25 பிப்ரவரி, 2010

"மண்ணறையில் மாநபியின் மகளார்"
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தினருக்கு அது துயரமான இரவு சுவன தலைவி பாத்திமா(ரலி) அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து மறு உலகப் பயணத்திற்காக தயாராக இருந்தார்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் வஸியத் சொன்னது போல கனவர் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களும் அஸ்மா பிந்து உமைஸ்(ரலி) அவர்களும் பாத்திமா(ரலி) அவர்களை குளிப்பாட்டினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பனிவிடைப் பென்னான முன்னால் அடிமையான ஸல்மா(ரலி) அவர்களும் இவர்கள் கதிஜா(ரலி)பாத்திமா(ரலி) அவர்களை பெற்றெடுக்கும் போது பிரசவம் பாத்த பென்மனி ஆவார்கள்.
குளிப்பாடுவதில் உதவிக்கு சேர்த்து கொண்டார் பிறகு அப்பாஸ்(ரலி) அவர்கள் அலீ(ரலி) ஹஸன்(ரலி) ஹுஸைன்(ரலி) போன்ற குறிப்பிட்ட குடும்பத்தினர்கள் அபூதர் கிபாரி(ரலி) போன்ற ஒரு சில சஹாபா பெருமக்கள் அங்கு இருந்தனர் அதிகமான சஹாபாக்களுக்கு பாத்திமா(ரலி) அவர்களின் மரனச் செய்தியை அறிவிக்கவில்லை வழியும் கண்ணீரோடு பாத்திமா(ரலி) அவர்களின் மதினாவின் ஜன்னத்துல் பக்கீ என்ற பொது கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதற்கு முன் பாத்திமா(ரலி) அவர்களின் ஜனாஸா தொழுகையை ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் நடத்தினார்கள் ஈடு செய்ய முடியாத இழப்பை நினைத்து பிள்ளைகள் இரண்டு பேரும் பதறி கதறி அழுதனர் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
அப்போது ஹஜ்ரத் அபூபதர் கிபாரி(ரலி) அவர்கள் பாத்திமா(ரலி) அவர்களின் கப்ரைப் பார்த்து உருக்கமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள் ஏ....கப்ரே! இப்பொழுது உன்னிடம் ஒப்படைப்பதற்காக நாம் யாருடைய உடலை கொண்டு வந்து உள்ளோம் தெரியுமா? அகிலத்தின் அருக் கொடை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உதிரத்திலிருந்து உதித்த உத்தம பத்தினி பாத்திமா(ரலி)
வீரத்தின் விளை நிலம் அஞ்சாநெஞ்சர் பார்போற்றும் ஹைதர் அலி(ரலி) அவர்களின் அருமை மனைவி பாத்திமா(ரலி) சுவனத்தின் தூண்களான ஹஸன்(ரலி) அவர்களின் உன்னத தாய் பாத்திமா(ரலி)
இவ் உலகத்துப் பெண்களுக்கெல்லாம் உன்னத தலைவி என்பதை நீ அறிவாய் எனவே இப்புனித உடலை நீ கண்ணியமாக பெரும் பக்தியுடன் ஏற்று கொண்டு பக்குவமாய் வைத்துக் கொள்வாயாக என்று கூறினார்கள். அப்போது கப்ரில் இருந்து ஓர் அசரீரி சத்தம் வந்தது....அபூதரே! இது பெருமை பாராட்டும் இடமன்று என்பது உமக்குத் தெரியாதா? இது ஆளைப் பார்க்க கூடிய இடமன்று" அமலைப் பார்க்க கூடிய இடம்.
அல்லாஹ்வை பய்ந்து உண்மையான தக்வாவோடு நல்ல அமல்கள் புரிந்து மனச்சாந்தியோடு இங்கு வந்தவர்கள் மட்டுமே வெற்றியடைவார்கள். என்று முழ்ங்கியது.
பின்பு சஹாபாக்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் குடும்பத்தினரும் அமைதியாக வீடு திரும்பினார்கள். புதன் காலை பொழுது சோகமாகவே விடிந்தது பல சஹாபாக்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களிடம் வந்து பாத்திமா(ரலி) அவர்களின் மரணச் செய்தியை ஏன் எங்களுக்கு அறிவிக்கவில்லை? என்று கேட்டார்கள் அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் இரவிலே நல்லடக்கம் உடனே செய்து விடுங்கள் யாருடைய பார்வையும் என்மீது பட்டு விடக்கூடாது என்று சொல்லி சென்ற வஸீயத்தைச் சொல்லி அமைதிப் படுத்தினார்கள்.
பிறகு தங்களின் அருமை மனைவி பாத்திமா(ரலி) அவர்கள் கூறிச் சென்ற வஸீயத்தின் பிரகாரம்.
பாத்திமா(ரலி) அவர்களின் மூத்த சகோதரி ஜய்னபு(ரலி) அவர்களின் அருமை மகள் உமாமா(ரலி) அவர்களை பாத்திமா(ரலி) அவர்கள் இறந்து சரியாக ஏழாவது நாளில் திங்கள் கிழ்மை ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் திருமனம் செய்து கொண்டார்கள்.
அப்போது ஒரு சஹாபி வந்து ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களிடம்
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அற்புத மகளார் எப்படி பட்டவராக நடந்து கொண்டார்கள் என்று கேட்டார்.அதற்கு அலி(ரலி) அவர்கள் வாடிய பின்னரும் மணம் வீசும் ஒரு மலராக அவர்கள் இருந்தார்கள் என்று புகழ்ந்து கூறினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக