"கணவன் எவ்வழியோ அவ்வழி"
மக்கா வெற்றியின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உடன் பாத்திமா(ரலி) அவர்களும் சென்றிருந்தனர். மக்காவின் உறவினர்கள். பலர் தங்களின் வீடுகளில் தங்க வேண்டும் என்று கெஞ்சினார்கள். நான் எந்த ஒரு வீட்டுக்கும் நுழைய மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார்கள். பள்ளிக்கு அருகாமையில் அபூராபீ (ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் ஒரு கூடாரத்தை அமைத்தார்கள். அதில் பாத்திமா(ரலி) உம்முஸல்மா(ரலி) மைமுனா(ரலி) ஆகியோர் தங்கி இருந்தனர். இன்னும் அக் கூடாரத்துக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வரவில்லை. அதற்குள் மக்காவில் எந்த வீட்டில் த்ங்கி இருக்கும் போது மிஃராஜ் சொல்லும் வாய்ப்பு ஏற்பட்டதோ அந்த அன்புச் சடோதரி உம்முஹானீ(ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள். அவர்களின் உறவினர்களான இரண்டு முஸ்லிம் ஆகாத மக்ஸுமிகள் இருந்தனர். அவர்களுக்கு உம்முஹானீ(ரலி) அவர்கள் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு அளித்திருந்தார்கள் உம்முஹானி(ரலி) அவர்களைப் பார்க்க அப்போது அலீ(ரலி) அவர்கள் அங்கு நுழைந்தார்கள். அங்கு இரண்டு மக்ஸூமிகளையும் பார்த்து கோபம் கொண்டு தன் வாளை உருவினார்கள். உடனே உம்முஹானீ(ரலி)அவர்கள் அவ்விருவர் மீது ஒரு போர்வையை வீசி அவர்களுக்கிடையே நின்று அல்லாஹ்வின் பெயரால் கூறுகிறேன் முதலில் என்னை கொண்று போடு. என்று சொன்னார்கள். உடனே அலி(ரலி) அவர்கள் வெளியேறி விட்டார்கள். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாத்திமா(ரலி) அவர்கள் தனது கனவர் செய்ய வந்தது சரி இஸ்லாம் உயர்ந்த மார்க்கம் அதை விட்டி விட்டு ஷிர்க்கிலும் குஃப்ரிலும் கிடப்பவர்களுக்கு என்ன பெருமம இருக்கு என்று நினைத்தவர்களாக உம்முஹானீ(ரலி) அவர்களை பார்த்து உம்முஹானியே நீர் சிலை வணங்கிகளுக்கு தஞ்சம் அளிக்கின்றீரா? கூடாது என்று கனவன் சார்பில் நின்று பேசினார்கள். அப்போது அங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நுழைந்தார்கள். தனது ஒன்று விட்ட சகோதரியை அன்புடன் உபசரித்தார்கள். இங்கு நடந்தவற்றை உம்முஹானி(ரலி) அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அவ்வாறு இங்கு எதும் நடந்து விடாது கவலை வேண்டாம் நீர் யாருக்கு தஞ்சம் கொடுக்கிறாயோ அவர்களுக்கு நாம் தஞ்சம் கொடுக்கிறோம் நீர் யாரை பாதுகாக்கிறாயே அவர்களை நாம் பாதுகாக்கிறோம் என்று ஆறுதல் கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக