- மூதாதையர்
கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தந்தை பெயர் என்ன?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தந்தை பெயர் அப்துல்லாஹ் என்பதாகும்.
கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தந்தை வழிப் பாட்டனார் யார்?பாட்டியார் யார்?
பதில் : தந்தையைப் பெற்ற பாட்டனார் பெயர் அப்துல் முத்தலிபு, பாட்டியின் பெயர் பர்ரா.
கேள்வி : தந்தை உடன் பிறந்த ஆண்கள் எத்தனைப் பேர்; அவர்களுடைய பெயர் என்ன?
பதில் :
- ஹாரிது,
- ஜுபைர்,
- அபூதாலிப்,
- அப்துல் கஃபா,
- அப்துல்லாஹ்,
- அபூலஹப் (அப்துல் உஸ்ஸா),
- முகவ்விம்,
- ஹஜல்,
- முங்ய்ரா,
- ஹம்ஜா,
- ளர்ரார்,
- குதம்,
- அப்பாஸ்,
- ங்தாக்,
- முஸ் அப்
இந்த பதினைந்து பேர்களும் தந்தை உடன் பிறந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் னீதாக் என்பவருக்கு ஹஜன் என்றும் அப்துல் கஃபா என்பவர்தான் முகவ்விம் என்றும் கூறுகின்றார்கள். குதம் என்று யாருக்குமே பெயர் இல்லை என்பதாகச் சரித்திர ஆசிரியர் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் கூறிய கூற்றுப்படிப் பார்க்கப் போனால் அப்துல் முத்தலிபு அவர்களுக்கு பன்னிரண்டு ஆன் மக்களாவார்கள்.
கேள்வி : தந்தை உடன் பிறந்த பெண்மக்கள் எத்தனை பேர் அவர்கள் பெயர் என்ன?
பதில் : உம்முஹகீம், பைளாஉ, உமைமா. அர்வா, பர்ரா, ஆத்திகா,ஸபிய்யா ஆகிய ஏழு பேர்களும் தந்தையுடன் பிறந்த பெண்மக்கள் ஆவர்.
தாய் வழி உறவினர்கள்
கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தாயார் பெயர் என்ன?
பதில் : ஆமினா
கேள்வி : பெருமானாரின் தாய்வழிப் பாட்டனார், பாட்டி பெயர் என்ன?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் தாய்வழிப்பாட்டனார் பெயர் வஹ்பு, தாயாரைப் பெற்ற பாட்டியின் பெயர் பாத்திமா.
கேள்வி : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு சிறிய தாயார், பெரிய தாயார் உண்டா? எத்தனன பேர்கள்?
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சிறிய தாயார் பெயர் பாரீஷா, பெரிய தாயார் பெயர் பாக்கிதா,
கேள்வி : ஆமினா நாச்சியாரின் சகோதரர்கள் யாவர்?
பதில் :
- அஸ்வத்
- உமைர்
- அப்துயஹூது ஆகிய மூவர்
குறைஷி வம்சம் யாரிலிருந்து ஆரம்பம்
கேள்வி : குறைஷி வம்சம் யாரிலிருந்து ஆரம்பம்?
பதில் : பெருமானாரின் மூதாதை பிஹ்ருவிலிருந்து ஆரம்பம்.
கேள்வி : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பன்னிரண்டு தலைமுறைகளின் விவரமென்ன?
பதில் : குறைஷி வம்ச ஆரம்பம் பிஹ்ருவிலிருந்து
- பிஹ்ரு
- காலிப்
- லுவய்யு
- கஃபு
- முர்ரா
- கிலாப்
- குஸையீ
- அப்துல்மனாப்
- ஹாஷிம்
- அப்துல்முத்தலிப்
- அப்துல்லாஹ்
- அப்துல்லாஹ் வினுடைய அருமைப் புதல்வர் தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக