25 பிப்ரவரி, 2010

"பாத்திமா ரலிக்கு ஓர் படிப்பினை!
கண்மணி நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் மறைவுக்கு பின் அவர்களில் சொத்து சம்பந்தமாக அவர்கள் குடும்பங்களில் பதட்டம் ஏற்பட்டது. இதை அறிந்த பாத்திமா(ரலி) அவர்காள் தந்தையின் சொத்தில் நமக்கும் பங்கு இருக்கிறது. அதை ஏன் விட வேண்டும் வாங்கி நமது பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்ற கருத்திலும் தங்களின் அருமை கணவர் அலி(ரலி அவர்களின் ஆலோசனையை ஏற்றவர்களாக அப்போது ஆட்சியில் இருந்த கலீபா அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களிடம் சென்ரு மதினா ஃபிதக் கைபரைச் செர்ந்த கிராமங்களில் உள்ள தங்கள் தந்தையரின் சொத்துகள் எனக்கும் கொடுக்கப்படவேண்டும் என்ரு விண்ணப்பம் செய்தார்கள். இதை அறிந்த அபூபக்கர்(ரலி) அவர்கள். பாத்திமா(ரலி) அவர்களை நோக்கி நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தை என் குடும்பத்தாரைவிடவும் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் குழந்தைகளை என் குழந்தைகளை விடவும் நேசிக்கிறேன் ஆனால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கு வாரிசு கிடையாது என்ரு கூறியுள்ளார்கள். மேலும் நபிமார்களாகிய எங்களிடமிருந்து எவருக்கும் வாரிசு சொத்துரிமை கிடையாது நாம் விட்டுச் செல்வதெல்லாம் சதக்காவாகும் என்று சொன்னார்கள். அதனால் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் காலத்திலேயே நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் குடுமப்த்தினருக்கு இந்த சொத்துகளின் வருமானத்திலிருந்து எவ்வளவு கொடுக்கப்பட்டதோ அது இப்பொழுதும் கொடுக்கப்படும் என்று கூறினார்கள். பிறகு நபி பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை மகளே! நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்கள் செய்த ஒவ்வொரு செயல்களையும் நான் பின்பற்றி நடப்பேன் அவ்வாறு நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியைப் பின்பற்றாமல் புறகணித்து நடந்தால் அது பெரும் பாவமாகும்.தவறான வழியுமாகும். எனவே நபி ஸல்லல்லாஹுஅலைஹிவ ஸல்லம் அவர்களின் சொத்திலிருந்து பங்கு தர முடியதவனாக உள்ளேன் என்று பணிவாக கூறினார்கள்.
இது சுவன பேரரசி பாத்திமா(ரலி) அவர்களுக்கு சற்று மணவருத்தம் ஏற்பட்டது. இருந்தும் ஷரிஅத் வாழவேண்டும் அதுதான் இப்போது தேவையே தவிர அழியும் சொத்துகள் அல்ல என்று நினைத்தவர்களாக அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வாக்குவாதமோ வேறு எதுவுமோ பேசாமல் திரும்பிவிட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக