3 ஜனவரி, 2010

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொலை செய்வதற்கு அபூஜஹில் என்ன சூழ்ச்சி செய்தான்?
இஸ்லாத்தின் மீது, இஸ்லாத்தில் இனைந்த முஸ்லிம்கள் மீதும், இஸ்லாமியக் கொள்கைகளை முறைப்படி மக்களுக்கு போதித்துவந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் வெறுப்படைந்த அபூஜஹில் எவ்விதத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொலை செய்து விட்டால் இஸ்லாம் மென்மேலும் பரவுவதைத் தடுத்து விடலாம் எனக்கருதினான். இதற்காக அவன் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வருகையை எதிர்ப்பார்த்துப் பெரிய பாராங்கல்லினைத் தன் அருகாமையில் வைத்துக்கொண்டு கஃபத்துல்லாஹ்வின் வாசலில் ஒரு புறத்தில் மறைவாக ஒளிந்திடுந்தான். இவனுடைய மற்ற குறைஷி நண்பர்களெல்லாம் சற்று தூரத்திற்கு அருகே கூட்டமாக என்ன நடக்கப்போகிறதென எதிர் பார்த்த வண்ணமாகக் காத்திருந்தார்கள்.
இந்நிலையறியாத பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வழ்க்கம் போல கஃபத்துல்லாஹ்விற்கு வந்து இறைவணக்கத்தில் ஈடுபலானார்கள். இதை எதிர்பார்த்திருந்த அபூஜஹில் தன்னால்தூக்க முடியாத அப்பாறாங்கல்லைத் தன் தலைக்குமேல் உயர்த்தி பெருமானார் இருக்கும் இடத்தை நோக்கி சில அடிகள் தான் முன்னே எடுத்துவைத்தான் அதற்குள்ளாகத் தன் கையிலிருந்த கல்லை கீழே போட்டு விட்டு தன்னை அறியாத நடுக்கத்துடனும் பதற்றத்துடனும் தன் சக்தியனைத்தையும் இழ்ந்தவனாக வேகமாகத் தன்னை எதிர்பார்த்திருந்த குறைஷி நண்பர்களிடம் ஓடினான்.இவனைக் கண்ட நண்பர்கள் இவனது பதற்ற நிலையைப்பார்த்து, ஆவேசத்துடன் என்ன நடந்தது? என அபூஜஹிலிடம் கேட்டார்கள்,. அதற்கு அபூஜஹில் தன்னிடமிருந்த அச்சம் நீங்கியப்பின், " நான் முஹம்மதைக் கொன்று விடலாமென்று நான்கு., ஐந்து அடிகள் தான் அவரை எதிர் நோக்கி எடுத்துவைத்திருப்பேன் அதற்குள்ளாக என் எதிரில் என்னை நோக்கி பயங்கர உருவத்துடனும் கொடூரமான பார்வையுடனும் கூடிய ஒர் ஆண் ஒட்டகம் வருவது கண்டு நான் பயந்து கல்லைக் கீழே போட்டுவிட்டு தங்களிடம் ஓடி வந்தேன்," எனக் கூறினான்.
இதனைக்கேட்டு குறைஷியர்கள் அனைவரும் தம்முடைய செய்ல்கள் பலிக்கவில்லையென வெட்கமும், அச்சமும் அடைந்தவர்களாகத் திரும்பினார்கள். இவ்வாறு இறைவனின் அருக்கொடையால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறைஷியர்களின் இன்னல்களிலிந்தும், கொலைத் திட்டங்களிலிருந்தும் காப்பாற்றப்பட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக