3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சிர்ரப்பு
கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் எப்பொழுது எந்த நாட்டில் எங்கு பிறந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அரபு நாட்டில் மக்காவில் யானைச் சண்டை நடந்த வருடம் ரபீஉல் அவ்வல் மாதம் 12ஆம் தேதி அதாவது கி.பி.570 வருடம் ஆகஸ்ட் மாதம் திங்கட்கிழமை (20 ஆம் தேதி) அதிகாலையில் பிறந்தார்கள்.
கேள்வி : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மக்காவிலே எந்த இடத்தில் பிறந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மக்காவிலே எந்த இடத்தில் பிறந்தார்கள்?
பதில் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஸூகுல்லைல் (மாலைக் கடைவீதி) என்ற கடைத் தெருவில் (பிற்காலத்தில் ஹஜ்ஜாஜுப்னு யூசுபின் சகோதரர்)முஹம்மதிப்னு யூசுப் வீடு என்ற யாவராலும் அழைக்கப்பட்டு வந்த வீட்டில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்தார்கள் இந்த வீடு நபிகள் பெருமானாரின் பாட்டனார் அப்துல் முத்தலிபுக்கு உரிமையான வீடாக இருந்தது. அப்புறம் அபூதாலிப் அவர்களும் அவர்களுக்குப் பின்னர் அவருடைய மகன் அகீலும்(உகைலும்) சொந்தமாக்கிக் கொண்டார்கள். இந்த வீட்டை அப்பாஸிய கலீபாக்களான ஹாதி, ஹாரூன் ரஷீத் ஆகியோரின் தாயாரான கைஜுரான் என்பவர் அதிகப் பணம் கொடுத்து வாங்கி மஸ்ஜிதாக மாற்றினார்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வர்ரஹ்) உங்கள் தளத்தை நான் தினமும் பார்கிறேன்.. .மாஷா அல்லாஹ் .... .தெரியாத நிறைய விஷயங்களை நான் இதன் மூலம் தெரிந்து கொண்டேன் .
பதிலளிநீக்கு