21 பிப்ரவரி, 2010

"பாத்திமா(ரலி) அவர்களின் சூடான பதில்"
ஹிதைய்பிய்யா உடன் படிக்கைக்கு பின் மக்கத்து குறைஷிகள் அடிக்கடி உடன்படிக்கையை மீறினார்கள். உண்டபடிக்கையை முறிக்கும் பல காரியங்களை செய்தார்கள் புனித பிரதேசங்களின் உள்ளேயே தாக்குதல் நடத்தினார்கள். ஒப்பந்தத்திற்கு பிறகும் பனீபக்கர்களின் சில மக்கள், குஸா அக்களின் பனீ-க அப் மக்களிடம் உண்டான பகைமையை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
குஸாக்கள் இது பற்றி சொல்ல மதினாவுக்கு சில தூதுவர்களை அனுப்பி வைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் நடந்த விஷயங்களை எடுத்துக் கூறி உதவி கேட்டு நின்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உதவி செய்ய வாக்குறுதி அளித்தார்கள்.
இந்த சம்பவங்களால் ஏற்படக் கூடிய விளைவுகளை நினைத்து பயந்த மக்கத்தினர் அபூஸுப்யானை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் தூது அனுப்பி இருந்தார்கள். அபூஸுப்யான் செல்லும் வழியில் குஸாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை சந்தித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். பயந்து போன அபூஸுப்யான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் வந்து ஓ முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் ஹுதைபியா உடன் படிக்கையின் போது நான் இருக்கவில்லை. இப்போது நாம் அதனை மேலும் உறுதி செய்வோம் அதன் காலத்தை நீட்டிக் கொள்வோம் என்றார்.
ஏன்? அதற்கு பங்கும் விளையும் வகையில் உங்கள் தரப்பில் ஏதும் நடந்து விட்டதா? என்று மட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். நிம்மதி இழந்த அபூஸுப்யான் இறைவன் மன்னிக்க வேண்டும் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவ்வாறே நாமும் ஹுதைய்பியாவில் நாம் ஒப்புக் கொண்ட காலம் வரையும் உடன் படிக்கை படியே நடப்போம் அதனை நாங்கள் மாற்றவும் மாட்டோம். அதனிடத்தில் வேறு ஒன்றை ஏற்கவும் மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் இனிகாரியம் ஆகாது நம் சார்பில் சிபாரிசு மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சென்று நம் கோரிக்கையை வாங்கலாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை மனைவியும் அபூஸுப்யானின் இளைய மகளுமான உம்முஹபீபா(ரலி) அவர்களிடம் அபூபக்கர்(ரலி) இன்னும் ப சஹாபாக்களையும் பிறகு அலி(ரலி) அவர்களிடமும் சென்று யாரும் முன் வராதடால் கடைசியால் பாத்திமா(ரலி) அவர்களிடம் வந்தார். பாத்திமா(ரலி) அவர்கள் அபூஸுப்யானை வரவேற்றார்கள். அபூஸுப்யான் அமர்ந்தார் அப்போது பாத்திமா(ரலி) அவர்களின் முன் சிறுவர் ஹஸன்(ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். முஹம்மதின் அருமை மகளே! மனிதர்களுள் ஒருவருக்கொருவரிடையே பாதுகாப்பு உறுதி ஒன்றைதான் அளிப்பதாக கூறும் படி உம் மகனிடம் சொல்லும். அதன் மூலம் உமது மகன் அரபிகள் அனைவருக்கும் நிரந்தரமான தலைவராக உருவாக முடியும் என்று தந்திரமாக பேசி பாத்திமா(ரலி) அவர்களை பணிய வைக்க முன்வந்தார்.
அபூஸுப்யானின் சூழ்ச்சி பாத்திமா(ரலி) அவர்களுக்கு புரியாத என்ன? பாத்திமா(ரலி) என்ன சளைத்தவர்களா? அபூஸுப்யானுக்கு சுடச்சுட அழகான பதிலளித்தார்கள்.அபூஸுப்யான் அவர்களே! சிறுவர்களுக்கு பாதுகாப்புறுதி வழங்குவதில்லை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் என்றார்கள் அபூஸுப்யான் வாயடைத்துப் போனார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக