2. யானைப்படை
கேள்வி : யானைச் சண்டை என்பதென்ன? இது எங்கே எப்பொழுது நடந்தது?
பதில் : அபிசீனிய நாட்டரசனின் பிரதிநிதியாக விள்ங்கிய (எமன் தேசத்தில்) அப்ரஹாவின் யானைப் படைக்கு, கஃபாவின் தலைவராக விளங்கிய ஹலரத் அப்துல் முத்தலிபின் குடுகக்களுக்கும் இடையே நடந்த போர் தான் யானைச் சண்டை என்ப்படும். இது நடந்த வருடத்தை யானை வருடம் என்று சொல்லப்படுகின்றது. இது கி.பீ 570 ஆண்டு மக்காவின் எல்லையில் நடந்தது.
இந்தப் சண்டை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் பிறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பாக நடந்தது. எமன் மாகாணம் அபிஸீனியா தேசத்து அரசன் ஆட்சியின் கூழ் கொஞ்ச காலம் இருந்தது. அப்போது அந்த அரசனின் பிரதிநிதியாக அப்ரஹா என்பான் இருந்தான். அவன் பதவிக்கு வருவதற்கு முன் அரியாத் என்பவர் எமன் தேசத்தை ஆண்டு வந்தார். அப்ரஹாவின் சூழ்ச்சியால் அரியாத் கொல்லப்பட்டார். இதன் பின்னர் தான் அப்ரஹா அரசர் பிரிதிநிதியானான். இது அபிஸீனியா நாட்டு மன்னனுக்குத் தெரிந்துவிட்டது., மன்னனுடைய வருத்தத்தைப் போக்கி, மன்னனைத் திருப்தி செய்வதற்காகத் தன் தலைநகரில் ஒரு தேவாலயத்தைக் கட்டி அனைவரும் அந்த ஆலயத்தில் வந்துதான் வழிபட வேண்டும் என்று தன் குடிமக்களுக்கு கட்டளையிட்டான். அன்றியும் ஹஜ்ஜு செய்ய வருவோரும் இந்த தேவாலயத்திற்கு வந்து போக வேண்டுமென்று அறிவித்தான்.
இந்தக் கோவிலை பல விதத்திலும் அழகுபடுத்தி வைத்தான். ஹஜ்ஜு செய்ய வருவோர் அனைவரும் இந்த தேவாலயத்திற்கு வந்தால் அரபு நாட்டு மக்களின் செல்வங்களின் கணிசமான ஒரு பகுதி இவ்வாலயத்திற்கு வருமானமாகக் கிடைக்கும் என்பது அவன் எண்ணம். இந்தச் செய்தி அரபு நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரிய வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக