21 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) அவர்களின் மதிநுட்பம்"

ஒரு சமயம் "ஹிஜ்ர்" என்ற இடத்தில் மக்கத்து குறைஷி காபிர்கள் அனைவரும் ஒன்ரு கூடி கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை கடுமையாக தாக்கி காயப்படுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். அந்த சமயத்தில் சிறு வயதினராய் இருந்த சிறுமி பாத்திமா(ரலி) அவர்கள் அந்தப் பக்கமாய் ஒரு வேலையாக சென்ற போது குறைஷிகள் இந்த சதி திட்டத்தை அறிந்தார்கள். உடனே ஒட்டமாய் வீட்டிற்கு ஓடி வந்து தங்களின் அருமை தந்தையாரிடம் விஷயத்தை சொன்னார்கள்.

சின்னஞ்சிறு அருமை மகளின் இவ்வார்த்தையைக் கேட்ட கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! கவலைப்பட வேண்டாம் என்று கூறிவிட்டு உடனே கஃபத்துல்லாஹ்விற்கு போனார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கஃபாவில் நுழைவதை குறைஷி காபிர்கள் பார்த்துவிட்டார்கள். குறைஷி காபிர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் பார்த்து விட்டார்கள் உடனே அங்கு ஒரு பிடி மண்னை அள்ளி குறைஷிகள் மீது விசி "ஷாஹத்தில் உஸூஹு" என்றுக் கூறினார்கள். பின்பு கஃபாவில் இறை வணக்கத்தில் திளைத்து விட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் இச்செய்கை காபிர்களின் உள்ளத்தில் ஒரு திடுக்கத்தை உண்டாக்கியது நடு நடுங்கிப் போனார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக