14 பிப்ரவரி, 2010

"மாமியாவுக்கேத்த மருமகள்"
சுவனத்தின் தலைவி பாத்திமா(ரலி) அவர்களின் மாமியார் பெயர் பாத்திமா பிந்தே அஸத்(ரலி) ஆகும்.
பாத்துமா(ரலி) அவர்கள் தாங்களின் மாமியார் மீது அளவு கடந்த அன்பை வைத்திருந்தார்கள். திருமணம் முடிந்து. மாமியார் வீட்டுக்குச் சென்றது முதல் வபாத்தாகும் வரை மாமியார் மருமகள் சண்டையோ சின்ன பிரச்சனையோ வந்தது இல்லை. மாமியாவும் மருமகள் மீது உயிரையே வைத்துருந்தார்கள் மாமியார் மருமகள் இருவரின் பெயரும் பாத்திமாதான். இது இன்னும் பொருத்தமாக இருந்தது. வயது முதிர்ந்த மாமியாவை இருந்த இடத்திலே வைத்து பணிவிடைகள் செய்தார்கள். அருமையான கணவரை பெற்று தந்த தாயல்லவா? மாமியாவுக்கு செய்யும் பணி விடைகளில், மரியாதைகளில் ஒரு சிறு குறை கூட ஒருபோதும் வைத்ததில்லை. இதைப் பார்த்து தான் அலி(ரலி) அவர்கள் சொன்னார்கள். என் தாயும் என் மனைவியும். தாயும் மகளையும் போல் வாழ்கின்றனர் என்று பெருமிதமாக போற்றிச் சொல்வார்கள். மாமியாவையும் கணவணையும் இரு கண்களைப் போல் பாதுகாப்பார்கள். அதனால் குடும்பத்தில் வறுமை, பசியின் கொடுமை இருந்தாலும், குடும்பம் பெரும் மகிழ்ச்சியில் இருந்தது ஹம்ஸா(ரலி) அவர்களின் மகள் பாத்திமாவும் அலி(ரலி) அவர்கள் வீட்டில் தான் இருந்தார்கள். அதனால் ஒரே வீட்டில் மூன்று பாத்திமாக்கள் இருந்தார்கள். மாமியார் தாயைப் போல மாமனார் தந்தையைப் போல ஷரிஅத்தில் மதிப்பு கொடுக்க பட்டுள்ளது அதை அப்படியே ஹயாத்தாக்கினார்கள்.
மாமியார் வீட்டில் வேளைக்கு ஆள் இல்லாததால் அனைத்து வேலைகளையும் தாமே செய்வார்கள். திருகையில் மாவு அரைப்பது, அடுப்பு பத்தவைப்பது. ரொட்டி பிசைந்து சுட்டெடுப்பது கிழிந்த ஆடைகளை தைப்பது ஒட்டுப்போவது வீட்டைப் பெருக்குவது. துணிமணிகளை துவைப்பது போன்ற வேலைகளை செய்வார்கள். திருக்கை அரைத்து கையில் கொப்புளங்கள் வந்து விடும். தண்ணீர் சுமந்து உடலில் வலி ஏற்பட்டுவிடும் எளிய உணவு இத்துப்போன உடைகள். ஒட்டிய வயிறு இவைகளுடன் மாமியாருக்கு கணவணுக்கும் பிள்ளைகளுக்கும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் குறைவில்லாமல் செய்வார்கள். இதற்கு மத்தியில் தங்களின் சுயதேவைகளையும் செய்து கொள்வார்கள். ஆரம்பத்தில் மாமியார் வீட்டில் சுறுசுறுப்பாய் வேலைகள் செய்தார்கள். கடைசி காலங்களில் முடியாத நிலையிலும் தங்களின் இயலாமையைக் காட்டிக் கொள்ளாமல் அனைத்து வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.சில சமயங்களில் மருமகள் படும் கஷ்டம் தாங்காமல் மாமியார் பாத்திமா பிந்த் அஸத்(ரலி) அவர்கள் கடைக்கு சென்று வீட்டு சாமான்கள் வாங்கி வருவார்கள். ஒட்டகத்துக்கு தண்ணீர் கொடுத்து கட்டிப் போடுவார்கள். மனனவியின் கஷ்டங்களை கண்டு மனம் கனத்த அலி(ரலி) அவர்கள் சில சமயம் மனைவிக்கு உதவியாக வீட்டு வேலைகளை செய்வார்கள். இதை விட கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தமது அருமை மகளைப் பார்க்க வரும் போது சில சமயங்களில் மகளுக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக