13 பிப்ரவரி, 2010


பாத்திமா(ரலி) கண்டு பிடித்த இரகசியம்

கண்மனி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமை புதல்வி பாத்திமா(ரலி) அவர்கள் தனது அன்பு தாயைப் போல் தந்தைக்கு பேருதவி ஆற்றியுள்ளார்கள். தந்தையின் தினப் பணிகளில் பெரும்பாலும் பாத்துமா(ரலி)அவர்களின் பேருதவி பின்னனி இருக்கும். இதன் காரனமாக தந்தையின் பேரன்புக்குரியவர்களாக இருந்தார்கள்.
ஆனவே தந்தையாரின் அன்புக்கும் அரிய சேவைக்கும் பாத்திமா தான் தான். சுவனத்தில் நுழையும் முதல் பென்மனியாயிக்கும் என்று தன்மனதுக்குள் ஒரு துளி அளவு சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. இது பற்றி இன்ஷா அல்லாஹ் தனது தந்தையிடம் சமயம் பார்த்து சேட்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்று சந்தர்ப்பத்தை எத்ர் பார்த்துருந்தார்கள்.
ஒரு நாள் அருமை தந்தையிடம் தனியாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, இது தான்சரியான சந்தர்ப்பம் என நினைத்து கேட்டும் விட்டார்கள்.
மகளாரின் இந்த திடீர் கேள்வி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களை திகைக்க வைத்து. பின்பு தந்து அருமை மகளின் உள்ளத்தை தெளிவு படுத்துவதர்க்காக உன்மையை இப்படி சொன்னார்கள்.
அருமை மகளே! நீ சுவனம் போவதற்கு முன் ஒரு விறகு வெட்டியின் மனைவி தான் முதலில் சுவனம் புகுவாள். அவள் வேறு எங்கும் இல்லல உமக்கு சமீபமாக தான் இருக்கிறாள். அதாவது உமது பக்கத்து வீட்டுக் காரிதான் என்றார்கள்.
பாத்திமா(ரலி) அவர்க்ளுக்கு தூக்கி வாரிப்போட்டது.இவ்வள்வு நாட்க்களாக உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்ததைரு சந்தேகம் இப்பொழுது தீர்ந்தது. என்ராலும் தேம்பி தேம்பி அழவாரம்பித்து விட்டார்கள். மகளின் நினன கண்டு கலங்கிய கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நீண்ட நேரம் சமாதானம் செய்து ஆறுதல் அளித்து பாத்திமாவே நீ கவலைப்படாதே! உன்னை விட சுவனம் நுழையும் அந்த பென்னுக்கு ஏதாவது இரு சிறப்பு இருக்கத்தான் செய்யும். எனவே அப்பெண்னை நீ அவசியம் சென்று பார்த்து விட்டு வா! அத்னால் உனக்கு ஆறுதல் உண்டாகும் என்று அனுமதியும் வழ்ங்கினார்கள்.
கவலையோடு வீடு சென்ற பாத்திமா(ரலி) அவர்கள் அடுத்த நாளே! கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்ன விறகு வெட்டியின் வீட்டுக்கதவை தட்டினார்கள்.
யாரது ? உள்ளிருந்து ஒரு பென் குரல். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மகளார் பாத்திமா ஆவேன் என்றார்கள்,
அந்த பென் குரல் மீண்டும் ஒலித்தது மன்னிக்கவும் இன்று உங்களை உள்ளே எடுத்துக் கொள்ள எனக்கு அனுமதி இல்லை. ஒரு வேளை நாளை இதே நேரத்துக்கு வருவதானால் நான் என்கணவரிடத்தில் அனுமதி வாங்கி வைக்கிரேன். அப்போழுது தாங்கள் தாராளமாக வரலாம் என்று சொன்னார்கள். அடுத்த நாள் கிட்டத்தட்ட அதே நேரம் சுவனப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்கள் வேண்டுமென்றே குழ்ந்தை ஹஸன்(ரலி) யையும் உடன் அழைத்துக் கொண்டு அங்குச் சென்று கதவைத் தட்டினார்கள்.

விறகு வெட்டியின் மனைவி ஆனந்தம் பொங்க கதவைத் திறந்தார். "கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்பத்தார் எத்தனன பேர் வந்தாலும் எவர் வந்தாலும் கதவைத் திற என்று என் கணவர் சொல்லி விட்டார். தாங்கள் வருகை எங்கள் இல்லத்திற்கு ஒரு மகத்துவம்" என்று வரவேற்று அமர வைத்தார்.

பாத்திமா(ரலி) அவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கியது அப்பெண்ணிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பென்னை பாத்திமா(ரலி) அவர்களுக்கு ரொம்ப பிடித்து விட்டது.

என்னை விட முதலில் இப்பென் சுவனம் நுழையும் என்றால் அவரிடம் ஏதாவது ஒரு இரகசியம் இருக்கத் தானே வேண்டும். அதைக் கண்டு பிடித்து விட்டுத்தான் வீடு போக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். ஒன்றும் புலப்பட வில்லல.

கடைசியாக சமையல் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு ஒரு அதிசய காட்சி கண்டு வியந்து போய் நின்றார்கள் அப்படி அதிசயிக்கும் வண்ணம் என்ன இருந்தது? ஆறு பொருட்கள் அழகான முறையில் வைக்கப் பட்டிருந்தது.



1. ஒரு அண்டா சுடு தண்ணீர்

2. மூடி வைக்கப்பட்ட உனவு

3. பெரிய கம்பு ஒன்று

4. குவியலாக பொடி கற்கள்

5. சிறிய கிண்ணம் ஒன்று

6. சிறிய ஊசி ஒன்று



மேற்கண்டப் பொருட்களை எல்லாம் பார்த்த பாத்திமா(ரலி) அவர்கள். அப்பென்மனியிடம் இவைகளின் நோக்கம் என்ன என்று விசாரித்தார்கள்.

அல்லாஹிவின் தூதரின் அருமை மகளே! தாங்கள் கேட்டு விட்டதற்காக இதற்கான காரணத்தை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

விறகு வெட்ட சென்றுள்ள எனது அன்புக் கனவர். விறகுகளை வெட்டி சுமந்து கடைதெருவில் விற்று பின்பு அசதியோடு மாலையில் வீட்டுக்கு வருவார் உடனே இந்த அண்டா தன்னீரில் குளிப்பார். பின்பு சாப்பிட அமருவார். உனவில் அவருக்கு குறை இருந்து முழு திருப்தி இல்லா விட்டால் இந்த கம்பை எடுத்து என்னை அடிப்பார்.

அதற்கு நான் தப்பினால் குவியலாக இருக்கும் பொடிக் கற்களை எடுத்து என்மீது விசுவார். பின்பு உனவு தட்டில் இருந்த உனவு தவறி விழிந்த உணவுகளை இந்த ஊசியால் குத்தி எடுத்து கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரில் நனைத்து சுத்தம் செய்து சாப்பிடுவார். இது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி என்று விளக்கமளித்தார் விறகு வெட்டியின் மனைவி.

பொறுமையாக அனைத்து விஷயங்களையும் கேட்ட பாத்துமா(ரலி) அவர்களுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்தப் பென்னிடம் இருந்த விஷேசமிக்க நற்குணங்கள் சுவனப் பேரரசி பாத்திமா(ரலி) அவர்களுக்கு முழுதிருப்தியளித்தது. கணவருக்கு கட்டுப்பட்டு கணவனின் மனம் அறிந்து செயல்பட்டு பணி விடை செய்து கணவரால் ஏற்படும் அத்தனனசோதனனகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டதால் தான் இப்பென்மனி முதலில் சுவனம் புகும் பாக்கியத்தை பெற்றுள்ளாள். என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டார்கள்.

மகிழ்ச்சியோடு அப்பென்மனியிடமிருந்து விடை பெற்று வீட்டிற்கு சென்றார்கள்.

உடனே அருமை தந்தை கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்க்கச் சென்றார்கள்.

அன்பு மகளை வரவேற்று விறகு வெட்டியின் மனைவியை சந்தித்த விபரங்களைப் பற்றி விசாரித்தார்கள்.

நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒன்று விடாமல் பாத்துமா(ரலி) அவர்கள் சந்தோஷமாக சொன்னார்கள்.

மகளிடம் அத்தனை விஷயங்களையும் கேட்டறிந்த பின் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இப்படி சொன்னார்கள்.

மகளே! நாளை மறுமையில் நீ சுவனம் செல்ல வரும் போது ஒரு அறிவிப்பு வெளியாகும். மஹ்ஷர் பெருவெளியில் இருக்கும் அனைவரும் உங்களுடைய பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மகள் பாத்திமா(ரலி) அவர்கள் சுவனம் செல்லப்போகிறார்கள் என்று அப்போது நீ ஒரு குதிரையின் மீது சவாரி செய்த வண்ணம் சுவனத்தில் நுழைகின்ற போது உனது குதிரைக் கடி வாளத்தின் பிடியை விறகு வெட்டியின் மனனவி பிடித்துக் கொண்டு செல்லுவாள் ஆகவே அவள் தான் முதலில் சுவர்க்கம் புகுவாள்" என்று நகைச்சுவையாக சொன்னார்கள்.

கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குறும்புப் பேச்சினுள்ளும் எவ்வள்வு பெரிய உத்தமி காட்டப்பட்டாள் என்பதை நினைத்து நினைத்து பூரித்தார்கள். ஜென்னத்தே காத்தூன் பாத்திமா(ரலி) சுவனத்தின் முதற் பெண்மணி.

11 பிப்ரவரி, 2010

"உம்மத்தா?பேரக் குழ்ந்தைகளா?"

ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்கள் பேரக் குழ்ந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஹஸன் (ரலி) அவர்களுக்கு உதட்டுலும், ஹுஸைன்(ரலி) அவர்களுக்கு கழுத்திலும் முத்தம் கொடுத்தார்கள். பிறகு ஹஸன்(ரலி)அவர்கள் இந்த விஷயத்தை தாயார் பாத்திமா(ரலி) அவர்களிடம் வந்து இன்று பாட்டனார் அவர்கள் வழமைக்கு மாற்றமாக பாரபட்சமாக எங்களிருவருக்கும் முத்தமிட்டார்கள் ஏன்? என்று கேட்டார்கள்.

உடனே பாத்திமா(ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் வந்து அருமை தந்தையே! பேரர்கள் மத்தியில் முத்த விஷயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள்? பிள்ளைகள் கோபித்துக் கொண்டுள்ளார்கள். என்று கேட்டார்கள். அருமை மகளே! அதற்கு காரனத்தை நான் சொன்னால் உன் இதயம் தாங்காது என்றார்கள். எத்தனையோ துன்பங்களை தாங்கிவிட்டோம். இது பரவா இல்லை என்றார்கள் பாத்திமா(ரலி)அவர்கள்.

அருமை மகளே!இவர்கள் பெரியவர்களான பின் ஹஸன்(ரலி) நஞ்சூட்டப்பட்டு இறப்பார். அதனால் தான் வாயில் முத்தம் கொடுத்தேன். இளையவன் ஹுஸைன்(ரலி) கழுத்து வெட்டப்பட்டு இறப்பார். அதனால்தான் கழுத்தில் முத்தமிட்டேன். என்று விளக்கம் சொன்னார்கள். இச்செய்தியைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் வீரிட்டு அழுதார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைப் பார்த்து என தருமை தந்தையே ஒவ்வொரு நபி மார்களுக்கு விஷேசமான துஆவை அல்லாஹ் தந்துள்ளானே. அந்த துஆவை பயன்படுத்தி உங்கள் பேரக் குழந்தைகளை இக் கொடிய ஆபத்திலிருந்து காப்பாற்ற கூடாதா? என்று கெஞ்சி கேட்டார்கள். என தருமை மகளே! அது என் உம்மத்துக்காக மறுமையில் கேட்க வைத்துள்ளேன். அதை என் பேரப் பிள்ளைகளுக்காக இங்கு கேட்க முடியாது என்று கூறினார்கள்.

"மகளே! மிக சிறந்ததை தருகிறேன்"

ஒரு சமயம் ஹஜ்ரத் அலி(ரலி) வீட்டிற்குள் நுழைந்தார்கள். அப்போது பாத்துமா(ரலி) அவர்கள்.தனது கணவரிடம் மாவு அரைக்கும் திருகையினால் தனக்கு ஏற்ப்பட்ட வேதனையை கூறி இருகைகளையும் காட்டினார்கள். உடனே அலி(ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சில போர் கைதிகள் வந்துள்ளார்கள். அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களிடம் பங்கிட உள்ளார்கள். சென்று கேளுங்கள் என்றார்கள், உடனே வெட்கப்பட்டும் கொண்டு தமது அருமை தந்தையை நோக்கி நடந்து சென்றார்கள். அப்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீட்டில் இல்லை. தந்தையை சந்திக்க முடியவில்லை. அப்போது வீட்டில் ஆய்ஷா *ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் தான் வந்த நோக்கத்தைக் கூறினார்கள். அதற்கு ஆய்ஷா(ரலி) அருமை மகளே! உங்கள் தந்தை உங்களுக்கு நிச்சயம் தருவார்கள். என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்கள். பிறகு அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் வீடு வந்த போது விஷயத்தைச் சொன்னார்கள். இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இங்கு பத்ரின் எத்தீம்கள் அதிகம் உள்ளார்கள் அவர்களுக்கு தான் பங்கிடப் போடிறேன். ஏனெனில் அவர்களுக்கு தான் அதிகம் உரிமை இருக்கு என்றார்கள். இந்த செய்தி பாத்திமா(ரலி) அவர்களுக்கு எட்டியதும் மிகவும் வேதனைப்பட்டு அழுதார்கள். மீண்டும் ஆய்ஷா(ரலி) அவர்களிடம் வந்து அழிது விட்டுப் போனார்கள். வேதனையடைந்த ஆய்ஷா(ரலி) அவர்கள் தமது அருமை கணவரிடம், யாரசூலல்லாஹ்! ஏன் இப்படிச் சொன்னீர்கள். உங்கள் மகள் பாத்திமா(ரலி) அழுது கொண்டே போகிறார்கள் என்றார்கள். ஆய்ஷா! நான் உண்மையைத்தான் சொன்னேன் என்று சொல்லி அருமை மகளாரைப் பார்க்கச் சென்றார்கள். அப்போது வழியில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் தோன்றி. நபியே! அல்லாஹ் உங்கள் வார்த்தையைப் பொருந்திக் கொண்டான். உங்கள் மகள் பாத்திமாவை சுவனத்து தலைவியாக அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். படுக்கைக்கு போகும் முன் சுப்ஹானல்லாஹ் 33 அல்ஹம்துலில்லாஹ்33 அல்லாஹு அக்பர் 34 தடவை ஓத சொல்லுங்கள் என்று கூறினார்கள்.

இரவு நேரம் பாத்திமா(ரலி) குடும்பம் படுக்கைக்கு சென்று விட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு சொன்றார்கள். அவர்களை கண்டவுடன் எழுந்து நிற்க முயன்றார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். எழுந்திருக்க வேண்டாம் உங்கள் இடத்திலேயே இருவரும் இருங்கள் என்று கூறினார்கள்.

பாத்திமா(ரலி) சொல்கிறார்கள் : பிறகு நான் அவர்களுடைய பாத்ததின் குளிர்ச்சியை என் நெஞ்சில் உணர்ந்தேன். அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மிக மிக நெருக்கமாக தனது மகளார் அருகில் பந்து அமர்ந்து கொண்டார்கள். பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிட சிறந்த ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். சரி தந்தையே என்றபோது நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதிக் கொல்லுங்கள் அது நீங்கள் கேட்டதைவிட மிகச் சிறந்ததாகும் என்றார்கள்.

பாத்திமா(ரலி அவர்க்ள் அழுததற்கு காரனம் சொன்னார்கள் அருமை தந்தையே! பத்ரின் எத்தீம்கள் ஹக்கை நான் எடுக்க வந்துவிட்டேனே இதற்காகத்தான் என்றார்கள். பின்பு சுவனத்து தலைவி என்ற பஷாரத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

9 பிப்ரவரி, 2010

"மணவறையில்பாத்திமா(ரலி)"
ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களுக்கு திருமணம் முடிந்தது அன்புமகள் பாத்திமா(ரலி) அவர்களின் நெற்றியில் அன்பு முத்தம் ஒன்றை பரிசாக தந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள். அங்கு நின்ற பென்கள் வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மணமக்களுக்காக துஆ செய்தார்கள். பிறகு " என் அருமை மகளே! நம் குடும்பத்துலுள்ள அனைவரையும் காட்டிலும். எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கே உன்னை திருமணம் செய்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் தனித்து விடப்பட்டார்கள். முதல் இரவு இருவரும் அன்பான வார்த்தைகளால் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். குடும்ப வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்ற திட்டங்களை அன்பு மனைவியிடம் அலி(ரலி) அவர்கள் பேசி கொண்டிருந்தனர். திடீரென பாத்துமா(ரலி) அவர்கள் தேம்பி தேம்பி அழத்துவங்கினார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களுக்கோ ஒன்றும் புடியவில்லை. உடனே மனைவியிடம் எனதருமை மனைவியே என்னை திருமணம் செய்து கொண்டது உங்களுக்கு திருப்தியை அளிக்க வில்லையா? என்று கேட்டார்கள்.
அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் நான் எதிர்ப்பார்த்ததை விட சிறந்த கணவராக அல்லாஹ் உங்களை தந்துள்ளான். என் இரப்பின் போது என் நிலை என்னவாகும்மோ என்றும் நாளை அல்லாஹ்வின் முன்னால் கணவரின் கடமைகளை சரியாக செய்தாயா? என்று தான் அழுகிறேன் என்றார்கள்.,இதைக் கேட்ட அலி(ரலி) அவர்கள் ஆச்சிரியத்தில் மூழ்கினார்கள். இப்படிப்பட்ட ஒரு அற்புத மனைவி கிடைத்திருப்பதை நினைத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். அப்போது பாத்துமா(ரலி) அவர்கள் எனதன்பு கனவரே! தாங்கள் தொழும் இடத்தைக் காட்டுங்கள். அங்கு நான் அல்லாஹ்வை வணங்கப் போகிறேன். நீங்க்ளும் அதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். இது தான் என்னுடைய விருப்பமாகும் என்றார்கள். தொழும் இடத்தைக் காட்டியதும் இருவரும் இரவு முழுவதும் அல்லாஹ்வின் வணக்கத்தில்லே இருந்தார்கள் புதுதம்பதிகள் மூன்று நாளைக்கு பிறகு தான் தங்களின் இல்லற வாழ்வை துவங்கினார்கள் சுப்ஹானல்லாஹ்!
" நின்று தொழ முடியவில்லையே"
ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தனது அருமை மகள் பாத்திமா (ரலி) அவர்களை பார்க்கச் சென்றார்கள். அப்போது பாத்திமா(ரலி) அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள்.மகளின் அழுகையைப் பார்த்து வேதனைப் பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மகளின் நிலையைப் பார்த்தார்கள் வயிறு ஓட்டி இருந்தது. பல நாட்களாக பசியின் கோரப்பிடியில் சிக்கி தரித்துக் கொண்டிருக்கும் நிலை புரிந்தது.
அருமை மகளே! பசியில் அழுகிறாயா? என்று கேட்டார்கள். அருமை தந்தையே பசியின் கொடுமையால் நான் அழவில்லை. நீங்கள் தான் சொன்னீர்கள் நின்று தொழுதால் நூறு நன்மைகள். உட்க்கார்ந்து தொழுதால் 40 நன்மைகள் என்றீர்கள். நான் இன்று நின்று தொழமுடியவில்லையே, அதனால் 100 நன்மைகளை இழந்தவளாகி விட்டேனே என்றார்கள். இதைக் கேட்ட கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தனது மகளின் மறுமையின் சிந்தனையை நினைத்து அழுதார்கள்.

7 பிப்ரவரி, 2010

"கண்ணீரில் மிதந்த பாத்திமா(ரலி) குடும்பம்"

ஹுஸைன்(ரலி)அவர்கள் பிறந்து விட்டார்கள் சிறிது நேரத்தில் பேரப்பிள்ளையைப் பார்க்க அருமை நலி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு வந்து விட்டார்கள்.பேரப்பிள்ளையைப் தமது மடியிலே வாங்கி வைத்துக் கொண்டார்கள். பேரப்பிள்ளையைப் பார்த்த சந்தோஷம் மிகுதியால் முகமொல்லாம் பூர்த்துப் போனது உடனே குழ்ந்தையின் உதட்டிலும் குரல் வளையிலும் மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

சற்று நேரத்தில் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அங்கு வந்தார்கள் யாரசூலல்லாஹ்! அல்லாஹ் தங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிரான். அத்துடன் துக்கம் விசாரிக்கும் படியும் சொல்லி அனுப்பினான் என்றார்கள். இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இரகசியங்களை அல்லாஹ்வே நங்கு அறிந்தவன். ஜிப்ரயீலே! அல்லாஹ்வின் வாழ்த்துக்கு அர்த்தம் எனக்குப் புரிகிறது. அவனது துக்க விசாரிப்புக்கு எனக்கு அர்த்தம் புரிய வில்லையே என்று கேட்டார்கள்.

ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மிகவும் கவலை அடைந்தவர்களாக அல்லாஹ்வின் ரசூலே! தாங்கள் சற்று முன் வாஞ்சையும்,மகிழ்ச்சியுமாக இந்த குழ்ந்தையை முத்தமிட்டீகளே! இந்த குழந்தையின் குரல் வலையில் கூரிய ஆயுதம் பாய்ச்சப் படவிறுக்கிறது. இந்த குழந்தையின் அம்மா சகோதரர் இருவர் மறைவுக்குப் பின்னால் இது நடக்கும் என்றார்கள்.

இனத உரையாடல் நடக்கும் போது. ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் அங்கு அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் இதை அவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லை.

கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கண்களில் கண்ணீர் துளிகள் விழுவதைப் பார்த்த அலி(ரலி) அவர்கள் நடுங்கி போய் அருமை நபியே ச்தாங்கள் திடீரென அழுவதற்கு காரணம் என்ன? என்று வினவினார்கள்.

உங்களது மகக் ஹுஸைன் படுகொலை செய்யப் படுவார் என்று நான் அறிவிக்கப்பட்டேன் அதனால் தான் என்றார்கள்.

ஹஜரத் அலி(ரலி) அவர்களுக்கு அழுகையை அடக்க முடியாமல் எழுந்து போனார்கள். கணவர் அழுகையை கண்ட பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. விசாரித்த போது உன்னை புரிந்து விட்டது தந்தையிடம் வந்தார்கள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.எனதருமை தந்தையே எனது அருமை மகன் ஹுஸைன் கொல்லப்படுவாரா? என்று கதரினார்கள்.

ஆம் மகளே! ஆம் என்றார்கள் அதுவும் தங்கள் உம்மத்தினாராலேயே கொல்லப்படுவாரா? என்று கேட்டார்கள் அப்படித்தான் அறிவிக்கப்பட்டிருக்கிறேன் என்றார்கள் இதைக் கேட்ட பாத்திமா(ரலி) அவர்கள் வீரிட்டு அழுதார்கள். தங்களின் முபாரக்கான கைகளில் பச்சிள்ம் பாலகன் ஹூஸைன்(ரலி) அவர்களை தூக்கி கான்பித்து, தங்களது புனித உதிரத்தின் உயிரின் வாரிசான இப்பாலகரைக் கொலை செய்யக் கூடிய மாபாத்கர்கள் தங்கள் உம்மத்திலேயே இருக்கிரார்களா? தாங்கள் முத்தமிட்ட இத்திருமேனியில் வாள் வீசும் கைகள் இந்த மண்ணாகத்திலேயே இருக்கிறதா? எனதருமை தந்தையே எவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட இக்குழந்தை என்ன குற்றம் செய்தது? என்று தேம்பி தேம்பி அழுதார்கள்.
கருனை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் அருமை மகளின் அழுகையைப் பார்த்து வேதனை அடைந்தவர்களாக தாடி நனையும் அளவுக்கு அழுதார்கள்.
அருமை மகளே! அப்படுகொலை இக் குழ்ந்தைப் பருவத்தில் நடக்காது. அப்படுகொலை நடக்கும் போது நானும் இருக்க மாட்டேன் நீயும் இருக்க மாட்டா௧ அலியும் இருக்க மாட்டார். ஹஸனும் இருக்க மாட்டார்கள்.
பாத்திமா (ரலி) அவர்களின் துக்கம் அதிகமாகிறது உடனே பச்சிளங் குழ்ந்தையை தூக்கிப் பிடித்தவர்களாக, மகளே! நீ அனி்நியாயம் செய்யப்படும் போது நாங்கள் யாரும் இருக்க மாட்டோம் அகிலத்திற்கெல்லாம் அருட்கொலையாய் அவதரித்த காத்தமுன் நபியின் பேரரான நீ அனாதையாக்கப்பட்டுக் குத்திக் கொல்லப்படும் போது மகனே! உனக் கென்று கண்ணீர் சிந்த நான் கூட இருக்க மாட்டேனாம்.
எனதன்பு மகனே! என் உயிருக்குயிரான செல்வமே! அப்போது நான் மாத்திரம் இருந்தால் இவ்வுலகில் புதிய கண்ணீர் ஆறு ஒன்று உருவாகி விடாதா என கண்ணீர் விட்டு கதறினார்கள். அன்று குடும்பமே கண்ணீரில் மிதந்தது. பாத்திமா(ரலி) அவர்களை அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்ககாள சமாதானப்ப்டுத்தினார்கள்.

6 பிப்ரவரி, 2010

"திக், திக் போட்டி"
ஒரு சமயம் ஹஸன் (ரலி) ஹுஸைன்(ரலி) இருவரும் ஆளுக்குகொரு கவிதையை எழுதிக் கொண்டு வந்து தங்களின் அருமை அம்மாவிடம், அம்மா என் கவிதை எப்படி இருக்கு? நன்றாக இருக்கிரதா? கேட்டார்கள் ஹஸன் (ரலி), அம்மா அம்மா என்னுடைய கவிதையைப் பாருங்கள் எப்படி இருக்கிறது என்று ஹுஸைன்(ரலி) அவர்கள் காட்டினார்கள். பிஞ்சு உள்ளங்களின் மழலைமொழிகள் கற்கண்டு வார்த்தைகள் பாத்திமா(ரலி)அவர்களின் உள்ளத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
இரண்டு கவிதைகளையும் வாங்கிப்பார்த்த பாத்திமா(ரலி) அவர்கள் எது சிறந்த கவிதை? என்று குழ்ம்பிப் போய் திக்கு முக்காடி நின்றார்கள்
ஒருவர் கவிதை சிறந்தது என்றால் மற்றவர் உள்ளம் புண்படும் அதற்கு விரும்பாது கவிதைகளை மாறி மாறிப் பார்த்து கொண்டிருக்கும் போது ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.
எனதருமை பிள்ளைகளே! உங்கள் அருமை தந்தையவர்கள் வந்து விட்டார்கள் உங்கள் கவிதைகளை அவர்களிடம் காட்டுங்கள் தீர்ப்பு அளிப்பார்கள் என்று ஹிக்மத்தாக நழுவிக் கொண்டார்கள்.
பிள்ளைகள் இருவரும் தந்தையை சூழ்ந்துக் கொண்டு கவிதைகளை காட்டினார்கள். கவிதையைப் பார்த்துவிட்டு அவர்களும் திக்கு முக்காடி மெளனமாக நின்றாகள் என்ன செய்வது என்ற யோசனையுடன்
அதிஷ்ட்ட வசமாக பேரக்குழ்ந்தைகளைப் பார்த்து வர அண்ணல் நலி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அங்கு வந்தார்கள். இது தான் சமயம் என்று அலி(ரலி) அவர்கள் பாட்டனார் வருகிறார்கள் அவர்கள் தீர்ப்பு தான் சரியாக இருக்கும் சென்று காட்டுங்கள் எனக் கூறி நழுவிக்கொண்டார்கள்.
பீள்ளைகள் இப்போது துள்ளிக் குதித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முன் வந்து நின்றார்கள் பெற்றொர்கள் பதில் சொல்லவில்லை தாங்கள் தீர்ப்பு சொல்லுங்கள் என்று பாட்டனாரிடம் கவிதைகளைக் கொடுத்தார்கள்., நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு படிக்கத் தெரியாததால் இருவரும் தத்தம் கவிதைகளைப் படித்துக் காட்டினார்கள்.
அனைத்தையும் கேட்ட அன்னல் நலி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மகள், மருமகனைப் பார்த்தார்கள். இருவரின் மெளனம் புரிந்துக் கொண்டார்கள். பிள்ளைகளின் மனதைப் புண்படுத்திடக்கூடாது என்று எனதருமை பிள்ளைகளா! இதற்கு என்னால் தீர்ப்பு சொல்லமுடியாது என்றார்கள்.
அப்போது ஹஜரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அங்கே வருகை புரிந்தார்கள். இந்த கவிதை போடியை இவர்களிடம் கேட்கலாம் என்று நினைத்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹஜ்ரத் ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதைக் கேட்ட ஜிப்ரயீல்(அலை) அவர்கள் தாங்கள் இருக்க என்னால் தீர்ப்பு சொல்ல முடியாது என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.
முடிவில் இந்த கவிதை தீர்ப்பு ஜிப்ரயீல்(அலை) மூலமாக அல்லாஹ்விடம் சென்றது. உடனே அல்லாஹ்வும் தீர்ப்பு சொல்லாமல் ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் ஒரு ஆப்பிள் பழத்தைக் கொடுத்து கவிதையின் தீர்ப்பை பழ்த்திடம் கேளுங்கள். அது அழகாக தீர்ப்பளிக்கும் என்று கூறி அனுப்பினார்கள்.
அல்லாஹ் சொன்னதை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களிடம் சொல்லி. ஆப்பிளை தரையில் உருட்டி விட்டார்கள்.வலது பக்கம் சென்றால் ஹஸ்ன்(ரலி) கவிதைதான் சிறந்தது. இடது பக்கம் சென்றால் ஹுஸைன்(ரலி) அவர்களின் கவிதைதான் சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இப்பொழுது ஆப்பிள் பழம் உருண்டோடுகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். உருண்டு கொண்டே சென்ற பழம் வேகம் குறைந்து மெதுவாக சென்றது. ஒட்டு மொத்தமாக அனைவரின் ஆவலும் பழத்தின் மீது இருந்தது. உருண்டு வந்த பழம் ஒரு இடத்தில் நின்றது அனைவரின் மனதிலும் திக் திக்...பழம் சரி பாதியாக பிளந்தது அனைவருக்கும் மகிழ்ச்சி. அல்லாஹ்வின் தீர்ப்பை கண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். இருவர் கவிதையும் சமம் என்ற தீர்ப்பு பிள்ளைகளின் மனதை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
படிப்பினை:
பாலைவனத்தில் ஒரு சோலை வனம் போல பாத்திமா (ரலி)அவர்களின் கஷ்ட்டங்களுக்குள் இரு சந்தோச நிகழ்ச்சி இது. சுவனத்து தூன்களான நறுமலர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி குடும்பத்தினர்களை திக்கு முக்காட வைத்து விட்டார்கள்
அல்லாஹ்வின் தீர்ப்பு இங்கு அனைவரையும் பரவசப் படுத்திவிட்டது. பாத்திமா(ரலி) அவர்களின் வளர்ப்பு சரியாக இருந்ததால் பிள்ளைகள் சிறுவயதிலேயே கவிதைகள் எழுதும் திரமை படைத்தவர்களாக ஆனார்கள். இன்று நம் தாய்மார்கள் விடிய விடிய டி.விமுன் சரணாகதி அடைந்து விட்டார்கள் பிள்ளைகள் திசை தெரியாமல் திக்கு முக்காடி வருகிறார்கள்.
நான் என் குழ்ந்தைகளுக்கு ஒழு இல்லாமல் பால் கொடுத்ததில்லை என்று பாத்திமா(ரலி) அவர்காள் சொன்னார்கள்.அது மட்டும் மல்ல கலிமா சொல்லிக் கொண்டேதான் பால்கொடுப்பார்கள். நபிமார்கள். அவ்லியாக்கள்,அப்தால்கள்.குத்புமார்கள். எல்லாம் தாயின் மடியில் உருவானவர்கள் தான். இன்று டி.வி, வீடியோ பார்த்துக்கொண்டு பால் கொடுப்பது சோறு ஊட்டுவது தான் பெரும் பான்னையான வீடுகளொ நடந்து வரும் அன்றாட வழக்கம். பிள்ளைகள் எப்படி உருப்படும்? தாய்மார்கள் சிந்திக்க வேண்டும். பென்களின் தீனுடைய தேட்டம் வந்து வுடுகேயானால் பிள்ளைகளிடம் தின் வரும். இன்றைய பென்களின் உள்ளங்களில் அவ்பியாக்களின் ஆசைகளை உண்டு பன்ன முயர்ச்சிகள் மேற் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நம் வருங்கால பிச்சளங்கள் நாசமாகி விடுவார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் உமது மகளுக்கு நீ பாலூட்டினாயா? என்று கேட்டார்கள். வேறு ஒரு பென்மனி மூலம் பாலூட்ட ஏற்பாடு செய்தேன் என்றார்கள். சரிதான் அப்பென்னின் தீய குனம் உன் மகனுக்கு அவள் ஊட்டிய பால் வழியாக புகுந்து விட்டது என்று சொல்லி அனுப்பினார்கள். ஒரு பிரான்ஸ் தேச குழ்ந்தைக்கு அரபு பென்னொருத்தி பால் கொடுத்தாள் அதனால் அக்குழ்ந்தைக்கு அரபு பென்னின் நல்லொழுக்கம் நற்குணங்கள் ஏற்ப்பட்டதாக ஒரு வரலாறு கூறுகிறாது ஒரு பென்மனி அடுத்த வீட்டுப் பென்மனியிடம் சண்டைப் போட்டுக் கொண்டு பிள்ளைக்கு பால் குடுத்தாள் அந்த பால் வழியாக கோபம் இரங்கி பிள்ளைக்கு பொறை ஏறி பிள்ளை இரந்தது என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எழுதுகிறார்க்ள். ஒரு பென்னின் மார்பத்தை அன்னிய ஆடவன் பார்த்தால் அதில் பால் குடிக்கும் குழ்ந்தைக்கு அந்த ஆடவனின் குணம் வரும் என்று கொல்லப்படுகிறது. எனதருமை தாய்மார்களே! குழ்ந்தைகள்விஷயத்தில் பெரும் அமானிதம் கொடுக்கப் பட்டுள்ளீர்கள் நாளை அல்லாஹ்விடம் நிச்சயம் நீங்கள் பதில் சொல்லியே தீரவேண்டும் பிள்ளைகள் பணம் காய்க்கும் மரம் அல்ல.அவர்களுக்கு மார்க்க கல்வியும். நல்லொழுக்க போதனைகளையும் ஊட்டி வளருங்கள் அல்லாஹ் ரசூலுக்கு பொருத்தமானவர்களாக உருவாக்குங்கள்..

5 பிப்ரவரி, 2010

ஐந்து ஆடுகளா? ஐந்து கலிமாக்களா?
மற்றோரு சமயம் பாத்துமா ரலி அவர்கள் வீட்டில் கடுமையான பசிக் கொடுமை பசியோடு வீட்டிற்கு வந்த ஹஜரத் அலி ரலி அவர்கள் தனது அன்பு மனைவி பாத்திமா ரலி அவர்களை நோக்கி உங்கள் தந்தையிடம் ஆடுகள் வந்து இருக்கிறது நீங்கள் சென்று ஐந்து ஆடுகள் வாங்கி வாருங்கள் அதன் மூலம் நமது தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ள்லாம் என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
கணவரின் சொல்லை மதித்து பாத்திமா ரலி அவர்கள் தனது தந்தையைக் கானச் சென்றார்கள். நலி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்களின் வீட்டிற்கதவினை தட்டினார்கள். உடனே கதவை திறந்த் நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் வழமைப்போல் மகளைக் கெளரவித்து பின்பு இந்த நேரம் நீ இங்கு வரவேண்டிய நேரம் இல்லையம்மா? நீ வந்த நோக்கம் என்னம்மா? என்று விசாரித்தார்கள். எனதருமைத் தந்தையே! மலக்குகள் தஸ்பீஹ் மூலம் தங்களின் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். மனிதர்களாகிய நாம் என்ன செய்வது? என்று சூசஹமாக தங்களின் வறுமை நிலைமை பற்றி முறையிட்டார்கள்.
எனதருமை மகளே! நீ....ஆடுகள் கேடி வந்துள்ளாய் இன்று நம்மிடம் ஆடுகள் வந்து இருக்கிறது ஆனால் சற்று முன்பு தான் ஹஜ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்ததூ உங்கள் அருமை மகள் பாத்திமா(ரலி) அவர்கள் உங்களிடம் ஐந்து ஆடுகள் வாங்க வருகிறார்கள் இதோ ஐந்து கலிமாகளை அல்லாஹ் தந்துள்ளான் உங்கள் மகள் வந்த உடன் மகளே உனக்கு 5 ஆடுகள் வேண்டுமா? 5 கலிமாக்கள் வேண்டுமா? என்று கேளுங்கள் என்று கூறி சென்றுள்ளார்கள். நீ எதை விரும்புகிறாய் கேளும் தருகிறேன் என்றார்கள் கருனை நலி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம்.
இப்படியோரு கடுமையான சோதனை நம் முன் வைப்பார்கள் என்று பாத்திமா (ரலி) அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பிள்ளைகளின் பசி எதிர்ப்பார்ப்பு இப்படி குடும்ப சூழ்நிலை மனதில் ஓடியது.என் மகள் துன்யாவை தேர்ந்தெடுக்கிறாரா? அல்லது மறுமையை தேர்ந்தெடுக்கிறாரா? என்ற மாபெரும் பரீட்சையை வைத்டு விட்டார்கள். பாத்திமா(ரலி) அவர்கள் என்ன சளைத்தவர்களா! நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் ஈரக்குலை துண்டல்லவா? அருமை தந்தையே எனக்கு 5கலிமாக்களை தாருங்கள் என்று வேண்டினார்கள்.
பெரும் மகிழ்ச்சியடைந்து நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் தம் அருமை மகளாரை நோக்கி 5 கலிமாக்களை சொல்லிக் கொடுத்தார்கள் இதோ அந்த 5 கலிமாக்கள்:
1. யா அவ்வலில் அவ்வலீன்
2. யா ஆஹிரில் ஆஹீரீன்
3.யாதல் குவ்வத்தில் மதீன்
4.வயாராஹிமல் மஸாகீன்
5.யாஅர்ஹமர் ராஹிமீன்

இந்த 5 மாபெரும் செல்வங்களை வாங்கிக் கொண்டு சந்தோஷமாக வீடு சென்றார்கள்.அருமை மனைவி ஆடு வாங்கி வருவார்காள் என்ற ஆவலிம் இருந்தார்கள் அலி (ரலி) அவர்கள். வெறும் கையோடு வீடு வந்த மனைவியைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கணவர் அலி (ரலி) அவர்கள் என்ன நடந்தன என்று விசாரித்தார்கள். அங்கு நடந்ததை முழுமையாக பாத்திமா (ரலி) சொல்லி முடித்த போது.....பாத்துமாவே! நீங்கள் மகத்தான செல்வத்தை அல்லவா வாங்கி வந்துள்ளீர்கள்! ஆடுகள் இல்லாவிட்டாள் என்ன நீங்கள் துன்யாவை தேர்ந்தெருக்காமல் ஆஹிரத்தை தேர்ந்தெடுத்ததற்கு பெருமைப்படுகிறேன் என்று கூறி வாருங்கள் வந்த 5ந்து கலிமாக்களை ஓதுவோம் என்று மனைவியை அமரவைத்து ஐந்து கலிமாக்களை இருவரும் ஒத்த துவங்கினார்கள்.
படிப்பினை:
நீங்கள் எப்போழுது ஓதப்போகிறீர்கள்? மகளின் கஷ்டம் வறுமை நன்கு தெரிந்தும் மகளுக்கு அல்லாஹ்வின் மூலம் இரு சோதனை தந்தை என்ற ரீதியில் மனது எந்த அளவு பாடுபட்டு இருக்கும்? இருந்தாலும் அவர்கள் அல்லாஹ்வின் தூதரல்லவா? சுவனத்து தலைவி என்ற சொல்லப்பட்ட பாத்திமா! எதை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை மிக உன்னிப்பாக நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் கவனித்து மகள் மறுமையை தேர்ந்தெடுத்தவுடன் அளவிலா மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இது நமக்கு பெரும் பாடமகும். அல்லாஹ்வின் பரீட்சையில் பாத்துமா(ரலி) குடும்பம் வெற்றி பெற்றது அல்லாஹ்வின் தீர்ப்பை பொருந்திக் கொண்டது நமக்கு பெரும் படிப்பினையாகும்., பாத்திமா(ரலி) அவர்களுக்கு ஏற்ப்பட்ட இந்த சோதனை இந்த காலப்பெண்களுக்கு ஏற்பட்டால் எதை தேர்ந்தெடுப்பார்கள்? அதை நான் எழுத தேவை இல்லை.கலிமாக்கள் கிடக்குது தந்தையே அதை நீங்கள் வைத்து ஓதுங்கள் முதலில் ஆடுகளை அவுத்து விடுங்க இல்லாவிட்டால் நான் அவுத்துக் கொண்டு போகிறேன் என்று மளமளவென ஆடுகளை ஓட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்திருப்பார்கள் இல்லால புதுமைப் பென்கள். இந்த சோதனையில் சுவனத்தின் தலைவி தான் என்பதை நிரூபித்து காட்டி விட்டார்கள் என தருமை இஸ்லாமிய பெண்களே இப்ப நீங்க எதைதேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? துன்யாவையா? ஆகிரத்தையா? நிரூபித்துக் காட்டுங்கள் பார்கலாம்?
தண்ணீர் இல்லையே தந்தையே!
ஒரு சமயம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவட்கள் தமது அருமை பாத்திமா ரலி அவர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்கள் வீடு நெருங்கியதும் பாத்திமா ரலி அவர்கள் வீட்டில் குழ்ந்தைகள் அழும் சப்தம் வெளியே கேட்கிறது துடிதுடித்து போன நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் உடனே வீட்டிற்குள் நுழைந்தார்கள் பாத்திமா ரலி அவர்களை அழைத்து என தரும பேரர்கள் ஏன் அழுகிறார்கள் என்று கேட்டார்கள்
வீட்டில் தண்ணீர் இல்லை தந்தையே தாகத்தால் குழந்தைகள் அழுகின்றார்கள் என பாத்திமா ரலி அவர்கள் சொன்னார்கள் அப்போது வறட்சியான நேரம் அக்கம் பக்கத்துல் தண்னீர் கேட்டும் அங்கும் தண்ணீர் தட்டுப் பாடுதான் என்ன செய்வது? உடனே அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் தங்களின் முபாரக்கான நாக்கை நீட்டி குழ்ந்தைகளின் வாயில் வைத்து சப்பச் சொன்னார்கள் குழ்ந்தைகள் தாகம் தீர சுவைத்தார்கள். முபாரக்கான நாக்கில் புனிதமான நீரை அல்லாஹ் வரவழைத்தான் இதைக் கண்டு பாத்திமா ரலி அவர்கள் முகுந்த சந்தோஷப் பட்டார்கள்.
படிப்பினை:
கடுமையான கோடை காலம் எங்கும் தண்ணீர் பஞ்சம் குழ்ந்தைகள் தண்ணீர் கேட்டு தாகத்தால் அழும் அளவுக்கு தண்ணீர் இல்லாத நிலை இன்று தண்ணீர் செழிப்பை அல்லாஹ் நமக்கு தந்துள்ளான் அதன் அருமை பெருமை தெரியாமல் வீண்விரயம் செய்து வருகிறோம். தண்ணீர் விஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் சுவனத்து இளைஞ்ர்களுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முபாரக்கான நாவிலிருந்து நீரூற்றையே அல்லாஹ் வெளிபாக்கி காட்டினான். இது நமது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் முஃஜிஸாவாகும். பாத்திமா ரலி குடுப்பத்துற்கு கிடைத்த மாபெரும் பேராகும்.

பாத்துமா நாயகியின் வரலாறு

ஈரக்குலைத் துண்டுக்காக!
ஒரு நாள் அன்னல் நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தமது அருமை மகளார் பாத்திமா ரலி அவர்கள் வீட்டுற்கு வந்தார்கள். வீட்டில் பாத்திமா ரலி அவர்கள் சோகமாக கானப்பட்டார்கள். துடிதுடித்துப்போன நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் எனதருமை மகளே! ஏன் நீன் சோகமாக உள்ளாய்? என்ன நடந்து விட்டது? சொல்லம்மா என்ரு கேட்டார்கள். கன்களில் கன்னீர் வடித்தவர்களாக என தருமை தந்தையே! நாங்கள் சாப்பிட்டு 3நாட்கள் ஆகிவிட்டது. உண்ண வீட்டில் எந்த உனவும் கிடையாது உங்கள் அருமைப் பேரக் குழந்தைகளான ஹஸன் ரலி ஹுஸைன் ரலி யைப் பாருங்கள் பசியால் துடிதுடித்துப் போய் மயக்கமுற்று கிடக்கிறார்கள் என்று சொன்னார்கள்..
கண்கலங்கிய கருனை நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தனது மகளார் குடும்பத்திற்கு உண்வு கொண்டு வர உடனே வெளியே சென்றார்கள். மதினாவில் நம்க்கு ஒரு கூலி வேலை கிடைக்காதா? என்று நினைத்தவர்களாக நடந்துச் சென்றார்கள். அப்போது வெகுதூரத்தில் ஒருவர் கிணற்றில் தண்னீர் இரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள் உடனே அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாய் அத்தோட்டம் சென்று நண்பரே! எனக்கு ஏதாவது வேலை தாருங்கள் நான் செய்கிறேன் என்று கேட்டார்கள். நண்பரே! நானும் வேலைக்காரன் தான் இந்தோட்டத்தின் முதலாளி அங்கு உள்ளார் சென்று வேலை கேளுங்கள் தருவார் என்று கூறினார். சரி என அந்த முதலாளியிடம் சென்று செல்வந்தரே! எனக்கு ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கேட்டார்கள். அப்படியா? நீங்கள் தண்ணீர் இரைத்து ஊற்றுங்கள் ஒருவாளிக்கு 3பேரீச்சம் பழ்ம் தருவேன் என்றார் உடனே நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தண்ணீர் அள்ளி ஊற்றுவத்ற்காக கிண்ற்றுக்குப் போனார்கள் வாளியோ பெரியது 4ங்கு 5ந்து பேர் சேர்ந்து இறைத்தால்தான் இறைக்க முடியும் அவ்வளவு பெரிய வாளி. அருமை நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் உள்ள்த்தில் கண்மனி மகள், பேரன்கள் பசி கண்முன் வந்து நின்றதால் எதையும் அவர்கள் பொருட்ப்டுத்தவில்லை உடனே முதள் வாளி தண்ணீரை தன்னுடைய முபாரக்கான கைகளால் இறைத்தார்கள். அடுத்து இரண்டு வாளி தண்ணீரையும் இறைத்தார்கள். 3ராவது வாளி இறைக்கும் போது கயிறு அறுந்து வாளி கிண்ற்றில் விழுந்து விட்டது. இதை பார்த்துக்கொண்டு இருந்த தோட்டக்காரன் ஓடிவந்து கண்மணி நபிஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்களை தீய வார்த்தைகளால் திட்டு அவர்கள் முபாரக்கான கண்ணத்தில் ஓங்கி அறைந்து விடுகிறான். பொறுமையின் தாயகம்.அவரை நோக்கி நண்பரே! உனது கோபம் தீரும் அளவுக்கு நன்றாக அடியும் என்று கூறினார்கள்.அவன் மாறி மாறி நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்களின் இரு முபாரக்கான கண்ணத்தில் அரைந்தான். அடித்து அடித்து அசந்து போனப்பின் நான் இப்போது குற்றவாளி உமது வாளியை கிணற்றில் போட்டு விட்டதால் என்னை அடித்து விட்டீர்கள் நான் இரண்டு வாளி தண்ணீர் இறைத்து உமது தோட்டத்தில் ஊற்றினேன் அதற்கு கூலியாக வாக்குபடி 6 பேரீச்சம் பழ்ங்களை கொடுக்காமல் இருந்து விடாதீர்கள், அப்படி நீர் தராவிட்டால் இறைவனிடம் குற்றவாளியாடி விடுவீர் என்று சொன்னார்கள். கோபத்தோடு 6பேரீச்சம் பழங்களை நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்களிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டார். உடனே பேரீச்ச்ம் பழங்களை எடுத்து வந்து விடாமல். தனது முபாரக்கான கையைக் கிண்ற்றின் உள்ளே நீட்டினார்கள்.உட்னே வாளி மிதந்து மேலே வருகிறது.வாளியை எடித்து கீலே வைத்துவிட்டு தனது அருமை மகளார் வீட்டுற்கு விரைந்தார்கள். அருமை பேரர்களுக்கு ஊட்டி விட்டு மகளுக்கும் கொடுக்கிரார்கள். சிறிது நேரம் கழித்து தோட்டக்காரர் மீண்டும் தோட்டம் வந்து பார்த்தார். வாளி கிணற்றுப் பக்கத்தில் இருந்தது. ஆச்சரியம் அடைந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் நண்பரே! நீர் அடித்தீரே! அவர்கள் சாதாரனமானவர்கள் அல்ல. அவர் ஒரு நபி பெயர் முஹம்மது ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் தெரியுமா? என்றார். கைசேதப்பட்ட அவர் முஹம்மது நபி என்று மக்கள் புகழ்ந்து சொல்கிரார்களே! அவர்களா இவர்கள் என்று அழுது கொண்டு உடனே வீட்டு உள்ளே சென்று வாளை எடுத்து எந்த கை அந்த கருனை நபியை அடித்ததோ அந்த கை இனி என் உடலில் இருப்பதற்கு தகுதி இல்லை என கூறி கையை வெட்டிக் கொண்டார்.
இரத்தம் சொட்ட சொட்ட அழுதவராக கண்மணி நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்களை தேடி விசாரித்துக் கொண்டு பாத்திமா ரலி அவர்கள் வீட்டிற்கு வந்தார், அழுதுகொண்டே கதவைத் தட்டினார். பாத்திமா ரலி அவர்கள் கதவைத் திறந்தார்கள். அவரின் அவரின் நிலைமையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்களாக. நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்களிடம் வந்த் சொன்னார்கள். பதறிப்போன நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் உடனே வெளி வந்தார்கள், யாரசூலல்லாஹ்! என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்களை கடுமையாக அடித்து துன்பம் கொடுத்து விட்டேன். அதனால் கையை வெட்டிக் கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று அழுதார். கருனையே உருவான ஹாத்தமுன் நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் சரி, நண்பரே உங்களை மன்னித்துவிட்டேன் இறைவன் உங்கள் மீது தனது அருளை பொழியட்டும் என கூறி அவர் கொண்டு வந்த வெட்டப்பட்ட கையை வாங்கி தங்களின் முபாரக்கான உமிழ்நீரை எடுத்து வெட்டப்பட்ட கையில் தடவி விட்டார்கள். சுபுஹானல்லாஹ் மீண்டும் அந்த கை முன்பு போல ஆகிவிட்டது. உடனே கலிமா சொல்லி நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் கையைப் பிடித்து இஸ்லாத்தை தழுவினார்.
படிப்பினை:
தனது ஆருயிர் மகளுக்காக அருமை பேரன்களுக்காக எத்துனை துன்பங்களை நபி ஸல்லல்லாஹூஅலைஹிவ ஸல்லம் அவர்கள் பொருத்துக் கொண்டார்கள் பாருங்கள் மேலும் உழைப்பின் மேன்மையையும் உண்ர்த்தியுள்ளார்கள். தவறுக்கு தண்டனை பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற அருமையான வழியையும் காட்டியுள்ளார்கள் இவைகள் எல்லாம் நமக்கு பெரும் படிப்பினையாகும் வாயால் பஷாரத் சொல்லப்பட்ட பாத்திமா ரலி அவர்களின் இவ்வுலக வாழ்வு பெரும்பாலும் பசி வறுமை இல்லாமை அதனால் பொறுமை, இவைகளைத்தான் வாழ்க்கை முழுவதும் பார்க்க முடிகிறது. எனதருமை இஸ்லாமிய பெண்களே! பாத்திமா ரலி போல வாழ்வில் பொறுமை காட்டி வாழ் முற்படுங்கள் அனைத்து தேவைகளையும் தங்கள் வீட்டு ஆன்கள் மூலம் உழைத்து வாங்கி வாழ்ந்து காட்டுங்கள்.