18 பிப்ரவரி, 2010

"கணவரை அமைதிப்படுத்திய பாத்திமா(ரலி)"
கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜை செய்ய மக்காவுக்குப் புறப்படத் தயாரானார்கள். இச்செய்தி பல ஊர்களுக்கு தெரிய வந்தது. லட்சக் கணக்கில் மக்கள் ஹஜ் செய்ய முன் வந்தர்கள். பாத்திமா(ரலி) அவர்களையும் தங்கள் பயணத்தில் அழைத்துச் சென்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களோடு அவர்களின் ஒன்பது மனைவிமார்களும் சென்றார்கள். அப்போது பாத்திமா(ரலி) அவர்களின் உத்திரவுப்படி எமன் நாட்டிற்கு அல்லாஹ்வின் பாதையில் சென்றார்கள், அவர்களையும் ஹஜ்ஜுக்கு வந்து சேர்ந்து கொள்ளும் படி உத்திரவிட்டிருந்தார்கள்.
ஹஜ்ஜுக்கு சென்றவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கட்டலையிட்டார்கள். பாத்திமா(ரலி) அவர்களுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மனைவிமார்களுக்கும் குர்பானி கொடுக்க பிராணிகள் இல்லை. எனவே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எவரிடம் குர்பானி பிராணிகள் இல்லையோ அவர்கள் இஹ்ரானை களைத்து விட்டு ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு ஹஜ்ஜுக் காலத்தில் மறுபடியும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றார்கள். இதைக் கேட்டவுடன் பாத்திமா(ரலி) அவர்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மனைவியரும் இஹ்ராம் உடையை களைந்து விட்டு கலர் துணிகளை அணிந்து கொண்டார்கள். இச்சமயத்தில் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அதிகமான பொருட்கள். ஆடைகள், ஒட்டங்களுடன் மக்காவுக்கு வந்தார்கள் தங்களின் அருமை மனைவி வர்ணமுள்ள வண்ண ஆடைகளை அணிந்திருப்பதை பார்த்து கோபம் கொண்டார்கள். இந்த ஆடைகள் தனது மனைவியின் உடலில் இருப்பது பிடிக்கவில்லை. உடனே மனைவியிடம் காரணம் கேட்டார்கள். அதற்கு பாத்திமா(ரலி) அவர்கள் மிக அமைதியாக கணவரின் நிலை அறிந்து எனதன்பு கணவரே இந்த வண்ண ஆடைகளை நான் எனது இஷ்டப்படி அணியவில்லை. உங்கள் அருமை மாமனார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தான் உத்திரவிட்டார்கள் என நடந்த விஷயத்தை விளக்கி கணவரிடம் சொன்னார்கள். இதை கேட்டபிந்தான் அலி(ரலி) அவர்கள் அமைதியானார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக