17 பிப்ரவரி, 2010

"ஹிஜ்ரத் இரவில் பாத்திமா(ரலி)"

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் நேரத்தில் எதிரிகளிடமிருந்து தப்புவதற்கு முன் தங்களிடம் மக்கள் பாதுகாப்பாக ஒப்படைக்கப் பட்டிருந்த பொருட்கள் அனைத்தையும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விடுவதற்காக ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களை அழைத்து அலீயே, ஜிப்ரயீல்(அலை)என்னிடம் வந்து குறைஷியர் உங்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்கள் என கூறி உள்ளார்கள். ஆகவே நானும் அபூபக்கரும் ஹிஜ்ரத் செல்ல இருக்கிறோம் வெளியே குறைஷி இளைஞ்ர்கள் ஆயுதங்களோடு வீட்டை சுற்றி நிற்கிறார்கள் எனது போர்வையை போர்த்திக் கொண்டு எனது படுக்கையில் தூங்கு என்று பச்சை நிறத்தாலான ஹத்ரமீ போர்வையைக் கொடுத்தார்கள். அதன் பின் அலியே எதிரிகளிடமிருந்து உமக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்று பஷாரத் கூறி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். அப்போது வீட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் குடும்ப பென்கள் இருந்தனர். இரவு நேரம் எதிரிகள் ஆயுதங்களோடு வீட்டை சுற்றி நிற்கிறார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் படுக்கையில் படுத்து நன்கு தூங்க துவங்கி விட்டார்கள். வீட்டில் உள்ள பென்கள் கொந்தளிப்போடு குசு குசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாத்திமா(ரலி) சிறு வயதுடையவர்களாக இருந்தாலும் தைரியமாக எதிரிகளுக்கு பயம் வரும் அளவுக்கு சத்தம் போட்டு பேசினார்கள். இதனால் இரவில் வீட்டுக்குள் புகுந்து விடலாம் என்றிருந்த எதிரிகளுக்கு பயம் வந்து விட்டது. வீட்டுக்குள் பென்கள் தூங்காமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த சமயத்தில் உள்ளே புகுந்தால் பென்களின் தனிமையை குலைத்ததற்காக காலமெல்லாம் அரபியர்களிடம் நமது பெயர்கள் அவமானமாக பேசப்படும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் எப்படியும் காலையில் வெளியே வரத்தான் செய்வார்கள் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று வெளியே காத்துக் கிடந்தார்கள். ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் நிம்மதியாக சுப்ஹ்வரை தூங்கினார்கள், பாத்திமா(ரலி) அவர்கள் சமயோஜிதமாக நடந்து கொண்டதால் எதிரிகள் இரவில் வீட்டுக்குள் நுழையவே இல்லை.

1 கருத்து:

  1. பத்ரு போரில் வானவர்கள் 3000 பேர்கள் முகம்மதுவிற்கு ஆதரவாக போர் செய்தார்களே.அதுபோல் வானவரும் போர் செய்து முகம்மதுவை காத்திருக்க வேண்டுமே.ஏன் ஒடி ஒளிக்க வேண்டும். கட்டுக்கதை

    பதிலளிநீக்கு