10 டிசம்பர், 2012


பாவத்திற்கு பரிகாரம் புண்ணியமே 

நாட்டுப் புறத்தார் ஒருவர் நாயகம் சல்லல்லாஹு அலைகிவசல்லாம் அவர்களிடம் வந்து பெருபாவங்கள் செய்யாதவர்களுக்கு ஒரு ஜும்ஆத் தொழுகை மற்றும் மற்றொரு ஜும்ஆத் தொழுகை வரையிலும் ஒரு நேரத்துத் தொழுகை மற்றொரு நேரத்தொழுகை வரையிலும் தண்ட குற்றமாக இருந்து அவர்கள் செய்யும் சிபாவங்க்களை அழித்துவிடும் எனத் தாங்கள் கூறியதாக எனக்கு செய்தி கிடைத்திருக்கிறதே என்றார். அதற்கு அன்னார் ஆம் அது மட்டுமல்ல, வெள்ளிக்கிழமை அன்று குளிப்பதும் ஒரு தண்ட குற்றம். ஜும்ஆத் தொழுகைக்காக பள்ளிக்கு நடந்து செல்வதும் ஒரு தண்ட குற்றம். அதற்காக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு காலடியும் இருபது ஆண்டு வணக்கத்திற்கு சமமாகும். தொழுகை முடிந்து விட்டதாயின் தொழுதவர் ஒவ்வொருவருக்கும் இருநூறாண்டு வணக்கத்தின் பலன் அளிக்கப்படுகிறது என்று கூறினர்.

சையுதினா அபூபக்கர் கண்ட கனவு 

இந்த நபிமொழியை அறிவித்தவர் சையுதினா அபூபக்கர் (ரலி) ஆவர். அன்னார் இஸ்லாத்திற்கு முந்திய மௌட்டிய காலத்தில் ஒரு வர்த்தகராக இருந்தனர். அன்னார் வியாபாரத்திற்காக சிரியா சென்றிந்தபோது ஓரிரவு நித்திரையில் சந்திரனும் சூரியனும் தம் மடியில் அமர்ந்திருப்பது போலவும் அவை இரண்டையும் அன்னார் தமது கரத்தால் எடுத்து தமது மார்போடு அணைத்துக்கொண்டு அவைகளின் மீது தமது அங்கவஸ்த்திரத்தை போர்த்தியது போலவும் கனவு கண்டனர். காலையில் கண்விழித்து அதன் பொருளை தெரிந்து கொள்வதற்காக கிறிஸ்த்தவ மேதை ஒருவரை அணுகித் தாம் கண்ட சொப்பனத்தை அவரிடம் கூறி அதற்குப் பொருள் கூறுமாறு வேண்டிக்கொண்டனர். அப்பொழுது அந்த மேதை நீர் எந்த ஊர்வாசி என வினவ நான் மக்காவாசி என அன்னார் பதில்கூரினார். நீர் எந்தக் கிளையார சேர்ந்தவர் என அவர் கேட்க நான் பனீ த்தய்மு  கிளையாரை சேர்ந்தவர் என அன்னார் பதிலளித்தார். உமது தொழிலென்ன? என அவர் வினவினார். அன்னார் வர்த்தகம் என்று கூறினார்.

இத்தனை கேள்விபதில்களுக்கு பிறகு அந்த மேதை அன்னாரை நோக்கி விரைவில் உமது காலத்திலேயே ஹாசிமிக் கிளையை சேர்ந்த ஒருவர் தோன்றுவார். அவர் திருநாமம் முஹம்மது அமீன் சல்லல்லாஹு அலைகிவசல்லாம். அவரே இந்தக் கடைசிகால நபி அவரை அல்லாஹ் தஆலா படைக்க நாடி இருக்கவில்லையாயின் வானம் பூமிகளையும் அவர்களிர்கானப்படுபவைகளையும் ஆதம் நபி (அலை) முதல் இதர நபிமார்களையும் அவன் படத்திருக்கமாட்டான் அவர் நபிமார்கள் அனைவருக்கும் நாயகமாகவும் கடைசி கால நபியாகவும் விளங்குவார். நீர் அவர் காட்டித்தரும் இஸ்லாம் மத்தத்தை தழுவி அவருக்கு மதிமந்திரியாக இருந்து அவருக்குப்பின் அவருடைய பிரதிநிதியாக விளங்குவீர். இதுவே நீ கண்ட கனவுன் பொருள் என்று கூறிவிட்டு நான் அவருடைய மகிமையையும் கீர்த்தியையும் தவ்ராத்திலும் இன்ஜீலிலும் சபூரிலும் கண்டு அவர் மீது விசுவாசம் கொண்டு இஸ்லாத்தை தழுவிக் கொண்டேன். எனினும் எனது இனத்தவரான கிரஸ்தவர்களை அஞ்சி எனது இஸ்லாத்தை மறைத்து வைத்திருக்கிறேன் என்றார்.

சையுதினா அபூபக்கர் (ரலி) அவர்கள் அம்மேதையின் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் அன்னாருடைய மனம் ஒருவித உணர்ச்சியால் நெகிழ்ந்தது. நாயகம்  சல்லல்லாஹு அலைகிவசல்லாம் அவர்களை தரிசிக்கவேண்டும் என்ற அவர் அன்னாரின் உள்ளத்தை வாட்டியது. உடனே பயணப்பட்டு மக்கா வந்து அன்னாரை தேடித் தரிசித்துக் தம் ஆவலைத் தீர்த்துக் கொண்டனர்.அன்று முதல் அன்னாரின் திருவதனத்தைத் தரிசிக்காது ஒரு மணி நேரம் இருக்க அன்னாரால் முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக