"உம்மத்தா?பேரக் குழ்ந்தைகளா?"
ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் பேரக் குழ்ந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஹஸன் (ரலி) அவர்களுக்கு உதட்டுலும், ஹுஸைன்(ரலி) அவர்களுக்கு கழுத்திலும் முத்தம் கொடுத்தார்கள். பிறகு ஹஸன்(ரலி)அவர்கள் இந்த விஷயத்தை தாயார் பாத்திமா(ரலி) அவர்களிடம் வந்து இன்று பாட்டனார் அவர்கள் வழமைக்கு மாற்றமாக பாரபட்சமாக எங்களிருவருக்கும் முத்தமிட்டார்கள் ஏன்? என்று கேட்டார்கள்.
உடனே பாத்திமா(ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் வந்து அருமை தந்தையே! பேரர்கள் மத்தியில் முத்த விஷயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள்? பிள்ளைகள் கோபித்துக் கொண்டுள்ளார்கள். என்று கேட்டார்கள். அருமை மகளே! அதற்கு காரனத்தை நான் சொன்னால் உன் இதயம் தாங்காது என்றார்கள். எத்தனையோ துன்பங்களை தாங்கிவிட்டோம். இது பரவா இல்லை என்றார்கள் பாத்திமா(ரலி)அவர்கள்.
அருமை மகளே!இவர்கள் பெரியவர்களான பின் ஹஸன்(ரலி) நஞ்சூட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் வாயில் முத்தம் கொடுத்தேன். இளையவன் ஹுஸைன்(ரலி) கழுத்து வெட்டப்பட்டு இறப்பார். அதனால்தான் கழுத்தில் முத்தமிட்டேன். என்று விளக்கம் சொன்னார்கள். இச்செய்தியைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் வீரிட்டு அழுதார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்த்து என தருமை தந்தையே ஒவ்வொரு நபி மார்களுக்கு விஷேசமான துஆவை அல்லாஹ் தந்துள்ளானே. அந்த துஆவை பயன்படுத்தி உங்கள் பேரக் குழந்தைகளை இக் கொடிய ஆபத்திலிருந்து காப்பாற்ற கூடாதா? என்று கெஞ்சி கேட்டார்கள். என தருமை மகளே! அது என் உம்மத்துக்காக மறுமையில் கேட்க வைத்துள்ளேன். அதை என் பேரப் பிள்ளைகளுக்காக இங்கு கேட்க முடியாது என்று கூறினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக