"மகளே! மிக சிறந்ததை தருகிறேன்"
ஒரு சமயம் ஹஜ்ரத் அலி(ரலி) வீட்டிற்குள் நுழைந்தார்கள். அப்போது பாத்துமா(ரலி) அவர்கள்.தனது கணவரிடம் மாவு அரைக்கும் திருகையினால் தனக்கு ஏற்ப்பட்ட வேதனையை கூறி இருகைகளையும் காட்டினார்கள். உடனே அலி(ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சில போர் கைதிகள் வந்துள்ளார்கள். அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களிடம் பங்கிட உள்ளார்கள். சென்று கேளுங்கள் என்றார்கள், உடனே வெட்கப்பட்டும் கொண்டு தமது அருமை தந்தையை நோக்கி நடந்து சென்றார்கள். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீட்டில் இல்லை. தந்தையை சந்திக்க முடியவில்லை. அப்போது வீட்டில் ஆய்ஷா *ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் தான் வந்த நோக்கத்தைக் கூறினார்கள். அதற்கு ஆய்ஷா(ரலி) அருமை மகளே! உங்கள் தந்தை உங்களுக்கு நிச்சயம் தருவார்கள். என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்கள். பிறகு அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீடு வந்த போது விஷயத்தைச் சொன்னார்கள். இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இங்கு பத்ரின் எத்தீம்கள் அதிகம் உள்ளார்கள் அவர்களுக்கு தான் பங்கிடப் போடிறேன். ஏனெனில் அவர்களுக்கு தான் அதிகம் உரிமை இருக்கு என்றார்கள். இந்த செய்தி பாத்திமா(ரலி) அவர்களுக்கு எட்டியதும் மிகவும் வேதனைப்பட்டு அழுதார்கள். மீண்டும் ஆய்ஷா(ரலி) அவர்களிடம் வந்து அழிது விட்டுப் போனார்கள். வேதனையடைந்த ஆய்ஷா(ரலி) அவர்கள் தமது அருமை கணவரிடம், யாரசூலல்லாஹ்! ஏன் இப்படிச் சொன்னீர்கள். உங்கள் மகள் பாத்திமா(ரலி) அழுது கொண்டே போகிறார்கள் என்றார்கள். ஆய்ஷா! நான் உண்மையைத்தான் சொன்னேன் என்று சொல்லி அருமை மகளாரைப் பார்க்கச் சென்றார்கள். அப்போது வழியில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் தோன்றி. நபியே! அல்லாஹ் உங்கள் வார்த்தையைப் பொருந்திக் கொண்டான். உங்கள் மகள் பாத்திமாவை சுவனத்து தலைவியாக அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். படுக்கைக்கு போகும் முன் சுப்ஹானல்லாஹ் 33 அல்ஹம்துலில்லாஹ்33 அல்லாஹு அக்பர் 34 தடவை ஓத சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
இரவு நேரம் பாத்திமா(ரலி) குடும்பம் படுக்கைக்கு சென்று விட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு சொன்றார்கள். அவர்களை கண்டவுடன் எழுந்து நிற்க முயன்றார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். எழுந்திருக்க வேண்டாம் உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள் என்று கூறினார்கள்.
பாத்திமா(ரலி) சொல்கிறார்கள் : பிறகு நான் அவர்களுடைய பாத்ததின் குளிர்ச்சியை என் நெஞ்சில் உணர்ந்தேன். அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மிக மிக நெருக்கமாக தனது மகளார் அருகில் பந்து அமர்ந்து கொண்டார்கள். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிட சிறந்த ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். சரி தந்தையே என்றபோது நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதிக் கொல்லுங்கள் அது நீங்கள் கேட்டதைவிட மிகச் சிறந்ததாகும் என்றார்கள்.
பாத்திமா(ரலி அவர்க்ள் அழுததற்கு காரனம் சொன்னார்கள் அருமை தந்தையே! பத்ரின் எத்தீம்கள் ஹக்கை நான் எடுக்க வந்துவிட்டேனே இதற்காகத்தான் என்றார்கள். பின்பு சுவனத்து தலைவி என்ற பஷாரத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக