5 பிப்ரவரி, 2010

ஐந்து ஆடுகளா? ஐந்து கலிமாக்களா?
மற்றோரு சமயம் பாத்துமா ரலி அவர்கள் வீட்டில் கடுமையான பசிக் கொடுமை பசியோடு வீட்டிற்கு வந்த ஹஜரத் அலி ரலி அவர்கள் தனது அன்பு மனைவி பாத்திமா ரலி அவர்களை நோக்கி உங்கள் தந்தையிடம் ஆடுகள் வந்து இருக்கிறது நீங்கள் சென்று ஐந்து ஆடுகள் வாங்கி வாருங்கள் அதன் மூலம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ள்லாம் என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
கணவரின் சொல்லை மதித்து பாத்திமா ரலி அவர்கள் தனது தந்தையைக் கானச் சென்றார்கள். நலி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்களின் வீட்டிற்கதவினை தட்டினார்கள். உடனே கதவை திறந்த் நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் வழமைப்போல் மகளைக் கெளரவித்து பின்பு இந்த நேரம் நீ இங்கு வரவேண்டிய நேரம் இல்லையம்மா? நீ வந்த நோக்கம் என்னம்மா? என்று விசாரித்தார்கள். எனதருமைத் தந்தையே! மலக்குகள் தஸ்பீஹ் மூலம் தங்களின் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். மனிதர்களாகிய நாம் என்ன செய்வது? என்று சூசஹமாக தங்களின் வறுமை நிலைமை பற்றி முறையிட்டார்கள்.
எனதருமை மகளே! நீ....ஆடுகள் கேடி வந்துள்ளாய் இன்று நம்மிடம் ஆடுகள் வந்து இருக்கிறது ஆனால் சற்று முன்பு தான் ஹஜ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்ததூ உங்கள் அருமை மகள் பாத்திமா(ரலி) அவர்கள் உங்களிடம் ஐந்து ஆடுகள் வாங்க வருகிறார்கள் இதோ ஐந்து கலிமாகளை அல்லாஹ் தந்துள்ளான் உங்கள் மகள் வந்த உடன் மகளே உனக்கு 5 ஆடுகள் வேண்டுமா? 5 கலிமாக்கள் வேண்டுமா? என்று கேளுங்கள் என்று கூறி சென்றுள்ளார்கள். நீ எதை விரும்புகிறாய் கேளும் தருகிறேன் என்றார்கள் கருனை நலி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம்.
இப்படியோரு கடுமையான சோதனை நம் முன் வைப்பார்கள் என்று பாத்திமா (ரலி) அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பிள்ளைகளின் பசி எதிர்ப்பார்ப்பு இப்படி குடும்ப சூழ்நிலை மனதில் ஓடியது.என் மகள் துன்யாவை தேர்ந்தெடுக்கிறாரா? அல்லது மறுமையை தேர்ந்தெடுக்கிறாரா? என்ற மாபெரும் பரீட்சையை வைத்டு விட்டார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் என்ன சளைத்தவர்களா! நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் ஈரக்குலை துண்டல்லவா? அருமை தந்தையே எனக்கு 5கலிமாக்களை தாருங்கள் என்று வேண்டினார்கள்.
பெரும் மகிழ்ச்சியடைந்து நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் தம் அருமை மகளாரை நோக்கி 5 கலிமாக்களை சொல்லிக் கொடுத்தார்கள் இதோ அந்த 5 கலிமாக்கள்:
1. யா அவ்வலில் அவ்வலீன்
2. யா ஆஹிரில் ஆஹீரீன்
3.யாதல் குவ்வத்தில் மதீன்
4.வயாராஹிமல் மஸாகீன்
5.யாஅர்ஹமர் ராஹிமீன்

இந்த 5 மாபெரும் செல்வங்களை வாங்கிக் கொண்டு சந்தோஷமாக வீடு சென்றார்கள்.அருமை மனைவி ஆடு வாங்கி வருவார்காள் என்ற ஆவலிம் இருந்தார்கள் அலி (ரலி) அவர்கள். வெறும் கையோடு வீடு வந்த மனைவியைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கணவர் அலி (ரலி) அவர்கள் என்ன நடந்தன என்று விசாரித்தார்கள். அங்கு நடந்ததை முழுமையாக பாத்திமா (ரலி) சொல்லி முடித்த போது.....பாத்துமாவே! நீங்கள் மகத்தான செல்வத்தை அல்லவா வாங்கி வந்துள்ளீர்கள்! ஆடுகள் இல்லாவிட்டாள் என்ன நீங்கள் துன்யாவை தேர்ந்தெருக்காமல் ஆஹிரத்தை தேர்ந்தெடுத்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று கூறி வாருங்கள் வந்த 5ந்து கலிமாக்களை ஓதுவோம் என்று மனைவியை அமரவைத்து ஐந்து கலிமாக்களை இருவரும் ஒத்த துவங்கினார்கள்.
படிப்பினை:
நீங்கள் எப்போழுது ஓதப்போகிறீர்கள்? மகளின் கஷ்டம் வறுமை நன்கு தெரிந்தும் மகளுக்கு அல்லாஹ்வின் மூலம் இரு சோதனை தந்தை என்ற ரீதியில் மனது எந்த அளவு பாடுபட்டு இருக்கும்? இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் தூதரல்லவா? சுவனத்து தலைவி என்ற சொல்லப்பட்ட பாத்திமா! எதை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை மிக உன்னிப்பாக நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் கவனித்து மகள் மறுமையை தேர்ந்தெடுத்தவுடன் அளவிலா மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இது நமக்கு பெரும் பாடமகும். அல்லாஹ்வின் பரீட்சையில் பாத்துமா(ரலி) குடும்பம் வெற்றி பெற்றது அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொண்டது நமக்கு பெரும் படிப்பினையாகும்., பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஏற்ப்பட்ட இந்த சோதனை இந்த காலப்பெண்களுக்கு ஏற்பட்டால் எதை தேர்ந்தெடுப்பார்கள்? அதை நான் எழுத தேவை இல்லை.கலிமாக்கள் கிடக்குது தந்தையே அதை நீங்கள் வைத்து ஓதுங்கள் முதலில் ஆடுகளை அவுத்து விடுங்க இல்லாவிட்டால் நான் அவுத்துக் கொண்டு போகிறேன் என்று மளமளவென ஆடுகளை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருப்பார்கள் இல்லால புதுமைப் பென்கள். இந்த சோதனையில் சுவனத்தின் தலைவி தான் என்பதை நிரூபித்து காட்டி விட்டார்கள் என தருமை இஸ்லாமிய பெண்களே இப்ப நீங்க எதைதேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? துன்யாவையா? ஆகிரத்தையா? நிரூபித்துக் காட்டுங்கள் பார்கலாம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக