24 பிப்ரவரி, 2010

"பாத்திமாவே! என் உம்மத்திற்காக"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அந்திம நேரம் இறப்பின் பிடியில் கருனையே உருவான காத்தமுன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பீடிக்கப்பட்டிருந்தார்கள், பாத்திமா(ரலி) அவர்காள் தங்களின் பிரிய தந்தையைப் பார்க்க வந்தார்கள். கண்களில் கண்ணீர் கொட்டிய வண்ணம் அருமை தந்தை முன் வந்து நின்றார்கள். அப்போது ஆசையாய் வளர்த்த அருமை மகளைப் பார்க்காமல் வேறு பக்கம் தங்களின் முபாரக்கான முகத்தை திருப்பிக் கொண்டார்கள். மீண்டும் பாத்திமா(ரலி) அவர்கள் அந்த பக்கம் சென்று கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை பார்த்து பேச அழுது கொண்டு சென்றார்கள். இதையறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் முகத்தை இந்த பக்கம் திரும்பிக் கொண்டார்கள். பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை கடைசி நேரத்தில் என் முகத்தை கூட பார்க்காமல் திரும்பிக் கொள்கின்றார்களே ஏன்? என்று குழம்பிப் போய் பதறினார்கள். அப்போது கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் முகத்தை திரும்பிக் கொண்டே தங்களின் அன்பு மகளாரைப் பார்த்து. எந்தன்பு மகளே! இப்போது நான் என் உம்மத்தின் சிந்தனையில் இருக்கிறேன். நாளை என் உம்மத்தின் நிலை என்னவாகுமோ என்ற கவலையில் உள்ளேன். எனவே! அன்பு மகளே! நான் என் உம்மத்தின் சிந்தனையிலேயே கடைசியாக எனது ரப்பை சந்திக்கப் பிரியப்படுகிறேன் என்று கூறினார்கள். பிறகு அஸ்ஸலாத்தி யா உம்மத்தீ அஸ்ஸலாத்தியா உம்மத்தி அல்லாஹ்வாகிய உயர்ந்த தோழனுடன் என்று தாழ்ந்த குரலில் கூறினார்கள். மூன்று முறை முபாரக்கான பொற்கரம் பக்கத்தில் சாய்ந்தது. அவர்களின் ஒளிமையமான கன்கள் வானின் பக்கமாக பார்த்து அப்படியே நின்றது அதன்பின் முபாரக்கான கண்ணியமாக ஆன்மா அவர்களின் தூய உடம்பை விட்டு பிரிந்து சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக