அண்ணலாகிய அழகிய முஹியத்தீன், ஆராகும் அன்புடன் சுல்தான் முஹியத்தீன், புண்ணிய மாகியே பீரே முஹியத்தீன், பிரிசமாகிய வெற்றி முஹியத்தீன், மன்னராம் அப்துல்காதிரே முஹியத்தீன், வரிசை பெற்றிடும் பாவா முஹியத்தீன், முன்னாலே! என்பவே! ஆதி இறைவனே துணை செய்வாயே! அனைத்தையும் படைத்து ஆதி ஹக்கனே! அழிவே இல்லா மெய்பொருளே! எந்தன் மனத்திரு கருமம் எல்லாம் அதியவா! கிருபை தந்து நாம் நினைத்திடும் காரியம் எல்லாம் ஆதியே கிருபை செய்வாய், உள்ளத்தில் அடியார் போற்ற உதவி தந்தருள்வாய். அலை கடல் புவி வானம் மண்டபம் ஒளியுள்ளவனே! நிலை திசை அறியும் கோமான் நெடியவா உமை நான் போற்ற பலவிதமான துன்பம் மிடுமை துயரம் எல்லாம் தொலை வழி தூரம் ஆக்கி முஹியத்தீனின் அடிமை நான் உகந்து கேட்கும் அனைத்தையும் தந்தருள்வாய் ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.
3 அக்டோபர், 2012
அண்ணலாகிய அழகிய முஹியத்தீன், ஆராகும் அன்புடன் சுல்தான் முஹியத்தீன், புண்ணிய மாகியே பீரே முஹியத்தீன், பிரிசமாகிய வெற்றி முஹியத்தீன், மன்னராம் அப்துல்காதிரே முஹியத்தீன், வரிசை பெற்றிடும் பாவா முஹியத்தீன், முன்னாலே! என்பவே! ஆதி இறைவனே துணை செய்வாயே! அனைத்தையும் படைத்து ஆதி ஹக்கனே! அழிவே இல்லா மெய்பொருளே! எந்தன் மனத்திரு கருமம் எல்லாம் அதியவா! கிருபை தந்து நாம் நினைத்திடும் காரியம் எல்லாம் ஆதியே கிருபை செய்வாய், உள்ளத்தில் அடியார் போற்ற உதவி தந்தருள்வாய். அலை கடல் புவி வானம் மண்டபம் ஒளியுள்ளவனே! நிலை திசை அறியும் கோமான் நெடியவா உமை நான் போற்ற பலவிதமான துன்பம் மிடுமை துயரம் எல்லாம் தொலை வழி தூரம் ஆக்கி முஹியத்தீனின் அடிமை நான் உகந்து கேட்கும் அனைத்தையும் தந்தருள்வாய் ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.
22 செப்டம்பர், 2012
பிள்ளைகளை வளர்ப்பது எப்படி ?
இனி பிள்ளைகளை எம்முறையில் வளர்ப்பது நல்லது என்பதை ஆயாய்வோம்.
1. இல்மு
2. அமல்
3. தர்பியத்
அமல் இல்லா இல்மு பழம் தரா மரம் போன்றது. பலன் தராத மரத்தை யாரும் விரும்புவதில்லை.இல்மிலும் அமலிலும் ஒரே விதமான எழுத்துக்களை பார்க்க முடியும். பிள்ளைகளுக்கு வெறும் இளமை மட்டும் கற்றுக் கொளுப்பதில் பயனில்லை கற்ற இல்மின் பிரகாரம் அமல் செய்வதற்கு தர்பியத் அவசியம். சுமார் ஆறு வயதிலிருந்தே பிள்ளைகளை தர்பியத் செய்ய ஆரம்பிக்க வேண்டும் இளமை விட தர்பியத் அதிகம் தேவை வயது ஆக ஆக தர்பியத் செய்யும் முறையும் மாற வேண்டும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மீது பயமிருக்க வேண்டும். அதே சமயத்தில் பிரியமும் இருக்க வேண்டும் அந்தளவு அவர்களை பழக்க வேண்டும். பெற்றோர்கள் அடிப்பார்கள் என்ற பயத்தில் பிள்ளைகள் பொய் கூறும் அளவிற்கு அவர்களை பழக்க கூடாது ஒரு முறை ஒரு சிறு விசயத்திற்காக பொய் கூற பழகிவிட்டால் போதும். அது படிப்படியாக வளர்ந்து பெரும் திருட்டுக்கே காரணமாகிவிடும். பிள்ளைகளை அடிக்கடி கண்டிக்க கூடாது கண்டிப்பதர்கென்று ஒரு நேரத்தை முடிவு செய்து வைக்க வேண்டும். பலருக்கு மத்தியுள் வைத்து அவர்களை கண்டிக்கக் கூடாது தவறு செய்வதை பார்த்த உடனே சொல்லாமல் மேலே குறிப்பிட்டுள்ளபடி குறித்த நேரத்தில்தான் எதையும் கண்டிக்க வேண்டும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கை போகும் வரையுள்ள எல்லா விஷயங்களுக்கும் கால அட்டவணை முடிவு செய்து அதன் பிரகாரம் அன்று நடைபெற்றதா? என்பதை பரிசீலனை செய்ய வேண்டும் கால அட்டவணைப்படி செய்யலாற்றுவதில் ஏதேனும் விடுபடிருந்தால் ரொம்பவும் கண்டிக்காமல் அதை செய்யும்படி ஆவர்மூட்ட வேண்டும் சிறுவயதில் விளையாடல் ஆவர்களுக்கு பிரியமிருப்படால் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு நேரத்தை குறிப்பிட்டு வைக்க வேண்டும் வாலிப வயது நெருங்க நெருங்க நண்பர்களோடு செல்வதில் அதிக ஆசையும் ஆர்வமும் உண்டாகும் இதுதான் மிகவும் ஆபத்தான கட்டம் கெட்ட நண்பர்களுடன் பழக விடாமல் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும் நல்ல நண்பர்களுடன் பழக விடுவதில் தவறில்லை. பிள்ளைகள் ஓரளவு பொறுப்பை உணரும் வரை மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாத்து வர வேண்டும் .
பெற்றோரின் கடமைகள் என்ன?
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்பதை பற்றி சில ஹதீதுகளின் குறிப்புகள் இங்கே எழுதபடுகின்றன. நாம் அவற்ற்றை நன்றாக சிந்தித்துப் பார்த்தால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். உங்கள் பிள்ளைகள் ஏழு வயது அடைந்தும் தொழும்படி ஏவுங்கள் பத்து வயது தொழுகையை நிறைவேற்றாவிட்டால் அடித்து தோலும் படி ஏவுங்கள்.மற்றொரு ஹதீதில் தந்தை தான் பிள்ளைக்கு கல்வியை கற்றுக் கொடுப்பதானது தான தருமம் செய்வதை விட சிறந்ததாகும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நரக செருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது அல்லாஹ்வின் கட்டளை உங்கள் குழந்தைகளை அமாநிதங்களாக அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளான் எனவே அமானிதமாக அளித்த அக்குழந்தைகளை முறையோடு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்பது இறை நேச செல்வர் இமாம் கஸ்ஸாலி ரஹ்மாத்துலல்லாஹ் அவர்களின் மணி மொழிகளின் ஒன்று
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்றும் தந்தையின் பிரியத்தில் அல்லாஹ்வின் பிரியமிருக்கிறது என்றும் தலை சிறந்த நுழைவாயில் வழியாக சுவர்க்கம் புக விரும்புவோர் தம் தந்தையையும் தாயையும் மகில்விப்பாராக என்றும் ஹதீது நூற்களில் காண முடியும்.
13 ஆகஸ்ட், 2012
ஷைத்தானின் சொற்ப்பொழிவு
நல்லோர்களை சுவனத்திலும் தீயோரை நரகத்திலும் சேர்க்க நிரந்தர தீர்வு ஏற்பட்ட பின் நரகவாசிகளின் வேதனையும் துன்பமும் அதிகமாகும் நாம் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டதற்கு காரணம் ஷைத்தான் தானே என்று எண்ணி அவனை சபித்துக் கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் நரகில் நடுமத்தியில் அமர்ந்திருக்கும் ஷைத்தான் கேட்டதும் அடப்பாவிகளா! என்று அழைத்து நீண்டதொரு சொற்பொழிவை ஆற்றுகிறேன்.உலகத்தில் வாழ்ந்த உங்களுக்க நேர்வழிகாட்ட அல்லை எத்தனையோ தீர்க்கதருசிகளை அனுப்பினான். அவர்கள் உங்களுக்கு நல்லதை ஏவினார்கள். தீயதை தடுத்தார்கள்.நீங்களும் கேட்டீர்கள் அல்லது கேள்விபட்டீர்கள் நானும் வந்தேன் நல்லதை தடுத்தேன் தீயதை ஏவினேன் எண்ணெய் பின்பற்றிக் கொண்டீர்கள் நான் உங்களை நாடி நரம்புகளிலெல்லாம் புகுந்து நான் நாடியபடி ஆட்டிவைத்தேன் நீங்களும் ஆடினீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிவை என்னிடம் அடமானம் வைத்து விட்டு அழிவுப் பாதையை தேடி கொண்டீர்கள் இப்போது எண்ணெய் குறை கூறுகிறீர்களே எப்போது யார் யாரையும் சபித்தால் மாற்றம் ஏதும் நிகழப்போவது இல்லை என் வேதனையை மாற்ற உங்களுக்கோ உங்கள் வேனதைய மாட்ட எனக்கோ எவ்வித ஆற்றலுமில்லை அப்படி இருக்க ஏன் வீணாக புலம்புகிறீர்கள்.உலகில் என்னிடம் இருந்து விட்டு இப்போது எண்ணெய் தனியே விடப்பார்த்தல் அது நியாயமா? என்னுடன் இருங்கள் நாம் அனைவரும் நரக வேதனையை சுவைப்போம் என்று கூறுவான்.
ஷைத்தான் செய்த நீண்ட சொற்பொழிவை கெட்ட மக்கள் வேதனைக்கு மேல் வேதனை அடைகிறான்.
12 ஆகஸ்ட், 2012
நரக வாயிலில் நபிகள்
அனுமதி பெற்ற அண்ணல் பெருமானார் அவர்கள் சுவனத்திற்கு அவர்களை அழைத்துவர நரகம் நோக்கி நடக்கிறார்கள் அப்போது வழியில் எதிபடும் புராக் என்னும் அதிவேக வாகனம் நபியே! என் மீது ஏறிக்கொண்டால் நான் விரைவில் சென்று தாங்களை நரகத்தில் சேர்க்கிறேன் என்று கெஞ்சுகிறேன் புராகே செய்தி தெரியாத உனக்கு என் கூடத்தின் ஒரு பகுதியினர் நரகில் தள்ளப்பட்டும் வேதனை படுத்தப்படுகிறார்கள் அங்கெ அவர்கள் கடுமையை இன்னலில் இருக்கும் போது நான் உன் மீது ஏறி உல்லாச பயணம் மேற்கொள்வதா?வேண்டாம் போய்விடு நான் நடந்து போகிறேன் என்று சொல்லிவிட்டு நடந்து செல்கிறார்கள் அபோது புராக் நாயகமே எனக்கு ஓர் ஆசை நானும் தங்களோடு சுவத்தில் இருக்க வேண்டும் நீங்கள் எங்கு சென்றாலும் என் மீது அமர்ந்து தான் செல்ல வேண்டும் இதற்காவது அனுமதி தருவீர்களா என்று தனது அடக்க முடியாத ஆசையை அவர்களிடம் வெளியிடுகிறது. அதற்கு அண்ணலார் ஆகட்டும் என்று தலை அசைத்து விட்டு போகிறார்கள். நரகை நெருங்கி விட்டார்கள். அதன் அதிபதி மாலிக் அலை வாயிலின் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களை கண்டதும் அண்ணலார் முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள்.
பதறிப் போன மாலிக் நாயகமே! என்ன காரியம் செய்து விட்டீர்கள் நான் என்ன தவறு இழைத்தேன். என் மீது கோபம் கொள்ள காரணம் என்ன?எனக் கேட்கிறார்கள். அதற்கு பெருமானார் அவர்கள் மாலிகே! நான் என் கூட்டத்தினருக்கு மன்றாடி விடுதலை வாங்கித் தருவேன் என்று அறிந்திருந்தும் அவர்களை அதிமகாக வேதனைப் படுத்தியுள்ளீர்கள் நியாயமா இது ?என்று நெஞ்சு நிறைந்த சோகத்தோடு கேட்பார்கள். அதற்கு மாலிக் அவர்கள் சஞ்சலத்தோடு நாயகமே! நான் என்ன செய்வேன்? நயன் சொன்னதைத் தானே நான் செய்ய வேண்டும் என்னால் இறைக்கட்டளையை மீற முடியுமா? என்பார்கள் இது கேட்டு சமாதனம் அடைந்த பெருமானார் அவர்கள் நரகின் உள்ளே போகின்றார்கள்.சூரியன் சுடரை மங்கசெயும் ஒளி முகத்தார் உள்ளே நுழைந்ததும் நரகம் தனது நிலையை மறக்கும். அனல் கக்கும் அதன் நாவுகள் கொஞ்சம் ஓய்வுபெறும் வேதனை செய்யும் பணியை மேற்கொண்ட வானவர்கள் எங்கே நம்மை கோபித்துக் கொள்வார்களோ என்றென்று எண்ணி ஓடி ஒளிந்து கொள்வார்கள் பாம்புகளும் தேள்களும் கூட கண்களுக்கு அகப்படாமல் காணாமல் போகும் இப்போது நரகவாசிகளுக்கு ஒரே ஆசரியம் யார் வந்துள்ளது இங்கு வேதனைகளே இல்லாத இந்தக் கணம் எவ்வளவோ இன்பமானது என்று நினைத்து வந்தவரை பார்த்து யார் நீங்கள் என்று வினா ஒன்று தொடுகிறார்கள். அதற்கு அண்ணலார் நான் தான் முஹம்மத் இறையனின் இறுதித் தூதர் என்னையும் நாயனையும் நம்பியவர்கள் நரகிலிருந்து விடுவிக்க இறைவனின் அனுமதி பெற்று வந்துள்ளேன் வாருங்கள் என்னுடன் என்று அழைப்பார்கள் நடுகடலில் துணையின்றி தவிக்கும் கடல் பிரயாணி ஒருவருக்கு தோணி ஒன்று கிடைத்தால் எப்படி இருக்குமோ அது போன்று இருக்கும். ஓடோடி வருவார்கள் பெருமானாரின் அருகே.
அகிலத்தின் அருக்கொடைஎன அல்லாஹ்வால் வர்ணிக்கப்பட்ட அண்ணலார் அது கண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவார்கள் அன்று தான் அவர்கள் அதிமகாக அக மகிழ்வார்கள் ஜிப்ரீல் அலை உட்பட வானவர்களும் மனிதரில் சுவனவாசிகளாக இருப்போரும் இறைவனை புகழ்கிறார்கள்.
இப்போது நரக விடுதலை பெற்ற பெருங்கூட்டம் பெருமானாரை பின் தொடர்கிறது. அண்ணலாரின் அனைத்துலக உம்மத்தும் சுவனம் செல்லும் அன்று தான் மழலைகளாய் மரணிதோர் தங்கள் பெற்றோரையும் வாலிபத்தில் மரணித்தோர் உடன் பிறந்தோரையும் இனிய இல்லறம் நடத்தி இடையே பிரிந்து போன தன்பதிகள் தத்தம் ஜோடிகளையும் கண்டு இன்புறுவார்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அகமகிழ்வார்கள் ஜிப்ரீல் அலை அவர்கள் அனைவரையும் அழைத்து சென்று நஹ்ருள் ஆயத் என்ற நதியில் குளிக்க செய்வார்கள்., பின் சுவன பட்டாடைகள் அணிவித்து சுகந்த மணம் பரப்பி முகங்களில் இறையோளியை நிரப்பி அவர்கள் சுனத்துள் நுளைவிக்கப் படுவார்கள்.தனது தோழரின் மகிழ்வை கண்ட அல்லாஹ் அவனும் மகிழ்கிறான். இப்போதைக்கு நாமும் மகிழ்வோம்
11 ஆகஸ்ட், 2012
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்...!
அவர்கள் குறைந்த வயது
கொண்ட.....
இளைஞர்களாயிருப்பார்கள்....!
முதிர்ச்சியற்ற புத்தியுடைய
(மடைய)ர்களாயிருப்பார்கள்...!
பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை
(குர்ஆன்,ஹதீஸின் வசனங்களை)
எடுத்துச் சொல்வார்கள்....!
ஆனால்.....
அவர்கள், வேட்டைப்
பிராணியி(ன் உடலி)லிருந்து
(வேடன் எய்த) அம்பு
(அதன் உடலுக்குள் பாய்ந்து,
மறுபுறமாக) வெளிப்பட்டுச்
சென்று விடுவதைப்
போன்று ......
இஸ்லாத்திலிருந்து (விரைந்து)
வெளியேறிச் சென்று விடுவார்கள்..!
(மார்க்கம் கூறும்)
அவர்களின்,,,,,
இறை நம்பிக்கை(யும்,
மார்க்க விசுவாசமும்)
அவர்களின் தொண்டைக்
குழிகளைக் (கூட)
தாண்டி (இதயம் வரை) செல்லாது...!
எனவே,
அவர்களை நீங்கள் எங்கு
எதிர் கொண்டாலும்
கொன்றுவிடுங்கள்.
)الله اكبر , الله اكبر , الله اكبر(
ஏனெனில்
அவர்களை ஒழிப்பது, அவர்களைக்
கொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக
அமையும்....!
என இறைத் தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்...!
என அலீ(ரலி) அறிவித்தார்கள்...!
புகாரி-( 3611 , 5057 )
அறிந்து கொள்ளுங்கள்..!
இந்த...
ஹதீஸின் அடிப்படையில்
இறைத் தூதர் (ஸல்) அவர்கள்
இறுதிக் காலத்தில்
ஒரு கூட்டத்தினர் வருவார்கள் என....
இந்த... வழி கெட்ட
வஹ்ஹாபிகளையே....
கூறியுள்ளார்கள்..!
இதில் எந்த வித சந்தேகமும்
கிடையாது.
யா அல்லாஹ்...!
வஹ்ஹாபிசத்தின்
தீங்குகளை விட்டும் எம்மையும்,
எமது குடும்பத்தார்
அனைவரையும்
பாதுகாத்தருள்வாயாக...!
publis by ESF kalmunai
10 ஆகஸ்ட், 2012
வேந்தர் நபியின் வேதனை
அல்லாவிடம் அனுமதி பெற்று ஜிப்ரயீல் அலை அவர்கள் சுவனம் செல்கிறார்கள். நாதர் நபி பெருமானார் அவர்கள் நடு நாயகமாக வீற்றிக்கும் ஆதம் அலை அவர்கள் தொட்டு அனைத்து நபிமார்களும் அவர்களை ஜபூர் வேதத்தின் இனிய வசனங்களை தங்களது காந்த குரலால் கவரும் வண்ணம் ஓதிக் கொண்டிருப்பார்கள். பெருமானார் அவர்கள் சுவனத்து தங்கக் கிரீடம் ஒன்றை தலையில் அணிந்து இருக்க தலையை அசைத்து ரசித்துக் கொண்டிருப்பார்கள். கேள்விகனக்குகளை எளிதாக்குவேன் என்று நாயன் கூடியதால் நம் சமுதாயத்தினர் எல்லோரும் சுவனம் வந்து விட்டார்கள் எதார்த்தமாக எண்ணிய நபி பெருமானாரை ஜிப்ரீல் அலை அவர்கள் சொல்லும் செய்தி சோகத்தில் ஆழ்த்தும் கிரீடத்தை தஊக்கி எரிந்து விட்டு ஓடோடி வருவார்கள் அர்ஷை நோக்கி அல்லாஹ்விடம் மன்றாட தங்களுக்குக் கிடைத்த சுகங்கள் தங்களது உம்மத்தினர்களுக்கு கிடைக்கவில்லை ஒரு பிரிவை நரகத்திலிட்டு விட்டாயே! நாயனே என்னால் தாங்க இயலாது அவர்களது பிழை பொறுத்து அவர்களையும் என்னோடு அனுப்பி வை என்பார்கள் அப்போது முஹம்மதே முதலில் தலைய உயர்த்துங்கள் அவர்கள் எனக்கு துரோகம் செய்தவர்கள் ஏவப்பட்டதை எடுத்து நடக்காமலும் விலக்கப்பட்டதை தவிர்த்து சொல்லாமலும் உலகில் வாழ்ந்தார்கள். எனவே அவர்கள் தண்டிக்கப்படும் நாளிது அவர்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரங்களாக நரக வாசம் செய்யட்டும். நீங்கள் சுவனம் சொல்லுங்கள் உங்கள் வரவை நோக்கி ஏராளமானவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர் சுவனம் உங்களுடையது அதன் சுகங்ககளும் உங்களையே சார்ந்தது எனவே சென்று வாருங்கள் என்பான்.தலையை உயர்த்திய பெருமானார் அவர்கள் வல்லோனின் இந்த பதில் கேட்டு இடிந்து போகிறார்கள் நாயனே இன்றைய தினம் ஆட்சியும் அதிகாரம் உனக்கே உரியன உனது ஆட்சியிலோ அதிகாரந்திலோ தலையிடும் உரிமை யாருக்குமில்லை நாயனே நீ நாடினால் யாரையும் விடுவிக்கலாம். உன்னை கேட்பதற்கு யார் உளர் நாயனே அவர்கள் அறியாமல் பிழை செய்தவர்கள்.நீ அன்புடன் பிழை பொருப்பவன்.இறைவனே அவர்கள் மரதியாளர்கள். நீயோ மனங்களையும் அறிபவன் அவர்களை இப்போது சுவனம் செல்ல அனுமதி அளிக்காவிடில் எனக்கும் சுவனம் வேண்டாம். என்னையும் உன்னையும் நம்பிய நல்லோர்கள் நரகத்தில் வேக நான் மட்டும் சுவன சுகத்தில் தோய்வதா! வேண்டாம் எனக்கு அந்த சுவனமும் சுகமும் என் பிரார்த்தனையை ஏற்று அவர்களுக்கு சுவனம் செல்ல அனுமதி கொடு என்று அழுகிறார்கள் தனது ஹபீப் அழுவதை கண்ட நாயன் நர்திர்ப்பு தருகிருகிறான்.நரகத்திற்கு அதிபதி மாலிக்கை அழைத்து முஹம்மதின் கூட்டத்தாரை நரகத்திலிருந்து விடுவித்து சுவனம் அனுப்புங்கள். எனது ஹபஈபின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன் என்று ஆணையிடுகிறான். இதோ நம் போன்ற பாவிகளை சுவனம் அனுப்ப நம் நாயகம் பிரார்த்தித்து அனுமதி வாங்கி தந்து அவர்களே நரகம் சென்று அழைத்து வர செல்கிறார்கள்............நாமும் செல்வோம்!
8 ஆகஸ்ட், 2012
யுக முடிவின் ஆரம்ப அடையாளம்
யுக முடிவின் ஆரம்ப அடையாளம்
பரந்த வானம் பரவி கிடைக்கும் பூமி நீண்டு நெளிந்த சமுத்திரம். வளைந்து ஓடும் வனப்புமிக்க நதிகள். இரைச்சலோடு இறங்கும் அருவிகள்., மலைகள். மரங்கள்,. மற்றைய தாவர வர்க்கங்ககள் மற்றும் மனிதன் உளிட்ட எந்தனை கோடி கோடி ஜீவராசிகள் இவை அனைத்தும் இருந்த இடத்தில் சுவடு கூட தெரியாமல் இறைவனால் இல்லாமல் ஆக்கப்படும் இது விஞ்ஞானிகள் கூட வியப்போடு ஒப்புக் கொள்ளும் நிதர்சனமான உண்மை.அதிர்ச்சிகளை விநியோகிக்கும் அந்த அதிசய நாளை பற்றி உலகில் தோன்றி உருவ வழிப்பாட்ட தடை செய்த அந்தனை தீர்க்க தரிசிகளும் சொல்லி சென்றுள்ளனர்.
ஆனால் யாரும் எப்போதும் வரும் என்பது பற்றி மாத்திரம் சொல்லவில்லை காரணம் அது அளிக்கப் போகும் அவனுக்கு மட்டும் உரிந்தான உண்மை இரகசியம்
ஒரு முறை பெருமானார் சல்லல்லாஹு அலைகிவ சல்லம் அவர்களிடம் ஜிப்ரீல் அலை அவர்கள் முடிவு நாள் எப்போது வரும் என வினவ அதற்கு அண்ணலார் கேட்க கூடிய உங்களை பார்க்கிலும் கேட்கப்படும் நான் அறிந்தவனல்ல என்றார்கள் மேலும் அதன் அடையாளங்கள் சிலவற்றை அப்போது அறிவித்தார்கள்
இதோ அவர்கள் கூறிகிறார்கள் பிள்ளைகள் பெற்றோர்களை அடிமை போல நடத்துவார்கள் செருப்புக்கும் ஆடைக்கும் வசதி இழந்தவர்கள் மாடிவீடு கட்டி மமதையோடு வாழ்வார்கள்.
தகுதி இல்லாத தற்குறிகள் தலைவர்களாக பொருப்பெர்ப்பார்கள். ஆம்! அன்று அன்னாலாம் அறிவித்த இந்த அடையாளங்கள் இன்று அமுலில் இருக்கிறது நாமும் பார்க்கிறோம்.
சுமந்து தந்த தாயை சினத்து பேசி சிதைக்கும் பிள்ளைகள் வீடு காக்க மேனியை ஓடாகி உழைத்த தந்தையை பாடைபடுத்தும் பாவி பிள்ளைகள் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்ற முதுமொழிக்கொப்ப பணத்தை பார்க்கமுடியாத நிலையிலிருந்தவன் பணத்தோடு புரண்டு பகிரங்கமாக பாவங்கள் ஈடுபடுவது.
அழகான குணங்களாலும் அறிவார்ந்த கல்வியாலும் அழகுபடாமல் அழுக்கு குனங்கலாமும் அறிவற்ற மனடையாலும் அழுக்கேறிய ஆத்மாக்கள் நிர்வாகத் திறனின்றி நீதியின் பயமின்றி தற்குரித்தனத்தொடு தலைமை பொறுப்பேற்று உள்ள தனிகேட்ட நிலைமை இவைகளெல்லாம் இன்று நாம் கண்டு வரும் இறுதி நாளின் அடையாளங்களாகும்.
யுக முடிவு ஆரம்பித்து விட்டதை கட்டியம் கூற இன்னொரு சீர்கேடனின் பிறப்பும் ஒரு அடையாளமாகும்.
அருவருக்கத்தக்க அழகையும் கனத்து பெருந்த சரிரத்தையும் முகத்தில் கருத்த மச்சத்தையும் கண்களின் கீழ் வெளுத்த புள்ளியையும் அடையாளமாகக் கொண்ட அவன் பனீ உமய்யா வமிசத்தை சார்ந்த பர்பி என்னும் குடும்பத்து உத்பத்து இப்னு முஹம்மது என்பவன் ஆகும் .
அவன் சாம்பல் துகள்களுக்குள் மறைந்து கிடக்கும் நெருப்புத் துண்டுகளைப் போன்றவன் முகமுடி அணிந்து வரும் அவனது வெளிப்புற நடவடிக்கைகளில் மக்கள் மனதை பரிகொடுப்பார்கள் அந்தரங்கத்தை அறியாத அந்த மக்களை சந்தியா வழியிலிருந்து திரும்ப. அனைத்து சூழ்ச்சிகளையும் அழகாக கையாள்வான் மன்கையர்களையும், மழலைகளையும் பிடித்து கொலை செய்த ஈமான் கொண்டவர்களை இல்லாமல் ஆகிவிட முனைவான்.
அவனை அப்படியே நம்பி வின்பட்டக்கூடிய சிலரோ டமாஸ்கஸ் சென்று அங்கு அவனது கைங்கரியத்தை மேற்கொள்வான் அவனை பின்பற்றுவோர் எண்ணிக்கை அந்த நகரில் மற்றும் சுமார் 30,000 பேர்களாகும் சிரியா பஹ்தாது போன்ற பெரிய நகரை வசப்படுத்தி கொள்ளும் அந்த இஸ்லாமிய வைரியின் வாழ்க்கை முடிந்து விட வேண்டும் என்பதற்காக கூபா என்ற நகரின் ஷுஐப் இப்னு ஸாலிஹ் என்பவரது தலைமையில் முஸ்லிம்கள் முன்னேறி அனனத்து பெரும் படையோடு போரிடத் தயாராவார்கள்.,
ஆட்களாலும் அற்புத சாதங்களாலும் நிரம்பி வழியும் அந்த அரக்கனை எதிர்த்துப் போரிட முடியாமல் முஸ்லிம்கள் புறம் காணுகின்றனர் தலையில் உலகையே வைத்துள்ளோம் என பிருமிதம் கொண்டு மீண்டும் தனது படையினை நபியுல்லாவின் நகரமான மதினா சென்று மன்னர் நபியின் அடக்கஸ்தலத்தை இடித்து தரைமட்டமாக்குமாறு ஆணை பிறப்பித்தான் அநியாயம் அக்கிரமம் புரியும் அந்த கொடியவர்கள் வருவதை அறிந்த இஸ்லாமியர்கள் இறைஞ்சுகின்றனர்.
யா அல்லாஹ் உனது எதிரி உனது தோழரின் அடக்கஸ்தலத்தை அழிக்க போகிறானாம் எங்களை இன்னை செய்தான் எங்களால் முடிந்த வரை தாங்கினோம், தாக்கினோம் இப்போது இரண்டுக்கும் சக்தி இழந்த அங்களுக்கு அவனுக்கு எதிரான உதவி அளித்து எங்களை காப்பாற்று உன்னால் இயலாளது ஒன்றும் இல்லையே என்று சுமக்க முடியாத அகங்காரத்தொடும் ஆணவத்தோடும் மதினா மண்ணில் கால் வைக்கும் அந்த அரக்கர்களின் கண்களில் ஒளியை பறிமுதல் செய்யப்படுகிறது. இனம் தெரியாத பீத தொற்றிக் கொள்ள தலை தப்பினால் தன்பிரான் புண்ணியம் என ஓடுகின்றனர். பூமியில் குழப்பத்தை விளைவித்து அநீதி புரிந்து வரும் அந்த அரக்கன் மீண்டும் ரோம் நகர மன்னனின் உதவியோடு மதீனா வருகின்றான்.
அதிக காலங்கள் அநீதியை அரசாள விடுவது ஆபத்தல்லவா இந்த சமயத்தில் மன்னர் மஹ்தீ அலை அவர்கள் மண்ணுக்கு அனுப்பப்படுகிறான்.யுக முடிவின் ஆரம்ப அடையாளங்களில் மன்னர் மஹ்தீ அலை அவர்களின் வருகையும் அற்புதமான ஒன்றாகும்.
7 ஆகஸ்ட், 2012
2 ஆகஸ்ட், 2012
நல்ல மனைவி அமைய...
[அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா? ]
''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)
கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
''பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' (ஸஹீஹுல் புஹாரி: 5186)
இன்றைய காலகட்டத்திலே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லற வாழ்வே இன்பத்தையளித்து சமூகத்தோடு இயைபுபட்டு வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இணையும் தம்பதிகளின் புரிந்துணர் வின்மையின் காரணமாக பல குடும்பங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதைக் காணலாம். ஆகையால் கணவனும் மனைவியும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் போது மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்;;. இங்கு நாம் கணவனின் கடமைகள் சிலவற்றை நோக்குவோம்.
1. கணவன் வீட்டில் நுழையும் போது சலாம் கூறுதல்.
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில் ''நீங்கள் இறை நம்பிக்கை(ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை(முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயற்படுத்தினால் ஒருவரையொருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 93)
2. வாயில் துர்வாடை வீசா வண்ணம் பல்துலக்குவதன் மூலம் சுகந்தத்தைப் பேணுதல்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல்துலக்குவார்கள்'' (நூல்: முஸ்லிம் 424) கணவனின் வருகையை எதிர்பார்த்திருந்த மனைவி அவனை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் வேளை, கணவனின் வாயில் இருந்து வரும் துர்வாடை அவளை முகம் சுளிக்கச் செய்கின்றது. ஆகையால் பல்துலக்கி வாயை சுத்தம் செய்வதானது இல்லறத்தை செழிப்பாக்கும்.
3. மனைவியை விஷேட பெயர் கொண்டு அழைத்தல்.
அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) ஆயிஷ் இதோ(வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள்.'' (நூல்: புஹாரி-3768, முஸ்லிம்-4837)
5. மனைவியின் உதவிகளை வரவேற்றல், நன்றி செலுத்ததல்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் அல்லாஹ்வக்கு நன்றி செலுத்தமாட்டார்'' என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத்-7313) உங்களின் மனைவியரின் உதவிகளுக்கு நன்றி கூறிப் பாராட்டும்போது மென்மேலும் உங்கள் மனைவியின் பாசமும், பரிவும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் ''பிஸி, மற்றும் நேரம் இல்லை'' போன்ற குரல்களே ஒலிக்கின்றன. ஒரு இல்லத்தரசியைப் பொறுத்தவரை திருமணம் முடித்தது முதல் பேரப்பிள்ளை காணும்வரை அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்றாள்.
வீட்டுச்சுத்தம், துணிதுவைத்தல், பிள்ளைப் பராமரிப்பு, சமைத்தல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதற்குள் கணவனுக்காக செய்கின்ற பணிகளும் ஏராளம். ஆனால் கணவன்மார்களில் பலர் அற்பவிடயங்களுக்கெல்லாம் மனைவி மீது சீற்றம் கொள்கின்றனர். எமது முன்மாதிரி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி ஆயிஷா அவர்கள் தரும்
விவரணம் இதோ :
7. எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பதைத் தவிர்த்தல்.
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை(முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு
குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளக்கூடும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல்: முஸ்லிம்-2915.
01. அல்லாஹ் தனக்கென பங்கு வைத்ததைப் பொருந்திக் கொள்ளல்.
கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு
அதிகரிக்கும்.
மகிழ்ச்சிமிக்க திருமண வாழ்க்கை உட்பட அனைத்து அம்சங்களுக்கும் பாசமே முக்கிய காரணியென்ற வகையில், இஸ்லாம் அனுமதித்த வழிகளில் மனைவியின் அன்பை அதிகரிக்க,
கணவன் முயற்சியெடுத்தல் வேண்டும். கனிவான வார்த்தைகளைப் பேசுதல், உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லல், அன்பளிப்புகள் கொடுத்தல், சுற்றுலாக்கள் செல்லுதல் போன்ற
இன்னோரன்ன அம்சங்கள் மூலமே இருவருக்கிடையிலான பாசமும் பரிவும், நேசமும் நெருக்கமும் அதிகரிக்கின்றது.
03. கருத்து முரண்பாடு ஏற்படும் போது உருவாகும் பிரச்சினைகளைப் பொருட் படுத்தாதிருத்தல்.
எந்த வினாடியிலும், எந்தக் காரணியாலும் கருத்து முரண்பாடு ஏற்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள இடம் வீடு. கருத்துக்கள் முரண்படுவதென்பது ஓர் இயற்கையான அம்சம். எல்லா நோய்க்கும் மருந்துண்டு, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு என்பார்கள். ஆகையால், கணவன், மனைவியரிடையே இவ்வாறான கருத்து முரண்பாடு ஏற்படும்; போது, இஸ்லாம் கூறும் பொறுமை, ஆறுதலான உரையாடல், அமைதி விவாதம் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து, சந்தோசம் நிலைக்கின்றது. இதுபற்றி எமது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
04. இல்லற இரகசியங்களைப் பாதுகாத்தல்.
''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)
''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)
05. மனைவி மீது அடக்குமுறைகளைக் கையாளாது நிர்வகித்தல்,
''சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அழ்ழாஹ்வின் பாதுகாவல்மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று(மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 4:34)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
