21 பிப்ரவரி, 2010

"பெண்கள் அணியிம் நகைகள்???"
ஒரு சமயம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மஸ்ஜித் நபவியிலிருந்து வெளியே வந்தார்கள் அப்போது ஒரு ஏழை மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்த்து. அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டார். அந்த சமயத்தில் தன்னிடம் ஏதும் இல்லை என உணர்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அவ்வேளை மனிதரின் மீது இரக்கம் கொண்டவர்களாக ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை அழைத்து இந்த ஏழை மனிதரை எனது அருமை மகள் பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அழைத்து போங்கள் அவர்கள் ஏதாவது உதவி செய்வார்கள் என கூறினார்கள்.
ஹஜ்ரத் பிலால்(ரலி) அவர்கள் அவ்வேழை மனிதரை பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விபரத்தைச் சொன்னார்கள்.
அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் வீட்டின் நிலவரம் மிக வறுமையில் வாடி இருந்தது. மூண்று நாட்களாக பாத்திமா(ரலி) அவர்கள் பட்டினியோடு இருந்த சமயம் அது அல்லாஹ்வின் தூதர் ஒரு ஏழைமனிதரை அனுப்பி விட்டார்கள் அவரை வெறும் கையோடு அனுப்பிட விடக்கூடாது என்று நினைத்த பாத்திமா(ரலி) அவர்கள் அவ்வேழை மனிதரிடம் தற்சமயம் போர்த்திக் கொள்ள ஒரு போர்வைதான் இருக்கிறது அதை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி கொடுத்தார்கள்.
போர்வையை வாங்கி கொண்ட ஏழைமனிதர் அம்மா? இந்த போர்வையை குளிருக்கு போர்த்துக் கொள்வேன் வயிற்றை பாடாய்ப்படுத்தும் பசியை போர்த்த நான் என்ன செய்வேன்? என்ர்று சொன்னார்கள்.
இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்களின் உள்ளம் வேதனை அடைந்தது உடனே வீட்டுக்குள் சென்று தங்களின் அருமை தாயார் உம்முஹாத்துல் முஃமினின் கதிஜா(ரலி) அவர்களின் பாரம்பரியமிக்க நினைவுச் சின்னமாக மீதி இருந்த அந்த ஒரே ஒரு கழுத்து நகை அதை எடுத்து வந்தார்கள். நகையை ஏழை மனிதரிடம் கொடுத்து இந்த நகையை விற்று உங்களின் பசி போக்கி கொள்ளுங்கள் என்று சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக