14 பிப்ரவரி, 2010

"பாத்திமா (ரலி) வீட்டில் ஒரு கராமத்"

ஒரு சமயம் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பல நாட்களாக சாப்பிடாததால் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். பசியின் கொடுமை தாங்க முடியாமல் தனது மனைவிமார்கள் வீடுகள் அனைத்திருக்கும் சென்று பார்த்தார்கள். அத்தனை பேர்களிடமும் வீட்டில் ஒன்றுமில்லை. உடனே தனது அருமை மகள் பாத்திமா (ரலி) நானமாக வந்து, மகள் வீட்டிற்கு வந்தார்கள்.
அருமை மகளே! நான் பசியோடு இருக்கிறேன் சாப்பிடுவதற்கு ஏதேனும் இருக்கிறதா?எண்று கேட்டார்கள். என் வீட்டிலும் ஒன்றுமில்லையே தந்தையே என்று மிகவும் கவலையடைந்த பாத்திமா(ரலி) தெரிவிக்க அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் விடைபெற்று சென்றுவிட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சிறிது நேரத்தில் அண்டை வீட்டுப் பெண்மணி ஒருவர் இரண்டு ரொட்டிகளையு. சிறிது இரச்சியையும் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
உணவை பார்த்த பாத்திமா(ரலி) அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உடனே உணவை வாங்கி வைத்து விட்டு தங்களின் அருமை மகன் ஹஸனை (ரலி)யை அழைத்து நீங்க உடனே உங்க பாட்டனாரை நம் வீட்டுக்கு அழைத்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.
சிறுவர் ஹஸன்(ரலி) அவர்கள் ஓடோடி சென்று தனது அருமை பாட்டனாரை கையோடு வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். தந்தையை வரவேற்று எனதருமை தந்தையே அல்லாஹ் சிறிது உணவை கொடுத்திருக்கிறான் அதை தாங்களுக்காகவே வைத்துள்ளேன் சாப்பிடுங்கள் தந்தையே என்று உணவை எடுத்து முன் வைத்தார்கள் மகிழ்ச்சி பொங்க அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூடி இருந்த உணவு தட்டை திறந்துப் பார்த்தார்கள்.என்ன ஆச்சரியம்? தட்டு நிரைய ரொட்டியும் இறச்சியும் இருந்தது.
உடனே தனது அருமை மகளை நோக்கி, இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என கேட்டார்கள். அதற்கு இது அல்லாஹ்விடம் இருந்து கிடைத்தது. அல்லாஹ் தான் விரும்புகின்றவர்களுக்கு கணக்கின்றி வழ்ங்குவான் என்று பாத்திமா(ரலி) அவர்கள் சொன்னார்கள்.இவ்வார்த்தைகளைக் கேட்ட கண்மனி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கல்"இஸ்ரவேலர்களின் பெண்குலத் தலைவியைப்(மர்யம் அலை) போல ஆக்கிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்" என்று அல்லாஹ்வை போற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக