24 பிப்ரவரி, 2010

"கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் சொன்ன இரகசியம்"

"கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தார்கள். ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை சுற்றி அவர்களின் அருமை மனைவி மார்கள் இருந்தார்கள். அப்போது தந்தையை பார்ப்பதர்காக தங்களின் அருமை குழந்தைகளான ஹஸன்(ரலி) ஹுஸைன்(ரலி) இருவரையும் அழைத்துக் கொண்டு பாத்திமா(ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள் தங்களின் அருமை மகளை வரவேற்று பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்கள் அன்பு மகளைப் பார்த்து மகளே! உறவைப் போக்கி விடுவதும் ஆசைகளை தகர்தெறிவதும் இனத்தைப் பிரித்து விடுவதும் மனைவிகளை விதவைகளாக்கி விடுவதும் மக்களை அனாதையாக்கி விடுவதுமான மெளத்து இதுவே என்று சொன்னார்கள். இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் அழவாரம்பித்தார்கள் பின் அருமை மகளை நெஞ்சோடனைத்து அவர்கள் காதில் ஏதோ இரகசியம் சொன்னார்கள். இதைக்கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் கொவென கதறி அழுதார்கள். பாத்திமா(ரலி)அவர்களின் அழுகையைப் பார்த்து பக்கத்திலிருந்த ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் தன் அருமை மனைவியை நோக்கி அவ்வாறு அழவேண்டாம் என்று கண்டித்தார்கள். உடனே கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அலி(ரலி) அவர்களை நோக்கி....அலியே அப்படி சொல்ல வேண்டாம் இறந்து தன் தந்தைக்காக பாத்திமாவை சிறிது கண்ணீர் வடிக்க விடுங்கள் என்று கூறினார்கள். பிறகு அருமை மகளின் அழுகையைப் பாத்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் அருமை மகளை அருகில் அழைத்து மீண்டும் ஏதோ இரகசியம் சொன்னார்கள் இதை கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் மிகவும் சிரித்தவர்களாக சந்தோஷமடைந்தார்கள். இக்காட்சியை எப்பொழுதும் நான் பார்த்ததில்லை என்று ஆச்சரியமாக சொன்னார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் அருமை மகளாருக்குச் சொன்ன அந்த இரண்டு இரகசியங்களை அறிந்துக் கொள்ள அயிஷா(ரலி) அவர்களுக்கு ஆசையாக இருந்தது. எப்படியும் மகளாரிடம் இரகசியங்களை அறிந்துக் கொள்ளலாம் என்ற துடிப்புடன் பாத்திமா(ரலி) அவர்கள் தந்தையாரிடம் விடைப் பெற்று வீட்டிற்கு சொல்லும் போது அருலே வந்து அருமை மகளே! நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தாங்களுக்கு சொன்ன அந்த இரகசியம் என்ன? என்று கேட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்ன இரகசியத்தை இப்பொழுது நான் வெளியிட மாட்டேன் . அது வெளிய சொல்ல கூடாத இரகசியம் என்று உறுதியாக கூறிவிட்டார்கள். பிறகு கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வபாத்தானார்கள். சில மதங்கள் கழித்து ஒரு நாள் ஆய்ஷா(ரலி) அவர்கள் பாத்திமா(றலி) அவர்களை சந்தித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கொன்ன அந்த இரகசியம் என்ன? அல்லாஹிவின் பெயரால் கேட்கிறேன் அந்த இரகசியததை சொல்லுங்கள் அருமை மகளே! உங்களுடைய மாற்றாந்தாய் என்ற வகையில் எனக்கு இரகசியத்தை அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. அந்த உரிமையில் உங்களிடம் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன? என்று கேட்டார்கள்.
இன்று எனது அருமை தந்தை இல்லை அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டார்கள் அதனால் இரகசியத்தை நான் சொல்கிறேன் முதலாவதாக எனதருமை தந்தை என்னிடம் மகளே! ஒவ்வொரு ஆண்டிலும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் குர் ஆனை ஒரு தடவை ஓதிக் காட்டுவார்கள் நான் அவருக்கு ஒரு முறை ஓதிக் காட்டுவேன். இது தான் வழக்கம். ஆனால் இந்த ஆண்டில் என்னிடம் இரண்டு தட்வை குர் ஆன் ஓதினார்கள். ஆகையால் என் வாழ்நாள் முடிந்து இவ்வுலகை விட்டும் பிரியப்போகிறேன். எனவே பாத்திமா! நீ பொறுமையை கடைப்பிடிப்பாயாக. நான் உமக்கு நல்வழி காட்டியான தந்தையாவேன். என்று சொன்னார்கள். இதைக் கேட்டு நான் அழ ஆரம்பித்தேன். என்னுடைய அழிகையின் உச்சத்தைக் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் என் காதில் மகளே! என் குடும்பத்தாரில் நீயே என்னிடம் முதலாவதாக வந்து என்னை சந்திப்பாய் என்றும் மேலும் சுவனத்துப் பெண்களுக்கு நீர்தாம் தலைவியாய் இருப்பாய் இது உனக்கு சந்தோஷம் இல்லையா? என்று சொன்னார்கள். இதைக் கேட்டவுடன் நான் சிரிக்க வாரம்பித்தேன் என்று இரகசியத்தை வெளியிட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக