உம்முஜமீல் பெருமானாரைக் கொடுமை செய்தாளா?
ஆம் ! மிக அதிகமாகச் கொடுமை செய்தாள். பெருமானார் அவர்கள் இறை வணக்கத்திற்காக காஃபாவிற்குச் செல்வார்கள் அப்போழுது அவர்கள் நடந்து செல்லும் வழிகளில் இரவோடு இரவாக பள்ளங்களைத் தோண்டி அவற்றின் மீது முட்களையும் ஈச்ச மரத்தின் இலைகளையும் போட்டு மூடி விடுவாள். காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகாலைத் தொழுகைக்காக கஃபாவிற்கு வரும் போது இருள் வேளையில் இந்தக் குழிகளில் விழுந்து உடலில் சேதம் ஏற்பட்டு விட்டால், இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதிலிருந்து விலகிக்கொள்வார் என எண்ணினாள்.
ஒரு நாள் குறைஷியர் கஃபாவிற்கு முன்பு கூட்டமாக நின்று கொண்டிகுந்தனை. அந்த சமயத்தில் தற்செயலாக பெருமானார் அவர்களும் அங்கு சென்று கொண்டிகுந்தார்கள். குறைஷிகளிலே ஒருவன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பார்த்து "இதோ போகின்றானே இம்மனிதனைப் போன்று எம்மனிதனும் எங்களுக்கும்., நாங்கள் வண்ங்குகின்ற தெய்வங்களுக்கும் தொந்தரவு கொடுத்தது கிடையாது" எனச் சொன்னான். இன்னொருவன் "நீர் தானா நாங்கள் உயர்வாக மதிக்கப்போற்றி புகழ்த்து வணங்குகின்ற தெய்வங்களைப் பழித்துக் கூறுபவர்? " என்றான் இதைக் கேட்ட பெருமானார் அவர்கள் சிறிதும் அச்சமின்றி ஆம்! நானே தான் என்று சொல்லி வாயை மூடுவதற்குள் மற்றொருவன் (உக்பா பின் அபீமுயீத் என்பவன்) ஓடிவந்து தோள் மீது கிடந்த துணியை எடுத்து, பெருமானாரின் கழுத்திலே போட்டு முறுக்கிக் கீழே தள்ளி விட்டான். மேலும் தன் பலத்தால் முறுக்கிக் கொண்டேயிருந்தான். முறுக்கு ஏற ஏற பெருமானார் அவர்களுக்கு மூச்சுதிணற ஆரம்பித்தது. இதைக் கண்ட குறைஷியர் கைகொட்டிச் சிரித்தார்களே தவிர பெருமானாருக்கு உதவிசெய்ய எவரும் முன்வரவில்லை. இந்த நேரத்தில் இறைவனின் மாபெரும் கிருபையால் நபியவர்களின் அருமைத் தோழரான அபூபக்கர்(ரலி) அங்கு வந்தார்கள். குறைஷியரின் பிடியிலிருந்து கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பார்த்து, கண்கலங்கியவர்களாக, குறைஷியரே! இறைவன் இறைவன் என்ற உண்மையை சொல்வதற்காகவா, இந்த மனிதரைக் கொலை செய்யப் போகிறீர்கள்? என்று சொன்னவர்களாக ஆவேசத்துடன் கூட்டத்தினுள் புகுந்து, பெருமானாரை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்தார்கள். ஆனால் எவ்வளவு இன்னல்களைக் குறைஷியர்கள் தந்தாலும் கஃபாவிற்க்குச் சென்று வணங்குவதை மட்டும் பெருமானார் அவர்கள் நிறுத்தவே இல்லை.
ஒரு முறை பெருமானார் கஃஃபாவிற்கு அருகாமையில் தொழுது கொண்டிருந்தார்கள். குறைஷியர்கள் மற்றொருப் பக்கமாக கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒருவர் தொழுதுக் கொண்டிருந்த நாயகம் அவர்களைக் காட்டி, " அதோ அங்கு அமர்ந்திருக்கும் பகட்டுக்காரரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா, அவர் குனிந்து வணங்கி கொண்டிருக்கும்போது, ஒட்டகத்தின் சானம், குடல், உதப்பி போன்றவற்றை எடுத்து வந்து, அவருடைய பிடரியில் வைப்பதற்கு தைரியம் யாருக்கேனும் உண்டா?" எனக் கேட்டான்.
இதைக் கேட்டவுடன் அங்கு இருந்தவர்களில் ஒருவன் நாற்றமடிக்கின்ற குடலையும். சானத்துடன் கூடிய உதப்பியையும் பெருமானார் அவர்கள் ஸுஜூது செய்து கொண்டிருக்கும் பொழுது, இரு தோள்களுக்கு மத்தியில் கழுத்தில் அவர்கள் எழுந்திகுக்க முடியாதபடி வைத்து விட்டான். பெருமானார் அவர்களுக்கு தலையைத் தூக்க முடியாது போயிற்று. குறைஷியரோ ஏளனமாகப் பேசிக் கைக்கொட்டி சிரித்தாட்கள். இதைப் பார்த்த வழிப்போக்கர் ஒருவர் பாத்திமா(ரலி) அவர்களிடத்துல் போய்ச் சொன்னவுடன்,. சிறுமியாக இருந்த அவர்கள் ஓடோடி வந்து, அவை அனைத்தையும் எடுத்து சுத்தம் செய்து தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
இத்தகைய கொடிய இன்னல்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு தந்ததோடல்லாமல், குறைஷி இனத்தலைவர்களில் ஒருவனான அபூஜஹில், அவர்களைக் கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக