8 ஆகஸ்ட், 2012

யுக முடிவின் ஆரம்ப அடையாளம்

யுக முடிவின் ஆரம்ப அடையாளம்  
பரந்த வானம் பரவி கிடைக்கும் பூமி நீண்டு நெளிந்த சமுத்திரம். வளைந்து ஓடும் வனப்புமிக்க நதிகள். இரைச்சலோடு இறங்கும் அருவிகள்., மலைகள். மரங்கள்,. மற்றைய தாவர வர்க்கங்ககள் மற்றும் மனிதன் உளிட்ட எந்தனை கோடி கோடி ஜீவராசிகள் இவை அனைத்தும் இருந்த இடத்தில் சுவடு கூட தெரியாமல் இறைவனால் இல்லாமல் ஆக்கப்படும் இது விஞ்ஞானிகள் கூட வியப்போடு ஒப்புக் கொள்ளும் நிதர்சனமான உண்மை.அதிர்ச்சிகளை விநியோகிக்கும் அந்த அதிசய நாளை பற்றி உலகில் தோன்றி உருவ வழிப்பாட்ட தடை செய்த அந்தனை தீர்க்க தரிசிகளும் சொல்லி சென்றுள்ளனர்.
ஆனால் யாரும் எப்போதும் வரும் என்பது பற்றி மாத்திரம் சொல்லவில்லை காரணம் அது அளிக்கப் போகும் அவனுக்கு மட்டும் உரிந்தான உண்மை இரகசியம் 
ஒரு முறை பெருமானார் சல்லல்லாஹு அலைகிவ சல்லம் அவர்களிடம் ஜிப்ரீல் அலை அவர்கள் முடிவு நாள் எப்போது வரும் என வினவ அதற்கு அண்ணலார் கேட்க கூடிய உங்களை பார்க்கிலும் கேட்கப்படும் நான் அறிந்தவனல்ல என்றார்கள் மேலும் அதன் அடையாளங்கள் சிலவற்றை அப்போது அறிவித்தார்கள் 
இதோ அவர்கள் கூறிகிறார்கள் பிள்ளைகள் பெற்றோர்களை அடிமை போல நடத்துவார்கள் செருப்புக்கும் ஆடைக்கும் வசதி இழந்தவர்கள் மாடிவீடு கட்டி மமதையோடு வாழ்வார்கள்.
தகுதி இல்லாத தற்குறிகள் தலைவர்களாக பொருப்பெர்ப்பார்கள். ஆம்! அன்று அன்னாலாம் அறிவித்த இந்த அடையாளங்கள் இன்று அமுலில் இருக்கிறது நாமும் பார்க்கிறோம்.
சுமந்து தந்த தாயை சினத்து பேசி சிதைக்கும் பிள்ளைகள் வீடு காக்க மேனியை ஓடாகி உழைத்த தந்தையை பாடைபடுத்தும் பாவி பிள்ளைகள் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்ற முதுமொழிக்கொப்ப பணத்தை பார்க்கமுடியாத நிலையிலிருந்தவன் பணத்தோடு புரண்டு பகிரங்கமாக பாவங்கள் ஈடுபடுவது.
அழகான குணங்களாலும் அறிவார்ந்த கல்வியாலும் அழகுபடாமல் அழுக்கு குனங்கலாமும் அறிவற்ற மனடையாலும் அழுக்கேறிய ஆத்மாக்கள் நிர்வாகத் திறனின்றி நீதியின் பயமின்றி தற்குரித்தனத்தொடு தலைமை பொறுப்பேற்று உள்ள தனிகேட்ட நிலைமை இவைகளெல்லாம் இன்று நாம் கண்டு வரும் இறுதி நாளின் அடையாளங்களாகும்.
யுக முடிவு ஆரம்பித்து விட்டதை கட்டியம் கூற இன்னொரு சீர்கேடனின் பிறப்பும் ஒரு அடையாளமாகும்.
அருவருக்கத்தக்க அழகையும் கனத்து பெருந்த சரிரத்தையும் முகத்தில் கருத்த மச்சத்தையும் கண்களின் கீழ் வெளுத்த புள்ளியையும் அடையாளமாகக் கொண்ட அவன் பனீ உமய்யா வமிசத்தை சார்ந்த பர்பி என்னும் குடும்பத்து உத்பத்து இப்னு முஹம்மது என்பவன் ஆகும் .
அவன் சாம்பல் துகள்களுக்குள் மறைந்து கிடக்கும் நெருப்புத் துண்டுகளைப் போன்றவன் முகமுடி அணிந்து வரும் அவனது வெளிப்புற நடவடிக்கைகளில் மக்கள் மனதை பரிகொடுப்பார்கள் அந்தரங்கத்தை அறியாத அந்த மக்களை சந்தியா வழியிலிருந்து திரும்ப. அனைத்து சூழ்ச்சிகளையும் அழகாக கையாள்வான் மன்கையர்களையும், மழலைகளையும் பிடித்து கொலை செய்த ஈமான் கொண்டவர்களை இல்லாமல் ஆகிவிட முனைவான். 
அவனை அப்படியே நம்பி வின்பட்டக்கூடிய சிலரோ டமாஸ்கஸ் சென்று அங்கு அவனது கைங்கரியத்தை மேற்கொள்வான் அவனை பின்பற்றுவோர் எண்ணிக்கை அந்த நகரில் மற்றும் சுமார் 30,000 பேர்களாகும் சிரியா பஹ்தாது போன்ற பெரிய நகரை வசப்படுத்தி கொள்ளும் அந்த இஸ்லாமிய வைரியின் வாழ்க்கை முடிந்து விட வேண்டும் என்பதற்காக கூபா என்ற நகரின் ஷுஐப் இப்னு ஸாலிஹ் என்பவரது தலைமையில் முஸ்லிம்கள் முன்னேறி அனனத்து பெரும் படையோடு போரிடத் தயாராவார்கள்.,
ஆட்களாலும் அற்புத சாதங்களாலும் நிரம்பி வழியும் அந்த அரக்கனை எதிர்த்துப் போரிட முடியாமல் முஸ்லிம்கள் புறம் காணுகின்றனர் தலையில் உலகையே வைத்துள்ளோம் என பிருமிதம் கொண்டு மீண்டும் தனது படையினை நபியுல்லாவின் நகரமான மதினா சென்று மன்னர் நபியின் அடக்கஸ்தலத்தை இடித்து தரைமட்டமாக்குமாறு ஆணை பிறப்பித்தான் அநியாயம் அக்கிரமம் புரியும் அந்த கொடியவர்கள் வருவதை அறிந்த இஸ்லாமியர்கள் இறைஞ்சுகின்றனர்.
யா அல்லாஹ் உனது எதிரி உனது தோழரின் அடக்கஸ்தலத்தை அழிக்க போகிறானாம் எங்களை இன்னை செய்தான் எங்களால் முடிந்த வரை தாங்கினோம், தாக்கினோம் இப்போது இரண்டுக்கும் சக்தி இழந்த அங்களுக்கு அவனுக்கு எதிரான உதவி அளித்து எங்களை காப்பாற்று உன்னால் இயலாளது ஒன்றும் இல்லையே என்று சுமக்க முடியாத அகங்காரத்தொடும் ஆணவத்தோடும் மதினா மண்ணில் கால் வைக்கும் அந்த அரக்கர்களின் கண்களில் ஒளியை பறிமுதல் செய்யப்படுகிறது. இனம் தெரியாத பீத தொற்றிக் கொள்ள தலை தப்பினால் தன்பிரான் புண்ணியம் என ஓடுகின்றனர். பூமியில் குழப்பத்தை விளைவித்து அநீதி புரிந்து வரும் அந்த அரக்கன் மீண்டும் ரோம் நகர மன்னனின் உதவியோடு மதீனா வருகின்றான்.
அதிக காலங்கள் அநீதியை அரசாள விடுவது ஆபத்தல்லவா இந்த சமயத்தில் மன்னர் மஹ்தீ அலை அவர்கள் மண்ணுக்கு அனுப்பப்படுகிறான்.யுக முடிவின் ஆரம்ப அடையாளங்களில் மன்னர் மஹ்தீ அலை அவர்களின் வருகையும் அற்புதமான ஒன்றாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக