10 ஆகஸ்ட், 2012

வேந்தர் நபியின் வேதனை


அல்லாவிடம் அனுமதி பெற்று ஜிப்ரயீல் அலை அவர்கள் சுவனம் செல்கிறார்கள். நாதர் நபி பெருமானார் அவர்கள் நடு நாயகமாக வீற்றிக்கும் ஆதம் அலை அவர்கள் தொட்டு அனைத்து நபிமார்களும் அவர்களை ஜபூர் வேதத்தின் இனிய வசனங்களை தங்களது காந்த குரலால் கவரும் வண்ணம் ஓதிக் கொண்டிருப்பார்கள். பெருமானார் அவர்கள் சுவனத்து தங்கக் கிரீடம் ஒன்றை தலையில் அணிந்து இருக்க தலையை அசைத்து ரசித்துக் கொண்டிருப்பார்கள். கேள்விகனக்குகளை எளிதாக்குவேன் என்று நாயன் கூடியதால் நம் சமுதாயத்தினர் எல்லோரும் சுவனம் வந்து விட்டார்கள் எதார்த்தமாக எண்ணிய நபி பெருமானாரை ஜிப்ரீல் அலை அவர்கள் சொல்லும் செய்தி சோகத்தில் ஆழ்த்தும் கிரீடத்தை தஊக்கி எரிந்து விட்டு ஓடோடி வருவார்கள் அர்ஷை  நோக்கி அல்லாஹ்விடம் மன்றாட தங்களுக்குக் கிடைத்த சுகங்கள் தங்களது உம்மத்தினர்களுக்கு கிடைக்கவில்லை ஒரு பிரிவை நரகத்திலிட்டு விட்டாயே! நாயனே என்னால் தாங்க இயலாது அவர்களது பிழை பொறுத்து அவர்களையும் என்னோடு அனுப்பி வை என்பார்கள் அப்போது முஹம்மதே முதலில் தலைய உயர்த்துங்கள் அவர்கள் எனக்கு துரோகம் செய்தவர்கள் ஏவப்பட்டதை எடுத்து நடக்காமலும் விலக்கப்பட்டதை தவிர்த்து சொல்லாமலும் உலகில் வாழ்ந்தார்கள். எனவே அவர்கள் தண்டிக்கப்படும் நாளிது அவர்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரங்களாக நரக வாசம் செய்யட்டும். நீங்கள் சுவனம் சொல்லுங்கள் உங்கள் வரவை நோக்கி ஏராளமானவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்  சுவனம் உங்களுடையது அதன் சுகங்ககளும் உங்களையே சார்ந்தது எனவே சென்று வாருங்கள் என்பான்.தலையை உயர்த்திய பெருமானார் அவர்கள் வல்லோனின் இந்த பதில் கேட்டு இடிந்து போகிறார்கள் நாயனே இன்றைய தினம் ஆட்சியும் அதிகாரம் உனக்கே உரியன உனது ஆட்சியிலோ அதிகாரந்திலோ தலையிடும் உரிமை யாருக்குமில்லை நாயனே நீ நாடினால் யாரையும் விடுவிக்கலாம். உன்னை கேட்பதற்கு யார் உளர் நாயனே அவர்கள் அறியாமல் பிழை செய்தவர்கள்.நீ அன்புடன் பிழை பொருப்பவன்.இறைவனே அவர்கள் மரதியாளர்கள். நீயோ மனங்களையும் அறிபவன் அவர்களை இப்போது சுவனம் செல்ல அனுமதி அளிக்காவிடில் எனக்கும் சுவனம் வேண்டாம். என்னையும் உன்னையும் நம்பிய நல்லோர்கள் நரகத்தில் வேக நான் மட்டும் சுவன சுகத்தில் தோய்வதா! வேண்டாம் எனக்கு அந்த சுவனமும் சுகமும் என் பிரார்த்தனையை ஏற்று அவர்களுக்கு சுவனம் செல்ல அனுமதி கொடு என்று அழுகிறார்கள் தனது ஹபீப் அழுவதை கண்ட நாயன் நர்திர்ப்பு தருகிருகிறான்.நரகத்திற்கு அதிபதி மாலிக்கை அழைத்து முஹம்மதின் கூட்டத்தாரை நரகத்திலிருந்து விடுவித்து சுவனம் அனுப்புங்கள். எனது ஹபஈபின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன் என்று ஆணையிடுகிறான். இதோ நம் போன்ற பாவிகளை சுவனம் அனுப்ப நம் நாயகம் பிரார்த்தித்து அனுமதி வாங்கி தந்து அவர்களே நரகம் சென்று அழைத்து வர செல்கிறார்கள்............நாமும் செல்வோம்!

1 கருத்து: