2 ஜூன், 2011

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

வெற்றியின் இரகசியம் இஸ்திகாரா தொழுகை!

بسم الله الرحمن الرحيم
سر النجاح
ومفتاح الخير والبركة والفلاح

ஒரு வாலிபன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்; பின்னர் திருமணத்துக்காக தயாராகின்றான்; அப்போது அவனது சகோதரன் அப்பெண்னை திருமணம் முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான். அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்; ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இறுதியில் வேறொரு பெண்னை மணக்கின்றான். குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம் பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.

ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்; ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்; அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்; அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் மிக மிக குறைவாகவே அவனுக்கு நேரம் கிடைத்தது.

ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான். அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்து, நன்மையை, தனது தேவையை வேண்டி தொழும் தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.

சிறிது காலத்துக்குப் பிறகு மார்க்க அறிஞரிடம் மகிழ்ச்சியுடன் சநதோஷமான நிலையில் சென்று கூறினான். அல்லாஹ் எனது கஷ்டத்தை நீக்கினான்; குறைந்த நேரத்தில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டேன்; இதன் மூலம் மார்க்க வகுப்புக்களிலும்,தனது மனைவி மக்களுடனும் இருப்பதற்கு மிக மிக வசதியாக இருப்பதாக கூறினான்.

இதனது இரகசியம் தான் என்ன? இவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? இதுதான் இஸ்திகாரா தொழுகையின் இரகசியம்! இதனை பற்றிய தகவல்களை பின்வருமாறு பார்ப்போம்.

இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!

மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.

ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்?என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்! சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.

இவ்வாறாண நிலைமைகளில் ஜாஹிலியா கால அரேபியர்கள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள். அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் செய்என்றும் மற்றதில் செய்யாதேஎன்றும் மற்றொன்றில்ஒன்றும் இருக்காது”! இவற்றில் செய்என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். செய்யாதேஎன்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள்.

ஒன்றும் இல்லாதசீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து சீட்டுகளை போட்டுக்கொன்டே இருப்பார்கள். இவ்வாறான நிலைமைகளில் இருந்து அல்லாஹ் முஃமின்களை பாதுகாத்தான். அதனை அவர்களுக்கு தடை செய்தான்.

قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق….) سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்(அல்குர்-ஆன் 5:3)

இதற்கு பகரமாக, நன்மையை நாடி தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திகாரா) நபி (ஸல்)அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதில் இருக்கக்கூடிய பிரார்தனை, “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல், உதவி தேடுதல் அனைத்து சக்திகளை விட்டும் ஏக இறைவனது சக்தியை மாத்திரம் எதிர்பார்த்தல் முழுமையாக அவனது செயல்கள் வர்னனைகளை ஒருமைப்படுத்தல் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுவது போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்.

அல்லாஹ் மனிதனிடத்தில் கொண்ட கருனையால் தனது அடியானுக்கு (இஸ்திகாரா தொழுகையை) செய்யும்படி சொல்கின்றான். இச்செயலை செய்வதற்கு படைத்த இறைவனுக்கு முன்னால் ஒரு சில நிமிடங்களை மாத்திரமே செலவு செய்ய வேண்டும. இக்காரியத்தைச் செய்கின்றவர்கள் மிக மிக அரிதே! இத்தொழுகையின் மூலம் தான் நாடியதை தனது இறைவனிடம் கேட்பான்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிகப் பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே!

இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான் சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.

ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்

இஸ்திகாரா தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.

இஸ்திகாரா தொழுகையை தொழும் முறை:

பர்ளு தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை இஸ்திகாரா தொழுகை என்ற என்னத்தோடு தொழ வேண்டும். அதில் சூரா பாதிஹாவையும் அதன் பின்னால் அல்குர்-ஆனில் சில வசனங்களையும் ஓத வேண்டும். சுஜூதில் அல்லது அத்தஹியாத்தில் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பிறகு இஸ்திகாரா நபிமொழியில் வரக்கூடிய பிரார்த்தனையை, துஆவை பொருள் விளங்கி ஓதவேண்டும். தொழுகைக்கு பிறகு பிரார்த்திப்பதே மிக சரியான முறையாகும்.

இஸ்திகாரா தொழுகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழியும் பிரார்தனையும்:

عن جابر رضي الله عنهما قال:كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن،يقول:إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة ثم ليقل : اللهم إني أستخيرك بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم،فانك تقدر ولا أقدر،وتعلم ولا أعلم،وأنت علام الغيوب،اللهم إن كنت تعلم أن هذا الأمر- ويسمي حاجته-خير لي في ديني ومعاشي وعاقبة أمري-أو

قال عاجل أمري وآجله-فاقدره لي ويسره لي،ثم بارك لي فيه،وان كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري- أو قال:عاجله وآجله-فاصرفه عني واصرفني عنه،واقدر لي الخير حيث كان ثم أرضني به. (أخرجه البخاري. )

அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர்,வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ வமாஆஷீ வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்

இதன் பொருள்:

யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்; ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும், எனது தீனுக்கும், எனது வாழ்கைக்கும், எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான, தாமதமான விவகாராத்திற்கும் நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு, எனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான்,தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!” (ஆதாரம் புகாரி)

இஸ்திகாரா தொழுகையை தொழும் நேரம்:

இஸ்திகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம், மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம். உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.

தவறான நம்பிக்கை:

இஸ்திகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கணவு காண்பார்; அக்கணவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திகாரா தொழுபவர் கணவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.

இஸ்திகாரா தொழுவதற்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்:

அனைத்து விஷயங்களுக்காகவும் தொழலாம்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிக பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே! எத்தனை மனிதர்களது சிறிய விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன! இந்த நபிமொழியில் வரக்கூடிய அனைத்து விஷயங்களிலும்என்ற சொல் இதற்கு ஆதாரமாக இருப்பதோடு அதனை உறுதிப்படுத்துகின்றது.

ஆனால் இரண்டு விஷயங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்:

(1) கட்டாயமான கடமைகள், தடுக்கப்பட்டவைகள்; உதரணமாக ஒரு மனிதன் லுஹர் தொழுவதற்காக வேண்டி லுஹர் தொழுவதா? இல்லையா?என்பதற்காக இஸ்திகாரா தொழுவது கூடாது! அல்லது ஹராமக்கப்பட்டிருக்கின்ற வட்டியை வாங்குவதற்கு முன்னால் வட்டியை வாங்குவதா?இல்லையா? என்பதற்கு இத்தொழுகை தொழக் கூடாது! ஏனெனில் லுஹர் தொழுகை என்பது ஒரு கடமையான தொழுகை. அதனை ஒரு முஸ்லிம் தொழுதுதான் ஆக வேண்டும். அத்தோடு வட்டி எடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதனை ஒருவன் தவிர்ந்துதான் ஆகவேண்டும்.

(2) வழமையான விஷயங்கள், உதாரணமாக ஒருவன் உண்பதற்கும் குடிப்பதற்கும் இஸ்திகாரா தொழ முற்படுகிறான் உண்பதா? குடிப்பதா? என்று! இதற்கு இஸ்திகாரா தொழவேண்டிய தேவையும், பிரார்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் ஒருவன் உண்பதும் குடிப்பதும் இன்றியமையாத தேவைகளாகும்.

அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு:

ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்! உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது. இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான். யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

قال تعالى(وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون)

سورة البقرة :216

அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன் (அல்-குர்ஆன் 2:216)

அதிகமான மக்கள் பல விஷயங்களை வெறுத்திருப்பார்கள்; ஆனால் அவைகள் அவனது விதியில்-அல்லாஹ்வினால் நன்மையுள்ளதாக எழுதப்பட்டிருக்கும்! பிற்காலத்தில் அதில் அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அதே போன்று எத்தனையோ மனிதர்கள் ஏராளமான விஷயங்களை விரும்பி இருப்பார்கள். விரும்பப்பட்ட அவ்விஷயங்கள் அவனை அழிவின்பால் இட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கலாம். இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

قال تعالى (والله يعلم وأنتم لا تعلمون)سورة البقرة :216

அல்லாஹ் கூறுகின்றான்:

அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள் (அல்-குர்ஆன் 2:216)

சில விஷயங்களை பொருத்தவவையில், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடி இருப்பான். ஆனால் அதில் அவனுக்கு வெற்றி இருக்காது! உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக இஸ்திகாரா தொழுது பிரார்திப்பான்; அத்திருமணம் நடக்கும்; குறித்த அப்பெண்னை மணப்பான்; காலப்போக்கில் அத்திருமணம் சீர்குழைந்துவிடும்; எனவே இச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை பொருந்திக்கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கும் அதனை அவன் அறியமாட்டான்

இஸ்திகாரா தொழுகையினால் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வொன்றை காண்போம்:

ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டு ஒருவர் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். அவர் விமான நுழைவு சீட்டையும் (Boarding Pass) பெற்று விமானத்துக்கு புறப்படும் இடத்தில், அழைக்கும் வரை எதிர்பார்த்து இருந்தார். அப்போது தன்னை அறியாமல் தூக்கம் அவரை மிகைத்து விட்டது. திடீரென விழித்தபோது, விமானம் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது; வாயில்கள் மூடப்பட்டுவிட்டன; அப்போது அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!

விமானத்திற்குள் நுழைவதற்காக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அனைத்துமே பயனளிக்கவில்லை! பின்னர் தான் கவலையுற்றவராக தடுமாறிக் கொண்டிருந்தார். குறித்த விமானம், ஒரு சில வினாடிகளில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அடுத்த விமான நிலையத்திற்கு தரையிறக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஆனால் தரையிறக்கப்படுவதற்கு முன்னரே 300 பிரயாணிகளுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனது இரகசியம் என்ன?

அம்மனிதர் தீப்பிடிக்கும் என்று கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்! இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு! நிச்சயமாக அம்மனிதருக்கு பிரயாணம் செய்ய கிடைக்கவில்லை; அதன் மூலம் அவருக்கு நலவு இருந்திருக்கின்றது!

எப்பொழுது துஆவுடன் மாத்திரம் சுருக்கிக்கொள்ள வேணடும்?

சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். இவர்களை பொருத்தவரையில் தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம். குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.

قال تعالى(لا يكلف الله نفسا إلا وسعها….)سورة البقرة286

அல்லாஹ் கூறுகின்றான்:

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை (அல்-குர்ஆன் 2:286)

قال تعالى (فاتقوا الله ما استطعتم)سورة التغابن:16

அல்லாஹ் கூறுகின்றான்:

உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் (அல்குர்-ஆன் 64:16)

சகோதரா! உனது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் அல்லது தொழிற்சாலைக்கு வேலையாட்களை சேர்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுதுகொள்!

சகோதரா! நீ ஒரு தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால் அதில் நன்மையுண்டா? தீமையுண்டா? என்பதனை உன்னால் அறிய முடியாது! அல்லது ஒரு நோயாளி தனது நோயை குணப்படுத்த வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னால், அல்லது ஒரு வீட்டையோ, தொலைதொடர்பு சாதனங்களையோ, ஒரு வாகனத்தையோ வாங்குவதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! திருமணத்திற்காக தயாராகுவதற்கு முன்னால், திருமண பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்னால், மணமகன் அல்லது மணமகளைப் பார்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!

சகோதரா! இஸ்திகாரா தொழுகை வெற்றியின் ஆரம்ப படித்தரமாகும்! அல்லாஹ்வின் நாட்டத்தால் இம்மை மறுமை வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்து அவனுடன் உண்மையான முறையில் நடந்துகொண்டால், அவன் மீதே நம்பிக்கை வைத்தால், வெற்றியின் நுழைவாயில்கள் அனைத்தையுமே அவன் திறந்து கொடுப்பான்.

இது அல்லாஹ்வின் அருள்! அவன் நாடியவருக்கு அருள்பாளிக்கின்றான்! அல்லாஹ் மகத்தான அருளுக்கு உரியவனுமாவான்.

ஒரு கோப்பை பாலும் அபூஹுரைரா ரலியல்லாஹ்வின் நகைசுவையும்

ஒரு சமயம் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களுக்கு கடுமையான பசி உன்ன உணவோ இல்லை. அதனால் ஒரு தந்திரம் செய்தார்கள் எப்படி தெரிமா? முக்கியமான பணக்கார ஷஹாபாக்கள் நடந்து வரும் வழியில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.
முதலாவதாக அவ்வழியே ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு வந்தார்கள். இவர்களை பார்த்ததும் நைசாக அவர்களிடம் சாதுர்யமாக பேச்சுக் கொடுத்தார்கள். கரணம் பேசிக் கொண்டே தனது வீட்டிற்கு அலைத்துஸ் சென்று உணவு கொடுப்பார்கள் என்ற ஆசை ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை பேசி விட்டு சென்று விட்டார்கள்.

முகத்தில் கவலை பொங்க அமர்ந்து அடுத்தவர் யார்? என்று வழிமேல் விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹ் அன்ஹு வந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் முகத்தில் சந்தோசம். எப்படியும் இவர்கள் நம்மை உணவுக்காக அழைத்துப் போய் உபசரிப்பார் என்று.

நிஷா பேச்சுக் கொடுத்தார்கள் அவர்களும் பேசிவிட்டு நகர்ந்தார்கள். முகவடி போய் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் சோர்ந்துப் போய் அமர்ந்திருந்தார்கள். சற்று நேரத்தில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு வருகை புரிந்தார்கள்.
ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு நிலையோ மிகவும் பரிதாபமாக இருந்தது பசிக்காக போராடி களைத்துப் போய் உட்கார்ந்திருந்ததை கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சிரித்து விட்டார்கள். பிறகு அபூஹுரைராவே என்னுடன் வாரும் என்று அழைத்தார்கள். அவர்களும் உடன் சென்றார்கள்.
தனது விட்டிற்கு அழைத்து சென்று என்ன இருக்கு என்று தனது மனைவியிடம் கேட்டார்கள். உங்களுக்காக ஒரு கோப்பை பால் இருக்கு என்று சொல்லப்பட்டது. அதை வாங்கி இது எங்கிருந்து வந்தது என்று விசாரித்தார்கள். இன்ன இடத்தில் இருந்து நபி அவர்களுக்கு ஹதியவாக வந்தது என்று கூறினார்கள்.

பால் கிடைத்து விட்டது இனி நம் பசி தீர்ந்து விடும் இந்த ஒரு கோப்பை பால் எனக்கு தான் என்று ஆவலோடு நினைத்து கொண்டார்கள் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள்..இப்பொது கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹுவைப் பார்த்து. ஓஓஒ அபூஹுரைரா நீ சென்று திண்ணை தோழர்களை அழைத்துவாரும் என்று உத்தரவிட்டார்கள்.
அபூஹுரைரவுக்கு திக்கென தஊக்கிப் போட்டது. கையில் உள்ளது வாக்கு வரத்து போல் அல்லவா? தெரிகிறது அப்போது திண்ணை தோழர்கள் மத்தின பள்ளியில் 70 நபர் இருந்தார்கள். ஒரு கோப்பை பாலுக்கு 70 பேர்களா? இந்த பாலுக்கு எல்லோரையும் அழைத்து வர வேண்டுமா? என் பசிக்கே இது போதாது. எப்படி 70 பேர்களுக்கும் போதுமாகும? இப்படி மனதை போடு குலம்பிகொன்டர்கள்.மனதில் பெரும் பாரம் உண்டாகி விட்டது. சரி அனைவரையும் இங்கு அழைத்து வந்தால் எல்லோருக்கும் பாளை கொடுத்துவிடு கடைசியாக தனியா நான் குடிக்க நிலை ஏற்படும்? அபோது இந்த கோபியில் என்ன மிஞ்சி இருக்கப்போகிறது? என்று தனக்குள் பேசிக்கொண்டார்கள் கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கட்டளையும் நிறைவேற்ற வேண்டும் அனால் பல் எனக்கு கிடைக்குமா கிடைக்காத பவகையான குழப்பத்திலேயே மச்ஜிதிர்க்கு சென்று அனைத்து திண்ணை தோழிகளையும் அழைத்து வந்தார்கள்.

கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களை அழைத்து இதோ பல் இதனை அவர்களுக்கு கொடுப்பீராக என்றார்கள். சரி வந்தவர்களோ என்னைவிட கடும் பசி உடையவர்கள். இனி எனக்கு எங்கு பால் மிஞ்சப் போகிறது? என்று நினைத்துக் கொண்டவர்களாக திண்ணை தோழர்களுக்கு பாலை கொடுத்தார்கள் மன வேதனையுடன். இது பெரும் தமாஷாக இருந்தது. முதலில் ஒருவர் குடித்தார். வயர் நிறைய குடித்து விட்டு கோப்பையை அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்களிடம் கொடுத்தார்கள். எங்கிப்போன அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹுஅந்த கோப்பை அடுத்தவருடம் கொடுத்தார் அவரும் அப்படியே செய்தார் இப்படி 70 பேர்களிடமும் ௭௦ முறை கொடுத்து. வாங்கி கொண்டிருந்தார்கள். இந்த காட்சி மிகவும் நகைசுவையாக இருந்தது. கடைசி நபர் குடித்தும் அந்த கோப்பையை தனக்கு தான் தருவார்கள். தன்னை தான் குடிக்க சொல்வார்கள் என்று ஆர்வமாய் ஆவலோடு இருந்த பொது அந்த கோப்பையை கண்மணி நபி அவர்கள் வாங்கி கொண்டார்கள். பதறிப் போனார் ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள். இவர்களின் இந்தநிலையை கண்ட கண்மணி நபி அவர்கள் சிரித்து விட்டார்கள். இப்போது நானும் நீயும் தான் மீதி இருக்கிறோம் இல்லையா? என்றார்கள் நகைசுவையாக.

ஆமாம் யாரா சூலல்லாஹ்! என்று பரிதாபமாக கூறினார்கள். அபூஹுரைரா ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள்.
இந்த கோப்பை பால் இப்பொழுது யாருக்கு? ஒரே பரபரப்பு அபூஹுரைராவே இதை நீரே குடி என்று கொடுத்தார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு இப்பொழுது தான் பசிக்கு பால் கிடைத்த மகில்ச்சியில்படப்பட்டவென வாங்கி கிடித்தார்கள். பக்கத்தில் நிண்டு கொண்டு. இன்னும் குடிப்பஈரான என்றார்கள். மீண்டும் குடித்தார்கள். இன்னும் குடிப்பஈராஹா என்றார்கள். குடித்தார்கள். குடித்தார்கள் குடித்து கொண்டே இருந்தார்கள். இந்த காட்சி தமஷகவும் நகைசுவையாகவும் இருந்தது. கடைசியாக யாரசூலல்லாஹ்! இனிமேல் என்னால் குடிக்கவே முடியாது. பசி அடங்கிவிட்டது. என்று சொன்னார்கள். அப்படியா? சரி என்னிடம் தாரும் என்று கோப்பையை வாங்கி அதில் உள்ள பாலை கடைசியாக கண்மணி நபி ஸல்லால்ஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் குடித்தார்கள்.

மருமகனை கிண்டல் செய்த மாமனார்!

கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் ஒரு விருந்திற்கு சென்றார்கல். அவர்கள் கூட ஹஜ்ரத் அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்களும் சென்றார்கள். விருந்து நடை பெரும் வீட்டில் கண்மணி கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்களின் பக்கத்தில் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் முன்பு உணவாஹா பேரிட்சபலம் வைக்கப்பட்டிருந்தது ஏறலமனவர்கள் அவ்விருந்தில் கலந்து கொண்டனை. அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் தனது அடுத்த பக்கத்தில் அமர்ந்து இருந்த மற்றொரு தோழரோடு மிகவும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடும் போது பேசிக்கொண்டிருந்ததால். சாப்பிட முடியாது இதை பார்த்துவிட்ட கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் பழங்களை தான் சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டைகளை அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன்பாக சேர்த்து கொண்டே வந்தார்கள்.

அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன் அதிகம் கோட்டைகள் சேர்ந்து விட்டது. உஷாரான கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்களை கேலி செய்யும் விதமாக சிரல் விருந்துக்கு வந்து அளவுக்கு அதிகமாக சாபிட்டுவிட்டார்கள் . இதோ எவ்வளவு கொட்டைகள். என்று சுட்டி காட்டினார்கள். திடுக்கிட்ட அலி ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்கள் நகைசுவையாக நம்மை கேலி அல்லவா செய்கிறார்கள்? என்று புரிந்து கொண்டு அவர்களும் தமாஷாக ஆமாம் நானாவது இவ்வளவோ பழங்களை சாப்பிட்டுள்ளேன். சிலர் கோட்டைகளோட அல்லவா சப்பிட்டுல்லார்கள். என்னை விட அதிகமல்லவா? சாப்பிட்டிர்க்க வேண்டும். என்று கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம அவர்களின் முன்பாக கொட்டைகள் இல்லாமல் இருந்ததை சுட்டி காட்டி நகைசுவையாக பதிலளித்தார்கள் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒரே சிரிப்

பவுர்ணமி இரவில் நடந்த நகைசுவை உரையாடல் (ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா)

ஒரு நாள் பவுர்ணமி இரவு மதினாவின் மணல் வெளியில் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களும் ஆருயிர் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் தனிமையில் அமர்ந்து சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
சந்திரன் தன அழகையெல்லாம் பூமியின் மீது கொட்டிக் கொண்டிருந்தது.
வானத்தில் கோடி கணக்கான விண்மீன்கள் பளிச் பளிச்சென தன அழகு முகம் காடி கொண்டிருந்தன ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு திடீர்ரென ஒரு சந்தேகம் தோன்றியது. தனது அருமை கணவர் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் கேட்டது தெளிவு பெற இது தன தக்க தருணம் என்று எண்ணியவர்களாக. சந்தேகத்தை கேட்க துவங்கினார்கள். அல்லாவின் தூதரே! வனத்தில் என்ன முடியாத அளவுக்கு இவ்வளவு நட்ச்சத்திரங்கள் உள்ளனவே. இந்த நட்ச்சத்திரங்கள் அளவுக்கு உலகில் யார் அமல் செய்து இருப்பார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம் என்று நகைசுவையாய் கேட்டார்கள்.
(தனது தந்தை அபூபக்கர் ரலியல்லாஹ் அன்ஹு அவர்கள் இவ்வளவு நன்மைகளை செய்து இருப்பார்கள் நிச்சயம் அவர்களின் பெயரைத்தான் கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொல்வார்கள் என்ற மகிழ்ச்சியில் இப்படி கேட்டார்கள்.)
தனது அன்பு மனைவி உள்ளரங்கத்தைப் புரிந்து கொண்ட கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். குறும்பு செய்யத் துவங்கினார்கள்.ஆயஷவே! இந்த வனத்தில் மீண்டும் நட்ச்சத்திரங்கள் அளவுக்கு உலகில் ஒருவர் நன்மை செய்து இருப்பார் என்றால் அது உமர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்கள் தன என்று குறும்புடன் சொன்னார்கள்.
இதைக் கேட்ட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்ப்பட்டது, அவர்களும் தனக்கே உரிய சொல்ல கோபத்துடன் அப்படியானால் எனது தந்தையின் நன்மைகல் எங்கே போயின? என்று கேட்டார்கள் அப்பாவியாக.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் நினைப்புக்கு மாற்றமாக சொன்னதால் அவர்களின் செல்ல கோபத்தைப் புரிந்து கொண்ட கண்மணி நபி ஸல்லல்லஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் புன்னகை பூத்தவர்களாக ஆயஷவே! இந்த வானத்தில் உள்ள விண்மீன்கள் அளவுக்கு உமர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்கள் நன்மைகள் செய்து இருப்பார்கள் என்றால்
உமர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த எல்லா நன்மைகளும் அபூபக்கர் ரலி அல்லாஹு அன்ஹு அவர்களும் ஒரு நன்மைக்குச் சமமானதே என்று சொன்னார்கள்.
இதை கேட்ட ஆயிஷா ரலி அல்லாஹு அன்ஹா அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு முகம் சிரிப்பால் மலர்ந்தது.

9 மே, 2011

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.‏

உமர் (ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) தாம். அவர்கள், 'உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!'' என்று பிரார்த்தித்துவிட்டு, '(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூபக்ர் - ரலி - அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், 'நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்'' என்றும் 'நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்'' என்றும் 'நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்'' என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன் எனக் கூறினார்கள்.
புஹாரி : 3685 இப்னு அப்பாஸ் (ரலி).
1546. 'நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு 'மார்க்கம்' 'என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்''.
புஹாரி : 23 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) .
நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒருபால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதமிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப்பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'கல்வி' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.
புஹாரி: 82 இப்னு உமர் (ரலி).
நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக்கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த்தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை.. அல்லது இரண்டு வாளிகள் நீரை.. இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தா பின் மகன் உமர் எடுத்தார். உமர் இறைத்தைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3664 அபூஹுரைரா (ரலி).
கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி... அல்லது இரண்டு வாளிகள்... தண்ணீரை(சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக! பிறகு உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3682 இப்னு உமர் (ரலி).
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், '(கனவில்) 'நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன்' அல்லது 'சொர்க்கத்திற்குச் சென்றேன்' அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், 'இது யாருடையது?' என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), 'இது உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது'' என பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உம்முடைய ரோஷம் குறித்து நான் அறிந்திருந்தது என்னை (உள்ளே செல்லவிடாமல்) தடுத்துவிட்டது'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் இப்னு கத்தாப் (ரலி), 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார்கள்.
புஹாரி :5226 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).
நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோதுஅவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், 'இந்த அரண்மனை யாருடையது?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். 'உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது. ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?' என்று கேட்டார்கள்.
புஹாரி : 3242 அபூஹூரைரா (ரலி).
. (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே'' என்றார்கள். உமர் (ரலி), 'எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) 'தமக்குத் தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கிறீர்கள்'' என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்'' என்று கூறினார்கள்.
புஹாரி :3294 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்து விட்டபோது, அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தம் சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர் (ரலி) எழுந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுகை நடத்தப்போகிறீர்கள்!'' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்'' என்று கூறிவிட்டு, '(நபியே!) நீங்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்'' என்று கூறுகிறான். நான் எழுபது முறையை விட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்'' என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இவர் நயவஞ்சகராயிற்றே!'' என்று கூறினார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், 'அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) தொழுகை நடத்தாதீர். அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத்தை அருளினான்.
புஹாரி : 4670 இப்னு உமர் (ரலி).

திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள பிரார்த்தனைகள்‏

رَبَّنَـا ظَلَمْنـَا أَنْفُـسَنَا وَإنْ لَّمْ تَغْفِـرْلَنَا وَتَرْحَمْنَـا لَنَكُـوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
01. எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து, கிருபை செய்யா விட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்ட மடைந்தவர்களாகி விடுவோம்.

رَبِّ إنِّيْ أَعـُوْذُ بِكَ أَنْ أَسْـأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْنَ
02. இறைவா! எனக்கு எதைப்பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்தில் கேட்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை மன்னித்து, எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் ஆகிவிடுவேன்

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وِلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ
03. இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும் முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் நீ மன்னிப் பளிப்பாயாக!.

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
04. எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (நல்லறங்களை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயமாக நீயே யாவற்றையும் கேட்பவனும் அறிபவனுமாவாய். மேலும் நீ எங்களை மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மன்னிப்பை ஏற்றுக் கொள்பவனும் கிருபை செய்பவனுமாவாய்.

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّ يَّـتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
05. இறைவா! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவா! (எங்கள்) பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக.

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
06. எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!
رَبِّ هَبْ لِيْ حُكْمًاوَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي اْلآخِرِيْنَ وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ

07. இறைவா! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக! மேலும் நல்லவர்களுடன் என்னைச் சேர்த்துவைப்பாயாக! மேலும் பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்து வாயாக! மேலும் பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக் காரர்களில் ஒருவனாக என்னை ஆக்கிவைப்பாயாக!

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ
08. இறைவா! எனக்கு ஸாலிஹான (நற்குணமுடைய) மகனைத் தருவாயாக!

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ
09. எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம். நாங்கள் உன்னையே நோக்குகிறோம். மேலும் உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது.

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَاإِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
10. எங்கள் இறைவா! நிராகரிப்பாளர்களுக்கு எங்களை சோதனைப் பொருளாக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக! நிச்சயமாக நீயே மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَـكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
11. இறைவா! என்மீதும் என்பெற்றோர் மீதும் நீ புரிந்துள்ள அருட்கொடைகளுக்காக நான் நன்றி செலுத்தவும் நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும் எனக்கு அருள்செய்வாயாக! மேலும் உன் கிருபையால் என்னை உன் நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!

رَبِّ هَبْ لِيْ مِنْ لَّدُنْكَ ذُرِّ يَّـةً طَـيِّـبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ
12. இறைவா! உன்னிடமிருந்து எனக்கு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுப்பவனாக உள்ளாய்.

رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ
13. இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதிருப்பாயாக! நீயோ அனந்தரங் கொள்வோரில் மிக மேலானவன்.

لاَإِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
14. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.

رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْ وَيَسِّرْ لِيْ أَمْرِيْ وَأحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِيْ يَفْقَهُوْا قَوْلِيْ
15. இறைவா! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப் படுத்தி) விரிவாக்கித் தருவாயாக! என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக! என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْلِيْ
16. இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன். ஆகவே நீ என்னை மன்னிப்பாயாக!

رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
17. எங்கள் இறைவா! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்பினோம். (உன்னுடைய) தூதரை நாங்கள் பின்பற்றினோம். எனவே (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் எங்களை பதிவு செய்து கொள்வாயாக!

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِيْنَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ
18. எங்கள் இறைவா! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!

رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَي الْقَوْمِ الْكَافِرِيْنَ
19. எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச்செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! நிராகரிக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!

رَبَّنَا آتِنَا مِن لَّدُنْكَ رَحْمَةً وَهَيِّءْ لَنَا مِنْ أَمْرِنَارَشَدًا
20. எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு அருள் செய்வாயாக! மேலும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை (பயனுள்ளதாக) சீர்திருத்தித் தருவாயாக!

رَبِّ زِدْنِيْ عِلْمًا
21. இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!

رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِـيْنِ وَأَعُوْذُبِكَ رَبِّ أَنْ يَحْـضُـرُوْنِ
22. இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் இறைவா! உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

رَبِّ إغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
23. இறைவா! என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீதான் கிருபையாளர்களில் மிகமேலானவன்.

رَبَّنَا آتِنَا فِيْ الدُّنْيَا حَسَنَةً وَفِي اْلآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
24. எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தருவாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தருவாயாக! எங்களை நரக வேதனையிலிந்து காத்தருள் வாயாக!

سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيْرُ
25. எங்கள் இறைவா! உன் அழைப்பை நாங்கள் செவிமடுத்தோம். உன் கட்டளைகளுக்கு வழிப்பட்டோம். உன்னிடமே மன்னிப்புக் கேட்கிறோம். நாங்கள் மீளுவதும் உன்னிடமே தான்.

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَّسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَالاَ طَاقَةَ لَناَ بِهِ وَاعْفُ عَنَّا وأغْفِرْلَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
26. எங்கள் இறைவா! மறந்து போயிருப்பினும் அல்லது தவறு செய்திருப்பினும் எங்களை குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன்சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட சுமையை எங்கள்மீது சுமத் தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்துக் கொள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். நிராகரிக்கும் கூட்டத்தினரை (நாங்கள்வென்றிட) எங்களுக்கு உதவி செய்வாயாக!

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْـتَـنَا وَهَبْ لَنَا مِنْ لَّـدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
27. எங்கள் இறைவா! நீ எங்களுக்கு நேர்வழியை காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதிருப்பாயாக! மேலும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங்கொடையாளன்.

رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْـتَهُ وَمَا لِلظَّالِمِيْنَ مِنْ أَنْصَارٍ رَبَّـنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِيْ لِلإْيـمَانِ أَنْ آمِنُوْا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّـنَا فَاغْفِرْلَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَـيِّـئَاتِنَا وَتَوَفَّـنَا مَعَ اْلأَبْرَارِ رَبَّـنَا وَآتِنَا مَا وَعَدْتَّـنَا عَلَى رُسُلِكَ وَلاَتُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَتُخْلِفُ الْمِـيْعَادَ
28. எங்கள் இறைவா! (வானம், பூமி ஆகிய) இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக! எங்கள் இறைவா! நீ எவரை நரகநெருப்பில் புகுத்துகிறாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய். மேலும் அக்கிரமக்காரார்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை. எங்கள் இறைவா! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்! என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! எங்களுடைய ஆத்மாக்களைச் நல்லோரின் ஆன்மாக்களுடன் கைப்பற்றுவாயாக! எங்கள் இறைவா! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாமநாளில் எங்களை இழிவு படுத்தாதிருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.

رَبنَّاَ آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
29. எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களில் நீ மிகமேலானவன்.

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا إِنَّهَا سَاءَتْ مُسْـتَـقَرًّا وَمُقَامًا
30. எங்கள் இறைவா! எங்களை விட்டும் நரக வேதனையை திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّ يَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا
31. எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததிகளிடமிருந்தும் எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! மேலும் பயபக்தியுடைய வர்களுக்கு எங்களை வழி காட்டியாக ஆக்குவாயாக!

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّيْ تُبْتُ إِلَيْكَ وَإِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ
32. இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்தவும் உன் திருப்பொருத்தத்தை அடையக்கூடிய நல்லறங்களைச் செய்யவும் எனக்கு அருள்புரிவாயாக! எனது சந்ததியரையும் (நல்லவர்களாக) சீர் படுத்துவாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன். மேலும் நிச்சயமாக நான் உனக்கு முற்றிலும் கட்டுப்படுபவனாக உள்ளேன்.

رَبَّنَا اغْفِرْ لَنَا وَِلإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِاْلإِيْمَانِ وَلاَتَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِّـلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ
33. எங்கள் இறைவா! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக! மேலும் ஈமான் கொண்டவர்களைப்பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மிக இரக்கமுடையவன், கிருபைமிக்கவன்.

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْلَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
34. எங்கள் இறைவா! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
35. எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் (உன்?? மீது) நம்பிக்கை கொண்டோம். எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக!

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
36. எங்கள் இறைவா! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி கூறுவோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!

17 அக்டோபர், 2010


மரணம்

மரணம் இவ்வுலகில் உயிருள்ளோரின் இறுதிக் கட்டமாகும். அல்லாஹ் கூறுகிரான். ஒவ்வொரு ஆன்மாவும் மரனத்தை சுகித்தே தீர வேண்டும்.(3:185) பூமிமீதுள்ள எல்லோரும் அழிந்துபோகக்கூடியவர்களே.(55:26) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்: நபியே நிச்சயமாக நீரும் மரணிக்கக் கூடியவரே இன்னும் அவர்களும் மரணிக்கக்கூடியவர்களே(39:20)இவ்வுலகம் எந்த மனிதருக்கும் நிரந்தரமானதல்ல. அல்லாஹ் கூருகிறான் நபியே உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தர வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை.(21:34)1. மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக விஷயமாகும். இவ்வாறிருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை மறந்திருக்கின்றனர், ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் மரணத்தை சந்திக்கத் தயாராக இருப்பதும் அவசியமாகும். இவ்வாறே அவன் தன் மறுமை வாழ்விற்காக இவ்வுலக வாழ்வில் அதற்குறிய நேரம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை செய்து தாயாராகிக் கொள்வது அவசியமாகும்..நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். 5 நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் 5 நிலைமைகளைப் பேணிக் கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும் நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும் வேலைக்கு முன் ஓய்வையும் வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும் ஏழ்மைக்கு முன் செல்வத்தையும் பேணிக் கொள்.உலகிலிருந்து எந்தப் பொருளும் இறந்து விட்ட வனுடன் அவனுடைய மண்ணறைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை நிச்சயமாக அவனுடன் தங்கியிருப்பது அவனுடைய செயல்கள் மட்டுமே. எனவே நற்செயல்களைச் சித்தப்படுத்திக் கொள்வதில் நீ அக்கறை கொள். அதன் மூலம் தான் நீடித்த நற்பாக்கியத்தை நீ அடைய முடியும். அல்லாஹ்வின் உதவியால் வேதனையிலிருந்து ஈடேற்றமும் பெற முடியும்.2. தெரிந்துக் கொள். மனித வாழ்க்கை தவனை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாத அளவு தெளிவில்லாத விஷயமாகும். எனவே யார் எப்போது எந்த இடத்தில் மரண்மடைவார் என்பதை யாரும் அறிய முடியாது. திண்ணமாக இது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த மறைவான நானங்களுள் ஒன்றாகும்.3. மரணம் வந்து விட்டால் அதைத் தடுக்கவோ பிற்படுத்தவோ அதை விட்டு வெருண்டோடவோ முடையாது . அல்லாஹ் கூறுகிறான். ஒவ்வொரு சமுதாயத்தவர்களுக்கும் ஒரு தவணையுள்ளது. அவர்களின் தவணை வந்து விட்டால் அவர்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.(7:34)4. ஒரு முஃமீனுக்கு மரணம் வந்து விட்டால் நறுமணம் வீசுகின்ற அழ்கிய தோற்றத்துடன் மலக்குல் மெள்த் உயிரைக் கைப்பற்றும் வானவர் அவனிடம் வருகிறார். அவருடன் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறும் அருளுக்குரிய மலக்குகளும் வருகிறார்கள்.
Posted by இஸ்லாம் at

இறுதி நாள்..அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனுக்கே புகழ்னைத்தும். கருனையும் ஈடேற்றமும் நபி மார்கள் ரசூல் மார்கள். அனைவரினும் மீதும் அவர்களின் குடும்கத்தார்கள் தோழ்ர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.நிச்சயமாக மறுமை நாளை நம்புவது ஈமானின் அடிப்படைகளிலும் அதன் ஆறு கடமைகளிலும் ஒன்றாகும். எனவே மறுமை தொடர்பாக இறைவேதத்திலும் ஆதாரப்பூர்வமாக நபிவழிகளிலும் வந்த வற்றை நம்பாதவரை ஒருவன் இறைவிசுவாசியாக ஆக முடியாது.. நிச்சயமாக மறுமை நாளை அறிந்து அதை அதிகமாக நினைவு கூருவது மனித வாழ்க்கையைச் சீர்ப்படுத்துதல் இறையச்சத்தை ஏற்படுத்துதல் இறைமார்க்கத்தில் உறுதியாக இருந்தல் போன்ற பல நன்மைகளுக்கு வழிகோலும் எனவே மறுமை நாளின் அமளிகள். கடுமைகள் குறித்து பாரமுகமாக இருப்பதுதான் பெருமளவில் மனிதனின் உள்ளத்தைக் கல்லாக்கி அவனைப் பாவங்கள் புரீந்திட தூண்டக்கூடியதாக உள்ளது.ம்றுமை நாளை குறித்து அல்லாஹ் கூறுகிறான். அந்நாள் குழ்ந்தைகளை நரைக்கச் செய்துவிடும்(73:17) மனிதர்களே நீங்கள் உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறுதி நாளின் அதிர்ச்சி மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்தாளில் பாலூட்டும் குழ்ந்தையை மறந்து ஒவ்வொரு தாயும் தான் பாலூட்டும் குழ்ந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பிணியும் தான் சுமந்திருக்கும்குழ்ந்தையைப் பெற்றெடுத்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் மனிதர்களை மதிமங்கியவர்களாகக் காண்பீர்கள். அவர்கள்(மதுவில்)மயங்கியவர்கள் அல்லர்.எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்(22:1,2)

10 அக்டோபர், 2010


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ...

5:6. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்!...

உளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக நன்மைகள்.
கடந்த முறை பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இவ்வுலக, மற்றும் மறுஉலக வாழ்க்கையின் நன்மைகளைப் பார்த்தோம், தொழுகையாளிகளுக்கு மட்டுமே அது சாத்தியம் என்பதையும் தொழாதவர்களுக்கு அது சாத்தியமில்லை என்பதையும் அறிந்தோம். இப்பொழுது உளூச் செய்வதினால் ஏற்படும் இரு உலக வாழ்க்கையின் நன்மைகளைப் பார்ப்போம்.

உலக நன்மை.
பாங்கிற்கு பதிலளித்ததும் தொழுகைக்குத் தயாராவதற்கு முன் உடலில் முக்கியமானப் பகுதிகளை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்வதே உளூவாகும் என்பதை அறிந்து வைத்திருக்கிறோம்.

உளூச் செய்வதற்கு முன் பற்களை துலக்குவது அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிமுறைகளில் உள்ளதாகும் அன்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் குச்சியின் நுனிப் பகுதியை மென்று ப்ரஸ் போல் ஆக்கிக் கொண்டு உளூவிற்கு முன் பற்களை நன்றாக துலக்கிக் கொள்வார்கள். அத்துடன் பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது இறைவனின் திருப்தியைப் பெறும் செயல் என்றுக் கூறி மக்களையும் அவ்வாறே செய்வதற்கு ஆர்வமூட்டினார்கள்.

''பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்; இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்' எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: நஸயீ 5இ அஹ்மத் 23072

பற்களை துலக்கி சுத்தமாக வைத்துக்கொள்வது இறைதிருப்தியை ஏற்படுத்தும் செயல் என்று சொன்ன ஒரே மார்க்கம் உலகில் இஸ்லாம் மட்டுமே. சொன்ன மாதிரியே அண்ணல் அவர்கள் தங்களுடைய இறுதிகாலம் வரை மரணத்தருவாயிலும் கூட அதைப் பின்பற்றினார்கள்

...நபி(ஸல்) அவர்கள் (கடுமையான நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் மிஸ்வாக்-குச்சியைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்தார்கள். எனவே, நான் அந்தக் குச்சியை எடுத்துமென்று பிறகு அதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கி விட்டேன். என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி. 3100.

அல்லாஹ் திருப்தி அடையும் எந்த செயலிலும் இரட்டிப்பு நன்மைகள், அல்லது பலமடங்கு நன்மைகள், அல்லது பல்கிப் பெருகும் நன்மைகள், அல்லது மரணத்திற்குப் பிறகு தொடரும் நன்மைகள் என்று கொத்துக் கொத்தான நன்மைகள் அடங்கி இருக்கும்.

1400 வருடங்களுக்கு முன் அண்ணல் அவர்கள் பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருக்கும் செயலை அல்லாஹ் திருப்தி அடையும் செயல் என்றுக் கூறி, அதை அன்று அவர்களும் செய்து, மக்களுக்கும் ஏவியது அது இன்று உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு திறனையும் கொண்டுள்ளது என்பதை ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்கினால் 70 சதவிகிதம் இதய நோய் வராது என்று இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.

பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினயதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி– 888)

அதிகாலை ஃபஜ்ரு தொழுகைக்கு முன் பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம், அதேப்போன்று உறங்குவதற்கு முன் செய்யும் உளூவிற்கு முன்பும் பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம். காரணம் இந்த இரண்டு நேரமும் வீட்டிலிருப்போம் என்பதால் அண்ணல் அவர்களின் வழிமுறைப்படி பல்துலக்கி விட்டே உளூச் செய்வோம். மருத்துவர்கள் கூறிய இரண்டு முறை என்பது இதில் மட்டுமே அடங்கி விடுகிறது.

அந்த இரண்டு நேரம் போக மீதி நேரத் தொழுகைளுக்காக செய்யும் உளூவிற்கு முன்பு இயன்றால் பல்துலக்குவோம் அதற்கு இயலவில்லை என்றால் உளூவின்போது விரல்களால் பற்களை தேய்த்து தண்ணீர் விட்டு வாய் கொப்பளிப்போம் இதிலும் சாப்பிட்டப் பின் பற்களின் இடுக்குகளில் தேங்கி நிற்கும் அழுக்குகள் அதிகபட்சம் வெளியாகி விடுவதால் பாரிய இதய நோயிலிருந்து உடல் பாதுகாக்கப்படுகிறது. அல்லாஹ்வுக்கு நன்றிக்கூறி அவன் தூதருக்கு ஸலவாத் கூறுவோமாக.

மறுமைக்கான நன்மைகள்.
உளூச் செய்வதற்கு முன் அண்ணல் அவர்கள் கூறியதுப் போன்று பல்துலக்கி விட்டு அண்ணல் அவர்கள் காட்டித் தந்த வழியில் உளூவை முடித்தப் பின் அதிலிருந்து வெளியேறும் தண்ணீரில் அழுக்குடன் சேர்ந்து சிறியப் பாவங்களும் வெளியேறத் தொடங்குகிறது.

ஒரு முஸ்லிமான அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால்இ கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போதுஇ கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித் துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில்இ அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லீம். 412

அண்ணல் அவர்கள் காட்டித் தந்த வழியில் உளூச் செய்து முடித்ததும் கீழ்காணும் இரண்டு வார்த்தைகள் அடங்கிய துஆவைக் கூறவேண்டும்.

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு

உளூச் செய்த பின் மேற்கண்டவாறு யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற வாசல் வழியாக நுழையலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் 345

முறையாக உளூச் செய்து முடித்து விட்டு மேற்காணும் இரண்டே இரண்டு வார்த்தைகள் அடங்கிய பிரார்த்தனையைக் கூறினால் உலகில் வாழும் பொழுதே அவருக்காக சொர்க்கத்திற்கான இறைவனின் தீர்ப்பு உறுதியாகி விடுகிறது. அதற்கு இன்னும் உதாரணமாக பிலால் (ரலி) அவர்களின் காலடி ஓசையை சொர்க்கத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டது.

'பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீர் செய்த சிறந்த செயல் பற்றிக் கூறுவீராக! ஏனெனில் உமது செருப்பு சப்தத்தைச் சொர்க்கத்தில் நான் கேட்டேன்' என்றார்கள். அதற்கு பிலால் (ரலி) 'இரவிலோஇ பகலிலோ நான் உளூச் செய்தால் அந்த உளூவின் மூலம் தொழ வேண்டும் என்று நான் நாடியதைத் தொழாமல் இருந்ததில்லை. இது தான் நான் செய்த செயல்களில் சிறந்த செயல்' என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரீ 1149இ முஸ்லிம் 4497

இத்துடனும் உளூவிற்கான மறுமை நன்மைகள் முடிந்து விடாமல் இன்னும் தொடருகிறது ஒவ்வொரு தொழுகைக்கும் முறையாக உளூச் செய்தவர்களை மறுமையில் ஒளிமயமனாவர்களே ! என்றழைக்கப்பட்டு சங்கை செய்யப்படுவார்கள் என்றும் பெருமானார்(ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) 'நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்' என்றார்கள்'' நுஅய்கி அல் முஜ்மிர் அறிவித்தார். நூல் : புகாரி 136ஃ133.

இலேசான இரண்டு வார்த்தைகள் அடங்கிய பிரார்த்தனைக்கடுத்து இரண்டு, அல்லது விரும்பிய தொழுகையை வீட்டில் தொழுதுவிட்டு பள்ளியை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அவரது கால்கள் தரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை எழுதி ஒருத் தகுதி உயர்த்தப்படுகிறது.

யார் உளூ செய்து அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்;அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான்.... முஸ்லிம் 1159.

சுப்ஹானல்லாஹ் தயாள குணமுடைய கருணையாளன் அல்லாஹ் தன்னை வணங்க வரும் அடியார்களுக்காக பாங்கில் தொடங்கி, உளூச் செய்வதிலிருந்து பள்ளிக்கு நடந்து வரும் வரையில் மட்டுமே மறுமையின் வெற்றிக்காக இத்தனை நன்மைகளை வாரி வழங்குகிறான் என்றால் பள்ளிக்குள் நுழைந்து அண்ணல் அவர்கள் காட்டித் தந்த முறையில் தொழுது விட்டு வெளியே வரும் பொழுது எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்பதை சிந்தித்தால் ஒருத் தொழுகையையாவது தவற விடுவோமா ?

வெள்ளிக்கிழமை அல்லாத பிற நாட்களில் ஒரே வரிசை அல்லது அதிகபட்சமாக இரண்டு வரிசையில் தான் பள்ளியில் கூடுகிறோம்.

நிரந்தரமான மறுமை வாழ்வுக்காக உதவக்கூடிய தொழுகையின் மூலம் குவியும் ஏராளமான நன்மைகளை அள்ளிக்கொள்ள ஒவ்வொரு நேரத் தொழுகையாலும் பள்ளியை நிரப்ப மனமில்லாமல் நிரந்தரமில்லாத உலக வாழ்க்கைக்காக உதவக்கூடிய பொருளாதாரக் குவியல்களை அள்ளிக் கொள்வதற்காக அல்லும், பகலுமாய் அல்லாஹ்வை மறந்து அலைகிறோம்.

பொருளாதாரத்தை குவிப்பதற்காக அல்லும், பகலுமாய் அலைவதை இஸ்லாம் ஒருக்காலும் தடுக்கவே இல்லை, மாறாக அதை இஸ்லாம் தூண்டுகிறது. ஆனால் அதனூடே சிறிது நேரத்தை மட்டும் ஒதுக்கி அல்லாஹ்வை தொழுது கொள்ளச் சொல்கிறது இஸ்லாம், பொருளாதாரம் ஈட்டுவதுனூடே தொழுதுகொண்டால் அந்தத் தொழுகை அவர் ஈட்டும் பொருளாதாரத்திலும் ஹராம் கலந்து விடாமல் ஃபில்டர் செய்து ஹலாலாக்குகிறது. இது இரட்டிப்பு நன்மை.

சிந்தியுங்கள் சகோதரர்களே !!!
உலகில் நம் கண் முன்னே நிகழும் நம் கண்ணின் மணியான எத்ததைனையோப் பேரின் மரணத்தை நம்மால் தடுத்து நிருத்த முடிந்திருக்கிறதா ? முடியவில்லை !

அதனால் மறுஉலகில் நமக்கு கொடுக்கப்படுகின்ற தண்டனையை நம்மால் தடுத்துக் கொள்ள முடியுமா ? முடியாது !

அல்லது சிறிய அளவிலேனும் குறைத்துக் கொள்ளவாவது முடியுமா ? அதுவும் கூட முடியாது !

மறுமையில் மிகச் சிறிய தண்டனை என்பதே சூரியன் பிடரிக்கு சமீபத்தில் எரிந்து கொண்டிருக்கும் பொழுது ஆணியினாலான செருப்பு அணிவிக்கப்பட்டு நிருத்தப்படுவது என்றால் பெரிய தண்டனை எப்படி இருக்கும் ?

சிந்தியுங்கள் சகோதரர்களே !
நிரந்தரமில்லாத உலகில் சிறிது கால இன்பத்திற்கான பொருளாதாரக் குவியலா ?

நிரந்தரமான மறு உலகில் நீண்ட கால நிம்மதிக்காக நன்மையின் குவியலா ?

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழியில் பல்துலக்கி, முறையாக உளூச்; செய்து அதன் மூலம் உலகில் கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தையும், மறுமையில் ஒளிமயமானவர்களாக சுவனத்தின் திறந்த எட்டு வாசல்களில் விரும்பிய வாசலில் நுழையும் நன் மக்களாக நம்மை அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்துஇ அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தித் தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உக்பா பின்ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் (397)

ஒரு நாளைக்கு இரு முறை பல் துலக்கினால் 70 சதவிகிதம் இதய நோய் வராது