25 பிப்ரவரி, 2010

"சுவனத்துப் பேரரசியின் இறப்பும் ஈடு செய்ய முடியாத இழப்பும்"
ஹிஜ்ரி11-ம் (கி.பி.633) வருடம் ரமலான் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலைபொழுது...பாத்திமா(ரலி) அவர்கள் தங்களின் அருமை புதல்வர்களான ஹஸன் ஹுஸைன்(ரலி) இருவரையும் அழைத்துக் கொண்டு தங்களின் அருமை தகப்பனார் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கப்ருக்குச் சென்றார்கள் கால்கள் தள்ளாடிய நிலையில் கனத்த இதயத்துடன் அங்கு போய் நின்றார்கள் கண்கள் குளமாகும் அளவுக்கு தேம்பி தேம்பி அழுதார்கள். நீண்ட நேரம் துஆ செய்தார்கள். பின்பு குழந்தை களோடு வீட்டிற்கு வந்தார்கள் பிள்ளைகளை அன்பு கணவர் அலி(ரலி) அவர்களிடன் சென்று இருங்கள் என்று கூறினார்கள்.
இதற்கு முன்பு தங்களின் அருமை கனவரிடம் அமைதியாக அமர்ந்து நான் இறந்த பிறகு நீங்கள் எனது மூத்த சகோதரி ஜெய்னபு(ரலி) அவர்களின் அருமை அனாதை மகள் உமாமாவை மறுமணம் புரிந்து கொள்ள வேண்டும் நான் மெளத்தானபின் என்னை இரவிலே நல்லடக்கம் செய்யுங்கள் என்னுடைய ஜனாஸாவின் மீது எந்த எஹூதியின் பார்வையும் பட்டுவிடக் கூடாது என்று வஸீயத் சொன்னார்கள்.
பிள்ளைகளை கனவரிடம் அனுப்பி விட்டு நன்கு குளித்தார்கள் பின்பு வந்து தூய்மையான உடைகளை அணிந்து கொண்டார்கள். அப்போது அஸ்மா(ரலி) அவர்கள் அங்கு இருந்தார்கள்.அவர்களை நோக்கி நான் இறந்து விட்டால் நீங்களும் அலியும் தான் என்னை குளிப்பாட்ட வேண்டும் வேறு யாரையும் உங்களுடன் சேர்த்துக் கொள்ளகூடாது என்று வஸீயத் சொன்னார்கள் இப்பொழுது இரவு நேரம் அஸ்மா(ரலி) அவர்களை நோக்கி இங்கிருந்து நீங்கள் சென்று விட வேண்டாம் என்று சொன்னார்கள். உடனே படுப்பதற்காக தங்களின் படுக்கையறைக்கு சென்று படுத்துக் கொண்டார்கள். அஸ்மா(ரலி) அவர்கள் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்தார்கள்.
சிறிது நேரம் சென்றபின் வெளியில் இருந்து கொண்டே.அறைக்குள் சென்ற பாத்திமா(ரலி) அவர்களை அழைதார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக