ஹலரத் பிலால்(ரலி):
இவர்களின் இயற்பெயர் அபூஅப்தில்லாஹ் என்பதாகும் இவருடைய தந்தையின் பெயர் ரபாஹூல் ஹபஷீ என்பது,. தாயார் பெயர் ஹம்மாமா.இவர்கள் இருவரும் அபிஸீனிய நாட்டில் யுத்தக் கைதிகளாக பிடிக்கப்பட்டு. பின்பு இருவரும் அடிமையாக்கப்பட்டு, சந்தையில் விற்க்கப்பட்டார்கள். இவர்களின் மகனார் தாம் பிலால் இவர்கள் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர் உமய்யா பின் கலப் என்பவனிடத்தில் அடிமையாக இருந்தார். இவர் இஸ்லாத்தைத் தழுவி விட்டார் என்ற செய்தி எஜமான் உமைய்யாவிற்குத் தெரிந்ததும் இவரைக் கடுமையாகக் சுடும் மனலில் படுக்க வைத்து கழுத்தில் கயிற்றினைக் கட்டி சிறுவர்கள் கையில் கொடுத்து வீதி வீதியாக இழுத்துவரச் செய்வான் அப்போது கயிற்றின் அழுத்தத்தால் கழுத்திலிருந்து இரத்தம் கட்டிக் கட்டியாக உறைந்துவிடும் அவரது உடலை ஒட்டகத்தின் பச்சைத் தோல் கொண்டு சுற்றி வெயிலில் நிற்க வைத்து விடுவார்கள். சூரியன் உச்சிக்கு ஏற ஏற அவர்களின் உடம்பின் மீது சுற்றப்பட்ட தோல் நன்கு காய்ந்து சுண்டி அவ்வடிமையின் உடலைக் கவ்வும் அடிமை இருக்கத்தில் மாட்டி புழுவாகத் துடிப்பதைப் பார்த்து குறைஷியர் சிரித்து மகிழ்வர்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால் அவரைப் பாலை மனலில் படுக்க வைத்து பளுவான கல்லைத்தூக்கி நெஞ்சில் வைத்து 'பிலாலே, ஒன்று நீ இப்படியே சாகவேண்டும் இல்லை முஹம்மதைவிட்டு விலகி லாத் உஸ்ஸா(சிலை) என நாங்கள் வணங்கும் தெய்வங்களை வணங்க வேண்டும் இரண்டில் ஒன்று செய்யாமல் உன்னன விடமாட்டேன் இல்லையெனில் இந்த வேதனையிலேயே இப்படியே சாகவேண்டியது தான் எனச் சொல்லிக் கொண்டே அடிப்பான் அப்போதும் அவருடைய புனித வாய் 'அஹ்துன்' 'அஹ்துன்' (ஒருவன் ஒருவன்) என்றே உச்சரித்துக் கொண்டிருக்கும் இன்கொடுமையைப் பல முறை கண்ட ஹலரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் ஹலரத் பிலாலை உமய்யாவிடமிருந்து விலைக்கு வாங்கி அடிமை விலங்கினை அகற்றி எறிந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக