2 ஆகஸ்ட், 2012

துளிகளாய்த் தோன்றும் கடல்கள்!

எது பணிவு?

ஒரு நாள் நான்,பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன்!
மகான் ஒருவரும்,,சீடர்களும் ஏறி வந்தனர்!
ஞானகுரு ,,அருகில் ,,ஆளுக்கொரு பக்கத்தில் சீடர்கள் அமர்ந்து கொண்டனர்!
ஒரே ஒரு சீடர் நின்று கொண்டிருந்தார்!
அந்த குருவுக்கு,முனனால் உள்ள இருக்கை காலியாய் இருந்தது!
குருவுக்கு முனனால் அமர்வது ,,பணிவற்ற செயல் என்பதால்,அவர் அமரவில்லை போலும்?
காலியாய் இருக்கும் இருக்கையை காட்டி,பலரும் அமர சொல்லி,,வற்ப்புருத்தியும்,,,,அவர் அமரவே இல்லை!
கடைசியில்,,அந்த ஞானகுருவே,,அவரை அந்த இருக்கையில் அமருமாறு சொல்லியும்,,,அவர் புன்னகைத்து விட்டு நெளிந்தவாறு நின்று கொண்டிருந்தாரே தவிர,கடைசி வரை அமரவே இல்லை!
மற்ற சீடர்கள் எல்லாம் ,இறங்கிப் போகும் போது அவரை பாராட்டித் தள்ளி விட்டனர்!
காரணம்,நின்று கொண்டே வரும் சிரமத்தை ,,ஏற்றாலும்,,அவர் குருவுக்கு முனனால் அமர்வதை தவிர்த்து பணிவை காப்பாற்றி விட்டாராம்!

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை!
குருவுக்கு முனனால் அமர்வதை தவிர்த்தாரே,அது பணிவா?
அல்லது,
ஞானகுரு அமரச்சொல்லியும்,,அவர் பேச்சை ஏற்காமல்,தவிர்த்தாரே, அது பணிவா?
எது பணிவு?
அவர் முனனால் அமர்வது பணிவற்ற செயல் தான் ,என்றாலும்,
அவர் பேச்சைக் கேட்க்காமல் தவிர்ப்பது எப்படி பணிவில் சேர்த்தியாகும்?
குரு ஒருவர் ,"இதை செய்து முடி" என்று சொன்னால்,,"இதோ" என்று செயலில் இறங்குவது அல்லவா பணிவு?

உட்க்கார சொல்லியும் கேட்க்காமல்,,தாம் பணிவினைக் கடைப்பிடித்து வருவதாக,தவறுதலாக எண்ணி,செயல் புரியும் இச்செயலா?பணிவு?
நான்கு பேர்களுக்கு முனனால்,குருநாதரின் பேச்சைத் தட்டி விட்டு,பாராட்டு பெறுவதா பக்தி?

ஆன்மீக பெரியவர்,ஒருவரிடம்,எப்போதும் கூடவே,ஒரு மிக பணிவான சீடர் இருந்தார்!
குரு இட்ட கட்டளையை,சிரமேற்க்கொண்டு,,நிறைவேற்றி வந்தார்!
செய் என்று,சொல்வதுர்க்குள்,l ,செய்து முடித்து விட்டிருப்பார்!
ஒரு நாள்,குரு ஏதோ கட்டளை இட்டதை,அவர் ஏடாகூடமாக முடித்து விட்ட படியால்,கோபம் கொண்ட குரு,
அவரை சினந்து,,இனி அவர் கண்ணெதிரே விழிக்கவே கூடாது என்று ,விரட்டி விட்டார்!
பக்தியில் மூழ்கி விட்டிருந்த சீடர்,குருநாதரின்,அந்த கோப வார்த்தைகளையும் மீற முடியாமல்,
குருவைப்,பார்க்காமல் இருக்கவும் முடியாமல்,
ஒரு தந்திரத்தை மேற்கொண்டார்!
குரு கண் முனனால் தானே வர கூடாது?
மறைந்திருந்து குருவை பார்ப்பதில் தவறு இல்லை அல்லவா?
என்று நினைத்து,
குரு பார்க்காமல் ,,பின் தொடர்ந்து சென்று கொள்வதை பழக்கமாக்கினார்!
ஒரு நாள்,பலத்த மழை,

குருநாதருக்கு,தெரியாமல்,i அந்த சீடர் ,கூரையின் மேல் ஏறிக்கொண்டு,,மழையில்,நனைந்தவாறே,
குருநாதரை கண்காணித்து,வரலானார்!
கூரை ஒழுகிக் கொண்டிருந்தது!
குருநாதர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்!
அந்த ஒழுகளைப் பார்த்த குருநாதர் ,,
அந்த சீடரின் பெயரைச் சொல்லி,
"இந்நேரம் அவர் இருந்திருந்தால்,,இந்த கூரையை சரிப்படுத்தி, விட்டிருப்பாரே!"
என்று தற்ச்செயலாக தம் மனைவியிடம் கூறலானார்!
அவ்வளவுதான்,,
மேலே கூரையில்,நின்றவாறு,எல்லாம் கேட்டு,கொண்டிருந்த,அந்த சீடர்,அப்படியே கூரையிலிருந்து,,குருநாதரின் முன்னால் குதித்து,
,"என்னை அழைத்தீர்களா குருநாதா?"
என்றார்!
அவருடைய,அந்த பக்தியையும்,அன்பையும்,கண்ட குருநாதர்,
அப்படியே அவரை வாரி அனைத்து 
தம் கையில் ஏந்தி இருந்த கவளத்தை சீடரின் வாய்க்குள் திணித்து விட்டார்!
அடுத்த கணமே சீடருக்கு,ஞானோதயம் ஏற்ப்பட்டு,
பிரபஞ்சம் அனைத்தும்,ஒரு கண்ணாடியைப் போல தோற்றமளிக்கத் துவங்கியது வேறு கதை!
இதுவன்றோ உண்மையான பக்தி?
பணிவு?
உட்க்கார சொல்லியும் கேட்க்காமல்,,தாம் பணிவினைக் கடைப்பிடித்து வருவதாக,தவறுதலாக எண்ணி,செயல் புரியும் இச்செயலா?பணிவு?
நான்கு பேர்களுக்கு முனனால்,குருநாதரின் பேச்சைத் தட்டி விட்டு,பாராட்டு பெறுவதா பக்தி?

மெய்ஞான மார்க்கத்தில்,,காலடி எடுத்து வைத்ததும்,இத்தஹைய சின்ன ,சின்ன விசயங்களைஎல்லாம்,கண்டறிந்து,கேட்டறிந்து,
திருந்திக் கொள்ள முற்ப்பட வேண்டும்!

தாம் ,நினைத்துக் கொண்டதே,சரியென்றும்,
தாம் செயல் படுவதே,பக்தி மார்க்கமென்றும்,
எண்ணி செயல்பட்டால்,
ஆன்மீகதுறையும் சிரிப்புக்கு ஆளாகி விடும்!

(நன்றி,,,நரியம்பட்டு சலாம்!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக