அனுமதி பெற்ற அண்ணல் பெருமானார் அவர்கள் சுவனத்திற்கு அவர்களை அழைத்துவர நரகம் நோக்கி நடக்கிறார்கள் அப்போது வழியில் எதிபடும் புராக் என்னும் அதிவேக வாகனம் நபியே! என் மீது ஏறிக்கொண்டால் நான் விரைவில் சென்று தாங்களை நரகத்தில் சேர்க்கிறேன் என்று கெஞ்சுகிறேன் புராகே செய்தி தெரியாத உனக்கு என் கூடத்தின் ஒரு பகுதியினர் நரகில் தள்ளப்பட்டும் வேதனை படுத்தப்படுகிறார்கள் அங்கெ அவர்கள் கடுமையை இன்னலில் இருக்கும் போது நான் உன் மீது ஏறி உல்லாச பயணம் மேற்கொள்வதா?வேண்டாம் போய்விடு நான் நடந்து போகிறேன் என்று சொல்லிவிட்டு நடந்து செல்கிறார்கள் அபோது புராக் நாயகமே எனக்கு ஓர் ஆசை நானும் தங்களோடு சுவத்தில் இருக்க வேண்டும் நீங்கள் எங்கு சென்றாலும் என் மீது அமர்ந்து தான் செல்ல வேண்டும் இதற்காவது அனுமதி தருவீர்களா என்று தனது அடக்க முடியாத ஆசையை அவர்களிடம் வெளியிடுகிறது. அதற்கு அண்ணலார் ஆகட்டும் என்று தலை அசைத்து விட்டு போகிறார்கள். நரகை நெருங்கி விட்டார்கள். அதன் அதிபதி மாலிக் அலை வாயிலின் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை கண்டதும் அண்ணலார் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.
பதறிப் போன மாலிக் நாயகமே! என்ன காரியம் செய்து விட்டீர்கள் நான் என்ன தவறு இழைத்தேன். என் மீது கோபம் கொள்ள காரணம் என்ன?எனக் கேட்கிறார்கள். அதற்கு பெருமானார் அவர்கள் மாலிகே! நான் என் கூட்டத்தினருக்கு மன்றாடி விடுதலை வாங்கித் தருவேன் என்று அறிந்திருந்தும் அவர்களை அதிமகாக வேதனைப் படுத்தியுள்ளீர்கள் நியாயமா இது ?என்று நெஞ்சு நிறைந்த சோகத்தோடு கேட்பார்கள். அதற்கு மாலிக் அவர்கள் சஞ்சலத்தோடு நாயகமே! நான் என்ன செய்வேன்? நயன் சொன்னதைத் தானே நான் செய்ய வேண்டும் என்னால் இறைக்கட்டளையை மீற முடியுமா? என்பார்கள் இது கேட்டு சமாதனம் அடைந்த பெருமானார் அவர்கள் நரகின் உள்ளே போகின்றார்கள்.சூரியன் சுடரை மங்கசெயும் ஒளி முகத்தார் உள்ளே நுழைந்ததும் நரகம் தனது நிலையை மறக்கும். அனல் கக்கும் அதன் நாவுகள் கொஞ்சம் ஓய்வுபெறும் வேதனை செய்யும் பணியை மேற்கொண்ட வானவர்கள் எங்கே நம்மை கோபித்துக் கொள்வார்களோ என்றென்று எண்ணி ஓடி ஒளிந்து கொள்வார்கள் பாம்புகளும் தேள்களும் கூட கண்களுக்கு அகப்படாமல் காணாமல் போகும் இப்போது நரகவாசிகளுக்கு ஒரே ஆசரியம் யார் வந்துள்ளது இங்கு வேதனைகளே இல்லாத இந்தக் கணம் எவ்வளவோ இன்பமானது என்று நினைத்து வந்தவரை பார்த்து யார் நீங்கள் என்று வினா ஒன்று தொடுகிறார்கள். அதற்கு அண்ணலார் நான் தான் முஹம்மத் இறையனின் இறுதித் தூதர் என்னையும் நாயனையும் நம்பியவர்கள் நரகிலிருந்து விடுவிக்க இறைவனின் அனுமதி பெற்று வந்துள்ளேன் வாருங்கள் என்னுடன் என்று அழைப்பார்கள் நடுகடலில் துணையின்றி தவிக்கும் கடல் பிரயாணி ஒருவருக்கு தோணி ஒன்று கிடைத்தால் எப்படி இருக்குமோ அது போன்று இருக்கும். ஓடோடி வருவார்கள் பெருமானாரின் அருகே.
அகிலத்தின் அருக்கொடைஎன அல்லாஹ்வால் வர்ணிக்கப்பட்ட அண்ணலார் அது கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவார்கள் அன்று தான் அவர்கள் அதிமகாக அக மகிழ்வார்கள் ஜிப்ரீல் அலை உட்பட வானவர்களும் மனிதரில் சுவனவாசிகளாக இருப்போரும் இறைவனை புகழ்கிறார்கள்.
இப்போது நரக விடுதலை பெற்ற பெருங்கூட்டம் பெருமானாரை பின் தொடர்கிறது. அண்ணலாரின் அனைத்துலக உம்மத்தும் சுவனம் செல்லும் அன்று தான் மழலைகளாய் மரணிதோர் தங்கள் பெற்றோரையும் வாலிபத்தில் மரணித்தோர் உடன் பிறந்தோரையும் இனிய இல்லறம் நடத்தி இடையே பிரிந்து போன தன்பதிகள் தத்தம் ஜோடிகளையும் கண்டு இன்புறுவார்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அகமகிழ்வார்கள் ஜிப்ரீல் அலை அவர்கள் அனைவரையும் அழைத்து சென்று நஹ்ருள் ஆயத் என்ற நதியில் குளிக்க செய்வார்கள்., பின் சுவன பட்டாடைகள் அணிவித்து சுகந்த மணம் பரப்பி முகங்களில் இறையோளியை நிரப்பி அவர்கள் சுனத்துள் நுளைவிக்கப் படுவார்கள்.தனது தோழரின் மகிழ்வை கண்ட அல்லாஹ் அவனும் மகிழ்கிறான். இப்போதைக்கு நாமும் மகிழ்வோம்
tremedous cheat on humanity
பதிலளிநீக்கு