8 டிசம்பர், 2012


சொர்க்கம் சேர்க்கும் செயல் 
அபூதர்ருல் கிபாரீ (ரலி) நாயகம் சல்லல்லாஹு அலைகிவசல்லாம் அவர்களை நோக்கி எங்கள் நாயகமே! என்னை சொர்க்கத்தை நெருங்க செய்வது நரகத்தை விட்டு தூரப்படுத்துவதுமான ஒரு புண்ணியத்தை எனக்கு தெரிவிக்கவேண்டும். அதற்கு அன்னார் ஒரு பாவத்தை நீ செய்வீராயின் அதற்கு பின்னாலேயே ஒரு புண்ணியத்தை செய்துவிடுவீராக என்று அன்னார் கூறினார்.லாயிலாஹா இல்லல்லாஹு என்று சொல்வது புண்ணியத்தை சேர்ந்ததா என்று வினவினார். ஆம் அது புண்ணியங்களில் நேர்த்தியானது என்று அன்னார் பதில் கூறினார்.

கலிமா கறை சேர்க்கும் 

ஒருவர் ஹஜ்ஜுடைய காலத்தில் அரபாத் மைதானத்தில் தங்கினார். அவர் கையில் ஏழு கற்கள் இருந்தன. அவைகளை நோக்கி அவர் நான் லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று உறுதிமொழி கூறியதற்கு நீங்கள் என் இறைவனிடம் சாட்சியாக இருங்கள் என கூறினார். அன்றிரவு அவர் துன்கிகொண்டிருக்கும் போது கனவு ஒன்று கண்டார். அந்தக் கனவில் நியாய தீர்ப்புநாள் வந்து விட்டது.அவர் விசாரிக்கப்பட்டார்.அவர் மீது நரக தண்டனை விதிக்கப்பட்டது. அவரை மலக்குகள் இழுத்துக் கொண்டு நரக வாயிலை அடைந்தனர்.அப்பொழுது அந்த ஏழு கற்களில் ஒன்று வந்து நரகத்தின் வாயிலை அடைத்துக் கொண்டது. மலக்குகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை அகற்ற முயன்றும் அது அசையக்கூட இல்லை. அதனை விட்டு விட்டு வேறொரு நரகத்திற்கு அவரை கொண்டு போனார்கள். அதன் வாயிலையும் அக்கற்களில் ஒன்று அடைத்து நிற்கக் கண்டு அதை அகற்ற முயன்றார்கள்.அவர்களால். அதை அசைக்கக்கூட முடியவில்லை இவ்வாறே அவர்கள் ஏழு நரங்ககளுக்கும் அவரை இழுத்து செல்ல அவை அனைத்தையும் அந்த ஏழு கற்களும் அடைத்து நிற்க கண்டார்.பின்னர் அவரை அர்ஷின் அடியிற் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு ஆண்டவனே உனது இந்த அடிமையின் கருமத்தை நீயே நன்கறிவாய். இவரை நரகம் கொண்டு போய் சேர்க்க எங்களால் இயலவில்லை என்று விண்ணப்பித்தனர்.
அப்பொழுது ஆண்டவன் அந்த அடியரை நோக்கி எனது அடிமையே நீ சில கலிமாவை சொன்னதற்கு சில கற்களை சாட்சி வைத்தாய் அவர் உனக்குள்ள உரிமைக்குப் பங்கம் செய்யவில்லை.எனில் நான் எவ்வாறு உன் உரிமைக்குப் பங்கம் செய்வேன். நீ கலிமாவை சொன்னதற்கு நானே சாட்சி என்று கூறிவிட்டு மலக்குகளே.இந்த அடியானை சுவனபதி சேர்த்து வையுங்கள் எனக் கட்டளையிட்டார். அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு சுவனபதி நோக்கி நடந்தனர் அங்கு போய் பார்க்கும் போது அதன் வாயில்கள் அனைத்தும் அடைக்கப்படிருந்தன  அப்பொழுது அந்த ஷஹாதத்துக் கலிமா வந்து அந்த வாயில்கள் அனைத்தையும் திறந்து விட அவர் உள்ளே நுழைந்தார். இவ்வாறு கண்டு கண் விழித்த அவர் தன ஆயுள் முழுதும் அக்கலிமாவை விடாது ஓதி வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக