"தந்தை மகளின் துயர நிலை"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஆய்ஷா(ரலி) அவர்கள் வீட்டில் ஏறத்தாழப் பத்து நாட்கள் காய்ச்சலின் வேகம் நீடித்திருந்தது. பாத்திமா(ரலி) அவர்கள் தனது அருமை தந்தையின் நிலை கண்டு கண்ணீர் விட்டழுதார்கள்.
நோயின் வேகத்தால் சில நேரம் ஒரு காலை நீட்டுவார்கள். மற்றொரு காலை மடக்குவார்கள். ஒரு சமயம் நோயின் கடுமையால் மயக்கம் அடைந்தார்கள் பாத்திமா(ரலி) அவர்கள் தனது அருமை தந்தையை அனைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதார்கள் எனது தந்தையின் கஷ்டமே என்ரு சொன்னார்கள். உடனே கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அருமை மகளே! உமது தந்தைக்கு இன்றைக்குப் பிறகு கஷ்டமே இருக்காது. வெறும் தப்பிக்க முடியாத ஒரு நிலைமை உமது தந்தைக்கு இப்போது வருகிறது இனிமே மறு உலகில் சந்திப்பு ஏற்படும் மகளே! அழ வேண்டாம் நான் இவ்வுலகத்தை விட்டு சென்ற பிறகு இன்னாலில்லாஹு வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறுவாயாக! ஏனெனில் இந்த வாசகத்தில் மனிதனுடைய துன்பங்களுக்கெல்லாம் மருந்து இருக்கிறது என்று சொன்னார்கள். இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழுதார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக