அல்லாஹ்வின் தூதர் கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் தங்களின் மனைவி மார்களிடம் கோபித்து கொண்டு ஒரு மாத காலம் அவர்களிடம் எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை என்று முடிவு செய்து கொண்டு அவர்களை விட்டும் விலகி தனிமையில் இருக்க துவங்கி விட்டார்கள்.
இச் செய்தி காட்டு தீ போல எங்கும் பரவியது. மதினவே கொந்தளித்து போயின. கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் தங்களின் மனைவியர்களை ஒட்டு மொத்தமாக தளக் சொல்லிவிட்டார்கள் என்ற வதந்தியும் மிக வேகமாக கிளம்பியது.
இதை ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகவும் மன வேதனை பட்டு கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களை பார்த்து வர சென்றார்கள். முறையாக அனுமதி வாங்கி உள்ளே சென்றார்கள். கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். பிறகு அவர்களை நோக்கி யாரசுலல்லாஹ்! தங்கள் தங்களின் மனைவிமார்களை தலாக் சொல்லி விட்டீர்களா? என்று கேட்டார்கள். இல்லை என்று கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் கூறினார்கள்.
உடனியா அவர்கள்.கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால் கீல் கண்ட முறையில் நகைச்சுவை சில விசயங்களை சொன்னார்கள்.
அல்லாவின் தூதரே! நான் சொல்வதை கொஞ்சம் கேட்டால் நன்றாக இருக்கும் குறைசிகளான நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்து இருந்தோம். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த மதினா வாசிகளிடம் வந்த பொது மதினா பெண்களிடம் எங்கள் பெண்கள் அவர்கள் குணத்தை கற்று கொண்டு எங்களை மிகைக்கத் திவங்கிவிட்டார்கள். yaarasolallaah ! என் விட்டில் நடந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? என் மனைவி என்னிடம் சிலவுக்கு கூடுதலாய் பணம் கேட்டு நச்சரித்தாள் உடனே நான் அவளது கழுத்தில் ஒரு போடு போட்டேன் பாருங்கள் என்று நகைச்சுவையாக சொன்னார்கள் இதை கேட்ட கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள்.
அது மட்டுமா யாரஷுலல்லாஹ்! ஹப்ஷவிடம் சென்று உன் அண்டை வீட்டுக் காரர் ஆயிஷா ரலி உன்னை விட அழகானவராகவும், அல்லாஹ்வின் தூதருக்கு பிரியமனவரகவும், இருப்பதை வைத்து அவர் கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்களிடம் அதிகம் உரிமை எடுப்பதை நீ ஏமாந்து போய்விடாதே! என்று கூறினேன்.
என்று சொன்னார்கள். மீண்டும் கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் புன்னகை பூத்த முகத்தோடு சிரித்தார்கள்.அவர்கள் சிரிப்பதைப் பார்த்தும் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். கண்மணி நபி சல்லல்லாஹு அலைஹிவ சல்லம் அவர்கள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக