ஹலரத் அபூபக்கர்(ரலி):
இஸ்லாத்தை மக்களிடத்தில் பரவச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினால், "நான் கஃபாவிற்குச் சென்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்யப் போகிறேன்" என்று பெருமானாரிடம் அபூபக்கர்(ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அதற்குரிய காலம் வரும் சற்றுப் பொறுத்திருங்கள் எனப் பெருமானார் அவர்கள் பதிலுரைத்தார்கள். ஆனால் இஸ்லாத்தின் மீதிருந்த பற்றுதலால் முஸ்லிம்கள் அனைவரையும் அழைத்துச் சென்று கஃபாவில் தம் பிரசங்கத்தைத் துவக்கினார்கள். இதைப் பார்த்த குறைஷியர் கடுங்கோபம் அடைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து அபூபக்கர்(ரலி) அவர்களை தாக்கினார்கள்.அவர்கள் உணர்விழிந்து கீழே விழுந்தும் கூட விடாது தாடியின் ஒரு பகுதியைப் பிய்த்து விட்டார்கள். இந்நிலையிலிருந்து மீண்டும் சுயநினைவிற்கு வந்ததும், அவர்கள் நாவிலிருந்து வந்த முதல் வாக்கியம் "முஹம்மது நலமாக இருக்கிறார்களா?" என்பது தான்.
அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு இயற்கையிலேயே இனிமையான குரலை இறைவன் தந்திருந்தான். இவர்களுடைய திண்ணையிலிருந்து திருக்குர் ஆனை ஒதும் போது அக்கம் பக்கத்திலுள்ளவர்களும், அவ்வழியே செல்பவர்களும் இவர்களின் இனிய குரலைக் கேட்டு மெய்மறந்து நின்று விடுவார்கள். இதைப் பார்த்த குறைஷியர்கள் ஆத்திரமடைந்து பல தொந்தரவுகளைத் தந்தார்கள்., எனவே ஹலரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் மக்காவை விட்டு அபிஸீனியாவிற்கு சொல்லத் தாயாரானார்கள். அவர்களை வழியிலே கண்ட அபூதுஜானா என்ற தலைவர் அவர்களுடைய பயனத்தைத் தடுத்து நிறுத்தி அவர்கள் குர் ஆனை மெளனமாக ஓதிக் கொள்ளஏற்பாடு செய்தார். சில நாட்கள் இவ்வாறு கழிந்தன பின்னர் தமக்கு என்ன நேர்ந்தாலும் சரி என்ற மீண்டும் உரத்தக் குரலில் எதிரிகளைப் பார்த்து மனம் உருகும் வண்ணம் ஓதலானார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக