கேள்வி : மக்காவிற்குப் படைகளை கூட்டிச் செல்ல வழிகாட்டியாக இருந்தது யார்?
பதில் : தகீபு கோத்திரத்தின் தலைவன் அபுரிகால் என்பவனைப் படைக்கு வழிகாட்டுவதற்காக நியமித்தான். இவன் வழியிலேயே இறந்து போனான்.இறந்த இடத்திலேயே அடக்கம் செய்தார்கள் எமன் தேசத்திலிருந்து வரும் ஹாஜிகள் இவன் சமாதியைப் பார்த்தவுடன் கல்லால் அடித்து விட்டுத்தான் வருவார்கள்,
கேள்வி : அப்ரயாவின் படையெடுப்பைப் பார்த்த அரபு கோத்திரத்தார் என்ன செய்தார்கள்?
பதில் : புனித கஃபாவை இடிப்பதற்காக அப்ரஹா படையெடுத்து வருவதை அறிந்த அரபு கோத்திரத்தார் பலர் அப்ரஹாவின் படைகளை வழிமறித்து எதிர்த்தனர் முறைப்படி சண்டைப் பயிற்சி பெறாத அரபு கோத்திரத்தார் தோல்வியடைந்து சிதறடிக்கப்பட்டார்கள். ஆனால் தாயிப் நகரமக்கள்.அப்ரஹாவுடன் ஒத்துழைத்து அவனுக்கு வழி காட்டுதற்காக ஒரு நபரையும் அனுப்பி வைத்தார்கள்.
கேள்வி : மக்கத்து மக்களின் மனநிலையை அறிய யாரை வேவு பார்க்க அனுப்பி வைத்தான்?
பதில் : மக்கத்து மக்களின் மனநிலையை அறிய அல் அஸ்வதுப்னு மக்ஸுத் என்ற அபிசீனியரின் தலைமையில் சிலரை வேவு பார்க்க அனுப்பி வைத்தான்.
கேள்வி : வேவு பார்க்கச் சென்றவர்கள் என்ன செய்தார்கள்.?
பதில் : மக்காவிற்கு அருகாமையில் மேய்ந்து கொண்டிருந்த அப்துல் முத்தலிபின் ஒட்டகங்களையும் மற்றவர்களின் கால்நடைகளையும் ஒட்டிக் கொண்டு சென்று விட்டனர்.
கேள்வி : அப்ரஹாவின் கஃபாவைப் பற்றி இடையில் தோன்றிய நல்லென்னம் யாது?
பதில் : மக்கத்து மக்கள் யாராவது வந்து தன்னிடத்தில் மிகத் தயவோடு கேட்டுக் கொண்டால் மக்காவை நாசப் படுத்தாமல் சென்று விடலாம் என்று என்னிய அப்ரஹா ஹுனாதத்துல் ஹிம்யரீ என்பவரைத் திருமக்கா விற்கு தூது அனுப்பினான்.
தூதின் விபரம் : 1 அரசப் பிரதிநிதியான அப்ரஹா தங்களோடு சண்டைக்கு வரவில்லை கஃபாவை இடிப்பதற்காகத்தான் வந்திருப்பதாகவும் அவர்களின் தலைவர் எவரையேனும் பேச்சு வார்த்தைகளுக்காகத் தன்னிடம் அனுப்பும் படியும் தூதனுப்பினான். இந்தச் செய்தியானது அப்போது கஃபாவின் முத்தவல்லியாக இருந்த அப்துல் முத்தலிபுக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் தெரிவிக்கப்பட்டது.
கேள்வி : செய்தி அறிந்த அப்துல் முத்தலிபு எடுத்த நடவடிக்கை என்ன?
பதில் : அப்துல் முத்தலிபு ஹாஷிம் குடும்பத்தார் சிலரை தம்மோடு அழைத்துக் கொண்டு அப்ரஹாவைப் பார்க்கச் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக