை இந்த பக்கம் திரும்பிக் கொண்டார்கள். பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை கடைசி நேரத்தில் என் முகத்தை கூட பார்க்காமல் திரும்பிக் கொள்கின்றார்களே ஏன்? என்று குழம்பிப் போய் பதறினார்கள். அப்போது கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் முகத்தை திரும்பிக் கொண்டே தங்களின் அன்பு மகளாரைப் பார்த்து. எந்தன்பு மகளே! இப்போது நான் என் உம்மத்தின் சிந்தனையில் இருக்கிறேன். நாளை என் உம்மத்தின் நிலை என்னவாகுமோ என்ற கவலையில் உள்ளேன். எனவே! அன்பு மகளே! நான் என் உம்மத்தின் சிந்தனையிலேயே கடைசியாக எனது ரப்பை சந்திக்கப் பிரியப்படுகிறேன் என்று கூறினார்கள். பிறகு அஸ்ஸலாத்தி யா உம்மத்தீ அஸ்ஸலாத்தியா உம்மத்தி அல்லாஹ்வாகிய உயர்ந்த தோழனுடன் என்று தாழ்ந்த குரலில் கூறினார்கள். மூன்று முறை முபாரக்கான பொற்கரம் பக்கத்தில் சாய்ந்தது. அவர்களின் ஒளிமையமான கன்கள் வானின் பக்கமாக பார்த்து அப்படியே நின்றது அதன்பின் முபாரக்கான கண்ணியமாக ஆன்மா அவர்களின் தூய உடம்பை விட்டு பிரிந்து சென்றது.
"உம்மஹாத்துமுஃமின்களின் போராட்டம்"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மனைவியரில்(1) கதிஜா பிந்த் குவைலித்(ரலி)(2) ஜெய்னப் பிந்த் குஜைமா(ரலி) ஆகிய இருவரும் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் வாழ்ந்திருக்கும் போதே இறந்து விட்டார்கள்.
மீதமுள்ள ஒன்பது மனைவியரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது உயிருடன் இருந்து அதற்கு மின் மரணமடைந்தார்கள்.
ஒன்பது மனைவியரும் இரு அனியினராக இருந்தார்கள்.
"அலீப் பகுதி"
1.தலைவி ஆயிஷா(ரலி)
2.ஸவ்தா (ரலி)
3.ஸபிய்யா(ரலி)
4.ஹப்ஸா(ரலி)
5.ஜெய்னபு பிந்த் ஜஹ்ஷ்(ரலி)

"பே" பகுதி
1. தலைவி: உம்முஸல்மா(ரலி)
2.உம்முஹபீபா(ரலி)
3.மைமூனா(ரலி)
4.ஜுவைரிய்யா(ரலி)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவர்களின் அனைத்து மனைவிமார்களோடு அன்பாகவும் நீதமாகவும் இருப்பார்கள். ஆய்ஷா(ரலி) அவர்கள் மீது இயற்கையாகவே பேரண்பு கொண்டவர்களாக இருந்தார்கள். இது பல சந்தர்ப்பங்களில் பல நிலழ்ச்சிகள் மூலம் நபி ஸல்லலலாஹு அலைஹிவ ஸல்லம் அவர்காள் சொல்லியும் செய்தும் காட்டியுள்ளார்கள். மதினாநகரில் அனைத்து மக்களுக்கும் இவ்விஷயம் நன்கு தெரியும் மதினாவில் மக்களிடம் ஒரு பழக்கம் இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் விஷ்யம் பேசவும் ஏதாவது ஒரு அபிப்பிராயம் கேட்கவும், நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை பார்த்து ஆதரவு கேட்கவும் குர் ஆன் அனுமதித்தது போல தங்களின் வேண்டுகோளுக்குச் சார்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு அன்பளிப்புகள் கொடுக்கவும் நாடுவார்களேயானால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் இருக்கும் போது தான் செல்வார்கள்அன்பளிப்புகளை கொடுப்பார்கள். காரனம் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் இருக்கும் போது தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயமாக சென்றாலும் அதை உடனே கவனித்து நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை மதினாவில் மக்களிடம் அசைக்க முடியாத வகையில் இருந்தது. இதன் காரணமாக ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் அன்பளிப்புகள் குவிந்தன. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டிலில்லாமல் வேறு மனைவியர் வீட்டில் இருக்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரிந்தால், யாரும் அவ் வீடுகளுக்கு செல்லமாட்டார்கள். இது உம்முஸல்மா(ரலி) அவர்களுக்கும். அவர்கள் அணியினருக்கும் கடுமையான பொறாமையும். அவர்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் தலை தூக்கவாரம்பித்து ஆய்ஷா(ரலி) அவர்கள் அணியினருக்கு கொண்டாட்டம். உம்முஸல்மா(ரலி) அணியினருக்கு திண்டாட்டம். ஒரு நாள் உம்முஸல்மா(ரலி) அவர்கள். நாங்கள் அணியினரை ஒன்று சேர்த்து ஆலோசனை நடத்தினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அனைத்து மனைவியிடமும் நீதமாக உள்ளார்கள்? மக்களுக்கு என்ன நேர்ந்தது? இப்படி பாகுபாடு செய்கிறார்களே! இதற்கு ஒரு முடிவு கட்டாலம் விடக் கூடாது. என்று ஆலோசித்து, இது சம்பந்தமாக, ஒரு முடிவு தெரிய உம்முஸல்மா(ரலி) அவர்கள் தன் சார்பிலும் தங்கள் அணியினர் சார்பிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று முறையிட்டார்கள் எப்படி? அல்லாஹ்வின் தூதரவர்களே! உங்கள் மனைவிகள் அனைவரும் சமமே! அப்படி இருக்க நீங்கள் எந்த மனைவி வீட்டில் இருந்தாலும் சரி மக்கள் அன்பளிப்புகளை அந்தந்த வீட்டில் கொண்டு வந்து கொடுப்பதுதான் நியாயம் குறிப்பிட்ட ஒரு மனைவி வீட்டில் இருக்கும் போது மட்டும் அன்பளிப்புகளை அள்ளிக்கொண்டு வந்து குவுப்பது அநியாயம்,அப்படி இல்லாமல் அன்பளிப்புகளை ஒத்துப் போடாமல் பொதுவாக நான் எந்த வீட்டில் இருந்தாலும் அங்கு வந்து அன்பளிப்புகளை கொடுங்கள் பாரபட்சனை காட்ட வேண்டாம் என்று உடனடியாக நீங்கள் மக்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிடுங்கள் என்று முறையிட்டார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்காள் மெளனமாக இருந்து விட்டார்கள். சில நாள்கள் கழித்து மீண்டும் உம்முஸல்மா(ரலி) தங்கள் அணியினர் சார்பாக வந்து அதே விஷயத்தை வலுயுறுத்தினார்கள். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பதிலேதும் பேசவில்லை பிறகு கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் முறையிட்டார்கள்.மூன்று தடவை வந்து முறையிட்டார்கள். இப்போது கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பேச துவங்கினார்கள்.
ஆய்ஷாவைப் பொறுத்து என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள். நானும் ஆய்ஷாவும் ஒரே போர்வையில் இருக்கும் போது தான் வஹிவருகிறது. வேறு எந்த மனைவியுடன் நான் இருக்கும் போது வஹி வந்ததில்லை. உங்கள் கோரிக்கை நியாயமானது தான். நான் என்ன செய்ய முடியும்? ஆய்ஷாவுடன் நான் இருக்கும் போது தவிர உங்களை தொல்லைகள் கொடுத்தற்காக நான் அல்லாய்விடம் மன்னிப்பு கேட்கின்றேன். இனிமேல் தொல்லை கொடுக்க வேண்டாமென்று பதிலளித்தார்கள். அங்கே இருந்து சென்ற உம்முஸல்மா(ரலி) அவர்கள் தங்கல் அணியினரை அழைத்து விஷயத்தை சொல்லி. மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அலோசனை செய்தனர். முடிவில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மிகப்பிரியமானவர் அவர்களின் மகள் பாத்திமா(ரலி) அவர்கள்தான் அவர்களை வைத்தே இப்பிரச்னைக்கு தீர்வுகாணலாம் என்று முடிவாகி பாத்திமா(ரலி) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்காள் பாத்திமா(ரலி) வந்தவுடன் விஷயத்தைச் சொல்லி எங்கள் சார்பாக உங்கள் தந்தையிடம் ஒரு நியாயத்தை வழ்ங்குபடி செய்யுங்கள் என்று கூறினார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் இவ்விஷயத்தில் இறங்கி நியாயம் வாங்கி தருவதாக ஏற்றுக் கொண்டார்கள். தயக்கத்துடன் இருந்தாலும் பாத்திமா(ரலி) அவர்கள் மிக யோசனை உடையவர்கள். உடனடியாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடன் சென்று விஷயத்தை சொல்லவில்லை. ஒரு சில தினங்கள் யோசனைக்காக ஒத்திப் போட்டார்கள் உம்முஸல்மா(ரலி) அவர்கள் அணியினருக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை உடனடி நியாயம்கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் அணியில் உள்ள உறுப்பினர் ஜய்னபு பிந்த ஜஹ்ஷி(ரலி) அவர்களை பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அனுப்பி உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் பாத்திமா(ரலி) அவர்களை அனுப்பி வைக்கும் படி சொன்னார்கள் ஜய்னபு(ரலி) பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை இது விஷயத்தில் வற்புறுத்தினார்கள். ஒத்திப் போடக் கூடாது என்று நினைத்த பாத்திமா(ரலி) அவர்கள் உடனே தங்களின் அருமை தந்தையிடம் சென்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட அத்தனை விஷயங்களையும் எடுத்துச் சொல்லி நியாயம் கேட்டார்கள். தாய்மார்களுக்காக மகள் நீதி கேட்டி வந்தது நினைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு உள்ளுக்குள் பெருமிதமாக இருந்தது. இருந்தாலும் தனது அன்புகளை நோக்கி...என் இளம் மகளே! நான் ஒன்று சொன்னால் நீ ஒன்று சொல்வியா? நான் பிரியப்படுவதை நீ பிடியப்படமாட்டாயா? என்று கேட்டார்கள். ஆம்....தந்தையே என்ரு சைகை மூலமாக பாத்திமா(ரலி) அவர்கள் ஆமோதித்தார்கள். அப்படியானால் நீ உன் சின்னம்மா ஆய்ஷாவை நேசிப்பாயாக என்ரு பக்கத்தில் இருந்த ஆய்ஷா(ரலி) அவர்களை சுட்டிக் காட்டினார்கள். பிறகு பாத்திமா(ரலி) அவர்களை நோக்கி மகளே! உன்னை இங்கு அனுப்பியது ஜெய்னபு தானே! என்று கேட்டார்கள் "ஜெய்னபும். மற்ற இரண்டாவது அணியினர் பெயர்களை சொன்னார்கள். பாத்திமா(ரலி) அவர்காள்.
நான் சத்தியம் செய்து சொல்வேன் இதனை தொடங்கி வைத்தவர்கள் ஜெய்னபு தான் என்று வற்புறுத்திக் சொன்னார்கள். ஆம் தந்தையே ஜெய்னபு(ரலி) தான் என்று பாத்திமா(ரலி) அவர்காள் சொன்னார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் தந்தையாரிடம் விடைபெற்று இரண்டாவது அணியிடம் வந்து நடந்தவற்றை கூறினார்கள் பாத்திமா(ரலி) அவர்கள் சென்றும் சரியான முடிவு கிடைக்க வில்லையே என்று இரண்டாவது அணியினர் டென்ஷனானார்கள்.
அல்லாஹ்வின் தூதர் மகளே! நாங்க எல்லாம் உனது அம்மாக்களல்லவா? நீர் எங்களுக்காக எதையுமே பெற்று தரவில்லை? எனவே மீண்டும் உமது தந்தையிடம் சென்று நன்கு பேசி எங்களுக்கு நீதியை வாங்கிவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள் உஷாராண பாத்திமா(ரலி) அவர்கள் இனியும் நான் என் தந்தையிடம் இது பற்றி முறையிட போகமாட்டேன் என்று கூறி மறுத்து விட்டு வீடு போய் விட்டார்கள். உடனே ஜெய்னபு (ரலி) அவர்களை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம்நீதி வாங்க அனுப்பி வைத்தார்கள்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று ஜெய்னபு(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆய்ஷா(ரலி) விஷயத்தில் நீதி வேண்டும் என்று உங்கள் மனைவிமார்கள் கேட்கிறார்கள். இதற்கு ஒரு முடிவை சொல்லுங்கள் என்று கேட்டார்கள். ஜெய்னபு (ரலி) கோபமாக வேகமாக சத்தம் போட்டு பேசினார்கள். ஆய்ஷா(ரலி) அவர்களையும் கோபத்தில் பேசினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஜெய்னபிடம் ஆய்ஷாவை பேச சொன்னார்கள் ஆய்ஷா(ரலி) அவர்களும் விடவில்லை. பதிலுக்கு அவர்களும் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தார்கள். இரு மனைவிக்கும் கடுமையான மோதல் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒன்றும் குறுக்கே பேசாமல் இருவரின் சண்டையை ரசித்துக் கொண்டிருந்தார். இருவரும் சளைக்கவில்லை. ஆய்ஷா(ரலி) அவர்கள் அடுக்கடுக்காக ஆதாரங்களோடு தங்கள் தரப்பு நியாயத்தை அள்ளி வீசினார்கள். பிறகு இருவரையும் சமாதானம் செய்தார்கள். அமைதிப்படுத்தி ஜெய்னபு(ரலி) சென்ற பின்னர் ஆய்ஷா(ரலி) அவர்களை நோக்கி...ஆய்ஷா! நீர் உண்மையிலேயே அபூபக்கர் மகளேதான்!(அபூபக்கர் மகள் என்றால் மகள்தான்)என்று பாராட்டிப் பேசினார்கள்.

இஸ்லாமிய பெண்மணிகளே! இன்றே சபதமெடுங்கள்"

ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அப்போழுது அலி(ரலி) பாத்திமா(ரலி) இருவரையும் நோக்கி நீங்கள் இருவரும் தஹஜ்ஜத் தொழுதீர்களா? என்று கேட்டார்கள்.

உடனே அலி(ரலி) அவர்கள் முந்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே! உங்கள் உயிர்கள் அல்லாஹ்விடம் இருக்கின்றன. அவன் விரும்பும் போது படைத்து விடுகிறான் என்று சொன்னார்கள்.

உயிர்களை அவற்றின் மரணத்தின் போது தம் உறக்கத்தில் மரணிக்காமலுள்ளதையும் அல்லாஹ்வே கைப்பற்றுகிறான். பிறகு எவற்றின் மீது மரணத்தை விதியாக்குகின்ரானோ அவற்றைக் தன்னிடமே தடுத்துக் கொள்கிறான். மற்றவற்றை குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்கு) அனுப்பி விடிகிறான் நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற கூட்டத்தினருக்கு உறுதியான பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர் ஆன் அத்:39, வச:42)

மேற்கண்ட திருக்குர் ஆன் வசன கருத்தையொட்டி அலி(ரலி) அவர்கள் சொன்னார்கள்.

ஹஜ்ரத் அலி(ரலி) இவ்வாறு விளக்கம் சொல்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் விரும்பவில்லை. உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் த்ங்களின் தொடையில் கையால் அடித்துக் கொண்டு முகத்தை சற்று திருப்பிக் கொண்டு.

"வகான இன்ஸானு அக்ஸர ஷய்கின் ஜதலா மனிதன் பெரும் பாலும் பேச்சில் சர்ச்சை செய்யக் கூடியவனாக இருக்கின்றான். என்று சொன்னார்கள் தம்பதிகள் இருவரும் மெளனமானார்கள். தாங்கள் இருவரும் தஹஜ்ஜத் தொழ உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

"கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் சொன்ன இரகசியம்"

"கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தார்கள். ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை சுற்றி அவர்களின் அருமை மனைவி மார்கள் இருந்தார்கள். அப்போது தந்தையை பார்ப்பதர்காக தங்களின் அருமை குழந்தைகளான ஹஸன்(ரலி) ஹுஸைன்(ரலி) இருவரையும் அழைத்துக் கொண்டு பாத்திமா(ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள் தங்களின் அருமை மகளை வரவேற்று பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்கள் அன்பு மகளைப் பார்த்து மகளே! உறவைப் போக்கி விடுவதும் ஆசைகளை தகர்தெறிவதும் இனத்தைப் பிரித்து விடுவதும் மனைவிகளை விதவைகளாக்கி விடுவதும் மக்களை அனாதையாக்கி விடுவதுமான மெளத்து இதுவே என்று சொன்னார்கள். இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் அழவாரம்பித்தார்கள் பின் அருமை மகளை நெஞ்சோடனைத்து அவர்கள் காதில் ஏதோ இரகசியம் சொன்னார்கள். இதைக்கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் கொவென கதறி அழுதார்கள். பாத்திமா(ரலி)அவர்களின் அழுகையைப் பார்த்து பக்கத்திலிருந்த ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தன் அருமை மனைவியை நோக்கி அவ்வாறு அழவேண்டாம் என்று கண்டித்தார்கள். உடனே கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அலி(ரலி) அவர்களை நோக்கி....அலியே அப்படி சொல்ல வேண்டாம் இறந்து தன் தந்தைக்காக பாத்திமாவை சிறிது கண்ணீர் வடிக்க விடுங்கள் என்று கூறினார்கள். பிறகு அருமை மகளின் அழுகையைப் பாத்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் அருமை மகளை அருகில் அழைத்து மீண்டும் ஏதோ இரகசியம் சொன்னார்கள் இதை கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் மிகவும் சிரித்தவர்களாக சந்தோஷமடைந்தார்கள். இக்காட்சியை எப்பொழுதும் நான் பார்த்ததில்லை என்று ஆச்சரியமாக சொன்னார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் அருமை மகளாருக்குச் சொன்ன அந்த இரண்டு இரகசியங்களை அறிந்துக் கொள்ள அயிஷா(ரலி) அவர்களுக்கு ஆசையாக இருந்தது. எப்படியும் மகளாரிடம் இரகசியங்களை அறிந்துக் கொள்ளலாம் என்ற துடிப்புடன் பாத்திமா(ரலி) அவர்கள் தந்தையாரிடம் விடைப் பெற்று வீட்டிற்கு சொல்லும் போது அருலே வந்து அருமை மகளே! நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தாங்களுக்கு சொன்ன அந்த இரகசியம் என்ன? என்று கேட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்ன இரகசியத்தை இப்பொழுது நான் வெளியிட மாட்டேன் . அது வெளிய சொல்ல கூடாத இரகசியம் என்று உறுதியாக கூறிவிட்டார்கள். பிறகு கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வபாத்தானார்கள். சில மதங்கள் கழித்து ஒரு நாள் ஆய்ஷா(ரலி) அவர்கள் பாத்திமா(றலி) அவர்களை சந்தித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கொன்ன அந்த இரகசியம் என்ன? அல்லாஹிவின் பெயரால் கேட்கிறேன் அந்த இரகசியததை சொல்லுங்கள் அருமை மகளே! உங்களுடைய மாற்றாந்தாய் என்ற வகையில் எனக்கு இரகசியத்தை அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. அந்த உரிமையில் உங்களிடம் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன? என்று கேட்டார்கள்.
இன்று எனது அருமை தந்தை இல்லை அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டார்கள் அதனால் இரகசியத்தை நான் சொல்கிறேன் முதலாவதாக எனதருமை தந்தை என்னிடம் மகளே! ஒவ்வொரு ஆண்டிலும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் குர் ஆனை ஒரு தடவை ஓதிக் காட்டுவார்கள் நான் அவருக்கு ஒரு முறை ஓதிக் காட்டுவேன். இது தான் வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் என்னிடம் இரண்டு தட்வை குர் ஆன் ஓதினார்கள். ஆகையால் என் வாழ்நாள் முடிந்து இவ்வுலகை விட்டும் பிரியப்போகிறேன். எனவே பாத்திமா! நீ பொறுமையை கடைப்பிடிப்பாயாக. நான் உமக்கு நல்வழி காட்டியான தந்தையாவேன். என்று சொன்னார்கள். இதைக் கேட்டு நான் அழ ஆரம்பித்தேன். என்னுடைய அழிகையின் உச்சத்தைக் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் என் காதில் மகளே! என் குடும்பத்தாரில் நீயே என்னிடம் முதலாவதாக வந்து என்னை சந்திப்பாய் என்றும் மேலும் சுவனத்துப் பெண்களுக்கு நீர்தாம் தலைவியாய் இருப்பாய் இது உனக்கு சந்தோஷம் இல்லையா? என்று சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் நான் சிரிக்க வாரம்பித்தேன் என்று இரகசியத்தை வெளியிட்டார்கள்.

21 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) அவர்களின் மதிநுட்பம்"

ஒரு சமயம் "ஹிஜ்ர்" என்ற இடத்தில் மக்கத்து குறைஷி காபிர்கள் அனைவரும் ஒன்ரு கூடி கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை கடுமையாக தாக்கி காயப்படுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். அந்த சமயத்தில் சிறு வயதினராய் இருந்த சிறுமி பாத்திமா(ரலி) அவர்கள் அந்தப் பக்கமாய் ஒரு வேலையாக சென்ற போது குறைஷிகள் இந்த சதி திட்டத்தை அறிந்தார்கள். உடனே ஒட்டமாய் வீட்டிற்கு ஓடி வந்து தங்களின் அருமை தந்தையாரிடம் விஷயத்தை சொன்னார்கள்.

சின்னஞ்சிறு அருமை மகளின் இவ்வார்த்தையைக் கேட்ட கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! கவலைப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு உடனே கஃபத்துல்லாஹ்விற்கு போனார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கஃபாவில் நுழைவதை குறைஷி காபிர்கள் பார்த்துவிட்டார்கள். குறைஷி காபிர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் பார்த்து விட்டார்கள் உடனே அங்கு ஒரு பிடி மண்னை அள்ளி குறைஷிகள் மீது விசி "ஷாஹத்தில் உஸூஹு" என்றுக் கூறினார்கள். பின்பு கஃபாவில் இறை வணக்கத்தில் திளைத்து விட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் இச்செய்கை காபிர்களின் உள்ளத்தில் ஒரு திடுக்கத்தை உண்டாக்கியது நடு நடுங்கிப் போனார்கள்.

"பெண்கள் அணியிம் நகைகள்???"
ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மஸ்ஜித் நபவியிலிருந்து வெளியே வந்தார்கள் அப்போது ஒரு ஏழை மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்த்து. அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டார். அந்த சமயத்தில் தன்னிடம் ஏதும் இல்லை என உணர்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவ்வேளை மனிதரின் மீது இரக்கம் கொண்டவர்களாக ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை அழைத்து இந்த ஏழை மனிதரை எனது அருமை மகள் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அழைத்து போங்கள் அவர்கள் ஏதாவது உதவி செய்வார்கள் என கூறினார்கள்.
ஹஜ்ரத் பிலால்(ரலி) அவர்கள் அவ்வேழை மனிதரை பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விபரத்தைச் சொன்னார்கள்.
அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டின் நிலவரம் மிக வறுமையில் வாடி இருந்தது. மூண்று நாட்களாக பாத்திமா(ரலி) அவர்கள் பட்டினியோடு இருந்த சமயம் அது அல்லாஹ்வின் தூதர் ஒரு ஏழைமனிதரை அனுப்பி விட்டார்கள் அவரை வெறும் கையோடு அனுப்பிட விடக்கூடாது என்று நினைத்த பாத்திமா(ரலி) அவர்கள் அவ்வேழை மனிதரிடம் தற்சமயம் போர்த்திக் கொள்ள ஒரு போர்வைதான் இருக்கிறது அதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி கொடுத்தார்கள்.
போர்வையை வாங்கி கொண்ட ஏழைமனிதர் அம்மா? இந்த போர்வையை குளிருக்கு போர்த்துக் கொள்வேன் வயிற்றை பாடாய்ப்படுத்தும் பசியை போர்த்த நான் என்ன செய்வேன்? என்ர்று சொன்னார்கள்.
இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்களின் உள்ளம் வேதனை அடைந்தது உடனே வீட்டுக்குள் சென்று தங்களின் அருமை தாயார் உம்முஹாத்துல் முஃமினின் கதிஜா(ரலி) அவர்களின் பாரம்பரியமிக்க நினைவுச் சின்னமாக மீதி இருந்த அந்த ஒரே ஒரு கழுத்து நகை அதை எடுத்து வந்தார்கள். நகையை ஏழை மனிதரிடம் கொடுத்து இந்த நகையை விற்று உங்களின் பசி போக்கி கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

"அல்லாஹ் சொன்ன ஆறுதல்"

ஒரு சமயம் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டில் வேலைகளில் ஈடுபட்டிருந்ததர்கள். அப்போது ஒரு நபர் வந்து அல்லாஹ்வின் தூதர் தங்களை கூப்பிடுகின்றார்கள் என்று சொல்லி சென்றார். தந்தையின் அழைப்பு அவர்கள் உள்ளத்தின் தேன்போல் பாய்ந்தது உடனே சீக்கிரமாக வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரைந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முகம் வாடிப்போய், உடல் நடு நடுங்கி கொண்டிருந்தது. இருவரின் அழுகை அல்லாஹ்வுக்கு இரக்கத்தை உண்டு பண்ணியது. அச்சமூட்டி எச்சரிக்கை வசனங்கள் இருவரின் உள்ளத்தை ஆட்டி படைத்ததை அறிந்த அல்லாஹ்! தனது வல்லமை கிருமை இரக்கம் மன்னிப்பு போன்ற வசனங்களை இறக்கி வைத்தான். ஆறுதலான வசனங்கள் வந்ததும் இருவரும் ஆறுதல் அடைந்தார்கள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்

"தந்தை மகளின் துயர நிலை"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் ஏறத்தாழப் பத்து நாட்கள் காய்ச்சலின் வேகம் நீடித்திருந்தது. பாத்திமா(ரலி) அவர்கள் தனது அருமை தந்தையின் நிலை கண்டு கண்ணீர் விட்டழுதார்கள்.
நோயின் வேகத்தால் சில நேரம் ஒரு காலை நீட்டுவார்கள். மற்றொரு காலை மடக்குவார்கள். ஒரு சமயம் நோயின் கடுமையால் மயக்கம் அடைந்தார்கள் பாத்திமா(ரலி) அவர்கள் தனது அருமை தந்தையை அனைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதார்கள் எனது தந்தையின் கஷ்டமே என்ரு சொன்னார்கள். உடனே கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அருமை மகளே! உமது தந்தைக்கு இன்றைக்குப் பிறகு கஷ்டமே இருக்காது. வெறும் தப்பிக்க முடியாத ஒரு நிலைமை உமது தந்தைக்கு இப்போது வருகிறது இனிமே மறு உலகில் சந்திப்பு ஏற்படும் மகளே! அழ வேண்டாம் நான் இவ்வுலகத்தை விட்டு சென்ற பிறகு இன்னாலில்லாஹு வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறுவாயாக! ஏனெனில் இந்த வாசகத்தில் மனிதனுடைய துன்பங்களுக்கெல்லாம் மருந்து இருக்கிறது என்று சொன்னார்கள். இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழுதார்கள்.
"பாத்திமா(ரலி) அவர்களின் சூடான பதில்"
ஹிதைய்பிய்யா உடன் படிக்கைக்கு பின் மக்கத்து குறைஷிகள் அடிக்கடி உடன்படிக்கையை மீறினார்கள். உண்டபடிக்கையை முறிக்கும் பல காரியங்களை செய்தார்கள் புனித பிரதேசங்களின் உள்ளேயே தாக்குதல் நடத்தினார்கள். ஒப்பந்தத்திற்கு பிறகும் பனீபக்கர்களின் சில மக்கள், குஸா அக்களின் பனீ-க அப் மக்களிடம் உண்டான பகைமையை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
குஸாக்கள் இது பற்றி சொல்ல மதினாவுக்கு சில தூதுவர்களை அனுப்பி வைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் நடந்த விஷயங்களை எடுத்துக் கூறி உதவி கேட்டு நின்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உதவி செய்ய வாக்குறுதி அளித்தார்கள்.
இந்த சம்பவங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை நினைத்து பயந்த மக்கத்தினர் அபூஸுப்யானை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் தூது அனுப்பி இருந்தார்கள். அபூஸுப்யான் செல்லும் வழியில் குஸாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை சந்தித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். பயந்து போன அபூஸுப்யான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் வந்து ஓ முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ஹுதைபியா உடன் படிக்கையின் போது நான் இருக்கவில்லை. இப்போது நாம் அதனை மேலும் உறுதி செய்வோம் அதன் காலத்தை நீட்டிக் கொள்வோம் என்றார்.
ஏன்? அதற்கு பங்கும் விளையும் வகையில் உங்கள் தரப்பில் ஏதும் நடந்து விட்டதா? என்று மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். நிம்மதி இழந்த அபூஸுப்யான் இறைவன் மன்னிக்க வேண்டும் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவ்வாறே நாமும் ஹுதைய்பியாவில் நாம் ஒப்புக் கொண்ட காலம் வரையும் உடன் படிக்கை படியே நடப்போம் அதனை நாங்கள் மாற்றவும் மாட்டோம். அதனிடத்தில் வேறு ஒன்றை ஏற்கவும் மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் இனிகாரியம் ஆகாது நம் சார்பில் சிபாரிசு மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று நம் கோரிக்கையை வாங்கலாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை மனைவியும் அபூஸுப்யானின் இளைய மகளுமான உம்முஹபீபா(ரலி) அவர்களிடம் அபூபக்கர்(ரலி) இன்னும் ப சஹாபாக்களையும் பிறகு அலி(ரலி) அவர்களிடமும் சென்று யாரும் முன் வராதடால் கடைசியால் பாத்திமா(ரலி) அவர்களிடம் வந்தார். பாத்திமா(ரலி) அவர்கள் அபூஸுப்யானை வரவேற்றார்கள். அபூஸுப்யான் அமர்ந்தார் அப்போது பாத்திமா(ரலி) அவர்களின் முன் சிறுவர் ஹஸன்(ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். முஹம்மதின் அருமை மகளே! மனிதர்களுள் ஒருவருக்கொருவரிடையே பாதுகாப்பு உறுதி ஒன்றைதான் அளிப்பதாக கூறும் படி உம் மகனிடம் சொல்லும். அதன் மூலம் உமது மகன் அரபிகள் அனைவருக்கும் நிரந்தரமான தலைவராக உருவாக முடியும் என்று தந்திரமாக பேசி பாத்திமா(ரலி) அவர்களை பணிய வைக்க முன்வந்தார்.
அபூஸுப்யானின் சூழ்ச்சி பாத்திமா(ரலி) அவர்களுக்கு புரியாத என்ன? பாத்திமா(ரலி) என்ன சளைத்தவர்களா? அபூஸுப்யானுக்கு சுடச்சுட அழகான பதிலளித்தார்கள்.அபூஸுப்யான் அவர்களே! சிறுவர்களுக்கு பாதுகாப்புறுதி வழங்குவதில்லை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் என்றார்கள் அபூஸுப்யான் வாயடைத்துப் போனார்.

20 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) அவர்களின் துஆ"
ஒரு சமயம் ஹஜ்ரத் பாத்திமா(ரலி) அவர்கள் தொழுது முடித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உம்மத்துகளுக்காக அதிகமாக துஆ செய்தார்கள். இதை பார்தத கொண்டிருந்த அருமை மகளார் ஹஸன்(ரலி) அவர்கள். எனதருமை அம்மாவே! நீங்கள் தொழுது எல்லாருக்காகவும் துஆ செய்கின்றீர்கள். ஆனால் உங்களுக்காக அல்லாஹ்விடம் எதுவும் கேட்கவில்லையே என்று கேட்டார்கள். தனது அருமை மகனின் கேள்வி பாத்திமா(ரலி) அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. எனதன்பு மகனே! நாம் முதலாவது அக்கம் பக்கத்து வீட்டுகாரர்களுக்கும். அண்டை அயலார்களின் நலத்திற்கும் துஆ செய்ய வேண்டும் அதன் பிறகு தான் நமக்காக துஆ செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.
"கணவன் எவ்வழியோ அவ்வழி"
மக்கா வெற்றியின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உடன் பாத்திமா(ரலி) அவர்களும் சென்றிருந்தனர். மக்காவின் உறவினர்கள். பலர் தங்களின் வீடுகளில் தங்க வேண்டும் என்று கெஞ்சினார்கள். நான் எந்த ஒரு வீட்டுக்கும் நுழைய மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார்கள். பள்ளிக்கு அருகாமையில் அபூராபீ (ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் ஒரு கூடாரத்தை அமைத்தார்கள். அதில் பாத்திமா(ரலி) உம்முஸல்மா(ரலி) மைமுனா(ரலி) ஆகியோர் தங்கி இருந்தனர். இன்னும் அக் கூடாரத்துக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வரவில்லை. அதற்குள் மக்காவில் எந்த வீட்டில் த்ங்கி இருக்கும் போது மிஃராஜ் சொல்லும் வாய்ப்பு ஏற்பட்டதோ அந்த அன்புச் சடோதரி உம்முஹானீ(ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அவர்களின் உறவினர்களான இரண்டு முஸ்லிம் ஆகாத மக்ஸுமிகள் இருந்தனர். அவர்களுக்கு உம்முஹானீ(ரலி) அவர்கள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு அளித்திருந்தார்கள் உம்முஹானி(ரலி) அவர்களைப் பார்க்க அப்போது அலீ(ரலி) அவர்கள் அங்கு நுழைந்தார்கள். அங்கு இரண்டு மக்ஸூமிகளையும் பார்த்து கோபம் கொண்டு தன் வாளை உருவினார்கள். உடனே உம்முஹானீ(ரலி)அவர்கள் அவ்விருவர் மீது ஒரு போர்வையை வீசி அவர்களுக்கிடையே நின்று அல்லாஹ்வின் பெயரால் கூறுகிறேன் முதலில் என்னை கொண்று போடு. என்று சொன்னார்கள். உடனே அலி(ரலி) அவர்கள் வெளியேறி விட்டார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாத்திமா(ரலி) அவர்கள் தனது கனவர் செய்ய வந்தது சரி இஸ்லாம் உயர்ந்த மார்க்கம் அதை விட்டி விட்டு ஷிர்க்கிலும் குஃப்ரிலும் கிடப்பவர்களுக்கு என்ன பெருமம இருக்கு என்று நினைத்தவர்களாக உம்முஹானீ(ரலி) அவர்களை பார்த்து உம்முஹானியே நீர் சிலை வணங்கிகளுக்கு தஞ்சம் அளிக்கின்றீரா? கூடாது என்று கனவன் சார்பில் நின்று பேசினார்கள். அப்போது அங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நுழைந்தார்கள். தனது ஒன்று விட்ட சகோதரியை அன்புடன் உபசரித்தார்கள். இங்கு நடந்தவற்றை உம்முஹானி(ரலி) அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அவ்வாறு இங்கு எதும் நடந்து விடாது கவலை வேண்டாம் நீர் யாருக்கு தஞ்சம் கொடுக்கிறாயோ அவர்களுக்கு நாம் தஞ்சம் கொடுக்கிறோம் நீர் யாரை பாதுகாக்கிறாயே அவர்களை நாம் பாதுகாக்கிறோம் என்று ஆறுதல் கூறினார்கள்.

18 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) அவர்களின் சாதுர்யம்"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உடல் நலம் குறி நோய்வாய்பட்டிருந்த காலத்தில் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை தனது அருமை தந்தையின் அருகே இருந்து நன்கு பணிவிடைகள் செய்து வந்தார்கள். கண்மணி பாத்திமா(ரலி) அவர்கள். வழக்கம் போல நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனைவி வீட்டில் தங்கி வந்தார்கள். பாத்திமா(ரலி) அவர்களும் தந்தை கூட ஒவ்வொரும் நாளும் தங்கள் சின்னம்மாக்கள் விட்டுக்குச் சென்று சொண்டிருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு நோய் அதிகரித்து விட்டது. அப்படி இருந்தும். நாலைக்கு யார் முறை நாளைக்கு யார் வீட்டில் தங்குவது? நாளைக்கு எந்த வீட்டில் நான் இருப்பது?நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கேடு கொண்டே இருந்தனர்.பாத்திமா (ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்க போகும் வீட்டை சொல்வார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நோய்வார் பட்ட முதல் நாள் மைமுனா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கினார்கள் அதிலிருந்து வரிசையாக ஒவ்வொரு மனைவி வீடுகளிலும் தங்கினார்கள். அருமை தந்தையாரின் கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்த அருமை மகளார் பாத்திமா(ரலி) அவர்கள் யோசனை சொன்னார்கள் தந்தையாரின் இக்கேள்விகள் சின்னம்மா அயிஷா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கத்தார் ஆசைப்படுகிறார்கள். என்ற முடிவுக்கு வந்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவர்களின் அனைத்து மனைவியரையிம் ஒன்று கூட்டிப் பேசினார்கள் என் அருமை தந்தை தாங்கள் வீடுகளுக்கு முறைதவறாமல் வருவதால் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். எனவே நீங்கள் ஒரு முடிவு செய்து என் தந்தையை ஒரே வீட்டில் இருக்க அனுமதியுங்கள். அனைவரும் வந்து பணிவிடை செய்யுங்கள் என்று சாதுரியமாக பேசினார்கள். இதைக் கேட்ட அனைத்து மனைவிமார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் தங்கட்டும் என்ற முடிவுக்கு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் அனைவரும் வந்து சொன்னார்கள். பாத்திமா(ரலி) அவர்களின் சாதுர்ய பேச்சி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை ஆய்ஷா(ரலி) வீட்டுக்கு கொண்டு வந்தது. புன் முறுவல் பூத்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒரு போர்வையால் தங்களைப் போர்ட்த்திக் கொண்டார்களாக ஹஜ்ரத் அலி, ஹஜ்ரத் பழ்ள் இப்னு அப்பாஸ் (ரலி) இருவரின் தோளின் மீது தங்களின் முபாரக்கான கைகளை வைத்து தாங்கிக் கொண்டவர்களாக உம்மஹாத்துல் முஃமீன்ன் ஆய்ஷா(ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் இதற்குப் பிறகு நாளை யார் வீட்டில் தங்குவேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கேட்பதே இல்லை...
"பத்தினிப் பெண்கள் யார்?"
சுவனப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்காள் வீட்டை விட்டு அடிக்கடி வெளியே செல்ல மாட்டார்கள். இந்த விஷயம் மதினாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஒரு நாள் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஒரு சஹாபியின் இறப்புக்குச் சென்று தொழ வைத்து அடக்கம் செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது...தெருவோரத்தில், தங்களின் அருமை மகளார் பாத்திமா(ரலி) அவர்கள் சென்று கொண்டிருப்பதத பார்த்து விட்டார்கள். ஆச்சரியப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் அருமை மகளின் அருகில் சென்று என தருமை மகளே! எதற்காக வெளியே வந்தீர்கள் என்று கேட்டார்கள்.
அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் என தருமை தந்தையே, அண்டை வீட்டில் ஒரு துக்கம் விசாரித்து வருவதற்காக வந்தேன் என்று சொல்லி அந்த குடும்பத்தை பற்றி சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். மகளோடு வீட்டுக்குச் சென்றார்கள்.
"பாத்திமா(ரலி)அவர்களின் பெருந்தன்மை"
ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு தூமா நாட்டின் அரசை அகீதர் என்பவர் ஒரு பட்டாடையை அன்பளிப்பாக அனுப்பி இருந்தார். அதை பெற்றுக் கொண்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களிடம் கொடுத்த. அலீயே உமது வீட்டில் உள்ள மூன்று பாத்திமாக்களுக்கு தலையை போர்த்துவதற்கு இந்த ப்அட்டாடையை கொடுத்து விடும் என்று சொன்னார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் வீட்டில் மூன்று பாத்திமாக்கம் இருந்தார்கள். எப்படி?
1. ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் தாயார் பாத்திமா (ரலி)
2. ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களின் மனைவி பாத்திமா (ரலி)
3. ஹஜ்ரத் ஹம்ஸா(ரலி) அவர்களின் மகள் பாத்திமா(ரலி) ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கொடுத்த பட்டாடையை வீட்டில் கொடுத்தார்கள் மூன்று பேரும் சமமாக பங்கிட்டுக் கொண்டார்கள்.
"கணவரை அமைதிப்படுத்திய பாத்திமா(ரலி)"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜை செய்ய மக்காவுக்குப் புறப்படத் தயாரானார்கள். இச்செய்தி பல ஊர்களுக்கு தெரிய வந்தது. லட்சக் கணக்கில் மக்கள் ஹஜ் செய்ய முன் வந்தர்கள். பாத்திமா(ரலி) அவர்களையும் தங்கள் பயணத்தில் அழைத்துச் சென்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களோடு அவர்களின் ஒன்பது மனைவிமார்களும் சென்றார்கள். அப்போது பாத்திமா(ரலி) அவர்களின் உத்திரவுப்படி எமன் நாட்டிற்கு அல்லாஹ்வின் பாதையில் சென்றார்கள், அவர்களையும் ஹஜ்ஜுக்கு வந்து சேர்ந்து கொள்ளும் படி உத்திரவிட்டிருந்தார்கள்.
ஹஜ்ஜுக்கு சென்றவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கட்டலையிட்டார்கள். பாத்திமா(ரலி) அவர்களுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மனைவிமார்களுக்கும் குர்பானி கொடுக்க பிராணிகள் இல்லை. எனவே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எவரிடம் குர்பானி பிராணிகள் இல்லையோ அவர்கள் இஹ்ரானை களைத்து விட்டு ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு ஹஜ்ஜுக் காலத்தில் மறுபடியும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றார்கள். இதைக் கேட்டவுடன் பாத்திமா(ரலி) அவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மனைவியரும் இஹ்ராம் உடையை களைந்து விட்டு கலர் துணிகளை அணிந்து கொண்டார்கள். இச்சமயத்தில் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அதிகமான பொருட்கள். ஆடைகள், ஒட்டங்களுடன் மக்காவுக்கு வந்தார்கள் தங்களின் அருமை மனைவி வர்ணமுள்ள வண்ண ஆடைகளை அணிந்திருப்பதை பார்த்து கோபம் கொண்டார்கள். இந்த ஆடைகள் தனது மனைவியின் உடலில் இருப்பது பிடிக்கவில்லை. உடனே மனைவியிடம் காரணம் கேட்டார்கள். அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் மிக அமைதியாக கணவரின் நிலை அறிந்து எனதன்பு கணவரே இந்த வண்ண ஆடைகளை நான் எனது இஷ்டப்படி அணியவில்லை. உங்கள் அருமை மாமனார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தான் உத்திரவிட்டார்கள் என நடந்த விஷயத்தை விளக்கி கணவரிடம் சொன்னார்கள். இதை கேட்டபிந்தான் அலி(ரலி) அவர்கள் அமைதியானார்கள்.
"பாத்திமா(ரலி)க்கு உதவிய பிலால்(ரலி)"
ஒரு சமயம் பிலால்(ரலி) அவர்கள் ஒரு வேலையாக வெளியே சென்றிருந்தார்கள். திரும்பி வரும் போது பாத்திமா(ரலி) அவர்களின் வீட்டின் வழியாக வந்தார்கள் அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் திருகையில் கைநோக மாவு அடைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்களின் அருமை குழ்ந்தை ஹஸன்(ரலி) அவ்ர்களழுது கொண்டிருந்தார்கள்.ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் வீட்டில் இல்லை. குழந்தையின் அழுகை சத்த்ம் கேட்டு துடித்துப் போன பிலால்(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களிடம் சென்று நீங்கள் வேலையில் ஈடுபட்டுள்ளீர்கள் குழந்தை அழுகிரது. நீங்கள் விரும்பினால் அனுமதி கொடுத்தால் குழ்ந்தையை நான் தூக்கி வைத்து கொள்கிறேன். என்று கேட்டார்கள். அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் குழந்தை உங்களிடம் இருக்க பிரியப்படும் வைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் மாவு அரைத்து முடியும் வரை குழந்தையை கவனித்துக் கொண்டார்கள். அந்த நேரத்தில் பாங்கு சொல்லப்பட்டது தொழுகையின் வக்த்தும் நெருங்கி விட்டது. ஆனால் பிலால்(ரலி) அவர்கள் குழ்ந்தையை கவனித்துக் கொள்வதிலேயே கவனமாக இருந்து. பின்பு தாமதமாக தொழுகையில் சேர்ந்து கொண்டார்கள்.
பிலால்(ரலி)தொழுகைக்கு தாமதமாக வந்த காரணத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வினவிய போது. மேற்கண்ட விஷயத்தைச் சொன்னார்கள்.

17 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) க்கு வீடு கொடுத்த கொடைவள்ளல்"

சுவனத்து பேரரசி பாத்திமா(ரலி) அவர்களின் வீடு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் வீட்டுக்கு சற்று தொலைவில் இருந்தது வீடும் மிக சிறியதாக இருந்தது. அதனால் தம்பதிகளுக்கு கஷ்டமாக இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் அருமை மகளை பார்க்க அடிக்கடி செல்ல வேண்டியதாக இருந்தது. ஒரு சமயம் பாத்திமா(ரலி) அவர்களைப் பாத்து மகளே! இன்ஷா அல்லாஹ் உம்மை என் வீட்டின் அருகில் வசிக்க ஏற்பாடு செய்ய என் மனம் விரும்புகிரது. என்று கூறினார்கள். இச்செய்தி மதினாவாசியான. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தூரத்து உறவினரான கஸ்ரஜின் ஹாரிதா பின் நுஃமான்(ரலி) அவர்களுக்கு தெரிய வந்தது இவர்களுக்கு மதினாவில் பல வீடுகள் சொந்தமாக இருந்தது. அவ்வீடுகளில் சிலதை மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்ய வந்த முஹாஜிரீன்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் அன்பளிப்பாக கொடுத்திருந்தார்கள் இவர்களின் ஒரே ஒரு வீடு மட்டும் மஸ்ஜித் நபவியின் அருகில் இருந்தது. இதற்கு முன் பாத்திமா(ரலி) அவர்கள் தமது அருமை தந்தையாரிடம் வந்து தந்தையே! ஹாரிதா(ரலி) அவர்களிடம் கேட்டு எங்களுக்கும் ஒரு வீடு வாங்கி கொடுங்கள் என்று முறையிட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். என தருமை மகளே! ஹாரிதா (ரலி) அவர்காளிடமிருந்து எந்தனை வீடுகள் வாங்குவது? இனிமேல் அவரிடம் வீடு கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று ஆறுதல் சொன்னார்கள். இவ்விஷயங்கள் அனைத்தும் தெரியவந்ததும் ஹாரிதா(ரலி) அவர்கள் மனம் சந்தோஷத்தில் பொங்கி வழிந்தது......ஓடோடி வந்தார்கள், கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முன்னிலையின் வந்து நின்று அல்லாஹிவின் தூதரே! தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள வீடுகளில் ஒன்றில் தங்களின் இதய துண்டான அருமை மகள் பாத்திமா(ரலி) அவர்களை வசிக்க வைக்க விரும்புவதாக நான் கேள்விப் பட்டேன் நஜ்ஜார் மக்களது வீடுகள் அனைத்திலும் எனது வீடே உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கிறது. அவ்வீடு உங்களுடைய வீடுதான் உடனே உங்கள் அருமை மகளாரை அழைத்து அந்த வீட்டில் வசிக்க ஏற்பாடுகள் செய்யுங்கள். என்னுடைய பொருட்கள் அனைத்தும் அல்லாஹ்வின் மீது ஆனையாக சொல்கிறேன் அல்லாஹ்வின் தூதரே! என் வீடுகளை தாங்கள் எடுத்து கொள்ளும் போதெல்லாம் அவை என்னிடம் இருக்கும் பொழுது எனக்கு மகிழ்ச்சியை கொடுப்பதை விட அவற்றை தாங்களுக்கு கொடுத்தவுடன் தான் எனக்கு அதிகம் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று உருகி நின்றார்கள். ஹாரிதா(ரலி) அவர்களின்கொடைத் தன்மையை பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நெகிழிந்துப் போனார்கள். அவர்களுக்காக துஆ செய்தார்கள். பின்பு ஹாரிதா(ரலி) அவர்கள் அவ் வீட்டை காலி செய்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அதை மிக்க மகிழ்ச்சியுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொண்டு தங்களின் மகளார் குடும்பத்தை அவ் வீட்டுக்கு அழைத்து குடியமர்த்தினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீட்டுக்கும் பாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கும் ஒரு சுவர் தான் குறுக்கே இருந்தது வீட்டு சுவரில் இருந்து ஜன்னல் வழியாக சின்னம்மா ஆய்ஷா(ரலி) அவர்களிடம் பேசிக் கொள்வார்கள். கொடுக்கல் வாங்கள் செய்து கொள்வார்கள்.

"ஹிஜ்ரத் இரவில் பாத்திமா(ரலி)"

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் நேரத்தில் எதிரிகளிடமிருந்து தப்புவதற்கு முன் தங்களிடம் மக்கள் பாதுகாப்பாக ஒப்படைக்கப் பட்டிருந்த பொருட்கள் அனைத்தையும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விடுவதற்காக ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களை அழைத்து அலீயே, ஜிப்ரயீல்(அலை)என்னிடம் வந்து குறைஷியர் உங்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்கள் என கூறி உள்ளார்கள். ஆகவே நானும் அபூபக்கரும் ஹிஜ்ரத் செல்ல இருக்கிறோம் வெளியே குறைஷி இளைஞ்ர்கள் ஆயுதங்களோடு வீட்டை சுற்றி நிற்கிறார்கள் எனது போர்வையை போர்த்திக் கொண்டு எனது படுக்கையில் தூங்கு என்று பச்சை நிறத்தாலான ஹத்ரமீ போர்வையைக் கொடுத்தார்கள். அதன் பின் அலியே எதிரிகளிடமிருந்து உமக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்று பஷாரத் கூறி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். அப்போது வீட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்ப பென்கள் இருந்தனர். இரவு நேரம் எதிரிகள் ஆயுதங்களோடு வீட்டை சுற்றி நிற்கிறார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் படுக்கையில் படுத்து நன்கு தூங்க துவங்கி விட்டார்கள். வீட்டில் உள்ள பென்கள் கொந்தளிப்போடு குசு குசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாத்திமா(ரலி) சிறு வயதுடையவர்களாக இருந்தாலும் தைரியமாக எதிரிகளுக்கு பயம் வரும் அளவுக்கு சத்தம் போட்டு பேசினார்கள். இதனால் இரவில் வீட்டுக்குள் புகுந்து விடலாம் என்றிருந்த எதிரிகளுக்கு பயம் வந்து விட்டது. வீட்டுக்குள் பென்கள் தூங்காமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த சமயத்தில் உள்ளே புகுந்தால் பென்களின் தனிமையை குலைத்ததற்காக காலமெல்லாம் அரபியர்களிடம் நமது பெயர்கள் அவமானமாக பேசப்படும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் எப்படியும் காலையில் வெளியே வரத்தான் செய்வார்கள் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று வெளியே காத்துக் கிடந்தார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் நிம்மதியாக சுப்ஹ்வரை தூங்கினார்கள், பாத்திமா(ரலி) அவர்கள் சமயோஜிதமாக நடந்து கொண்டதால் எதிரிகள் இரவில் வீட்டுக்குள் நுழையவே இல்லை.

16 பிப்ரவரி, 2010

"உஹதில் பாத்திமா ரலியின் அழுகை"
உஹதுப் போர் முஸ்லிம்களுக்கு பெரும் படிப்பிரனைப் போராக அமைந்தது. 70 சஹாபாக்கள் ஷஹீதானார்கள். கண்மணி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கடுமையான கஷ்டத்தை கொடுத்த போர் உஹது போர்தான்.
அவர்களின் முபாரக்கான பல் ஷஹிதானது, முகத்தில் காயங்கள் ஏற்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்காள் இறந்து விட்டார்கள் என்ற மாபெரும் வதந்தி காட்டுத் தீ போல மதினா முழுவதும் பரவியது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தினரில் மிக முக்கியமானவர்கள் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவ்ர்களின் பெரிய தகப்பனார் ஹஜ்ரத் ஹம்ஸா(ரலி) அவர்களின் மரணம். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குடுபத்தினர்களை பெரும் சிரம்த்துள்ளாக்கியது. இச்செய்திகள் மதினாவுக்கு எட்டியதும்,மதினத்துப் பென்கள் உஹதை நோக்கி ஓடிவந்தார்கள் பென்கள் போர்க்களத்தை நோக்கி ஓடிவரும் அளவுக்கு வதந்திகள் பெரும் வலிமையாக இருந்தது. ஸபிய்யா(ரலி) ஆயிஷா(ரலி) உம்மு அய்மன்(ரலி) இவர்கள் தான் முதலில் உஹதுக்கு வந்து சேர்ந்தார்கள். இவர்களுக்கு பிறகு பாத்திமா(ரலி) மற்றும் பல பென்கள் வந்து சேர்ந்தார்கள். ஸபிய்யா(ரலி) அவர்கள் தனது சகோதரி உமையாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் உடலருகில் நின்று துஆ செய்தார்கள். அவர்கள் கூட பாத்திமா(ரலி) அவர்களும் சேர்ந்து கொண்டார்கள். இருவரும் தங்களின் குடும்பத்தில் இறந்தோருக்காக கண்ணீர் வீட்டு அழுது துஆ செய்தனர். இவர்களின் அழுகையை கண்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மிக ஆறுதலாக இருந்தது. இதன் பின் தனது அருமை தந்தைக்கு பாத்திமா(ரலி) அவர்கள் காயங்களுக்கு மருந்து போட்டு மருந்துவம் செய்தார்கள்.

"பாத்திமாவின் கண்ணீர் துடைத்த கருணைநபி"

நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் பத்ர் போருக்காக தங்களின் தோழர்களோடு சென்றிருக்கும் போது....பாத்திமா (ரலி) அவர்களின் அருமை சகோதரி ருகைய்யா(ரலி) அவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் சகோதரி ருகைய்யா(ரலி) அவர்காளுக்கு பணிவிடைகள் செய்து வந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பத்ரு போரிலிருந்து திரும்பி வருவதற்குள் ருகைய்ய(ரலி) அவர்கள் இறந்து விட்டார்கள் இதனால் பாத்திமா(ரலி) அவர்கள் கடுமையான துக்கத்தால் துவண்டும் போனார்கள். தனது அருமை தாயார் கதிஜா(ரலி) அவர்களின் இறப்புக்குப் பிறகு அவர்களின் குடும்பத்தில் இரண்டாவது பெரும் இழ்ப்பு சகோதரி ருகைய்யா(ரலி)யின் இறப்பாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூட பாத்திமா(ரலி) அவர்களும் தங்களின் சகோதரியை ஜியாரத் செய்ய கப்ர்ஸ்தானுக்கு சென்றார்கள். வீங்கிய முகத்துடன் அழுது கண்களுடன் தந்தைக்கு பக்கத்தில் கப்ர்ஸ்தானின் ஒரு மூலையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுது கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள். ஜியாரத் செய்து முடித்த கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அருமை மகள் பாத்திமாவின் நிலை கண்டு கண் கலங்கினார்கள். கடுமையாக அழுது கொண்டே இருந்தார்கள். உடனே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களின் மேல் துண்டில் ஒரு முனையால் பாத்திமா(ரலி) அவர்களின் கண்ணீரைத் துடைத்தார்கள். ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அப்போது ருகைய்யா(ரலி) அவர்களின் இறப்பால் வீட்டுப் பென்கள் கடுமையாக அழுதார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பென்களின் அழுகையை பார்த்து கண் கலங்கினார்கள்.

"வீட்டுக்கு உழைத்த வீரப்பெண்மணி"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொந்த பந்தங்கள் மற்றும் பணிவிடை செய்யக் கூடியவர்கள் என்று ஒரு சிறு கூட்டமே இருந்தது. மஸிஜித் நபவியில் திண்னைத் தோழர்கள் வேறு இருந்தார்கள். அப்போது பாத்திமா(ரலி) அவர்காளுக்கு திருமனம் நடக்காத காலம் தின்னைத் தோழர்களுக்கு வேண்டிய உணவுகள் உடைகளை கொடுத்து அவர்களை நன்கு உபசரித்து வருவார்கள் பாத்திமா(ரலி) அவர்கள், வீட்டு வேலைகளில் கைக்கு ஆள் குறைவில்லாமல் இருந்தது. பாத்திமா(ரலி) செல்ல பிள்ளையாக பொறுப்புடன் ஆளுக்கு ஒரு வேலையை செய்வதால் பாத்திமா(ரலி) அவர்களுக்கு எந்த கஷ்டமும் அதிக வேலையும் இல்லை., தங்களின் அருமை சகோதரி உம்மு குல்தூம்(ரலி) தங்களின் அருமை தங்கை பாத்திமாவுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் பாத்து கொள்வார்கள். உம்மு அய்மன்(ரலி) அவர்களும் வேலைகளில் துனையாக இருந்தார்கள். உம்முஸுலைம்(ரலி) தனது 10வயது மகன் அனஸ்(ரலி) அவர்களின் பணிவிடைக்கு அர்ப்பணித்தார்கள். சிறுசிறு வேலைகள். வெளி வேலைகளுக்கு அனஸ்(ரலி) உதவியாக இருந்தார்கள். மேலும் உம்முஸுலைம்(ரலி) அவர்கள் கணவர் அபூதல்ஹா(ரலி) இருவரும் எப்போதும் வீட்டு, வெளி வேலைகளுக்கு உதவியாக இருந்தார்கள். இப்னுமஸ்வூது(ரலி) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் குடும்பத்தின் ஹித்மத்துக்காக காத்து கிடந்தார்கள்.அப்பாஸ்)ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்ய அபூராபியை அன்பளிப்பு செய்து இருந்தார்கள். உத்மான் இப்னு-மஸ்வூனின் விதவை கவ்லா என்ற பென்மனி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீட்டு பனிவிடைக்காக நீண்ட காலமாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் குடும்பத்திலேயே இருந்து வந்தார்கள். வீட்டு வேலைகளுக்கு பெரும் கூட்டமே காத்து கிடந்தது அதனால் பாத்திமா(ரலி) அவர்களுக்கு கஷ்டம் தெரியவில்லை. எப்போதும் திருமனம் ஆனதோ, வீட்டில் வேலை செய்ய ஆட்கள் இல்லாமல் பாத்திமா(ரலி) அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டார்கள். வீட்டில் வருமை வாட்டியது. பசியின் கொடும்பிடியில் சிக்கிதவித்தார்கள். திருமனத்துக்கு முன்பு இருந்த நிலையை அடிக்கடி பாத்திமா(ரலி) அவர்கள் நினைத்துப்பார்ப்பார்கள்.எந்த அளவு வருமை என்றால், ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் வெளியே சென்று பலருக்கும் தண்ணீர் அள்ளிக் கொடுத்து, கஷ்டப்பட்டு தூக்கி சுமந்து சம்பாதித்து வருவார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் அக்கம் பக்கத்து வீட்டுகளின் தானியங்களை தங்கள் வீட்டு திருகையில் கூலிக்காக அரைத்துக் கொடுத்து உழைத்து வந்தார்கள்.
ஒரு நாள் கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது......தங்களின் கஷ்டங்களை பரிமாறிக் கொண்டார்கள்.
எனது கைகளைப் பாருங்கள் கொப்புளங்கள். கொப்புளங்கள் ஏற்படும் வரை நான் தானியங்கள் அரைத்து உழைத்துள்ளேன் என்றார்கள் பாத்திமா(ரலி) அவர்கள். அன்பு மனனவியின் நிலைக்கண்ட ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தங்களின் அன்பு மனைவியைப் பார்த்து என் நெஞ்சைப் பாருங்கள்......ஒரு நாள் முழுவதும் என் நெஞ்சில் வல் ஏற்படும் அளவுக்கு நான் தண்ணீர் இழுத்துள்ளேன் என்றார்கள்.
"வெட்கம் எங்கே?"
ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களுக்கு பணிவிடை செய்யும் சிறுவரை அழைத்துக் கொண்டு, தங்களின் அருமை மகளாரைக் கான அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அன்னியர் ஒருவர் தமது தந்தையாருடன் தமது வீட்டுக்கு வருகிறார்கள் என்பதை அறிந்த பாத்திமா(ரலி) அவர்கள் உடலை நன்கு மூடிக் கொள்ள சரியான துணி இல்லாத நிலையில் இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஊழிய சிறுவனுடன் வீட்டிக்குள் நிழைத்தும் பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் உடலை மூடிக் கொள்ள ரொம்ப சிரமப் பட்டார்கள் இதைக் கண்ட கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! பயப்பட வேண்டாம் உன் வீட்டுற்கு வந்திருப்பவர் உமது தந்தையின் ஊழிய சிறுவன் தான் என்று ஆறுதல் கூறினார்கள். இதன் பின்பு தான் பாத்திமா(ரலி)அவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.
"மணவறை விசேஷம்"
பாத்திமா(ரலி) அவர்கள் நிகாஹ் முடிந்தபின் புதுமண தம்பதிகள் தனிமையில் இருந்தனர். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அலி(ரலி) அவர்க்ளிடம் நான் ஒரு அலுவலாக வெளியே செல்கிறேன். திரும்பி வரும் வரை உங்களது மனனவியை நெருங்க வேண்டாம் என்று கூறிச் சென்றார்கள்.
கல்யான வீட்டில் கடைசி விருந்தினர் வீட்டை விட்டு வெளியேறவும் நபி ஸல்லலலாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்துசேரவும் சரியாக இருந்தது. அப்போது அங்கு வீட்டை ஒழுங்கு படுத்திச் கொண்டிருந்த உம்மு அய்மனிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரும்படி ஏவினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்டது தன்னீரை வாய் நிறைய எடுத்துக் கொப்பளித்து அதனை அந்தப் பாத்திரத்துனுள்ளேயே உமிழ்ந்தனர். பின்பு அலி(ரலி) அவர்களை தன் முன் அமர வைத்தார்கள். கையில் சிறிது தண்ணீர் எடுத்து அலி(ரலி) அவர்களின் தோள்களிலும் மார்பிலும் கைகளிலும் தெளித்தார்கள். பிறகு அருமை மகளார் பாத்திமா(ரலி) அவர்களை அழைத்த போது தனது அருமை தந்தையின் மேலிருந்த மதிப்பும் மரியாதையும் காரணமாக அவசரத்தில் தன் மேலாடையில் தடுக்கியவராக முன் வந்து நின்றார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) க்கு போல நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களுக்கும் தண்ணீர் தெளித்தார்கள் பின் அவர்களிருவருக்கும் அவர்களது சந்ததியினருக்கும் துஆ செய்தார்கள். பின்பு புதுமனத் தம்பதியருக்கான மணவறை பதனிடப்பட்ட ஒரு ஆட்டுத்தோல் அதன் மேல் கோடிடப்பட்ட நிறம் மங்கிப் போன ஒரு யமன் புடவை விரிப்பாகப் போடப்பட்டிருந்தது. இங்கு இருவரையும் தனினையில் விட்டு. விட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் திரும்பினார்கள்.

15 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி)யின் பசி போக்கிய துஆ"
ஒரு நாள் பாத்திமா(ரலி)அவர்கள் கடுமையான பசியுடன் தன் தந்தையைப் பார்க்க வந்தார்கள். பாத்திமாவைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பக்கத்தில் அழைத்து உட்கார வைத்தார்கள் பசியின் கடும் கொடுமையால் முகம் வெளுத்து இருந்தது. முகம் சோகை பிடித்துப் போய் இருந்ததைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் முபாரக்கான கையை மகள் மீது வைத்து ஒரு துஆ செய்தார்கள்.
பசியின் கொடுமையை தீர்ப்பவனே! தேவைகளை நிறைவு செய்பவனே! குறைகளை பூர்த்தி செய்பவனே! குறைகளை எல்லாம் நிறையாக மாற்றுபவனே! முஹம்மதின் மகள் பாத்துமாவைப் பசிக் கொடுமையிலிருந்து நீக்கி கிருபை செய்வாயாக என்றார்கள்.
உடனே பாத்திமா(ரலி) அவர்களின் சோகை முகம் மாறி இரத்த ஒட்டம் நிறைந்ததாக ஆகியது. இந்த துஆவிற்குப் பிறகு சுவனத்துப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் பசியுடனே இருக்கவே இல்லை. இதை பாத்திமா(ரலி) அவர்களே சொன்னார்கள். கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் துஆவை அல்லாஹ் கபூல் செய்தான்.

"வறுமையே பொருமை"

ஒரு சமயம் ஆய்ஷா(ரலி) அவர்களின் சகோதரியும், அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்களின் மூத்த மகளுமான அஸ்மா(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களைப் பார்த்து வர வீட்டுற்குச் சென்றார்கள். காரணம், பாத்திமா(ரலி) அவர்கள் மீது அதிகம் அன்பு சொலுத்த கூடியவர்களாக இருந்தார்கள். அப்போது சாய்ந்துப்போன கடுமையான சோள் ரொட்டியும், சிறிது பாலும் தான் உணவாக அங்கு இருந்தது. ஏனைய இனத்துப் பெண்கள் வளமான செழிப்பான வாழ்வு வாழும் போது நீங்கள் இவ்வளவு வறுமையில் உள்ளீர்களே என்றார்கள்.

அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் நமக்கு மறுமை வாழ்வு என்றும், அவர்களுக்கு இம்மை வாழ்வு என்றும் விதித்திருப்பது உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லையா?(தெரியாதா) என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அஸ்மா(ரலி) அவர்கள் ஆம் என சொல்லி மெளனமானார்கள்.

"பாய்" மட்டும் போதுமா பாத்திமா"
ஒரு நாள் மதினத்து அன்சாரிப் பெண், பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டுற்கு வந்தார். பேசிக்கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதருடைய மகளின் வீட்டில் பழைய பாயை தவிர வேறொன்றுமில்லையா என்று கேட்டார்.
கொஞ்சம் நேரம் ஒய்வெடுக்க கூடிய வீட்டைப் பற்றி எனக்கு கவலை இல்லை. காரணம் எனக்கு என்றென்றும் நிலையாக இருக்கக் கூடிய மறுமை வீடு கண்ணெதிரில் காட்சி தருகிறது. எனவே என்னுடைய அனைத்துப் பொருட்களும் அழியாத வீட்டிற்கு சென்று விட்டன. இன்ஷா அல்லாஹ் நானும் ங்கு விரைவில் செல்ல இருக்கிறேன் என்று பாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்.

14 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) வாழ்வில் ஓர் புயல்"
ஒரு சமயம் மதீனத்துப் பெண்களிடையே பெரும் பரப்பரப்பாக ஒரு செய்தி காட்டுத் தீப்பொல பரவியது எங்கு பார்த்தாலும் இதே செய்தி. இச் செய்தி கண்மணி பாத்திமா(றலி) அவர்களுக்குதெரிந்த போது உள்ளம் ஒடிந்தார்கள். அனலில் இட்ட புழுப்போல துடித்தார்கள் என்ன என்ன விஷயம் தெரியுமா?
"ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள். அபூஜஹ்லுடைய மகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்யப் போகிறார்கள் என்பது தான் அந்த அபாயச் செய்தி."
அன்று ஹஜ்ரத் அலி(ரலி)வெளியே சென்றிருந்தார்கள். இச்செய்தி கேட்டு யாரிடம் சொல்லி ஆறுதல் அடைவது? என்று தெரியாமல் துடித்துக் கொண்டிருந்தார்கள். இச்செய்தி அருமை தந்தைக்கு தெரிந்தால் அவர்கள் இதயம் தாங்குமா? என்று மனப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள் கண்மனி பாத்திமா(ரலி) அவர்கள்.
கடைசியில் தந்தையிடமே சென்று முறையிட முடிவு செய்து தந்தையை பார்க்க புறப்பட்டார்கள். மகளாரின் சோகமும் கண்டு பதறிப் போன நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் என்ன நடந்தது? சொல்லுங்கள் என வேண்டினார்கள். விஷயத்தை அழுது கொண்டே சொன்ன போது துடிதுடித்து விட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள், உடனே மகளை அழைத்துக் கொண்டு மருகனைப் பார்க்கப் புறப்பட்டார்கள். எங்கும் கானவில்லை பள்ளியில் இருப்பதாக ஒருவர் கூறினார். உடனே பள்ளியை நோக்கி நடந்தார்கள். அங்கு அலி(ரலி) இருந்தார்கள் அவர்களை அழைத்து கூறிய முதல் வார்த்தை இது.
பாத்திமா(ரலி) அவர்கள் என்னுடைய உடலின் ஒரு பகுதியாகும் அவருக்கு வேதனை தருபவர் தனக்கு வேதனை தந்தவர் போன்றவராவார் என்று சொன்னார்கள்.
பாவம் அலி(ரலி) அவர்கள்.திடீர் என் மாமாவும் மனைவியும் வந்து நின்று கொண்டு இப்படிப்பட்ட வார்த்தை கனைகளை அள்ளி வீசுகின்றார்களே! என்று கலங்கி போய் விட்டார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதரவர்களே! தாங்கள் கோபத்திற்கு என்ன காரனம் என்று எனக்குதெரியவில்லையே! உங்கள் மகள் பற்றி கூறியது எனக்கு நன்கு தெரியும் அல்லாஹ்வின் அருமம தூதரே! என்று சொன்னார்கள்.
அப்படியானால் நீர் அபூஜஹலின் மகளை திருமணம் செய்ய எப்படி துணிந்தீர்? அவளை நீர் திருமணம் செய்ய நாடினால். திருமனம் செய்து கொள்ளும் என் மகள் பாத்துமாவுக்கு விடுதலை அளித்துவிடு ஏனென்றால். அல்லாஹ்வின் தூதரின் மகளும். அல்லாஹ்வின் எதிரியின் மகளும் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்றார்கள். இதைக் கேட்ட அலி(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இந்த எண்ணம் ஒருபோதும் ஏற்பட்டதில்லை இது பொய்யான வதந்தியாகும் என்று சொன்னார்கள். இதைக் கேட்ட பின்புதான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும் . கண்மனி பாத்திமா (ரலி) அவர்களுக்கும் மனம் ஆறுதல் அடைந்தது.
வீண் வதந்தியை நம்பி விட்டோமே என்று பாத்திமா(ரலி) அவர்கள் தலை தாழ்த்தி நின்றார்கள். உடனே தனது அருமம மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது அன்பு எவ்வளவு என்பதை எடுத்துச் சொன்னார்கள்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் பிலாலை அழைத்து இப்படிப் பட்ட பொய் செய்திகளை பரப்பி பிறர் மனதை நோவினை செய்பவர்கள் யார்? அவர்களை அழைத்து வாருங்கல் என்று ஏவினார்கள். அங்கு மக்கள் திரளாக கூடி விட்டார்கள். அந்த கூட்டத்தைப் பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறரின் மகிழ்ச்சியை அழித்து நிம்மதியை பிடுங்கும் இழிச் செயலை இட்டு கட்டான பொய் வதந்திகளை செய்யாதீர்கள் என்று உபதேசித்தார்கள்.
"பாத்திமா (ரலி) வீட்டில் ஒரு கராமத்"

ஒரு சமயம் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பல நாட்களாக சாப்பிடாததால் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். பசியின் கொடுமை தாங்க முடியாமல் தனது மனைவிமார்கள் வீடுகள் அனைத்திருக்கும் சென்று பார்த்தார்கள். அத்தனை பேர்களிடமும் வீட்டில் ஒன்றுமில்லை. உடனே தனது அருமை மகள் பாத்திமா (ரலி) நானமாக வந்து, மகள் வீட்டிற்கு வந்தார்கள்.
அருமை மகளே! நான் பசியோடு இருக்கிறேன் சாப்பிடுவதற்கு ஏதேனும் இருக்கிறதா?எண்று கேட்டார்கள். என் வீட்டிலும் ஒன்றுமில்லையே தந்தையே என்று மிகவும் கவலையடைந்த பாத்திமா(ரலி) தெரிவிக்க அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் விடைபெற்று சென்றுவிட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் அண்டை வீட்டுப் பெண்மணி ஒருவர் இரண்டு ரொட்டிகளையு. சிறிது இரச்சியையும் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
உணவை பார்த்த பாத்திமா(ரலி) அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உடனே உணவை வாங்கி வைத்து விட்டு தங்களின் அருமை மகன் ஹஸனை (ரலி)யை அழைத்து நீங்க உடனே உங்க பாட்டனாரை நம் வீட்டுக்கு அழைத்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.
சிறுவர் ஹஸன்(ரலி) அவர்கள் ஓடோடி சென்று தனது அருமை பாட்டனாரை கையோடு வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். தந்தையை வரவேற்று எனதருமை தந்தையே அல்லாஹ் சிறிது உணவை கொடுத்திருக்கிறான் அதை தாங்களுக்காகவே வைத்துள்ளேன் சாப்பிடுங்கள் தந்தையே என்று உணவை எடுத்து முன் வைத்தார்கள் மகிழ்ச்சி பொங்க அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூடி இருந்த உணவு தட்டை திறந்துப் பார்த்தார்கள்.என்ன ஆச்சரியம்? தட்டு நிரைய ரொட்டியும் இறச்சியும் இருந்தது.
உடனே தனது அருமை மகளை நோக்கி, இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என கேட்டார்கள். அதற்கு இது அல்லாஹ்விடம் இருந்து கிடைத்தது. அல்லாஹ் தான் விரும்புகின்றவர்களுக்கு கணக்கின்றி வழ்ங்குவான் என்று பாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்.இவ்வார்த்தைகளைக் கேட்ட கண்மனி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கல்"இஸ்ரவேலர்களின் பெண்குலத் தலைவியைப்(மர்யம் அலை) போல ஆக்கிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்" என்று அல்லாஹ்வை போற்றினார்கள்.
"மாமியாவுக்கேத்த மருமகள்"
சுவனத்தின் தலைவி பாத்திமா(ரலி) அவர்களின் மாமியார் பெயர் பாத்திமா பிந்தே அஸத்(ரலி) ஆகும்.
பாத்துமா(ரலி) அவர்கள் தாங்களின் மாமியார் மீது அளவு கடந்த அன்பை வைத்திருந்தார்கள். திருமணம் முடிந்து. மாமியார் வீட்டுக்குச் சென்றது முதல் வபாத்தாகும் வரை மாமியார் மருமகள் சண்டையோ சின்ன பிரச்சனையோ வந்தது இல்லை. மாமியாவும் மருமகள் மீது உயிரையே வைத்துருந்தார்கள் மாமியார் மருமகள் இருவரின் பெயரும் பாத்திமாதான். இது இன்னும் பொருத்தமாக இருந்தது. வயது முதிர்ந்த மாமியாவை இருந்த இடத்திலே வைத்து பணிவிடைகள் செய்தார்கள். அருமையான கணவரை பெற்று தந்த தாயல்லவா? மாமியாவுக்கு செய்யும் பணி விடைகளில், மரியாதைகளில் ஒரு சிறு குறை கூட ஒருபோதும் வைத்ததில்லை. இதைப் பார்த்து தான் அலி(ரலி) அவர்கள் சொன்னார்கள். என் தாயும் என் மனைவியும். தாயும் மகளையும் போல் வாழ்கின்றனர் என்று பெருமிதமாக போற்றிச் சொல்வார்கள். மாமியாவையும் கணவணையும் இரு கண்களைப் போல் பாதுகாப்பார்கள். அதனால் குடும்பத்தில் வறுமை, பசியின் கொடுமை இருந்தாலும், குடும்பம் பெரும் மகிழ்ச்சியில் இருந்தது ஹம்ஸா(ரலி) அவர்களின் மகள் பாத்திமாவும் அலி(ரலி) அவர்கள் வீட்டில் தான் இருந்தார்கள். அதனால் ஒரே வீட்டில் மூன்று பாத்திமாக்கள் இருந்தார்கள். மாமியார் தாயைப் போல மாமனார் தந்தையைப் போல ஷரிஅத்தில் மதிப்பு கொடுக்க பட்டுள்ளது அதை அப்படியே ஹயாத்தாக்கினார்கள்.
மாமியார் வீட்டில் வேளைக்கு ஆள் இல்லாததால் அனைத்து வேலைகளையும் தாமே செய்வார்கள். திருகையில் மாவு அரைப்பது, அடுப்பு பத்தவைப்பது. ரொட்டி பிசைந்து சுட்டெடுப்பது கிழிந்த ஆடைகளை தைப்பது ஒட்டுப்போவது வீட்டைப் பெருக்குவது. துணிமணிகளை துவைப்பது போன்ற வேலைகளை செய்வார்கள். திருக்கை அரைத்து கையில் கொப்புளங்கள் வந்து விடும். தண்ணீர் சுமந்து உடலில் வலி ஏற்பட்டுவிடும் எளிய உணவு இத்துப்போன உடைகள். ஒட்டிய வயிறு இவைகளுடன் மாமியாருக்கு கணவணுக்கும் பிள்ளைகளுக்கும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் குறைவில்லாமல் செய்வார்கள். இதற்கு மத்தியில் தங்களின் சுயதேவைகளையும் செய்து கொள்வார்கள். ஆரம்பத்தில் மாமியார் வீட்டில் சுறுசுறுப்பாய் வேலைகள் செய்தார்கள். கடைசி காலங்களில் முடியாத நிலையிலும் தங்களின் இயலாமையைக் காட்டிக் கொள்ளாமல் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.சில சமயங்களில் மருமகள் படும் கஷ்டம் தாங்காமல் மாமியார் பாத்திமா பிந்த் அஸத்(ரலி) அவர்கள் கடைக்கு சென்று வீட்டு சாமான்கள் வாங்கி வருவார்கள். ஒட்டகத்துக்கு தண்ணீர் கொடுத்து கட்டிப் போடுவார்கள். மனனவியின் கஷ்டங்களை கண்டு மனம் கனத்த அலி(ரலி) அவர்கள் சில சமயம் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்வார்கள். இதை விட கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தமது அருமை மகளைப் பார்க்க வரும் போது சில சமயங்களில் மகளுக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருப்பார்கள்.
"அல்லாஹ்வின் உதவியை வாங்கிய குடும்பம்"
ஒரு நாள் பாத்திமா(ரலி) அவர்கள் கடுமையான நோயால் பாதிக்கப் பட்டு படுக்கையில் கிடந்தார்கள். கணவர் அலி(ரலி) பக்கத்தில் இருந்து பனிவிடைகள் செய்தார்கள். அப்போது மனைவியை நோக்கி. அன்பு மனைவியே தாங்களுக்கு பிடித்த மானதை கேளுங்கள் வாங்கி வருகிறேன் என்றார்கள். இதுவரை கணவரிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டிராத பாத்திம(ரலி) அவர்கள் இருமனதோடு சரி எனக்கு மாதுளம் பழம் சாப்பிட ஆசையாக உள்ளது என்றார்கள். சந்தோஷம் தாங்க முடியாமல் கடைத் தெரு நோக்கி புறப்பட்டார்கள். கடைத்தெருவில் மாதுளம் பழம் கிடைக்க வில்லை. அடுத்துள்ள ஒரு ஊரில் தான் மாதுளம் பழம் கிடைக்கும் என்பதை அறிந்து அங்கு சென்று ஒரு பழம் வாங்கி கொண்டு வீடு நோக்கி மகிழ்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு ஏழைமனிதர் ரோட்டு ஓரத்தில் மயங்கி கிடந்தார். உடனே அலி(ரலி) அவர்கள் அவருக்கு பணிவிடை செய்தார்கள். அப்போது அவர் தம்பி பணிவிடைக்கு நன்றி எனக்கு ஒரு ஆசை இருக்கு அதை பூர்த்தி செய்வீர்களா? என்றார். சரி சொல்லுங்கள் இன்ஷா அல்லாஹ் செய்கிறேன் என்றார்கள். உடனே அவர் எனக்கு மாதுளம் பழம் சாப்பிட நீண்ட நாட்களாக ஆசையாக இருக்கிறது வாங்கி தருவீர்களா! என்றதும் அதிர்ச்சி அடைந்த அலி(ரலி) அவர்கள் திக்கு முக்காடிப் போனார்கள். இருப்பதோ ஒன்று அதை இதுவரை எதுவுமே வாங்கி கேட்டிராத மனைவிக்கா? அல்லது இந்த வழிப் போக்கருக்கா? என்ற போராட்டம் மனதில் ஒடியது முடிவில் இது அல்லாஹ்வின் சோதனை என்று அந்த முதியவருக்கே கொடுத்து விட்டார்கள். பின்பு சோர்வுடன் வீடு நோக்கி வந்தார்கள் நோயில் கிடந்த பாத்திமா(ரலி) மிக்க முகலர்ச்சியுடன் கணவரை வரவெற்றார்கள். வழியில் நடந்ததை மனைவியிடம் சொன்னார்கள். அதற்கு பாத்திமா(ரலி) தாங்கள் செய்த தர்மத்தால். அல்லாஹ் எனது நோயை குணமாக்கினான் என்றார்கள். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. திறந்த போது சல்மான்பாரிசி(ரலி) அவர்கள் நின்றார்கள் கையில் ஒரு சிறிய கூடை இருந்தது.இறக்கி வைத்து விட்டு இவைகளை இன்னார் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார் என்று கூடையை ஒப்படைத்தார்கள். கூடையில் மாதுளம் பழம் இருந்தது. அலி(ரலி) பாத்திமா(ரலி) இருவரும் பெரும் ஆச்சரியம் அடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹவைப் புகழ்ந்தார்கள். உடனே அலி(ரலி) கூடையில் இருந்த மாதுளம் பழ்ங்களை எண்ணினார்கள். அதில் 9-மாதுளம் பழங்கள் தான் இருந்தன. உடனே அலி(ரலி) அவர்கள் ஸல்மான்பாரிசி(ரலி) அவர்களே வீடு மாறி கொண்டு வந்து விட்டீர்கள் இது எங்களுக்குரியது அல்ல. என்றார்கள் உங்களுக்காகத்தான் உங்களுக்கே உரியது தான் என்றார்கள். அதற்கு அலி(ரலி) அவர்கள் அல்லாஹ் குர் ஆனில் "மனிஜாஅ பில் ஹஸனத்தி அஸரத்தி அம்சாலிஹா" ஒரு நன்னை செய்தால் அதற்கு அதுபோல 10 வழங்குவோம் என்று அல்லாஹ் சொல்கிறான்.
சற்று முன்நான் ஒரு மாதுளம் பழம் தர்மம் செய்தேன் ஒன்ருக்கு பத்து அல்லவா? வந்திருக்க வேண்டும் கூடையில் 9 பழங்கள் தானே உள்ளது என்று விள்க்கமளித்தார்கள். இதைக் கேட்ட ஸல்மான் பாரிசி(ரலி) அவர்கள் சட்டையில் மறைத்து வைத்துள்ள ஒரு மாதுளம் பழத்தை வெளியே எடுத்து கூடையில் போட்டார்கள். அலியே! உங்களை சோதிப்பதற்காகத்தான் வழியில் ஒரு பழத்தை எடுத்து மறைத்தேன் என்றார்கள். பாத்திமா(ரலி) அவர்களுக்கு சந்தோஷமாக இருந்தது, அல்லாஹ்வின் உதவியை நினைத்து மகிழ்ந்தார்கள்.
கிழவியின் மகளே!
ஒரு சமயம் பாத்துமா(ரலி) அவர்களுக்கும் ஆய்ஷா(ரலி) அவர்களுக்கும் வாய் சண்டை வந்து தகராறு ஏற்பட்டது. பாத்துமா(ரலி) அவர்களை விட வயதில் ஆயிஷா(ரலி) அவர்கள் இளையவர். பாத்துமா(ரலி) அவர்களைப் பார்த்து உங்களைத் தெரியாதா? நீங்க கிழவியின் மகள் தானே! என்று துடுக்காக பேசிவிட்டார்கள்.இவ்வார்த்தை பாத்திமா(ரலி) அவர்களின் உள்ளத்தில் முள் போல தைத்து விட்டது துடிதுடித்துப் போனார்கள். மறுபேச்சுப் பேசாமல் உடனே அருமம தந்தையிடம் ஓடினார்கள். எனதருமை தந்தையே எனக்கும் சின்னம்மாவுக்கும் சிறிய தகராறு ஏற்பட்டது. அப்போது என்னை பேசி இருந்தாலும் பரவா இல்லல பொறுத்துக் கொள்வேன். என் தாயை பற்றி இழிவாக கிழவியின் மகளே! என்ற வெறுப்பாக சொல்லி விட்டார்கள். என்னால் பொறுக்க முடியவில்லல தந்தையே என்று முறையிட்டார்கள். அருமை மகளின் முறையீட்டை அமைதியாய் கேட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். நீ உனது சின்னம்மாவிடம் சென்று, எனது தாய் 40 வயது கிழவியாக இருந்தாலும் 25 வயது வாலிபரை நிக்காஹ் செய்து கொண்டார்கள் ஆனால் நீங்களோ 9 வயது குமரியாக இருந்து 50 வயது கிழவனை அல்லவா? நிக்காஹ் செய்து கொண்டீர்கள். ஆதனாலே நீங்கள் "கிழவனுடடய மனைவி என்று கூறி விட்டு வாங்க என்று தனது மகளுக்கு ஐடியா சொல்லி கொடுத்தார்கள். பாத்திமா (ரலி) அவர்களும் அது போலவே சொல்லி விட்டார்கள். ஆய்ஷா(ரலி) அவர்களுக்கு கோபம் உச்சியில் ஏறிவிட்டது. உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று நீங்கள் கிழவனாம் நான் கிழவனின் மனைவியாம் உங்கள் மகள் சொல்லி விட்டார். இதைப்பற்றி உங்கள் மகளிடம் உடனே விசாரியுங்கள் என்று முறையிட்ட போது. ஆய்ஷா! நான் என்ன குமரனா? நீ மட்டும் கிழவியின் மகள் என்று பாத்திமாவின் மனதை புண்படுத்தி இருக்கிறாயே. அதற்கு இது சமமாகி விட்டது இத்துடன் பிரச்சனையை தீர்த்து சமாததனம் ஆகிவிடுங்கள் என்று சாமாதானம் செய்து அனுப்பினார்கள்.

13 பிப்ரவரி, 2010

"உங்கள் மகளிடமே கேளுங்கள்."

ஒரு நாள் பாத்திமா(ரலி) அவர்களுக்கும், சின்னம்மா ஆயிஷா(ரலி) அவர்களுக்கும் இடையே ஏதோ இரு காரனத்திற்காக பிரச்சனை ஏற்பட்டது அபோது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வெளியே சென்றுயிருந்தனர். நபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீடு வந்ததும். உடனே ஆயிஷா(ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் இந்த பிரச்சனனயைப் பற்றி தான் முறையிட்டார்கள். அமைதியான நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். ஆயிஷா(ரலி) அவர்களை நோக்கி உங்கள்யிருவருக்குமிடையே என்ன நிகழ்ந்தது? என்று விசாரித்தார்கள். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் இந்த பிரச்சினையை உங்கள் மகள் பாத்திமா(ரலி) அவர்களிடமே விசாரித்துக் கொள்ளுங்கள். உங்கள் மகள் ஒரு போதும் பொய் கூற மாட்டார் என்ன நிகழ்ந்ததோ அதனை அப்படியே சொல்லி விடுவார் என்றார்கள் பின்பு பாத்திமா(ரலி) அவர்களிடம் பேசி. இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்கள்.


பாத்திமா(ரலி) கண்டு பிடித்த இரகசியம்

கண்மனி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை புதல்வி பாத்திமா(ரலி) அவர்கள் தனது அன்பு தாயைப் போல் தந்தைக்கு பேருதவி ஆற்றியுள்ளார்கள். தந்தையின் தினப் பணிகளில் பெரும்பாலும் பாத்துமா(ரலி)அவர்களின் பேருதவி பின்னனி இருக்கும். இதன் காரனமாக தந்தையின் பேரன்புக்குரியவர்களாக இருந்தார்கள்.
ஆனவே தந்தையாரின் அன்புக்கும் அரிய சேவைக்கும் பாத்திமா தான் தான். சுவனத்தில் நுழையும் முதல் பென்மனியாயிக்கும் என்று தன்மனதுக்குள் ஒரு துளி அளவு சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. இது பற்றி இன்ஷா அல்லாஹ் தனது தந்தையிடம் சமயம் பார்த்து சேட்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்று சந்தர்ப்பத்தை எத்ர் பார்த்துருந்தார்கள்.
ஒரு நாள் அருமை தந்தையிடம் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, இது தான்சரியான சந்தர்ப்பம் என நினைத்து கேட்டும் விட்டார்கள்.
மகளாரின் இந்த திடீர் கேள்வி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை திகைக்க வைத்து. பின்பு தந்து அருமை மகளின் உள்ளத்தை தெளிவு படுத்துவதர்க்காக உன்மையை இப்படி சொன்னார்கள்.
அருமை மகளே! நீ சுவனம் போவதற்கு முன் ஒரு விறகு வெட்டியின் மனைவி தான் முதலில் சுவனம் புகுவாள். அவள் வேறு எங்கும் இல்லல உமக்கு சமீபமாக தான் இருக்கிறாள். அதாவது உமது பக்கத்து வீட்டுக் காரிதான் என்றார்கள்.
பாத்திமா(ரலி) அவர்க்ளுக்கு தூக்கி வாரிப்போட்டது.இவ்வள்வு நாட்க்களாக உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்ததைரு சந்தேகம் இப்பொழுது தீர்ந்தது. என்ராலும் தேம்பி தேம்பி அழவாரம்பித்து விட்டார்கள். மகளின் நினன கண்டு கலங்கிய கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நீண்ட நேரம் சமாதானம் செய்து ஆறுதல் அளித்து பாத்திமாவே நீ கவலைப்படாதே! உன்னை விட சுவனம் நுழையும் அந்த பென்னுக்கு ஏதாவது இரு சிறப்பு இருக்கத்தான் செய்யும். எனவே அப்பெண்னை நீ அவசியம் சென்று பார்த்து விட்டு வா! அத்னால் உனக்கு ஆறுதல் உண்டாகும் என்று அனுமதியும் வழ்ங்கினார்கள்.
கவலையோடு வீடு சென்ற பாத்திமா(ரலி) அவர்கள் அடுத்த நாளே! கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்ன விறகு வெட்டியின் வீட்டுக்கதவை தட்டினார்கள்.
யாரது ? உள்ளிருந்து ஒரு பென் குரல். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மகளார் பாத்திமா ஆவேன் என்றார்கள்,
அந்த பென் குரல் மீண்டும் ஒலித்தது மன்னிக்கவும் இன்று உங்களை உள்ளே எடுத்துக் கொள்ள எனக்கு அனுமதி இல்லை. ஒரு வேளை நாளை இதே நேரத்துக்கு வருவதானால் நான் என்கணவரிடத்தில் அனுமதி வாங்கி வைக்கிரேன். அப்போழுது தாங்கள் தாராளமாக வரலாம் என்று சொன்னார்கள். அடுத்த நாள் கிட்டத்தட்ட அதே நேரம் சுவனப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் வேண்டுமென்றே குழ்ந்தை ஹஸன்(ரலி) யையும் உடன் அழைத்துக் கொண்டு அங்குச் சென்று கதவைத் தட்டினார்கள்.

விறகு வெட்டியின் மனைவி ஆனந்தம் பொங்க கதவைத் திறந்தார். "கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தார் எத்தனன பேர் வந்தாலும் எவர் வந்தாலும் கதவைத் திற என்று என் கணவர் சொல்லி விட்டார். தாங்கள் வருகை எங்கள் இல்லத்திற்கு ஒரு மகத்துவம்" என்று வரவேற்று அமர வைத்தார்.

பாத்திமா(ரலி) அவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கியது அப்பெண்ணிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பென்னை பாத்திமா(ரலி) அவர்களுக்கு ரொம்ப பிடித்து விட்டது.

என்னை விட முதலில் இப்பென் சுவனம் நுழையும் என்றால் அவரிடம் ஏதாவது ஒரு இரகசியம் இருக்கத் தானே வேண்டும். அதைக் கண்டு பிடித்து விட்டுத்தான் வீடு போக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். ஒன்றும் புலப்பட வில்லல.

கடைசியாக சமையல் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு ஒரு அதிசய காட்சி கண்டு வியந்து போய் நின்றார்கள் அப்படி அதிசயிக்கும் வண்ணம் என்ன இருந்தது? ஆறு பொருட்கள் அழகான முறையில் வைக்கப் பட்டிருந்தது.



1. ஒரு அண்டா சுடு தண்ணீர்

2. மூடி வைக்கப்பட்ட உனவு

3. பெரிய கம்பு ஒன்று

4. குவியலாக பொடி கற்கள்

5. சிறிய கிண்ணம் ஒன்று

6. சிறிய ஊசி ஒன்று



மேற்கண்டப் பொருட்களை எல்லாம் பார்த்த பாத்திமா(ரலி) அவர்கள். அப்பென்மனியிடம் இவைகளின் நோக்கம் என்ன என்று விசாரித்தார்கள்.

அல்லாஹிவின் தூதரின் அருமை மகளே! தாங்கள் கேட்டு விட்டதற்காக இதற்கான காரணத்தை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

விறகு வெட்ட சென்றுள்ள எனது அன்புக் கனவர். விறகுகளை வெட்டி சுமந்து கடைதெருவில் விற்று பின்பு அசதியோடு மாலையில் வீட்டுக்கு வருவார் உடனே இந்த அண்டா தன்னீரில் குளிப்பார். பின்பு சாப்பிட அமருவார். உனவில் அவருக்கு குறை இருந்து முழு திருப்தி இல்லா விட்டால் இந்த கம்பை எடுத்து என்னை அடிப்பார்.

அதற்கு நான் தப்பினால் குவியலாக இருக்கும் பொடிக் கற்களை எடுத்து என்மீது விசுவார். பின்பு உனவு தட்டில் இருந்த உனவு தவறி விழிந்த உணவுகளை இந்த ஊசியால் குத்தி எடுத்து கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்து சாப்பிடுவார். இது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி என்று விளக்கமளித்தார் விறகு வெட்டியின் மனைவி.

பொறுமையாக அனைத்து விஷயங்களையும் கேட்ட பாத்துமா(ரலி) அவர்களுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்தப் பென்னிடம் இருந்த விஷேசமிக்க நற்குணங்கள் சுவனப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்களுக்கு முழுதிருப்தியளித்தது. கணவருக்கு கட்டுப்பட்டு கணவனின் மனம் அறிந்து செயல்பட்டு பணி விடை செய்து கணவரால் ஏற்படும் அத்தனனசோதனனகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டதால் தான் இப்பென்மனி முதலில் சுவனம் புகும் பாக்கியத்தை பெற்றுள்ளாள். என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார்கள்.

மகிழ்ச்சியோடு அப்பென்மனியிடமிருந்து விடை பெற்று வீட்டிற்கு சென்றார்கள்.

உடனே அருமை தந்தை கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்க்கச் சென்றார்கள்.

அன்பு மகளை வரவேற்று விறகு வெட்டியின் மனைவியை சந்தித்த விபரங்களைப் பற்றி விசாரித்தார்கள்.

நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒன்று விடாமல் பாத்துமா(ரலி) அவர்கள் சந்தோஷமாக சொன்னார்கள்.

மகளிடம் அத்தனை விஷயங்களையும் கேட்டறிந்த பின் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இப்படி சொன்னார்கள்.

மகளே! நாளை மறுமையில் நீ சுவனம் செல்ல வரும் போது ஒரு அறிவிப்பு வெளியாகும். மஹ்ஷர் பெருவெளியில் இருக்கும் அனைவரும் உங்களுடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மகள் பாத்திமா(ரலி) அவர்கள் சுவனம் செல்லப்போகிறார்கள் என்று அப்போது நீ ஒரு குதிரையின் மீது சவாரி செய்த வண்ணம் சுவனத்தில் நுழைகின்ற போது உனது குதிரைக் கடி வாளத்தின் பிடியை விறகு வெட்டியின் மனனவி பிடித்துக் கொண்டு செல்லுவாள் ஆகவே அவள் தான் முதலில் சுவர்க்கம் புகுவாள்" என்று நகைச்சுவையாக சொன்னார்கள்.

கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குறும்புப் பேச்சினுள்ளும் எவ்வள்வு பெரிய உத்தமி காட்டப்பட்டாள் என்பதை நினைத்து நினைத்து பூரித்தார்கள். ஜென்னத்தே காத்தூன் பாத்திமா(ரலி) சுவனத்தின் முதற் பெண்மணி.

11 பிப்ரவரி, 2010

"உம்மத்தா?பேரக் குழ்ந்தைகளா?"

ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் பேரக் குழ்ந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஹஸன் (ரலி) அவர்களுக்கு உதட்டுலும், ஹுஸைன்(ரலி) அவர்களுக்கு கழுத்திலும் முத்தம் கொடுத்தார்கள். பிறகு ஹஸன்(ரலி)அவர்கள் இந்த விஷயத்தை தாயார் பாத்திமா(ரலி) அவர்களிடம் வந்து இன்று பாட்டனார் அவர்கள் வழமைக்கு மாற்றமாக பாரபட்சமாக எங்களிருவருக்கும் முத்தமிட்டார்கள் ஏன்? என்று கேட்டார்கள்.

உடனே பாத்திமா(ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் வந்து அருமை தந்தையே! பேரர்கள் மத்தியில் முத்த விஷயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள்? பிள்ளைகள் கோபித்துக் கொண்டுள்ளார்கள். என்று கேட்டார்கள். அருமை மகளே! அதற்கு காரனத்தை நான் சொன்னால் உன் இதயம் தாங்காது என்றார்கள். எத்தனையோ துன்பங்களை தாங்கிவிட்டோம். இது பரவா இல்லை என்றார்கள் பாத்திமா(ரலி)அவர்கள்.

அருமை மகளே!இவர்கள் பெரியவர்களான பின் ஹஸன்(ரலி) நஞ்சூட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் வாயில் முத்தம் கொடுத்தேன். இளையவன் ஹுஸைன்(ரலி) கழுத்து வெட்டப்பட்டு இறப்பார். அதனால்தான் கழுத்தில் முத்தமிட்டேன். என்று விளக்கம் சொன்னார்கள். இச்செய்தியைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் வீரிட்டு அழுதார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்த்து என தருமை தந்தையே ஒவ்வொரு நபி மார்களுக்கு விஷேசமான துஆவை அல்லாஹ் தந்துள்ளானே. அந்த துஆவை பயன்படுத்தி உங்கள் பேரக் குழந்தைகளை இக் கொடிய ஆபத்திலிருந்து காப்பாற்ற கூடாதா? என்று கெஞ்சி கேட்டார்கள். என தருமை மகளே! அது என் உம்மத்துக்காக மறுமையில் கேட்க வைத்துள்ளேன். அதை என் பேரப் பிள்ளைகளுக்காக இங்கு கேட்க முடியாது என்று கூறினார்கள்.

"மகளே! மிக சிறந்ததை தருகிறேன்"

ஒரு சமயம் ஹஜ்ரத் அலி(ரலி) வீட்டிற்குள் நுழைந்தார்கள். அப்போது பாத்துமா(ரலி) அவர்கள்.தனது கணவரிடம் மாவு அரைக்கும் திருகையினால் தனக்கு ஏற்ப்பட்ட வேதனையை கூறி இருகைகளையும் காட்டினார்கள். உடனே அலி(ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சில போர் கைதிகள் வந்துள்ளார்கள். அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களிடம் பங்கிட உள்ளார்கள். சென்று கேளுங்கள் என்றார்கள், உடனே வெட்கப்பட்டும் கொண்டு தமது அருமை தந்தையை நோக்கி நடந்து சென்றார்கள். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீட்டில் இல்லை. தந்தையை சந்திக்க முடியவில்லை. அப்போது வீட்டில் ஆய்ஷா *ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் தான் வந்த நோக்கத்தைக் கூறினார்கள். அதற்கு ஆய்ஷா(ரலி) அருமை மகளே! உங்கள் தந்தை உங்களுக்கு நிச்சயம் தருவார்கள். என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்கள். பிறகு அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீடு வந்த போது விஷயத்தைச் சொன்னார்கள். இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இங்கு பத்ரின் எத்தீம்கள் அதிகம் உள்ளார்கள் அவர்களுக்கு தான் பங்கிடப் போடிறேன். ஏனெனில் அவர்களுக்கு தான் அதிகம் உரிமை இருக்கு என்றார்கள். இந்த செய்தி பாத்திமா(ரலி) அவர்களுக்கு எட்டியதும் மிகவும் வேதனைப்பட்டு அழுதார்கள். மீண்டும் ஆய்ஷா(ரலி) அவர்களிடம் வந்து அழிது விட்டுப் போனார்கள். வேதனையடைந்த ஆய்ஷா(ரலி) அவர்கள் தமது அருமை கணவரிடம், யாரசூலல்லாஹ்! ஏன் இப்படிச் சொன்னீர்கள். உங்கள் மகள் பாத்திமா(ரலி) அழுது கொண்டே போகிறார்கள் என்றார்கள். ஆய்ஷா! நான் உண்மையைத்தான் சொன்னேன் என்று சொல்லி அருமை மகளாரைப் பார்க்கச் சென்றார்கள். அப்போது வழியில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் தோன்றி. நபியே! அல்லாஹ் உங்கள் வார்த்தையைப் பொருந்திக் கொண்டான். உங்கள் மகள் பாத்திமாவை சுவனத்து தலைவியாக அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். படுக்கைக்கு போகும் முன் சுப்ஹானல்லாஹ் 33 அல்ஹம்துலில்லாஹ்33 அல்லாஹு அக்பர் 34 தடவை ஓத சொல்லுங்கள் என்று கூறினார்கள்.

இரவு நேரம் பாத்திமா(ரலி) குடும்பம் படுக்கைக்கு சென்று விட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு சொன்றார்கள். அவர்களை கண்டவுடன் எழுந்து நிற்க முயன்றார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். எழுந்திருக்க வேண்டாம் உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள் என்று கூறினார்கள்.

பாத்திமா(ரலி) சொல்கிறார்கள் : பிறகு நான் அவர்களுடைய பாத்ததின் குளிர்ச்சியை என் நெஞ்சில் உணர்ந்தேன். அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மிக மிக நெருக்கமாக தனது மகளார் அருகில் பந்து அமர்ந்து கொண்டார்கள். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிட சிறந்த ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். சரி தந்தையே என்றபோது நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதிக் கொல்லுங்கள் அது நீங்கள் கேட்டதைவிட மிகச் சிறந்ததாகும் என்றார்கள்.

பாத்திமா(ரலி அவர்க்ள் அழுததற்கு காரனம் சொன்னார்கள் அருமை தந்தையே! பத்ரின் எத்தீம்கள் ஹக்கை நான் எடுக்க வந்துவிட்டேனே இதற்காகத்தான் என்றார்கள். பின்பு சுவனத்து தலைவி என்ற பஷாரத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

9 பிப்ரவரி, 2010

"மணவறையில்பாத்திமா(ரலி)"
ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களுக்கு திருமணம் முடிந்தது அன்புமகள் பாத்திமா(ரலி) அவர்களின் நெற்றியில் அன்பு முத்தம் ஒன்றை பரிசாக தந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். அங்கு நின்ற பென்கள் வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மணமக்களுக்காக துஆ செய்தார்கள். பிறகு " என் அருமை மகளே! நம் குடும்பத்துலுள்ள அனைவரையும் காட்டிலும். எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கே உன்னை திருமணம் செய்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் தனித்து விடப்பட்டார்கள். முதல் இரவு இருவரும் அன்பான வார்த்தைகளால் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். குடும்ப வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்ற திட்டங்களை அன்பு மனைவியிடம் அலி(ரலி) அவர்கள் பேசி கொண்டிருந்தனர். திடீரென பாத்துமா(ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழத்துவங்கினார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களுக்கோ ஒன்றும் புடியவில்லை. உடனே மனைவியிடம் எனதருமை மனைவியே என்னை திருமணம் செய்து கொண்டது உங்களுக்கு திருப்தியை அளிக்க வில்லையா? என்று கேட்டார்கள்.
அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் நான் எதிர்ப்பார்த்ததை விட சிறந்த கணவராக அல்லாஹ் உங்களை தந்துள்ளான். என் இரப்பின் போது என் நிலை என்னவாகும்மோ என்றும் நாளை அல்லாஹ்வின் முன்னால் கணவரின் கடமைகளை சரியாக செய்தாயா? என்று தான் அழுகிறேன் என்றார்கள்.,இதைக் கேட்ட அலி(ரலி) அவர்கள் ஆச்சிரியத்தில் மூழ்கினார்கள். இப்படிப்பட்ட ஒரு அற்புத மனைவி கிடைத்திருப்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். அப்போது பாத்துமா(ரலி) அவர்கள் எனதன்பு கனவரே! தாங்கள் தொழும் இடத்தைக் காட்டுங்கள். அங்கு நான் அல்லாஹ்வை வணங்கப் போகிறேன். நீங்க்ளும் அதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். இது தான் என்னுடைய விருப்பமாகும் என்றார்கள். தொழும் இடத்தைக் காட்டியதும் இருவரும் இரவு முழுவதும் அல்லாஹ்வின் வணக்கத்தில்லே இருந்தார்கள் புதுதம்பதிகள் மூன்று நாளைக்கு பிறகு தான் தங்களின் இல்லற வாழ்வை துவங்கினார்கள் சுப்ஹானல்லாஹ்!